#1
“நீங்கள் தனித்துவத்துடன்
வித்தியாசமாக
உங்களுக்கே உரித்தான வழியில்
பிரகாசிக்க வேண்டும்.”
#2
“மேலும் முயன்றிடாது போவதை விடவும்
தோல்வி வேறெதுவுமில்லை.”
- Elbert Hubbard
#3
இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள்
என்பதைச் சார்ந்திருக்கிறது.”
_ Mahatma Gandhi
["மூவண்ணம்" என்ற தலைப்பில்
குடியரசு தினத்தன்று
ஃப்ளிக்கர் தளத்தில்
பகிர்ந்த படம்.]
#4
“சில நினைவுகளின் பொலிவு
குன்றுவதேயில்லை.”
#5
“வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அரிதானது,
ஒருபோதும் மீண்டும் நிகழாது.”
_ Zelig Pliskin.
#6
“இளஞ்சிவப்பானது
ஆற்றலின் வண்ணம்,
திட நம்பிக்கையின் வண்ணம்
மற்றும்
முடிவெடுக்கும் திறனின் வண்ணம்.”
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 157
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
உங்கள் வீட்டுத்தோட்டத்தின் மலர்கள் எல்லாம் அருமை. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குபொன்மொழி தமிழாக்கம் அருமை ராமலக்ஷ்மி.
5 வது பொன்மொழி உண்மை.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குவரிகளும் படங்களும் அருமை. மூன்றாவது படத்தில் ஆரஞ்சு நிற இதழ்கள் அந்தரத்தில் நிற்பது போல தோற்றம் கொடுக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஆம், நேரில் பார்க்கவும் அப்படியே தோன்றும். ஆரஞ்சு நிறத்தில் இருப்பவை பூவின் மகரந்தப் பைகள். இந்தப் படங்தை ’மூவண்ணம்’ என்ற தலைப்பில் குடியரசு தினத்தன்று ஃப்ளிக்கரில் பதிந்திருந்தேன். அந்தக் குறிப்பையும் பதிவில் சேர்த்து விட்டேன்:).
படங்களை என்ன சொல்ல?!!!!!!!!! வார்த்தைகள் இல்லை. அத்தனை அழகு.
பதிலளிநீக்குபொன்மொழிகளும் அருமை.
கீதா
கருத்துக்கும் படங்களை ரசித்ததற்கும் நன்றி கீதா.
நீக்குபொன் மொழிகள் அத்தனையும் அருமை. அதற்கான படங்களும் நன்று.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு