வெள்ளி, 9 ஜூன், 2023

என் மனதில் நிற்கும் மதியம் - சானெட் மொன்டல் கவிதை - சொல்வனம் இதழ்: 295


னக்கு அவ்வளவாக நினைவில் இல்லை
என் தாயின் கிராமத்திற்குச் செல்ல 
பேருந்துக்கு எப்படிக் காத்திருந்தோம் என்றோ
நகரங்களுக்குச் செல்ல இரயிலுக்குக் காத்திருக்கையில்
எவ்வாறாகக் கோடையைப் பொறுத்துக் கொண்டோம் என்றோ.

அவை என் பொறுமையை உரித்தெடுக்கும்
பற்ற வைக்கப்பட்ட வெடித் திரியைப் போன்றவை.
ஆயின் பாயும் என் நினைவுகளின் கால்வாயில்
கொத்தாக அடைத்து நிற்பவற்றைப் பனியாக உருக வைப்பவை.

என்னிடம் இருக்கிறது நான்
மாமாஅண்ணா மற்றும் அப்பாவுடன் 
மீன் பிடிக்கும் இந்தப் புகைப்படம் - இருப்பதிலேயே பருத்தவர் 
நிற்கிறார் தூண்டிலைப் பிடித்தபடி.


பரவசம் இப்போதும் பரவியிருக்கிறது  இந்த சட்டகத்துக்குள்
ஆயின் மாமாவும் தாத்தாவும் காலமாகி விட்டார்கள்.

 

அன்று நாங்கள் பிடித்த மீன்
இன்றும் என் மனதில் துடிதுடிக்கிறது.
அந்தக் குளம் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடும்
தண்ணீரின் ஏதோ ஒரு இடத்தில் -
பிற்பகல் ஒளியில் பிடித்த எங்களது பிரதிபலிப்பை.
*
மூலம்: "An Afternoon in My Mind" 
By Sonnet Mondal
*
படங்கள்: இணையத்திலிருந்து.. நன்றியுடன்..
*

சானெட் மொன்டல் (1990) கொல்கத்தா மற்றும் தில்லியில் இருந்து ஆங்கிலத்தில் எழுதி வரும் இளம் இந்தியக் கவிஞர். ‘An Afternoon in My Mind’ உட்பட எட்டு கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்இலக்கிய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்கொல்கத்தாவின் சர்வதேச இலக்கிய விழாவில், ‘கவிதை மாலைப் பொழுதுகள்’ நிகழ்வின் நிறுவனர் மற்றும் இயக்குநர்பல முக்கிய கவிதைப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும்கெளரவ ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார்இருபது நாடுகளுக்கு அழைப்பின் பேரில் இந்தியாவின் சார்பாக சென்று தன் கவிதைகளை வாசித்திருக்கிறார்இருபது மொழிகளில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனலண்டனைச் சேர்ந்த 'The CultureTrip' இணையதளம் இந்தியாவின் முக்கிய ஐந்து ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவராக இவரைக் குறிப்பிட்டிருக்கிறது.

கவிதை மற்றும் ஆசிரியர் குறிப்பின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

*

28 மே 2023, சொல்வனம் இதழ் 295_ல்..,

நன்றி சொல்வனம்!


***

10 கருத்துகள்:

  1. சானட் மாண்டல் - இந்தியக் கவிஞர் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    கவிதை ரொம்ப அனுபவித்து உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறார் என்பது உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தெரிகிறது. நன்றி, ராமலஷ்மி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நீங்களும் அதை அழகாகக்கொண்டு வந்திருக்கீங்க உங்கள் ஆக்கத்தில்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கோடைகளும், நீர்நிலைகளும் எண்ணங்களின் படிமங்களில் எங்கோ ஒளிந்து கொண்டு குறிச்சொற்களின் நினைவுறுத்தலில்  அவ்வப்போது தலை காட்டுகின்றன!

    பதிலளிநீக்கு
  4. திரு மண்டல் அவர்களின் கவிதைக்கான தமிழாக்கம் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. மனதைத் துள்ளிக் குதிக்க வைத்த பரவச நினைவுகள் மீட்டெடுக்கப்படும் போதெல்லாம், அத்துடன் தொடர்புடைய மறந்த சம்பவங்கள் அடுக்கடுக்காக நினைவில் வெளிவருவதும்; மகிழ்ச்சியை அடைத்து நிற்கும் கல்லான வாழ்க்கை அழுத்தங்கள், இனிதான தருணங்களால் உடைகிறது, என்கிற உண்மைகளை, எளிமையான நிகழ்வு வழியாகக் காட்சிப் படுத்தியது அருமை.

    உறவுகளின் அருகாமையே உண்மையான மகிழ்ச்சி தருபவை எனும் உண்மை வாழ்வின் விளிம்புக்கு வரும் வரை பெரும்பாலானோர் இப்போது நம்புவதில்லை:(

    ஆழ்ந்த பொருள் நிறைந்த வரிகளை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் கொண்டு கோர்த்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin