Saturday, June 21, 2014

ராகு, கேது பெயர்ச்சி - ராஜகோபுர தரிசனம் - திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம்

ராகு-கேது பெயர்ச்சி:

இன்று காலை இந்நேரமான 11 மணியளவில் ராகு பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்குள்ளும், கேது பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்குள்ளும் நுழைகின்றனர். ராகு ஸ்தலமான கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்திலும், கேது பரிகாரத் தலமான கீழப்பெரும்பள்ளத்திலும் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இருவாரங்களுக்கு முன் ஒருநாள் இரு ஸ்தலங்களுக்கும் சென்றிருந்த போது எடுத்த படங்களில் பதினாறை இன்று பகிருவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.

 #1 திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்:
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிவ ஸ்தலமான இக்கோவிலின் மூலவர் நாகநாதசுவாமி. கிரி குஜாம்பிகா எனும் பெயரில் வீற்றிருக்கிறார் பார்வதி. அம்மன் சன்னதியில் பார்வதியின் இருபக்கங்களிலுமாக லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள். முப்பெரும் தேவியர் ஒரே சன்னதியில் காட்சி தருவது இங்குதான் என்றார்கள். கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகியோருடன்  மங்கள ராகுவாகக் காட்சி அளிக்கின்றார் ராகு பகவான். மனித முகத்தோடு காட்சி தருவது இங்கு மட்டுமே என்றும் சொல்கிறார்கள்.

கோவிலுக்குள் செல்லும் முன்னரே கிடைத்தது உற்சவ மூர்த்திகளின் தரிசனமும் கொடியேற்றமும்.

#2 கொடியேற்றத்துக்கான ஆயத்தங்கள்:
#3 உற்சவ மூர்த்திகள்
#4

#5 கொடியேற்றம் காணக் காத்திருக்கும் பக்தர்கள்:

#6  கிழக்குக் கோபுரமும் கொடிமரமும்:


#7

புஷ்கரணி:
#8

#9 தெற்குக் கோபுரத்துடன்..

#10

இரு கோவில்களிலும் சிறப்பான தரிசனம் கிடைத்தது. ராஜ கோபுர தரிசனம் உங்களுக்கு:

#11 ராஜ கோபுரம்

#12 கோவில் மதில்


#13 கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்: 
நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ நாகநாத சுவாமி திருக் கோயில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயம் ஒரு சுற்றையும், சுற்றி வரும்போது சன்னதிக்குப் பின்புறமாக ஒரு கோபுரத்தையும் கொண்டுள்ளது. பிரகாரத்தின் மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும், பிரகார நடுப் பகுதியில் சுப்பிரமணியரும் உள்ளனர். அடுத்து, துர்க்கையும், லக்ஷ்மி சமேத நாரயணரும், அதன் பின்னர் கஜ லஷ்மியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர்.  அடுத்ததாக கேது பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 


 #14 கோவிலுக்கு எதிரே:

 #15 நம்பிக்கை நிறைந்த பிரார்த்தனைகள். அத்தனையும் நிறைவேறட்டும்

#16 முதல் படத்தில் தெரியும் புதுமணத் தம்பதியர்:
 வளமுடன் வாழ நம் வாழ்த்துகள்!
***


25 comments:

 1. இப்போது சென்று வந்தீர்களா..... படங்கள் அற்புதம். இதன் அருகிலேயே உள்ள உப்பிலியப்பன் கோவிலில்தான் எ(ங்கள்)ன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு இந்தக் கோவில் சென்று வந்தோம்! என் 'பாஸி'ன் ராசி கன்னிராசி!

  ReplyDelete
 2. படங்கள் எல்லாமே நேரில் தரிசித்த உணர்வைத் தந்தது. கல்லூரி நாட்களில் உறவினர்களோடு இந்த நவக்கிரக கோவில்களுக்கு சென்றதை இப்போது நினைவு கொள்கிறேன்.

  கேது என் ராசிக்கு பெயர்ந்துள்ளாரா...

  எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 3. வீட்டில் இருந்தபடியே அனைவரும் தரிசித்தோம்
  என நினைக்கும்படி அற்புதமான படங்களுடன்
  சிறப்புப் பதிவினைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அற்புதமான படங்கள்

  ReplyDelete
 5. மிக நன்றி ராமலக்ஷ்மி. இங்கிருந்தே ஈஸ்வரர்களைத் தரிசித்துக் கொண்டேன். அனைவருக்கும் நல்லதே நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
  @ஆதி எனக்கும் மீனராசிதான். நீங்கள் கோவிலுக்குப் போகும்போது இந்த அம்மாவை நினைத்துக் கொள்ளுங்கள்.:)

  ReplyDelete
 6. அருமையான பதிவு. படங்களுடன். நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. சரியான நேரத்தில் சிறப்பான பதிவுகள்..பாராட்டுக்க்கள்.

  ReplyDelete
 8. அட்டகாசமா இருக்கு படங்கள் எல்லாமே!

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 9. அற்புதமான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி...

  ReplyDelete
 10. வல்லிம்மா - கட்டாயமாக தங்களுக்கும் சேர்த்தே பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 11. அழகான படங்கள். நான் ஊரில் இல்லாதபோது இந்த பக்கம் வந்து இருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 12. படங்கள் அற்புதம் அக்கா...
  புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. @ஸ்ரீராம்.,

  அந்த மணமக்களைப் போல:). என் ராசியிலிருந்து வெளியேறியிருக்கிறார் ராகு. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 14. @ADHI VENKAT,

  ஆம் ஆதி. எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 15. @Rathnavel Natarajan,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sir.

  ReplyDelete
 16. @கோமதி அரசு,

  ஆம்:). அதுவும் ஒரு நாள் பயணமே. நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 17. @சே. குமார்,

  நன்றி குமார். விடுமுறை இனிதாகக் கழிந்திருக்கும் என நம்புகிறேன்:).

  ReplyDelete
 18. அருமையான படங்கள்....

  அனைவருக்கும் நல்லதே நடக்க எனது பிரார்த்தனைகளும்....

  ReplyDelete
 19. அருமையானபடங்கள் கண்டுகளித்தோம். வாழ்த்துகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin