புதன், 12 நவம்பர், 2014

நாம் நாமாக..

1. கண்கள் இருளைப் பார்க்கும் போது நம்பிக்கை நிறைந்த இதயம் ஒளியைப் பார்க்கிறது. 



2. வாழ்க்கை எளிதாவதில்லை. எதிர்கொள்ளும் திறனே வலுப்பெறுகிறது.

Bokeh Photography - இதுவும் கீழ் வருகிற மூன்று மற்றும் படம் 10...

3. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதுதான் சகலமும்.
சொல்கிறாள் Dolly

4. குறைகளில்லாத மனிதர்கள் இல்லை. சந்திக்க விரும்பும் ஆதர்ச மனிதராக நாம் இருக்கிறோமா முதலில்?

கேட்கிறாள் Dolly

5. காலைப் பொழுதில் துளிர்க்கும் சிறு நேர்மறையான சிந்தனை, நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்க வல்லது.
“நீங்க மட்டும்தான் அப்படி இப்படி திரும்பி உட்கார்ந்து போஸ் கொடுப்பீர்களா? நானும்...” என்கிறாள் Dolly.
6.
உழைப்பின் பலனைப் பெற
தேவை கொஞ்சம் அவகாசம்.


7. ஒருவரது உண்மையான பலம், அவர் தைரியமாக இருந்தே ஆகவேண்டிய தருணத்திலேயே வெளிப்படுகிறது. 



8. காத்திருக்கும் திறன் சம்பந்தப்பட்டதல்ல பொறுமை. அந்த வேளையில் கடைப்பிடிக்கும் அமைதியான மனோபாவமே!


9. நேரம் நீண்டு கொடுக்கும், சரியாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு. 




10. நாம் நாமாக இருப்போம், தனித்துவத்தை இழந்திடாமல்.
 ***

எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.

12 கருத்துகள்:

  1. படங்களும் உடன் பகிர்ந்த சிந்தனை முத்துக்களும் வழக்கம் போல் அருமை. நீல முகப்பு மாற்றிவிட்டதால் புது இடமாக தெரிகிறது.வந்து நீண்ட நாட்கள் ஆகிறது.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் அதனுடன் பயணித்த சிந்தனை முத்துக்களும் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  4. @Asiya Omar,

    நீலமுகப்பென நினைவில் வைத்திருக்கிறீர்கள்:)! சமீபத்தில்தான் டெம்ப்ளேட் மாற்றினேன். கருத்துக்கு நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  5. @ -'பரிவை' சே.குமார் said...
    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin