ஞாயிறு, 6 மார்ச், 2022

பந்தயம்

 பூனை பூனை பூனை

#1
உங்கள் தகுதிக்குக் குறைவான எதையும்
ஒப்புக் கொள்ளாதீர்கள்!
_Steve Maraboli


#2
சிறப்பாகக் கழியும் ஞாயிறானது 
ஒரு வாரத்திற்கான மனநிறைவைத் தந்து செல்லும்.


#3
கவலைப் படுவது என்பது 
உங்களுக்கு எதிராக நீங்களே பந்தயம் கட்டுவதைப் போன்றது.


#4
(மற்றவர் பேசுகையில்) கொட்டாவி விடுவது 
பணிவற்ற செயலாக இருக்கலாம். 
ஆனால் குறைந்தபட்சம் 
உங்கள் நேர்மையான கருத்து பதிவாகி விடுகிறது.
_ Voltaire


#5
“பேச வேண்டிய நேரத்தில் பேசாமல், 
பிறகெப்போதோ பேசுவதில் 
என்ன பயன்?” 
_ Jim Hightower

#6
நீங்களாக இருங்கள். 
உங்கள் உண்மையான சுபாவம் வெளிப்படட்டும்.  
தேடுதல் பொருட்டு உங்கள் மனதைத் தொந்திரவு செய்யாதீர்கள்.
_ Nisargadatta Maharaj

இந்தப் பூனைக்கு குடியிருப்பிலிருக்கும் குழந்தைகள் கோகோ (Coco) எனப் பெயரிட்டு அன்பு பாராட்டி வருகிறார்கள். இது குட்டியாக இருக்கும் போது எடுத்த படங்களை மற்றுமோர் ‘பூனைகள்’ தொகுப்பான "இந்தப் பதிவிலும்", இப்போது வீரதீரனாக போஸ் (pose) கொடுக்கும் கோகோ முன்னர் எப்படி மிரட்சியுடன் பார்க்கிறது என்பதை "இங்கும்" காணலாம். 

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 130
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

14 கருத்துகள்:

  1. பூனையார் அழகு. அது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. பூனையின் படங்கள் ஜோர். கருத்துகள் ஓகே. நான்காவது கருத்து புன்னகைக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  3. பூஸார் அழகோ அழகு!! எப்படி இப்படி அழகா எடுக்கறீங்க ராமலக்ஷ்மி!! அப்படி ரசித்தேன் குறிப்பாக அது வாய் திறக்கும் போது எடுத்தது, மியாவ் சொல்லும் போது எடுத்தது, இரு பற்கள் தெரியும் படம் வாவ்!! கோகோவின் முந்தைய படங்களையும் பார்க்கிறேன்..பூனையின் கொட்டாவி அந்தக் கருத்து ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அதானே பார்த்தேன் பூஸார் படங்களை எப்படி மிஸ் செய்தேன் என்று போனதும் நினைவுக்கு வந்துவிட்டது பார்த்திருக்கிறேன் என்று. கருத்தும் இருப்பது தெரிந்தது.

    மற்றொரு லிங்க் 'இங்கும்' பார்த்ததில்லை. அங்கும் பார்த்துவிட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூனையார் படங்களும் வாசகங்களும் மிகவும் அருமை.

      நீக்கு
    2. கோகோவின் சிறு வயதுப் படத்தையும் தேடிப் பார்த்து விட்டதற்கு நன்றி கீதா:)

      நீக்கு
  5. பூனையும் சிந்தனைகளும் அருமை. வளர்ந்ததும் துணிந்து விட்டார் வீரப்பூனையார்.

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து தாங்கள் எழுதுவது சிறப்பு. நான் யூடியூபுக்கு மாறி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகம் பரபரப்பாக இயங்கியது ஒரு காலத்தில். சிலர் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். தங்கள் வருகையில் மகிழ்ச்சி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin