ஞாயிறு, 18 ஜூன், 2023

மதிப்பீடு

  #1

"மற்றவரைப் பற்றிய உங்கள் மதிப்பீடு 
அவர் யார் என்பதை வரையறுப்பதில்லை. 
நீங்கள் யார் என்பதையே வரையறுக்கிறது."
மணிப்புறாவும்
செந்தூர் பைங்கிளியும்

#2
"எதிர்மறையான சூழலில் 
நேர்மறையாகச் சிந்திக்க இயலுமானால் 
நிச்சயம் வென்றிடுவீர்கள்!"
குண்டுக் கரிச்சான்

#3
“தன்னம்பிக்கை இருப்பின்,
 தொடங்கும் முன்னரே வென்றிடுவீர்கள்!”
 _  Marcus Garvey
சிகப்பு ஆரக்கிளி

#4

"சிறு இளைப்பாறல் 
சாதிக்கவிருக்கும் நீண்ட பயணத்திற்கான அச்சாரம்."
காட்டுச் சிலம்பன்

#5

"அமைதியான மனம் 
அனைத்தையும் ஆற்றுப்படுத்தும்." 
_ Robert Burton
இந்திய சாம்பல் இருவாச்சி
#6
"உங்கள் கனவுகளை அடைய 
உங்கள் அச்சம் தடையாகயிராது 
பார்த்துக் கொள்ளுங்கள்."
மணிப்புறா

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 166
பறவை பார்ப்போம்.. - பாகம்: 98
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

8 கருத்துகள்:

  1. வரிகள் பிரமாதம். படங்களை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அதென்ன செந்தூர்ப் பைங்கிளி?​ சிவப்பு ஆரக்கிளிக்கு கீழேயே நின்று படம் எடுத்தும் அது பறக்க முயற்சி செய்யவில்லை போல.. இந்திய சாம்பல் இருவாச்சியின் ஓரப்பார்வை அழகு. 'பின்னாலிருந்து படம் எடுத்தாலும் அது எனக்குத் தெரியும்' என்பது போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rose-ringed parakeet கிளிக்கு தமிழில் இந்த இரண்டு பெயர்களுமே உண்டு. இரண்டும் தெரிந்திருக்கட்டும் எனப் பதிந்தேன்:). சிகப்பு ஆரக்கிளியை கீழிருந்து அல்ல, நேர் எதிரே மாடி சன்னலில் இருந்து எடுத்தேன். பொதுவாக கிளிகளுக்குக் காய்ந்த முருங்கை விதை மேல் பெரும் விருப்பம் உண்டு. அதை உண்ணும் பரவசத்தில் நம்மை அவ்வளவாக சட்டை செய்வதில்லை:). கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள் அனைத்தும் சிறப்பு. சிவப்பு ஆரக்கிளி படம் மிகவும் பிடித்தது. மற்றவையும் நன்று.

    பதிலளிநீக்கு
  3. இராமலக்ஷ்மி, உங்க கேமரால பறவைகள் எல்லாம் கூடுதல் அழகாகிவிடுகின்றன! ஏற்கனவே எல்லாம் அழகு, அதான் நல்லா போஸ் கொடுக்கறாங்க!!!!

    கடைசில மணிப்புறா பறக்கறதுக்கு இடது காலைத்தூக்குது....அதுக்கு முன்ன டக்குனு எடுத்திட்டீங்கள்...அழகா இருக்கு

    இந்திய சாம்பல் கருவாச்சி! இப்பதான் பார்க்கிறேன்...யாருடா இது நம்மள ஃபோட்டோ எடுக்கறதுன்னு பார்த்திருக்கும் போல! அழகுபோஸ்...சிகப்பு ஆரக்கிளி செம க்ளிக்.

    செந்தூரப் பைங்கிளி, சிகப்பு ஆரக்கிளி இந்த வித்தியாசங்கள் உங்க ப்திவுகளின் மூலம் தான் தெரிந்து கொள்கிறேன். (முந்தி போட்ட ஒரு பதிவுலயும் )

    பொன்மொழிகள் செம,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் போட்ட பதிவிலேயே நான் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். செந்தூர்ப் பைங்கிளி - சிகப்பு ஆரக்கிளி இரண்டுமே ஒரே வகைதான் (rose-ringed parakeet). இலங்கையில் பேச்சு வழக்கில் ‘பயற்றங்கிளி’ என்றும் அழைக்கப்படுகிறது. தமிழில் வழங்கப்படும் பெயர்கள் தெரிந்திருக்கட்டுமென இரண்டையும் குறிப்பிட்டேன். அவற்றை ஒரே வரியில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இனி அவ்வாறு செய்கிறேன்.

      கிளியைப் பற்றிய எனது விரிவான பதிவு இங்கே:
       செந்தார்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக்கிளி - பறவை பார்ப்போம் (பாகம் 21)

      கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  4. படங்களும் அதற்கான பொன்மொழிகளும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin