#1
கடந்த காலம் என்பது
கற்றுக் கொள்ள வேண்டிய இடம்,
வாழ்வதற்கான இடமன்று.
#2
ஒருபோதும் எவற்றைத் தொலைத்தாய் எனப் பாராதே.
_ Robert H. Schuller
#3
நமது வலிமையை விடவும்
பொறுமை அதிகம் சாதிக்க வைக்கும்.
_ Edmund Burke
#4
வாழ்க்கைக்கு எந்த வரையறைகளும் இல்லை,
நீங்களாக உருவாக்குபவற்றைத் தவிர்த்து.
_ Les Brown
#5
நீங்கள் எதற்காக உழைக்கிறீர்களோ அதை பெறுகிறீர்கள்.
நீங்கள் எதை ஆசைப்பட்டீர்களோ அதையன்று.
_ Howard A. Tullman
#6
உண்மையிலேயே நீங்கள் கவனத்துடன் இருப்பீர்களேயானால்
அனைத்தும் உங்களுக்கு ஆசானாகும்.
_Ezra Bayda
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 156
பறவை பார்ப்போம்.. - பாகம்: 94
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
வழக்கம் போல அருமை. கடைசிப் படப்பறவை மிகுந்த கோபத்தில் இருப்பது போல சிவந்த விழிகளுடன்...! மேலே உள்ள பறவையோ அம்மன் பக்தை போல மஞ்சள் விழிகளுடன்!
பதிலளிநீக்குசாதுவான மணி புறாவுக்கும் கூட சிவந்த விழிகள்தாம்:). தங்கள் ஒப்பீட்டை ரசித்தேன்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
அனைத்து பறவைகளும், அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபறவைகள் படங்கள் அனைத்தும் அழகு! நீங்கள் எடுக்கும் படங்கள் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை, ராமலக்ஷ்மி. பொன்மொழிகளும் சூப்பர்
பதிலளிநீக்குகீதா
மிக்க நன்றி கீதா.
நீக்குஇப்பொழுதெல்லாம் தங்களின் வரிகளை பலமுறை வாசித்து, பிறகே படங்களுக்கு செல்லுகிறேன் ... அற்புத காட்சிகள்
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குவாசகங்கள் அனைத்தும் அருமை. அதற்கேற்ப படங்களும்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு