இந்த வருட மகளிர் தினத்தையொட்டி ITHI மகளிர் அமைப்பு அறிவித்த ஒளிப்படப் போட்டி குறித்து பகிர்வு இங்கே. கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா குறித்த பகிர்வு இங்கே. சென்ற ஞாயிறு, 4 மே 2014 காலை 11 மணி முதல் 5 மணி வரை பெங்களூர், வில்சன் கார்டன் FSMK அலுவலகத்தில் நடைபெற்ற கண்காட்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற படங்கள் எவை என்பதை முதலில் பார்ப்போம்.
A பிரிவு: தனிப்படங்கள்
#1 முதல் பரிசு:
#2 இரண்டாம் பரிசு
“வயதோ , பெண் என்பதோ ஒரு தடையல்ல. நானும் ஒரு பிஸினஸ் வுமன்” என்கிறார்.
#3 மூன்றாம் பரிசை கீழ்வரும் 2 படங்களும் பகிர்ந்து கொள்கின்றன:
பெங்களூரின் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக் கணக்கான பெண்களின் நிலைமை இது. வேலை செய்யும் நேரத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள என யாருமற்ற நிலையில், இது போன்ற பாதுகாப்பற்ற சூழலில் தம் கூடவே வைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.
#4
B பிரிவு: கதை சொல்லும் படங்கள்
#5 முதல் பரிசு
பாண்டிச்சேரி ‘ஆரோவில்’லிற்கு சென்றிருந்த போது சந்தித்திருக்கிறார் இவரை செந்தில்குமார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இப்பெண்மணி வருடம் தோறும் இங்குள்ள உயர் ரகப் பந்தயக் குதிரைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக வருகிறாராம். அவரோடு பேசிய போது வேலையில் அவர் காட்டும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும், அவரது தன்னம்பிக்கையும் தன்னை மட்டுமின்றி தன் குடும்பத்தினரையும் பிரமிக்க வைத்ததாகக் கூறுகிறார். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்தி ஆகியவற்றைப் பற்றிய அவரது பகிர்வு அவரை ஒரு சிறந்த உதாரணப் பெண்மணியாகத் தனக்குக் காட்டியது என்கிறார் செந்தில்குமார்.A பிரிவு: தனிப்படங்கள்
#1 முதல் பரிசு:
Talk To Him
(by Kunjila Mascillamani Henry)
கொல்கத்தாவின் கரியாத் எனுமிடத்தில் வளையல்களும் கழுத்து மாலைகளும் விற்கும் பெண்மணி. கணவனிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர அவரிடம், தன் அழகால் ஈர்க்கப்பட்டு, ஒருவர் தன்னைப் படமெடுப்பதைப் பெருமையுடன் சொல்லி மகிழ்ந்த பின், அப்பாவிடம் பேசுமாறு மகனை அழைக்கும் தருணம். “அந்த அழகான புன்னகையை என்னால் மறக்கவே முடியாது” என்கிறார் படத்தை எடுத்த குஞ்சிலா.#2 இரண்டாம் பரிசு
Today's working women
(By Ramsadeesh)
“வயதோ , பெண் என்பதோ ஒரு தடையல்ல. நானும் ஒரு பிஸினஸ் வுமன்” என்கிறார்.
#3 மூன்றாம் பரிசை கீழ்வரும் 2 படங்களும் பகிர்ந்து கொள்கின்றன:
Working for you
(By Jayesh Marangad)
பெங்களூரின் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக் கணக்கான பெண்களின் நிலைமை இது. வேலை செய்யும் நேரத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள என யாருமற்ற நிலையில், இது போன்ற பாதுகாப்பற்ற சூழலில் தம் கூடவே வைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.
#4
Participation
(By Neenu Suresh)
ஜார்கண்ட், ராஞ்சி மாவட்டத்தில் ரேஷன் வழங்கப்படாததை எதிர்த்து தர்ணா நடத்த முடிவு செய்ய கூட்டம் நடந்த போது ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்களும் கலந்து கொண்ட காட்சி. பின்னர் நடந்த தர்ணாவிலும் பெருமளவில் பெண்கள் கலந்து கொள்ள வெற்றி கிடைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியாளர் நிறுத்தப்பட்டிருந்த ரேஷனை உடனடியாக வழங்க உத்திரவிட்டிருக்கிறார். சமூகப் பிரச்சனைகளில் பெண்களும் சம அளவில் கலந்து கொள்வதுதான் சம உரிமைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் நீனு.B பிரிவு: கதை சொல்லும் படங்கள்
#5 முதல் பரிசு
Women in progressive era !
#6 இரண்டாம் பரிசு
Locked
(By S. Madhusudan)
“இந்தக் காட்சியை என் கேமரா கட்டம் கட்டியபோது, இந்தப் பெண்மணியில் கண்கள் ஏதோ ஒரு கதையை சொல்ல முற்படுவதாகவே எனக்குத் தோன்றியது. அதே நேரம் இன்னொன்றும் என் கவனத்தை ஈர்த்தது. அவருக்குப் பின்னால் இருந்த பூட்டு. இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நாம், நகர சூழலை மனதில் கொண்டு ஆணுக்குப் பெண் சமமாக இருக்கிறார்கள் எனப் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் இன்னும் கிராமப் புறங்களில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவே இல்லை. மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் வன ஓரத்தில் சிறியகடை வைத்திருக்கும் இப்பெண்மணியின் படத்தை 'The other business class' என்ற பிரிவில் காட்ட விரும்புகிறேன்” என்கிறார் மதுசூதன்.#7
மதுசூதன் வெற்றி பெற்ற தன் படத்துடன்.. |
சுமார் 50-க்கும் மேலான படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைப் பேசின.
சென்ற வருடம் பெங்களூர் ஈஜிபுரா குடியிருப்புகள் அகற்றப்பட்டதில் வீடுகளை இழந்து நகரின் பல பாகங்களில் இடம் தேடிச் சிதறிப்போன குடும்பங்கள் ஏராளம். வானமே கூரையாய் இருக்க, தங்கள் சேலைகளால் தற்காலிகக் கழிப்பறைகள் அமைத்திருக்கும் பெண்களின் அவல நிலையைப் படமாக்கியிருந்தார் நா. வசந்த்குமார்:
#8
பெண்களின் மனதைப் பார்க்காமல் அவர்கள் கொண்டு வரும் தங்கத்தைக் கொண்டே அவர்களை மதிப்பிடும் நிலை இன்னும் சமூகத்தின் பல பிரிவுகளில் மாறவில்லை என்பதைக் குறிப்பிடுவதாக இந்தப் படம்:
#9
கண்காட்சி நடந்த FSMK ( Free Software Movement Karnataka ) அலுவலகத்தில் அதன் அமைப்பினர்களோடு பேசும் வாய்ப்பும் கிடைத்தது. தன்னார்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து செய்து வரும் சேவை அவசியம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களைப் பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.
***
அனைத்துமே அற்புதமானப் புகைப்படங்கள்
பதிலளிநீக்குபதிவாக்கி நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குகுதிரை மேல் வரும் பெண்ணின் புகைப்படம் அருமை. எல்லாப் படங்களும், அதன் கீழுள்ள குறிப்புகளால் சுவாரஸ்யம் அதிகமாகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்!
பதிலளிநீக்குஅருமையான தெரிவுகள் சகோதரி !
பதிலளிநீக்குஅனைத்தும் அற்புதம்...
பதிலளிநீக்குஅனைத்துப்படங்களும் சிறப்பாக வந்திருக்கிறது.. உண்மையிலே முதல் பரிசுப்படம் அம்மாவின் கண்கள் கதை சொல்கிறது..வாழ்த்துக்கள் மதுசூதனன்..மற்றப்படங்களும் சிறப்பானதாக இருந்தது..
பதிலளிநீக்கு@Ramani S,
பதிலளிநீக்குநன்றி ரமணி sir.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குஉண்மைதான். அத்தனை படங்களுமே எடுத்தவர்களின் குறிப்புகளோடு வாசிக்கும் போது மனதைத் தொட்டன. கதை சொல்லும் படங்கள் வரிசையில் குதிரையில் இலாவகமாகச் சவாரி செய்யும் பெண்மணியின் படங்கள் மேலும் இரண்டு இருந்தன.
நன்றி ஸ்ரீராம்.
@எம்.ரிஷான் ஷெரீப்,
பதிலளிநீக்குநன்றி ரிஷான்.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@ஜெ பாண்டியன்,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஒவ்வொரு படங்களுமே கதை சொல்கின்றன....
அற்புதமானப் படங்கள்! Thanks.
பதிலளிநீக்கு@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@கே. பி. ஜனா...,
பதிலளிநீக்குநன்றி ஜனா sir.
அனைத்து படங்களும் அழகு வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
மதுசூதனன் அவர்கள் எடுத்த தாயின் படத்தில் உள்ள(முகத்தில்) கோடுகள் மிக அழகு.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
இரண்டாம் பரிசு படத்தில் கீழே இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி ஆப்பிள் கட் ஆகாமல் இருந்து இருந்தால், இன்னும் சூப்பராக இருந்து இருக்கும். இது அங்கே இருந்த படத்தை நீங்கள் எடுத்ததா..அல்லது படமே இது தானா!
பதிலளிநீக்குபெண் பூட்டு படம் நன்றாக உள்ளது.
@கிரி,
பதிலளிநீக்குகடைசி 3 படங்கள் மட்டும் நான் எடுத்தவை:). நன்றி கிரி.