தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில் (பாகங்கள்: 12 - 15) :
# 28 பிப்ரவரி 2018
#19 பிப்ரவரி 2018
#14 பிப்ரவரி 2018
#1 மார்ச் 2018
நன்றி ‘பட்டம்’
[ பறவை பார்ப்போம் - (பாகம் 24) ]
வல்லமை:
வல்லமை மின்னிதழ் தமது ஃப்ளிக்கர் பக்கத்தில் பதியப்படும் படங்களிலிருந்து தேர்வு செய்து நடத்தி வரும் படக்கவிதைப் போட்டியின் எண்ணிக்கை 150_யைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. வல்லமை ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள்!
ஏழாவது முறையாகவும், 150_வது போட்டிக்காகவும் தேர்வான எனது படம்:
படத்துக்கு வந்த கவிதைகள் இங்கே.
நன்றி வல்லமை!
கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள்!
***

சந்திப்புகள், ஆல்பம்
சமீபத்தில் சில நாள் பயணமாக நெல்லைக்குச் சென்றிருந்தேன். வங்கியொன்றில் வேலையை முடித்து விட்டு நானும் கணவரும் வெளி வரும் போது வங்கியின் உள் நுழைந்த திரு. நெல்லைக் கண்ணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எங்கள் குடும்பத்தினரை அவர் அறிவார் ஆகையால் அறிமுகப் படுத்திக் கொண்டதும் யாரெனப் புரிந்து, 10 நிமிடங்கள் போலப் பல விஷயங்களையும் பற்றி நகைச்சுவை ததும்பப் பேசிக் கொண்டிருந்தார். திரு. சுகா அவர்கள் என் கதைத் தொகுப்பை வெளியிட்டதைப் பற்றித் தெரிவித்தேன். அவரது எல்லா புத்தகங்களையும் வாசித்திருக்கிறேனா எனக் கேட்டார். முதல் மூன்றும் வாசித்திருப்பதைச் சொன்னேன். ‘வாசிக்கிறீர்கள்.. எழுதுகிறீர்கள்.. மகிழ்ச்சி’ என உடனிருந்தவரை காரிலிருந்து எடுத்துவரச் சொல்லி தனது ‘தமிழோடு’ , ‘குறுக்குத்துறை இரகசியங்கள்’ நூல்களைப் பரிசளித்தார். அவருக்கு என் நன்றி! எதிர்பாராமல் சந்தித்ததாலும், வங்கியில் பலரும் சுற்றி நின்றதாலும் அந்த நேரத்தில் தோன்றவில்லை. திரும்பி வரும்போதுதான் உடன் நின்று புகைப்படம் எடுத்திருக்கலாமே எனத் தோன்றியது. ஆனால், மணமக்களாக எங்களை அவர் வாழ்த்திய புகைப்படம் திருமண ஆல்பத்தில் உள்ளது. முதலில் ‘குறுக்குத்துறை இரகசியங்கள்’ நூலை வாசித்து விட்டேன்:
மண்ணின் மைந்தர்களைப் பற்றி மனித நேயத்துடன், திருநெல்வேலி வட்டார வழக்கில் உரை நடை மூலமாக நகர்த்திச் செல்லப்பட்டிருக்கும் அருமையான கட்டுரைத் தொகுப்பு. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு சிறுகதையாகவே பார்க்க முடிகிறது. ‘அண்ணாச்சி இருக்காகளா’ என்ற தலைப்பில் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தொடராக வெளிவந்தவை. எளிய மாந்தர்கள்.. அவர்களுக்கு ஏற்படும் எண்ணற்றப் பிரச்சனைகள்.. அக்கறையுடனும் மனித நேயத்துடனும் அவற்றை வெகு இயல்பாகத் தீர்த்து வைக்கும் அண்ணாச்சி. இரசிக்க வைக்கும் திருநெல்வேலி பேச்சு வழக்கு. மனதைக் கசிய வைக்கும் இறுதி அத்தியாயம்.
# வேலுக்கண்ணன் பதிப்பகம். தொலைபேசி:0462 - 2337734
*
பதிவரும் தூய சவேரியார் கல்லூரியில் விஸ்காம் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவருமான திருமதி. ஜோஸபின் பாபா நெல்லை வரும் போது சந்திக்க விருப்பமென்றும், நேரம் அமையுமானால் அவரது துறை மாணவர்களுக்கு ஒளிப்படக் கலை குறித்த உரை ஆற்ற வருமாறும் கேட்டிருந்தார். ஒரு வருடம் முன்னர் அலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திடீரென அவரது கணவர் அகால மரணமடைந்து விட ஆறுதல் வார்த்தைகளை தகவலாக அனுப்ப முடிந்ததே தவிர பேசும் தைரியம் வரவில்லை. ஆரம்ப நாட்களில் மனமுடைந்து கணவர் குறித்த நினைவுகளைப் பல பதிவுகளாக எழுதி வந்தவர் தன் மகன்களின் எதிர்காலத்தை எண்ணித் துணிவுடன் மீண்டு வந்திருக்கிறார். அந்தப் பதிவுகளையே தனது இரண்டாவது நூலாகவும் கொண்டு வந்திருக்கிறார். இந்த முறை நான் நெல்லை சென்றிருந்த போது கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் என் அம்மா வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்துச் சென்றார்.
தனது முதல் நூலான ‘நான் தேடும் வெளிச்சங்கள்’ சிறுகதைத் தொகுப்பையும், சமீபத்தில் வெளியிட்ட ‘அன்பே பாபா’ நூலையும் பரிசாக அளித்தார். நானும் எனது நூல்களை அவருக்கு அளித்தேன். PiT தளம், ஒளிப்படக்கலை, மற்றும் தான் வாழ்க்கையில் சந்தித்து வரும் சவால்கள் என நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றார். உரையாற்ற அவரது கல்லூரிக்குப் பிறிதொரு சமயம் வர முயன்றிடுவதாகச் சொல்லியிருக்கிறேன். நூல்களை வாசித்து விட்டுப் பகிருகிறேன்.

ஒளிப்படக்கலை குறித்த உரை என்றதும் கீழ்வரும் கலந்துரையாடல் நினைவுக்கு வந்தது.
சிறிய பாயின்ட் அன்ட் ஷுட் கேமராக்களைக் கொண்டும் நல்ல படங்களை எடுக்க முடியுமா அல்லது டி எஸ் எல் ஆர் இருந்தால் மட்டுமே சாத்தியமா என்ற சக்தி பிரபாவின் கேள்விக்கு நான் பதிலளிக்கும் இந்தப் ஒளிப்படத்தோடு பெங்களூர் தமிழ்ச் சங்க சந்திப்பு குறித்து ஏற்கனவே இரண்டு பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.

"அழகிய குரலில் பாடும்"
பதிலளிநீக்குஅட!
"இறந்து விட்ட மாதிரி நடிக்கவும் செய்யுமாம்"
சமீபத்தில் ஒரு வாட்ஸாப் வீடியோ பார்த்தேன். ஒரு நாலு கால் செல்லம் தனது எஜமானர் கையிலிருந்து கைமாறும்போதெல்லாம் இதே வேலையைச் செய்தது!
வல்லமைக்கு தேர்வாகியிருக்கும் படம் மிக அருமை.
குறுக்குத்துறை ரகசியங்கள் விமர்சனப் பகிர்வை சுருக்கமாகவே முடித்து விட்டீர்கள் போலும்.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குவிரிவாகப் பகிரலாமெனத் தள்ளிப் போடுவதை விடவும், சுருக்கமாகவேனும் உடனடியாக வாசிக்கும் நூல்கள் குறித்து பகிர்ந்திடுவது நல்லதெனக் கருதுகிறேன்:).
புகைப்பட ரசனைக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅனைத்து படங்களும் அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஅருமையான் அழகான படங்கள்.
பதிலளிநீக்குநெல்லைக் கண்ணன் சந்திப்பு அவர் அளித்த புத்தக செய்தி அருமை.
ஜோஸபின் பாபா அவர்கள் பற்றிய செய்தி வருத்தம். அவர் மீண்டு வந்து புத்தகம் போட்டது மகிழ்ச்சி.
பதிவர் சந்திப்பு, படங்கள் , காணொளி அருமை.
வாழ்த்துக்கள்.
கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரியாரே
மிக்க நன்றி.
நீக்குஇப்போது தான் உங்கள் பகிர்வை கண்டேன். மிக்க நன்றி தோழி. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும்.
நீக்கு