மகரந்தத் தூது
1.
காட்டுப் பூவிடமிருந்து
எழுகிறது பட்டாம்பூச்சி
குறைகிறது ஒரு வண்ணம்.
2.
பனி கரையும் காலை
மலர்க் கொத்துகள் மேல்
சிறகுலர்த்தும் தேனீ.
3.
கடக்கும் பட்டாம்பூச்சி
தென்றலின் மேல் பழி.
4.
பூவுக்குப் பூ
தாவும் தேனீ
தோட்டத்தின் கடிதம்.
5.
தேனீ பறந்தபின்
நிமிரும் மலர்
தனித்தாடும் தண்டு.
*
ஒளிப்படம்: ராமலக்ஷ்மி
*
நன்றி பண்புடன்!


அழகான காலைக் காட்சிகள். ஐந்தும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஒரு படம் - ஐந்து குறுங்கவிதைகள் - இயற்கையின் பேரெழில் வியக்க வைக்கிறது - ஒவ்வொரு கவிதையிலும்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு