ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

உலகின் அதி உயர மண் குடம் “The Meltling Pot of Culture" , பெங்களூர்

சென்ற பதிவின், லால்பாக் சுதந்திர தின மலர்க்கண்காட்சிப் படவரிசையில் இப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தேன் ஆயினும் அது குறித்த முழுமையான விவரங்கள் தந்திருக்கவில்லை. இந்த முறை சென்றிருக்கையில்தான் முதன் முறை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். லால்பாக் உள்ளே கெம்பகெளடா மண்டபம் எழும்பிய குன்றின் நேர் எதிரே இருக்கிறது போன்சாய் தோட்டம். அதனுள்ளே எழும்பி நிற்கிறது இந்த அதி உயர மண்குடம்.

 The Meltling Pot of Culture


படத்தை ஃப்ளிக்கரில் பதியும் முன் அதுகுறித்த விவரங்களைத் தேடிய போது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்திட விரும்புகிறேன். இதை சென்ற பதிவிலேயே இப்போது சேர்த்தால் ஏற்கனவே வாசித்தவர்கள் தவறவிடக் கூடுமாகையால், தனிப்பதிவாக இங்கு:

உழைக்கும் மற்றும் தெரு ஓரம் வாழும் குழந்தைகளுக்காக இயங்கும் Bornfree கலைப் பள்ளியைச் சேர்ந்த ஜான் தேவராஜ் சென்ற வருடம் பெங்களூர் லால்பாக் தோட்டத்திற்கு அளித்திருக்கும் 200 கிலோ எடை கொண்ட, 25 அடி உயர மண் குடம். இதை உருவாக்க இவருடன் உழைத்தவர்கள் சுப்பிரமணி, அரவிந்த், டினா, பிரஷாந்த் மற்றும் லா ஃப்ரிடா ஆகியோர்.

இது கின்னஸில் இடம்பெற்றிருந்த கொரியாவிலிருக்கும்  172 கிலோ எடை, பத்தடி உயர பாண்டத்தை விடப் பெரிதும், தற்போது உலகின் அதி உயர மண் பாண்டமும் ஆகும்.

“இந்த உலகம் அழகானது. நம் குழந்தைகளுக்காக அதைப் பாதுகாப்போம்” எனும் வாசகங்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றும் பெங்களூர் மக்களின் நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாகவும், இயற்கையைப் போற்றி அதனுடன் மனிதன் ஒத்திசைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தப் பெயர் (The melting pot of culture) சூட்டப்பட்டிருக்கிறது.

இயற்கையின் கலாச்சாரம் அமைதி. அமைதியைக் கலாச்சாரமாகக் கொண்டு ஒற்றுமையாய் வாழ வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறது.

பெருமரமொன்றின் பல இலைகளாக, ஒரு தாயின் பிள்ளைகள் போல இருக்க வேண்டுமெனப் பூமித்தாயின் கருப்பையிலிருந்து வளர்ந்து ஓங்கி நிற்கிறது.

***

18 கருத்துகள்:

  1. நம் குழந்தைகளுக்காக இந்த உலகத்தை காப்பது அவசியம் தான்.
    அதற்கு இந்த உலக அதிஉயர மண்குடம் செய்த ஜான் தேவராஜ் குழுவினருக்கு நன்றி.
    இயற்கையின் கலாச்சாரம் அமைதி அந்த கலாச்சாரத்தை ஒற்றுமையாய் காக்க சொல்லும் நல்ல கருத்து..
    உலகின் அதி உயர மண் பாண்ட விவரங்களுக்கு நன்றி ராமல்க்ஷமி.

    பதிலளிநீக்கு
  2. படமும் விளக்கங்களும் கேட்க வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்கள். உள்ளே ஏதாவது ஸ்டோர் செய்து வைக்கும் வசதி இருக்கிறதா? இல்லை கலைப் பொருள் மட்டுமா?

    பதிலளிநீக்கு
  4. படம் எடுத்தது மட்டுமல்லாது அது பற்றிய தகவல்களும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கருத்து.அருமையான படம். கலைநுட்பமும் கருணையும் இணைந்த கருப்பை. வெகு அழகு ராமலக்ஷ்மி மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. பாதுகாக்கவேண்டிய உலகத்தை அருமையாகக்காட்சிப்படுத்திய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  7. உயரமானது மட்டுமல்ல நுணுக்கமாவும் இருக்குது. தயாரித்த கைகளுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. அதிஉயர் மட்குடம் படம் அருமை.

    இயற்கையைப் போற்றி அதனுடன் ஒத்திசைந்து வாழவேண்டும் அருமையான கருத்து அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியதுமே.

    பதிலளிநீக்கு
  9. @ஸ்ரீராம்.,

    கலைப்பொருள் மட்டுமே என எண்ணுகிறேன். ஸ்டோர் செய்வது குறித்த தகவல்கள் இல்லை. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  10. @அமைதிச்சாரல்,

    ஆம் சாந்தி. நுணுக்கமான வேலைப்பாடு. அடுத்தமுறை செல்லுகையில் அந்த வாசகத்தைத் தேடிப் படமாக்க ஆசை.

    நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin