திங்கள், 20 அக்டோபர், 2014

செடிகொடியில் காய்கனிகள்.. - PiT Oct 2014

#1
ஒரு கல்லில் எத்தன மாங்கா..?
இந்த மாத PiT போட்டிக்குப் படங்கள் அனுப்ப இன்றே கடைசித் தினம் ஆகையால், நினைவூட்டிடும் விதமாக இங்கும் ஒரு பதிவு. 

நீங்கள் கேமராவுடன் தோட்டத்துக்கோ, தோப்புக்கோ, சோலைக்கோச் செல்ல வேண்டும். இயற்கை அன்னையின் மடியில் உறங்குபவற்றைத் தொந்திரவு செய்யாமல் படமாக்க வேண்டும். இலை தளைகளுக்குள் ஒளிந்து கொண்டு சிரிப்பவற்றைக் குனிந்து நிமிர்ந்து கண்டு பிடிக்க வேண்டும். சூரியக் குளியலில் ஆனந்தித்திருப்பவற்றை கண்டு ரசித்துக்  காட்சியாக்க வேண்டும்.

தலைப்பு: கொய்யாத காய்கனிகள்” என அறிவிப்புப் பதிவில் சொல்லியிருந்ததென்னவோ நிஜம்தான். ஆனால் அடித்துப் பெய்கிற மழைக்கு நடுவில் எப்படித் தோப்புத் துரவுக்குள் போகட்டும் என்கிறீர்களா? மழை விடும் நேரத்தில் முயன்று பாருங்களேன். காய்கனிகளும் மழையில் நனைந்து பளிச்சென போஸ் கொடுக்கும்:)!

ஒவ்வொரு மாதமும் தலைப்புக்காகப் புதுப்படங்கள் பதிகிற வழக்கத்தில் இந்தப் பதிவிலும் முதல் ஐந்து புதியவை. மற்றவை முன்னர் பல பதிவுகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

#2
இவை என்ன காய் :)?
#3 குட்டைச் செடியில்..


#4 ஒற்றைக் கத்திரி..



#5 பக்கத்துச் செடியில்.. ஒரு பிஞ்சுக் கத்திரி

#6 பிஞ்சுப் பலா

#7 பாகற்பிஞ்சு


#8 ஒரு கல்லில் ரெண்டேதான்..


#9 மாதுளை

 #10 பந்தலிலே பூசணி..

#11 மணத்தக்காளி

#12 இளநீ

போட்டி விதிமுறைகள் இங்கே . இதுவரை வந்த படங்களைக் காணலாம் இங்கே.

***

9 கருத்துகள்:

  1. சிறிய செடியில் ஒற்றைக் கத்தரி. பார்க்க நன்றாய் இருக்கிறது!

    இரண்டாவது படம் கிளாக்காயா?

    எல்லாப் படங்களுமே அருமை.


    பதிலளிநீக்கு
  2. மரம், செடி, கொடிகளின் காய் கனிகள் படம் அழகு ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம். இணையத்தில் தேடியதில் கிளாக்காய் சிகப்பாய் இருக்கிறதே. பச்சையும், பழுத்த பிறகு மஞ்சளுமாகவே காய்த்துக் குலுங்கி நின்றன இவை.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு !
    இணையதள காய்கனி அங்காடி, சென்னை.
    http://vegvillage.in/

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin