Friday, May 9, 2014

சிலைகளை ஆவணப்படுத்தும் கலை - கல்கி கேலரியில் லக்ஷ்மி

சித்திரக் கலைக்காகக் கையில் எடுத்த கேமராவை கீழே வைக்காமல், ஒளிப்படக் கலை மூலமாகத் தற்போது சிற்பக் கலையை ஆவணப்படுத்தி வருவது குறித்த லக்ஷ்மியின் பகிர்வு, படங்களுடன் 11 மே 2014 கல்கி கேலரியில்..
# பக்கம் 44
பெரிய அளவில் இரு பக்கங்களுக்குப் படங்கள் வெளியாகியிருப்பதில் லக்ஷ்மிக்கு மிகுந்த மகிழ்ச்சி:). 
# பக்கம் 45

டந்த சில வருடங்களாக நான் தொடரும் லக்ஷ்மியின் ஃப்ளிக்கர் பக்கம் இது: https://www.flickr.com/photos/luxmi-r-k  .  கோவில்கள், சிற்பங்களை மட்டுமின்றி செல்லுமிடங்களில் சந்திக்கும் எளிய மனிதர்களையும், வீதியோரம் விளையாடும் குழந்தைகளையும் இவர் பதிவு செய்து வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று.

லக்ஷ்மிக்கு ஓவிய ஆர்வம் ஏற்பட்டது ஒன்றாம் வகுப்பில் என்கிறார்.  ஒரு வட்டவடிவத்தையும் ஒன்பது கோடுகளையும் (சூரியன்) கொண்ட இவரது முதல் ஓவியமே முதல் பரிசைப் பெற்றுத் தந்திருக்கிறது. கூடவே வானமும் சிறு மேகக் கூட்டமும் அதில் இருந்திருக்கிறது:)! தொடர்ந்து அகில இந்திய ஓவியப்போட்டிகளில் கலந்து வந்தவருக்கு ஆறாவது வகுப்பில் பரிசைப் பெற்றுத் தந்த கோவில் காட்சியை, தன் மானசீகக் குருவான அமரர் சில்பியின் ஓவியங்களை முன் மாதிரியாக வைத்தே வரைந்ததாகச் சொல்கிறார்.

கோவில் சிற்பங்களை பற்றி எழுத்து வடிவில் குறிப்பிடுவது ஒரு கற்பனை உருவத்தை ஏற்படுத்தவே உதவும். ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே நிஜங்களின் பக்கத்தில் சென்று பார்த்த உணர்வை அளிக்கும்.” என்கிறார் லக்ஷ்மி. உண்மைதான். பிரசவ வலி வந்த பெண்ணைக் கைத்தாங்கலாக இரு பெண்கள் அழைத்துச் செல்லும் இந்தக் காட்சியை எழுத்தால் வர்ணித்தால் இத்தனை தாக்கம் இருக்குமா என்பது சந்தேகமே.

# பிரசவம் பார்க்கும் மங்கையர் (ஐராவதேஸ்வரர் கோவில், கும்பகோணம்)
- ராஜா ராஜ சோழன் _12 ஆம் நூற்றாண்டு

முதல் பெண் முகத்தில் குழந்தை பிறக்கப் போகிற மகிழ்ச்சி, அடுத்த பெண் முகத்தில் நல்லபடியாக பிரசவம் ஆகவேண்டுமே என்கிற கவலை, ‘தாயையும் சேயையும்’ தாங்கிப் பிடிக்கும் மங்கையர் முகங்களில் பரிவும் கனிவும், கர்ப்பிணிப் பெண்ணின் முகத்தில் வலியால் தெரிகிற சோர்வு என உணர்வுகள் அற்புதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. செதுக்கிய சிற்பிக்கும் நமக்குக் காணத் தந்த  லக்ஷ்மிக்கும் பாராட்டுகள்.

ந்த ஒரு கோவிலுக்குப் புதிதாகச் சென்றாலும் அங்குள்ள சிற்பங்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதைக் கணித்து விடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஃப்ளிக்கரில் அந்தந்த நூற்றாண்டுகளைக் குறிப்பிட்டே படங்களை சேமித்து வருகிறார்.

# யானை.. பசு முகம் (ஐராவதேஸ்வரர் கோவில்,கும்பகோணம்)
-ராஜா ராஜ சோழன்_12 ஆம் நூற்றாண்டு

இவரிடம் காணப்படும் அர்ப்பணிப்புக்கு உதாரணம், எந்த ஊருக்குச் சென்றாலும் வாய்ப்பு இருப்பின் கோவிலின் கோபுரங்களை (பறவைப் பார்வை என சொல்ல முடியாவிட்டாலும்) ஓரளவுக்கு உயரத்திலிருந்து பதிவு செய்து விடுவார். கோவிலில் இருந்து எடுக்க முடியாத பட்சத்தில், அதற்காக அருகே இருக்கும் வீதிகளில் சரியான வீட்டைத் தேர்வு செய்து அங்கிருப்பவர்களின் அனுமதி பெற்று மொட்டை மாடியிலிருந்து படம் எடுக்கிறார். அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த படம் ஒன்று:

# கோவில் விமானம் கோகர்நேஸ்வரர் (பிரகதாம்பாள் கோவில், புதுகோட்டை) - (நாயக்கர்கள் 14_ஆம் நூற்றாண்டு)

ஸ்ரீரங்கநாதர் கோவில் கோபுரங்கள் இங்கே.

கோவில் கட்டிடகலை மற்றும் சிற்பங்கள் ,தெய்வங்களின் சேர்க்கை என்பது 6 ஆம் நூற்றாண்டு முதலே தொடங்கிவிட்டது. பத்துபாட்டில் குறிஞ்சி நில தெய்வமாக முருகனை தெய்வமாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் இலக்கண நூலாக கருதப்படும் தொல்காப்பியதிலேயே கொற்றவையை போருக்கு செல்வோர் பெண்தெய்வமாக வைத்து வழிபாட்டு வந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றண்டின் இறுதியிலும் இடையிலான காலகட்டங்களில் (கி.பி 590-796) தமிழ்நாட்டில் பெண்தெய்வமாக கருதப்படும் உமை,துர்க்கை,ஜேஷ்டாதேவி,அன்னையர் எழுவர் ( சப்தமாதாக்கள்) ஆகியவர்களை பல்லவர்கள்,பாண்டியர்கள்,சோழர்கள்,முத்தரையர்,நாயக்க மன்னர்கள் மற்றும் சில குறுநில மன்னர்கள் தெய்வமாக வைத்து வழிபட்டுவந்தனர்.” எனும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

# வேதமாதா, சித்தனவாசல், புதுகோட்டை

கல்கி பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் Kalai "N" Kovil https://www.flickr.com/photos/chithiram-pesuthadi/ ஃப்ளிக்கர் பக்கத்தில் இதுவரை இவர் படமாக்கியிருக்கும் கோவில்களையும், அவை குறித்த விரிவான தகவல்களையும் காணலாம்.

வார இறுதி நாட்களிலும் மற்றும் நேரம் கிடைக்கும் போதும் பல கோவில்களுக்கு சென்று ஒளிப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் லக்ஷ்மியின் சிறந்த பணி தொடரவும் நோக்கங்கள் நிறைவேறவும் வாழ்த்துவோம்.
 ***

24 comments:

 1. லக்ஷ்மிக்கு எங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்லதோர் கட்டுரை. அவர் பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் லக்ஷ்மி :)

  ReplyDelete
 4. அருமையான பணி.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அருமை அருமை... தொடருங்கள் ...

  ReplyDelete
 6. அருமை... அருமை... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. அருமையான படங்கள். வாழ்த்துகள் உங்களுக்கும் லக்ஷ்மி அவர்களுக்கும்....

  ReplyDelete
 9. இத்தனை ஈடுபாடு எங்கேயும் கண்டதில்லை. எவ்வளவு உழைப்பும் ஆர்வமும் இருந்தால் இவ்வாறு முயற்சி எடுப்பார்கள். நன்றி ராமலக்ஷ்மி திறமை கண்ட இடத்தில் பாராட்டும் உங்களின் அருமையும் புரிகிறது. இருவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் லட்சுமி.

  ReplyDelete
 11. @Vijay, Amudha, Arunyas, Muthukumar,

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 12. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். முடிந்தால்கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கும் கல்வெட்டுக்களின் படங்களையும் எடுத்து ஆவணப்படுத்துங்கள்.

  ReplyDelete
 13. நல்ல முயற்சி. தொடருங்கள். முடிந்தால் அந்தந்த தலைப்புகளில் வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ள நூல்களைப் படிக்கவேண்டுகிறேன். அவை புகைப்படங்களுக்கு மேலும் மெருகூட்டுவதோடு வரலாற்றுரீதியான செய்திகளை ஆதாரத்தோடு பகிர்ந்துகொள்ள உதவும். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. @viyasan,

  நன்றி. லக்ஷ்மியிடம் தெரிவிக்கிறேன். அதையும் செய்கிறார் என்றே நினைக்கிறேன். இணையத்தில் பகிர்வது தவிர்த்து, ஒவ்வொரு கோவிலிலும் எடுக்கிற படங்கள் நூற்றுக்கு மேல் இருக்கும் என சொல்லியிருந்தார்.

  ReplyDelete
 15. @Dr B Jambulingam,

  வரலாற்று நூல்களைப் படிப்பதாக நேர்காணலில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். மேலும் அவர் குறிப்பிட்டிருக்கும் 2 இணைய தளங்கள் தேவையான அனைத்துத் தகவல்களையும் தருவதாகச் சொன்னார்.

  நன்றி.

  ReplyDelete
 16. லக்ஷ்மி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
  அவர் எடுத்த படங்கள் பேசும் பொற்சிலைகள்.
  கல்லில் கலைவணணம் அருமை.
  பகிர்ந்த உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அழகான படங்கள் மட்டுமல்ல, இது பெரியதொரு தொண்டுமாகும். Thukkachi Ruins அந்தப் படத்தைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளில்லாத ஊரே இல்லை, அப்படியிருக்க எப்படி அந்த ஊரவர்கள் அந்தக் கோயிலை அப்படி அழிய விட்டார்கள். :(

  ReplyDelete
 18. @viyasan,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 19. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...மற்றும் அனைவரின் கருத்தையும் ஏற்று முயற்சி செய்து தகவல்களோடு புகைபடங்களை பகிர்கிறேன் .....வாய்ப்பு அளித்த ராமலக்ஷ்மி மேடம் அவர்களுக்கும் நன்றி :)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin