ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மாசற்ற சோதி.. - குதம்பைச் சித்தர் பாடல்களுடன்.. படங்கள் 10

#1
விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.


#2
எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.

#3
எல்லாப் பொருளுக்கும் மேலான என்தேவைச்
சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.


#4
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.


#5
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண்.

#6
பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.

#7
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.

#8
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
தாரணி சொல்லுமடி குதம்பாய்
தாரணி சொல்லுமடி.


#9
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி.

#10
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி .
-குதம்பைச் சித்தர்
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/40555688685/
Flickr தளத்தின் EXPLORE பக்கத்தில் தேர்வாகி
10275++ பக்கப் பார்வைகளைப் பெற்ற படம்.

 ***

7 கருத்துகள்:

  1. சிறப்பான குதம்பைச் சித்தர் பாடல் வரிகள். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. குதம்பைச் சித்தர் பாடல்களை வாசிக்கும் அருமையான வாய்ப்பு.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். குதம்பைச் சித்தரின் பாடல் வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin