செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

இலையும் அழகுதான் - இம்மாத PiT

#1
 Canna Plant
'மலர்கள் மட்டும்தான் அழகா? ஒரு செடிக்கோ மரத்துக்கோ அழகூட்டும் இலைகளை மறக்கலாமா' எனக் கேட்கிறார் இம்மாத PiT போட்டியின் நடுவர், Anton. எத்தனையோ முறை மரங்களைப் படமாக்குகையில், ஒரு கொப்பாக இலைகள் என்ற வகையில் ஓரிரு படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும் இவரது கேள்வியும், இந்தத் தலைப்புமே விதம் விதமான வண்ணங்களிலும் எண்ணற்ற வடிவங்களிலும் மலர்களோடு போட்டியிடும் இலைகளின் பக்கம் என் பார்வையைத் திருப்பியது.

போட்டி அறிவிப்பு: இலை(கள்) இங்கே.
இன்றே படங்களை அனுப்பக் கடைசித் தேதி.

அறிவிப்புப் பதிவிலும் இடம்பெற்ற கீழ்வரும் பாகற்கொடி தவிர்த்து மற்ற 10 படங்களும் லால்பாகில் சென்ற வாரம் படமாக்கியவை.
#2

# 3 சிகப்பு நரம்புகள்


#4 சிறகுகள் விரித்து..



#5 இதயம் பேசுகிறது..

 #6 இயற்கை போட்ட முடிச்சு


#7 மறுபக்கம்


#8 தோரணம்

#9 மாலை இளம் வெயிலில் கூட்டு இலைகள்


#10 குரோட்டன்ஸ்

#11 கையசைத்து விடை தருகிறதோ?

இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களை இரசிக்க இங்கே செல்லலாம்.

ஆர்வமுள்ளவர்கள் இன்றிரவுக்குள் படங்களை அனுப்பிடுங்கள்.
 ***

13 கருத்துகள்:

  1. மலரளவு இல்லையெனினும் இலைகளும் அழகே!

    இயற்கை போட்ட முடிச்சில் விநாயகர் தெரிகிறாரே... அதை நீங்கள் சொல்லவில்லையே! :)))

    கையசைத்து விடை தருவது தெரியவில்லை... படமெடுத்த பாம்பின் முகம் தெரிகிறது! :))

    பதிலளிநீக்கு
  2. இயற்கை தரும் இலைகளும் அழகு தான். நல்லா இருக்கு, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. @ஸ்ரீராம்.,

    /இலைகளும் அழகே/

    மலரளவு இல்லையெனச் சொல்ல இதுவும் அழகான தலைப்பே:)!

    விநாயகர், அட ஆமாம்!

    /படமெடுத்த பாம்பின்/

    பயம் காட்டாதீர்கள்:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அனைத்தும் அருமை மற்றும் அழகு... வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல எல்லாப் படங்களும் அழகுதான். என்றாலும், கடைசிப் படம் ரொம்ப அழகு. பூப் போல இலை!!

    ஸ்ரீராம்ஜி!! நானும் உத்து உத்துப் பாத்தேன். விநாயகரும், பாம்பும் உங்க கண்ணுக்கு மட்டுந்தான் தெரியுறாங்க போல. உங்ககிட்ட இருக்க ‘கலை’யோட கண்ணை எனக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்க! :-)))))

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin