வெள்ளி, 22 டிசம்பர், 2017

தோட்டத்துக்குப் போயேன் செல்லம்...

ன்றையக் குட்டிச் செல்லங்கள் பலருக்கும் பிடித்தமான, அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் பாட்டு கண்மணி ரைம்ஸின் (சோம்பேறிப் பையன்) ‘தோட்டத்துக்குப் போயேன் ராமா’. அதைத் தழுவி சுறுசுறுப்புச் செல்லத்தின் படங்கள் எட்டு...:)


**

#1
'தோட்டத்துக்குப் போயேன் செல்லம்..'

ஆஹா, அணில்கள் பார்க்கலாமே அம்மா!

#2
'மாடு மேச்சு வா செல்லம்..'

'ஓ, கன்னுக்குட்டிகளோடு விளையாடக்
கெளம்பிட்டேன் அம்மா!'

#3
'அடுப்பு மூட்டு செல்லம்!'

அவரைக்காய் பறிச்சுச் சமைப்போம் அம்மா!

#4
'பாடம் படியேன் செல்லம்!'
'இயற்கையிடம் படிச்சிட்டிருக்கேன் அம்மா!'
#5
'பூ பறித்து வா செல்லம்..'

'சிகப்புச் செம்பரத்தை பிடிக்கும்தானே அம்மா!'

#6
'பாத்திரம் கொண்டு வா செல்லம்..'
'வேகமாய்ப் போகிறேன் அம்மா!'
#7
'தண்ணீர் எடுத்து வா செல்லம்..'

'பிடித்துத் தருகிறேன் அம்மா!'
#8
'சாப்பிட வாயேன் செல்லம்..'
'எனக்குப் பசிக்கலையே அம்மா:)!'
***

தே போல, இரு வருடங்களுக்கு முன் குழந்தைகளிடம் பிரபலமாக இருந்த ஏர்டெல் சூப்பர் சிங்கரின்  விளம்பரப் பாடல் ‘காலு கிலோ கருப்புப் புளி..’. அப்போது எடுத்த ஒளிப் படம் ஒன்று..

#9
‘காலு கிலோ கருப்புப் புளி.. மஞ்சத் தூளுண்ணா..’

அந்த சமயத்தில் பல குழந்தைகள் இந்தப் பையைத் தூக்கிக் கொண்டு ஆடிப்பாடிய காணொளிகள் இப்போதும் யுட்யூபில் கிடைக்கிறது. ஆனால் அசல் விளம்பரப் பாடல் கிடைக்கவில்லை.

[படங்களில்: தம்பி மகளும் மகனும்..]


***
மழலைப் பூக்கள் (பாகம் 11)

12 கருத்துகள்:

  1. இளவரசரின் இளையவளா? சுற்றிப் போடச் சொல்லுங்க... அருமை, அழகு.

    பதிலளிநீக்கு
  2. அழகிய படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. குழந்தைக்கு திருஷ்டி சுற்றுங்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin