விடை பெற்ற வருடத்தில்..
முத்துச்சரம் + எனது ஃப்ளிக்கர் பக்கம்
ஒரு பார்வை..
பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும் கூட, வீடு மாற்றம், பல சொந்த வேலைகளுக்கு நடுவே இந்த அளவு முடிந்ததே திருப்தியாக உள்ளது.
ஒளிப்படங்கள்:
எழுத்து மிகவும் குறைந்து போன வருடம். ஆனாலும் ஃப்ளிக்கரில் ஒளிப்படப் பதிவுகளை விடாமல் தொடர்ந்ததும் இந்த ஆண்டில் 2500 படங்களை நிறைவு செய்ததும் நிறைவாக உணர வைத்தது.
# இரு தினங்களுக்கு முன்.. ஃப்ளிக்கர் பக்கத்தில் எனது 2500 வது பதிவு
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/31152805804/ 2500th upload in flickr |
ஃப்ளிக்கரில் எக்ஸ்ப்ளோர் என்றால் என்ன என்பதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். தினம் சுமார் பதினைந்து முதல் இருபது இலட்சம் புகைப்படங்கள் வலையேறும் ஃப்ளிக்கர் தளத்தில், ஐநூறு படங்களை அன்றைய சிறந்த படங்களாக அறிவிப்பதே எக்ஸ்ப்ளோர். அப்படியாக இந்த வருடம் தேர்வான எனது படங்கள் மூன்று..
நாகாஸ்திரத்துடன் கர்ணன்:
2010_ஆம் ஆண்டில் Sony W80 பாயின்ட் அன்ட் ஷூட் கேமராவில் நெல்லையப்பர் கோவிலில் எடுக்கப்பட்ட படம்.
சமீபத்தில் Penguin Random House_யைச் சேர்ந்த Dorling Kindersley பதிப்பகத்தார், தாங்கள் தயாரித்து வரும் 500 பக்கங்களுக்கு மேலான மகாபாரதம் நூலுக்காக ஃப்ளிக்கர் வழியாக கேட்டு வாங்கிக் கொண்டுள்ளார்கள். சென்ற ஆண்டு சென்றிருந்த போது பிரகாரத்திலிருக்கும் பல சிற்பங்களைச் சுற்றி பராமரிப்புக்காகக் கம்பிக் கூண்டுகள் அமைத்து விட்டிருப்பதைப் பார்த்தேன்.
அடுத்ததாக,
கிழக்கு வாசல் உதயம் அட்டைப்படம்
கல்கி கேலரியில் கோடைத் தாக்கம்
நறுமுகைப் பதிப்பக வெளியீட்டில் அட்டைப் படம்
கல்கி பவள விழா மலரில் சிறு பேட்டி
கல்கி தீபாவளி மலரில்.. ஆறாவது ஆண்டாக.. எனது படங்கள்
வலம் இதழில் அட்டைப் படம்.
தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழில்.. நான் எடுத்த படங்களுடன் தகவல்கள்... 6 பகிர்ந்துள்ளேன் இந்தப் பகுப்பில்...
ஏழாவதாக, இன்றைய பட்டம் இதழின் அட்டையிலும் ‘நம்மைச் சுற்றி.. நம்மைப் பற்றி..’ பக்கத்திலும் வெளியாகியுள்ள படம் மற்றும் படைப்பை விரைவில் பகிருகிறேன் :).
ஏற்கனவே ஃப்ளிக்கரில் பகிர்ந்து, பின்னர் தொகுக்கும் படங்களுடானான வாழ்வியல் சிந்தனைப் பதிவுகளோடு புதிதாக சேர்ந்து கொண்டது ‘என் வீட்டுத் தோட்டத்தில்..’ தொகுப்புகள். வாழ்வியல் சிந்தனைப் பதிவுகளைத் தேடி வந்து வாசிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
படைப்புகள்:
*கல்கி தீபம் இதழில்.. படங்களுடன் ஆலய தரிசனக் கட்டுரை
*கல்கியில் கவிதை: இரங்கல்
* குங்குமத்தில்...
படமும் கவிதையும் - பொன்னியின் சிரிப்பு
இரு கவிதைகள் - உடைந்த சிறகுகள்; நீலத் தோழி
* பதாகை மின்னிதழில்.. கவிதை - மீள்பார்வை
* நவீன விருட்சம் 100_வது இதழில்.. இரு கவிதைகள்
தமிழாக்கம்:
‘நவீன விருட்சம் 99’,‘வளரி’ மற்றும் ‘புன்னகை’ சிற்றிதழ்களில் தமிழாக்கக் கவிதைகள். தவிரவும் வலைப்பூவில் பகிர்ந்த ஜப்பானியத் துளிகள் மற்றும் எமிலி டிக்கின்ஸன் கவிதை.
அங்கீகாரம்:
தமிழ் யுவர் ஸ்டோரி டாட் காம் பேட்டி
மற்றும்
தூறல் பகிர்வுகள். அவ்வளவே கடந்த வருடத்தில்..
***
இந்த வருடமும் சில சிந்தனைகளும்..
ஃபேஸ்புக்கில் தோழி ஒருவர் ‘எந்தத் தீர்மானமும் எடுக்கக்கூடாதென்பதே தனது இந்த வருடத் தீர்மானம்’ எனப் பதிந்திருந்தார். வாய் விட்டுச் சிரிக்க வைத்தாலும் அதன் பின் இருக்கும் ஒரு வேதனையான உண்மை, எடுக்கும் தீர்மானங்களை நம்மில் பலராலும் நிறைவேற்ற முடிவதேயில்லை. அதனால் தீர்மானங்கள் என்றில்லாமல் நடப்பு ஆண்டுக்கான சில சிந்தனைகள்...
ஒரு சிறுகதை கூட எழுதாதது குறை. ஏற்கனவே மனதிலிருக்கும் கருக்களுக்காவது வடிவம் தர வேண்டும்.
வாசிப்பு குறைந்ததால் நூல் விமர்சனப் பகிர்வும் இல்லை. ஈடுகட்டும் விதமாக புது ஆண்டின் தொடக்கத்தில், இந்த வார கல்கியில் வெளியாகியுள்ளது எனது நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று. வாசிப்பும் அது குறித்த பகிர்வும் தொடர வேண்டும்.
பயணம் மற்றும் குறிப்பிட்ட இடங்கள், நிகழ்வுகள் சார்ந்த படங்கள் பல பகிரப்படாமல் தேங்கி விட்டுள்ளன (சென்ற சில வருடங்களாகவே). படத் தொகுப்புகள் எடுத்துக் கொள்ளும் கணினி நேரத்தால் கழுத்து, கை வலி வருவதால் அவற்றை சென்ற வருடத்தில் மிகக் கவனமாகத் தவிர்த்தது ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் பயனளித்தது என்றே கூற வேண்டும். ஆனாலும் நேரமும் ஆரோக்கியமும் இடம் கொடுப்பின், சிறு குறிப்புகள், தகவல்களுடன் பயணப் படங்களை இந்த ஆண்டில் பகிர நினைக்கிறேன். புதிய ஃபுல் ஃப்ரேம் (Nikon D750) கேமராவுக்காகவே பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கட்டிடக் கலை சார்ந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
வலைப் பதிவுகளிலிருந்து முழுக்கவே விலகி விடாமல் தொடர்ந்து கொண்டிருப்பதே பெரிய விஷயமாகப் படுகிறது. பதிவுகள் அதிகமற்ற இவ்வருடத்தில் மிக விரைவாக பக்கப் பார்வைகள் ஐந்திலிருந்து ஆறாவது இலட்சத்தைத் தாண்டி (6,34,800) பயணிக்கிறது. எதையேனும் தினம் தேடி வந்து வாசிப்பவர்கள் இருப்பதைப் பார்க்கையில் அதற்காகவேனும் தொடரும் உத்வேகம் வருகிறது. அத்துடன்,
உடன் வரும் அத்தனை பேருக்கும் எப்போதும் போலவே என் நெஞ்சம் நிறைந்த நன்றி:).
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ஒளி மயமானதாக அமையட்டும் 2017! |
***
அருமையான அலசல் பதிவு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஉடன் வரும் எனக்கும் நன்றி உண்டல்லவா. நான் உங்கள் புகைப்பட வித்தையின் ரசிகன்
பதிலளிநீக்குநிச்சயமாக:). நன்றி GMB sir.
நீக்குநல்லதொரு பகிர்வு. இந்த வருடமும் இன்னமும் சிறப்பாக அமையட்டும்....
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குசாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஇவ்வாண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குசிறப்பான அலசல்...இந்த வருடம் நீங்கள் எண்ணியவை அனைத்தும் நடைப்பெற
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றி அனுராதா.
நீக்கு