மே 2017 , தென்றல் அமெரிக்கப் பத்திரிகையில்..
அலைகளை உள்வாங்கிக் கொண்டு
அமைதி காக்கிறது கடல்.
ஒரு குழந்தை குவித்துச் சென்ற
மணற்கோட்டையை
வட்டமிட்ட நண்டு
ஊர்ந்து மறைந்து போகிறது
மணலுக்குள்.
பறவைகள் பறந்த சுவடேயின்றி
நீண்டு கிடந்த நீல வானத்தின்
கடைசி மேகமும்
காணாது போகிறது.
இப்போது நானும்
வெகு தூரத்தில் மலையும் மட்டும்.
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
நான் கரைந்து மலை மட்டும்
மிஞ்சிக் கிடக்கும் வரைக்கும்.
**
பனியில் குளித்திருந்த
பசும் புற்கள் மேல்
அடைக்கலம் நாடி
வந்திறங்குகிறது
வாடி வயதான
காய்ந்த சருகு
ஒரு தொடக்கத்தின் முடிவாக
ஒரு முடிவின் தொடக்கமாக.
**
பயனர் கணக்குடன் இணையத்தில் வாசிக்கவும், ஒலி வடிவில் (நன்றி திருமதி.சரஸ்வதி தியாகராஜன்! ) கேட்கவும்.. http://www.tamilonline.com/thendral/ !
அட்டையில் அறிவிப்புடன்..
பக்கம் 70 - கவிதைப் பந்தலில்,
நான் எடுத்த படங்களுடன்..
கவிதைகள் மூன்று!
மகா சமுத்திரங்களின்
அடி ஆழத்தில்
மலையன்னை பிரசவித்த
நதிகளின் ஓட்டத்தில்
குளங்களில் குட்டைகளில்
வட்டக் கிணறுகளில்
எல்லைகள் கொண்ட ஏரிகளில்
ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்
தனக்கானத் தேவைகளை
நிறைவேற்றிக் கொண்டு
நிறைவாக வாழ்கின்றன மீன்கள்.
நீரிலே பிறந்து
நீரிலே வாழ்ந்து
நீரிலேயே தொலைந்து போக
வாங்கி வந்த சாபமே
அவற்றின் வரமும்.
**
நான்
அலைகளை உள்வாங்கிக் கொண்டு
அமைதி காக்கிறது கடல்.
ஒரு குழந்தை குவித்துச் சென்ற
மணற்கோட்டையை
வட்டமிட்ட நண்டு
ஊர்ந்து மறைந்து போகிறது
மணலுக்குள்.
பறவைகள் பறந்த சுவடேயின்றி
நீண்டு கிடந்த நீல வானத்தின்
கடைசி மேகமும்
காணாது போகிறது.
இப்போது நானும்
வெகு தூரத்தில் மலையும் மட்டும்.
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
நான் கரைந்து மலை மட்டும்
மிஞ்சிக் கிடக்கும் வரைக்கும்.
**
முடிவிலி
பனியில் குளித்திருந்த
பசும் புற்கள் மேல்
அடைக்கலம் நாடி
வந்திறங்குகிறது
வாடி வயதான
காய்ந்த சருகு
ஒரு தொடக்கத்தின் முடிவாக
ஒரு முடிவின் தொடக்கமாக.
**
பயனர் கணக்குடன் இணையத்தில் வாசிக்கவும், ஒலி வடிவில் (நன்றி திருமதி.சரஸ்வதி தியாகராஜன்! ) கேட்கவும்.. http://www.tamilonline.com/thendral/ !
நன்றி தென்றல்!
***
அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குகவிதைக்குப் பொருத்தமான மூன்று படங்களும் அருமை. படங்களுக்கு ஏற்றபடி கவிதைகளும் அழகாக அமைந்துள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குநன்றி VGK sir.
நீக்குநாம் வழக்கமாகப் பார்க்கும் இயற்கை நிகழ்வுகளை, மறைந்திருக்கும் வாழ்வியல் உண்மைகளுடன் தெரிந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் அழகாகக் கோர்த்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகண்ணாடித் தொட்டியில் வாழும் மீனின் வாழ்க்கையும் நிறைவானதா? கூண்டுக்குள் வாழவே விரும்பும் சில மனிதர்களைப் போல!
கருத்துக்கு நன்றி.
நீக்குஇல்லையென்றும் சொல்ல முடியவில்லையே. தொட்டி நீரே கடலெனக் கருதி உற்சாகம் மாறாது நீந்தியபடி இருக்கின்றனவே.
படங்களும் பாவரிகளும் அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமை. ஆனால் மீன்கள் நிறைவாகத்தான் வாழ்கின்றனவா! "நான்" "முடிவிலி" இரண்டுமே மிக அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகளும், பாராட்டுகளும்.
நீக்குநல்ல கேள்விதான். மூன்றாவதாக அளித்த பதில் அப்படியே உங்களுக்கும்.. ‘இல்லையென்றும் சொல்ல முடியவில்லையே. தொட்டி நீரே கடலெனக் கருதி உற்சாகம் மாறாது நீந்தியபடி இருக்கின்றனவே.’ அவரவர் பார்வையில் வேறுபடவே செய்யும். மாறுபட்ட கருத்தையும் மதிக்கிறேன்.
நன்றி ஸ்ரீராம்:).
படங்களுக்கும் கதைகளுக்கும் நல்ல ஜோடிப் பொருத்தம்..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குsuper
பதிலளிநீக்குநன்றி காஞ்சனாம்மா.
நீக்குஎண்ணங்களுக்கு வரிவடிவம் கொடுப்பதானாலும் அதற்கேற்ப ப்டங்களை எடுத்துச் சேர்ப்பதானாலும் கலைநயம் தெரிகிறது பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநன்றி GMB sir.
நீக்குஅற்புதமான கவிதைகள்
பதிலளிநீக்குவாசிக்க வாசிக்க கவிதை
மனத்துள் ரூபமாய் விரியும் அதிசயம் கண்டேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி sir.
நீக்குஅற்புதம்....ஒவ்வொரு கவிதையும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது ராமலக்ஷ்மி. மிகவும் பிடித்திருந்தது.
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும் ஷக்தி!
நீக்கு