ஞாயிறு, 4 ஜூன், 2023

இயற்கையின் உன்னதம்

 #1

“உன்னதமான எளிமையைக் கொண்டிருப்பதாலேயே
உன்னதமான அழகைக் கொண்டிருக்கிறது
இயற்கை.”
_ Richard Feynman

சிகப்பு ஆரக்கிளி 

#2
“குழப்பம் என்பது
ஆராய்ந்து கண்டறிய வேண்டிய ஏதோ ஒன்று
உங்களுக்குள் காத்திருப்பதைக் குறிக்கிறது.”
மணிப்புறா

#3
“இலக்கற்ற சிந்தனை
சிந்திக்காமல் இருப்பதைக் காட்டிலும்
மோசமானது.”
_ Haruki Murakami.

குண்டுக் கரிச்சான்

#4
“வாய்ப்புகளைப் பறிக்கும் 
மாபெரும் திருடன்
தயக்கம்.”
_ Jim Rohn
கொண்டலாட்டி

#5
“கிடைத்து விட்டதா?
சற்றே ஆசுவாசமாகு.”
செந்தூர்ப் பைங்கிளி

#6

“நீ ஒருபோதும் தயாராகப் போவதில்லை.
தொடங்கு இப்பொழுதே!”
செம்மீசைச் சின்னான்
***

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 164
பறவை பார்ப்போம்.. - பாகம்: 97
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடர்கிறது..

8 கருத்துகள்:

  1. உன்னதங்களைக் கெடுப்பதே மனிதனின் தலையாய வேலை!  உங்கள் கைத்திறமையில் சிறகை அசைத்தும் தெளிவாக வந்திருக்கிறது செம்மீசை சின்னானின் புகைப்படம்.  வரிகளும் படங்களும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். இயற்கை சீறினால் மனிதனால் தாங்க முடியாது.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் அழகு. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. செம்மீசைச் சின்னான், கொண்டலாட்டி - முன்பு இருந்த ந்ம் வீட்டிற்கு கெண்டலாத்திதான் வந்தது...red whiskered bulbul. Red vented bulbul இரண்டிற்கும் வித்தியாசம் கூர்ந்து பார்த்தால் அந்தச் சிவப்பு அடையாளம் ..
    செம்மீசைச் சின்னான் ரொம்ப அழகாக வந்திருக்கிறது...சிறகை விரிக்கும் போது மிக அழகாக வந்திருக்கிறது படம். படத்தை மிகவும் ரசித்தேன்.

    எல்லாப் பறவைகளின் படங்களும் அருமை. இரு வகைக் கிளிகளுமே அழகு.

    பொன் மொழிகளும் மிக நன்று

    கீதா



    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin