புதன், 21 மார்ச், 2018

கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு - மக்களும் மழலைகளும்..(1)

#1


‘பெண்.. 
சக்தியின் அடையாளம்,
கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு,
அவளன்றி எப்படைப்பும் சாத்தியமில்லை!’


#2
ரோஜா என்றும் சூரியகாந்தியாக முடியாது, சூரியகாந்தி ரோஜாவாக முடியாது. எல்லாப் பூக்களும் பெண்களைப் போல அதனதன் வழியில் அழகானவையே. பெண்கள் தத்தமது தனித்தன்மையோடு திகழ, அவர்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன்
_Miranda Kerr



#6
"தம் கனவுகளின் அழகில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே 
சொந்தமாகிறது எதிர்காலம் " 
- Eleanor Roosevelt.

#4
"அடக்கம் என்பது  தற்பெருமையை விடுத்து, 
அதே நேரம் கெளரவத்தைத் தக்க வைத்துக் கொள்வது."
_ Vanna Bonta

#5
"உன்னை நீ நம்பு. 
அதன் பின்
எவராலும் உன்னை நிறுத்த முடியாது"

#6
“தேவதையின் குரலே  மழலையின் சிரிப்பு”

#7
‘வாழ்க்கை வாழ்வதற்கே.. 
புரிந்தவர்கள் புன்னகைப்பார்கள் 
அமைதியாக.. அழகாக..’

#8
‘உண்மையான அன்பு, அது இல்லாத இடத்தில் கிடைக்காது,
இருக்கும் இடத்தில் மறைக்கவும் இயலாது.’ 
_Torquato Tasso

#9
‘எவரெவருக்கெல்லாம் இன்று தேவையோ 
அனுப்புகிறேன் அவருக்கு, எனதொரு புன்சிரிப்பை..’

#10
“எங்கு அவசியமோ அங்கு தைரியமாக உங்கள் குரலைப் பயன்படுத்துங்கள்; துணிவுடன் மனம் சொல்வதைக் கேளுங்கள்; 
உறுதியோடு நீங்கள் கற்பனை செய்த வாழ்க்கையை வாழுங்கள்!”


#11
‘நம்பிக்கை.. 
சில நேரங்களில் எதுவுமே இல்லாத போது அது மட்டுமே இருக்கும். 
அது மட்டும் இருந்தால் எல்லாமே இருப்பதற்குச் சமம்.’

***
[உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும்  தொகுப்பது தொடரும்..]

16 கருத்துகள்:

  1. படங்களும் அதற்கான வரிகளும் அருமை. இளவரசர் புன்னகையை ரசித்தேன். முதல் படம் கலரில், கடைசிப் படம் அதுவே கருப்பு வெள்ளையிலா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. நன்றாக உற்றுப் பாருங்கள் :). முதல் படத்தில் ஃபோகஸ் பெண்மணியின் மீது. கடைசிப் படத்தில் ஃபோகஸ் கடவுளின் மீது. ஒளிப்படக் கலையில் இது ஒரு உத்தி. கருப்பொருள் எதுவோ அதைத் தெளிவாகக் காட்டுவது.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஓ.... புரிந்தது.. ஓகே ஓகே...

      மூன்றாவது படத்தில் இருப்பது யார்? விளம்பரப்படம் போல படமும் மிக அழகாக எடுக்கப் பட்டிருக்கிறது.

      நீக்கு
    3. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வேலைக்காகக் குடும்பங்களாக பெங்களூருக்குப் புலம் புயர்ந்தவர்களில் ஒருவர். தாய்மை அடைந்து தன் அம்மா இருக்கும் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்வதாக விடைபெற வந்த போது எடுத்த படம். அந்தப் பூரிப்பும் சேர்ந்திருக்கிறது முகத்தில்:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அழகான படங்கள் அருமையான வரிகள்.
    கடைசி படம் அம்மன் மிகம் தெளிவாய்.
    அவள்ன்றி எப்படைப்பும் சாத்தியமில்லை என்பதை தெளிவாய் சொல்கிறார்.
    மருமகன் வளர்ந்து விட்டார், வாழ்த்துக்கள்.அவன் தங்கைதானே புன்னகை இளவரசி.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மருமகளேதான். மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.

      நீக்கு
  3. அழகாக... அருமையாக...

    மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை...படங்களும் வரிகளும்...

    பதிலளிநீக்கு
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்றொடர்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin