ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வலி - நவீன விருட்சத்தில்..

தேநீர் விருந்தொன்றில் சந்தித்தேன்
அந்த இளைஞர்களையும் யுவதிகளையும்.

இன்முகத்தோடு வேலைகளை
இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.
வேடிக்கைப் பேச்சால்
விருந்தினர்களைக் கவர்ந்தார்கள்.

“பக்கத்தில் குடிவந்திருக்கிறார்கள்
புலம் பெயர்ந்தவர்கள்”

தணிந்த குரலில் குனிந்து என்னிடம்
நண்பர் சொன்னது
காலிக் கோப்பைகளை எடுக்கவந்தவன்
காதுகளில் விழுந்து விட
புன்முறுவலுடன் நகர்ந்தான்.

‘கலவரங்களில் குடும்பங்களை
இழந்தவர்கள்’
ஏறிட்டே பார்க்க இயலவில்லை
அறிந்த பின்
அந்தப் பிரகாசமான முகங்களை.

வரலாற்றின்
கருப்புப் பக்கங்களால் காயப்பட்டவர்கள்,
போதுமென்கிற அளவுக்கு
வாழ்நாளின் பெருந்துயர்களைப்
பார்த்து விட்டவர்கள்
ஒருபொழுதும் அதைப் பற்றி பேசமட்டுமல்ல
காட்டிக் கொள்ளவும்
விரும்புவதில்லை என்று புரிந்தது.

விருந்தின் முடிவில் அவர்கள் பாடிய பாடல்
என் நாடி நரம்புகளிலிருந்து வெளியேற
ஒரு யுகம் ஆகலாம்.
அப்படி இருக்கையில்
அவர்களும் அழக் கூடும்
தம் நண்பர்களும் உடனில்லாத..
யாரும் பார்க்காத பொழுதுகளில்.
***


3 செப்டம்பர் 2013 நவீன விருட்சம் மின்னிதழில்.., நன்றி நவீன விருட்சம்!

31 கருத்துகள்:

  1. ’வலி’ அருமையான ஆக்கம். தலைப்பும் அருமை.

    நவீன விருட்சத்தில் பூத்துக்குலுங்குவதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக கவிதைகள் என் தலை தாண்டிப் போகும். இந்தக் கவிதை தலை தடவிச் சென்றது. நன்கிருந்தது. வலியும் சொல்லிச் சென்றது.

    பதிலளிநீக்கு
  3. வலியை அருமையான கவிதையாக ஆக்கியிருக்கிருக்கிறீர்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  4. கலவரங்களில் குடும்பங்களை இழந்த வலி மிகவும் கொடுமை.
    தனித்திருக்கும் போது வலி அதிகமாகத்தான் செய்யும்.

    அவர்களைப்பற்றிய கவிதை மனதை கனக்கவைக்கிறது.

    யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது ஆண்டவா! என வேண்டத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. மனம் கீறிப்போன அருமையான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  6. வலி தீர்ந்த பாடில்லையே. வேறு வேறு உருவத்தில் அவர்களைத் துரத்துகிறது அல்லவா.
    உங்களது பதிவு எல்லோரையும் சென்றடைய வேண்டும். அருமையான கவிதை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. ///வரலாற்றின்
    கருப்புப் பக்கங்களால் காயப்பட்டவர்கள்///

    இந்த வலி இன்னும் இன்னும்... வலி உக்கிரமானது தோழி

    பதிலளிநீக்கு
  8. //வரலாற்றின்
    கருப்புப் பக்கங்களால் காயப்பட்டவர்கள்,
    போதுமென்கிற அளவுக்கு
    வாழ்நாளின் பெருந்துயர்களைப்
    பார்த்து விட்டவர்கள்
    ஒருபொழுதும் அதைப் பற்றி பேசமட்டுமல்ல
    காட்டிக் கொள்ளவும்
    விரும்புவதில்லை என்று புரிந்தது.//

    மிகச்சரி. காயங்களை மறுபடியும் கீறி ரத்தம் வரச்செய்வதில் என்ன பலன்..

    பதிலளிநீக்கு
  9. கவிதை மிகவும் அருமை...மனதை கனக்கச் செய்கிறது......

    பதிலளிநீக்கு
  10. @தருமி,

    தங்கள் கருத்தில் மகிழ்ச்சி. மிக்க நன்றி தருமி sir.

    பதிலளிநீக்கு
  11. @கோமதி அரசு,

    உண்மைதான்.

    கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  12. @வல்லிசிம்ஹன்,

    இந்த வலி தீர வழியே இல்லைதான்.

    கருத்துக்கு நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  13. @KSGOA,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வலிகளுடன் வாழும் வாழ்க்கை கவிதையாக.

    பதிலளிநீக்கு
  15. வலி கவிதை அருமை, படித்ததும் மனசு கனக்க்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin