#1 1 GB வேலி முள்
புகைப்பட
ஆர்வலர்களுக்கோர் நற்செய்தி:)! அன்றாடம் உலவும் சமூக வலைத்தளங்களிலும்,
பிரத்தியேகமாகப் புகைப்படங்களுக்கென வந்திருக்கும் தளங்களிலுமாக
நம் படங்களைப் பகிரப் புதிது புதிதாக எத்தனையோ வழிகள் வந்து விட்டாலும்
முன்னோடியாகவும் இன்றளவிலும் முதன்மையானதாகவும் இருந்து வருவது FLICKR.
1 GB வரை மட்டுமே (சுமார் 200 படங்கள்) இலவசமாக ஏற்ற முடிவதாக இருந்தது.
அதில் sets உருவாக்க இயலாது. படங்களையும் பார்த்துப் பார்த்து குறைந்த அளவு
இருக்குமாறு வலையேற்ற வேண்டிய சூழல். இதனாலேயே 1GB கோட்டா முடிந்ததும்,
பலரும் அதில் அப்டேட் செய்வதை விட்டுவிட்டு வெளியேறி வந்தனர். ஃப்ளிக்கர்
மேல் பற்று கொண்டவர்கள் கூடுதல் வசதிகளை ஆண்டுச் சந்தா கட்டி Pro
உறுப்பினர் ஆகித் தொடர்ந்து வந்தனர். நானும் அப்படியே.
ஆனாலும் ஆயிரத்துக்கும் மேலான படங்களை வகைப்படுத்தி வைத்ததெல்லாம் ஆர்வம் குறைகையில், தளத்தைக் கவனிக்காமல் விடுகையில் மறைந்து போகுமே எனும் உறுத்தல் இருந்தபடியே இருந்தது.
(இந்தக் காரணத்தாலேயே வலைப்பூவை .காம் ஆக்கிட ஆர்வம் காட்டவில்லை). அதாவது சந்தா கட்டத் தவறுகையில் 1GB வரையிலாக நாம் ஏற்றிய படங்களை மட்டுமே நம் கணக்கில் காட்டிக் கொண்டிருக்கும் Flickr. தான் Pro கணக்குக்கு மாறிட பலமுறை பணம் கட்ட முயன்றும் ஏதோ கோளாறாகி ஏற்கவில்லை flickr என அமைதிச்சாரலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். கணக்கைப் புதுப்பிக்க முயன்றிடுகையில் இப்படி ஆனாலும் படங்கள் மறைந்து விட வாய்ப்பு உள்ளது. எல்லாப் படங்களும் என் கணினியில் இருக்கிறதுதான். ஆனால் ஆங்காங்கே மாதவாரியாகப் பல ஃபோல்டர்களில் சிதறியிருப்பவற்றைத் தொகுப்பது இருக்கிற கை, கழுத்து வலியோடு இலேசுப்பட்ட வேலையில்லையே.
என் போல பலருக்கும் இருந்து வந்த குழப்பம், திருப்தியின்மையைத் தீர்க்கும் விதமாகவும்.., ‘Pro உறுப்பினர்கள் மட்டுமே உபயோகிக்க இலாயக்கு’ என்றொரு பொதுக் கருத்து உருவாகி மற்றவர்கள் விலக ஆரம்பித்தது கண்டும் சந்தா கட்டாமலே சகலரும் அனைத்துப் பயன்களையும் பெற்றிடும் விதமாக.. பொதுப் பொலிவோடு மலர்ந்திருக்கிறது ஃப்ளிக்கர் சென்ற வாரத்தில்.
* அதன் படி சந்தா கட்டியவர் கட்டாதவர் பாகுபாடின்றி அனைவரும் 1 டெராபைட் (1024 GB) கொள்ளளவு வரை (ஏறத்தாழ, 20000 படங்களை) ஸ்டோர் செய்திடும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. படங்களை நாம் பெரிய அளவு கொண்டதாகவே சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
* ‘இதுவரை கட்டிய சந்தா திருப்பித் தரப்படுமா’ எனும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. சந்தா திருப்பித் தரப்படாது. அவரவர் சந்தாக்காலம் முடிகிற வரையில் (பெரும்பாலும் 2 வருடத்துக்கு செய்து கொள்வது வழக்கம்) 2 டெராபைட் (2048 GB) கொள்ளளவு வழங்கப்படுகிறது. ஆனால் அதனால் பெரிய பயனேதுமில்லை. ஏனெனில் சந்தாக்காலம் முடிந்ததும் மீண்டும் 1 டெராபைட் அளவு படங்களே கணக்கில் இருக்கும் என்பதோடு இனி விரும்பினாலும் ‘சந்தா’ வசதியை ஃப்ளிக்கர் வழங்குவதாய் இல்லை.
* சந்தாக் காலம் முடிகிறவரை விளம்பரங்கள் நம் பக்கங்களில் தோன்றி எரிச்சலூட்டாது.
தோற்றத்திலும் சில மாற்றங்கள்:
* ஒவ்வொருவர் ஃபோட்டோஸ்ட்ரீம் முகப்பிலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே படங்களை முன்னர் காட்டி வந்தது. சிறந்த படங்களைத் தேடவோ, அல்லது அனைத்துப் படங்களையும் பார்வையிடவோ ஒவ்வொரு பக்கமாகத் திறந்தபடி செல்ல வேண்டியிருந்தது. இப்போது பிகாஸா ஆல்பங்களைப் போல, scroll செய்து பார்வையிட வசதி.
* கருப்புப் பின்னணியில் படங்களைக் காண அதன் மேல் மீண்டும் க்ளிக் செய்து லைட் பாக்ஸில் திறக்க வேண்டியிருந்தது. இப்போது பக்கத்தின் மேல்பாகம் கருப்புப் பின்னணியில் படங்களைக் காட்ட, கீழ்பாகம் வெண்ணிறத்தில் உறுத்தாமல் கமெண்ட்ஸை வாசிக்கும் வசதியுடன் உள்ளது. லைட் பாக்ஸ் வசதியும் தொடருகிறது.
* பழைய தோற்றமே நேர்த்தியாய் இருந்தது என்றும், படங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கசமுசவென இருக்கிறது இப்போது என்றும் வருந்துகிறார்கள் சிலர். மற்றவர் பக்கங்களை அல்லாவிட்டாலும் நம் பக்கத்தை sets-favorites-யை அடுத்து இருக்கும் edit-யை உபயோகித்து பழைய தோற்றத்துக்கு வரவைத்து பார்வையிட, உபயோகிக்க இயலும்.
* முகப்பிலேயே தெரிந்துவந்த exif data மற்றும் sets இப்போது க்ளிக் செய்தால்தான் பார்க்கும்படி ஆகிவிட்டுள்ளது குறை.
இனி பலரும் இதில் இணைந்து பயன்பெறுவார்கள் என நம்பலாம். முன்னர் 200-வுடன் விட்டுச் சென்றவர்கள் மீண்டும் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.
புதிதாக கணக்கு தொடங்க இருப்பவருக்காக, முன்னர் சில பதிவுகளில் சொல்லியிருந்தாலும் மீண்டும் சில குறிப்புகள்.
* வலைப்பதிவுகளை நாம் திரட்டியில் இணைப்பது போல நமக்கேற்ற குழுக்களைக் கண்டுபிடித்து (உதாரணமாக, நீங்கள் எந்தவகைப் படங்களை அதிகம் எடுக்கிறீர்களோ அதற்கேற்ற க்ருப்களை கீழ்வருமாறு: nature, sun, sea, flowers, nikon, canon மற்றும் வாழும் ஊர், சென்ற இடம் இப்படி..) தேடிக் கண்டு பிடித்து இணைந்து படங்களைப் பகிரலாம். பொதுவாகப் பகிர இருக்கவே இருக்கிரது நமது PiT Pool . இங்கு இணைக்கப்பட்ட படங்களைக் கொண்டே ‘இந்த வார சிறந்தபடம்’ முன்னர் PiT தளத்தில் தேர்வாகி வெளிவந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
* நாம் தொடருபவர்கள் வலையேற்றும் படங்களை உடனுக்குடன் காண இங்கே (Contacts - Recent Posts) செல்லலாம்.
* நமது அனைத்துப் படங்களுக்குமாக வரும் கருத்துகள், நாம் இட்ட கருத்தைத் தொடர, வருகிற தகவல்களைப் பார்க்க ஆகியவற்றுக்கு Recent Activity பக்கம் உதவும்.
* ஒவ்வொரு நாளும் ஃப்ளிக்கர் தேர்வு செய்யும் ஆகச் சிறந்த ஐநூறை இங்கே Explore செய்யலாம்.
* நமது மற்றும் மற்றவர் படங்களில் விருப்பமான பகுதியைக் கட்டம் கட்டி (பாராட்டவோ, அல்லது suggestion சொல்லவோ) note சேர்க்கும் வசதி ஃப்ளிக்கரின் தனிச் சிறப்பான ஒன்று.
* உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள mail வசதி உள்ளது. அதன் வழியே தொடர்பு கொண்டு நம் படங்களை வாங்குவோரும் உண்டு. make my trip.com-யை அடுத்து map my india நிறுவனமும் மெயில் மூலமாக தொடர்பு கொண்டு வாங்கிய என் மலர்கண்காட்சிப் படம் குறித்து குமுதத்திற்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறேன்.
*GETTY IMAGES:
எடுக்கும் படங்களை எப்படி கமர்ஷியலாகப் பயன்படுத்துவது என பலருக்கும் ஒரு கேள்வி இருந்து வருகிறது. அதற்கு Getty Images கை கொடுக்கிறது Flickr- வுடன் கைகோர்த்து. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு வகையான படங்களுக்கான தேவை இருக்கிறது இவர்களுக்கு. நமது ஃபோட்டோஸ்ட்ரீமில் அவற்றைத் தேடி எடுத்து நமக்கு அவற்றைத் தர விருப்பமா எனக் கேட்கிறது. அப்படிக் குறிப்பிட்டதைத் தேடும் சமயத்தில் கண்ணில் படுகிற பிற நல்ல படங்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறது.
#2 ஷ்ராவணபெலகுலா ‘கோமதீஷ்வரா’
DSLR ஆக இருந்தால் 18mm-ல் 57 அடிச் சிலையை முழுதாகப் படமாக்கியிருக்க முடியும்தான். அதிக பட்ச தொலைவில் நின்றும் P&S-ல் இவ்வளவே கவர் செய்ய முடிந்தது. இருந்தாலும் தேர்வாகியிருக்கிறது. கூடுதல் வசதிகள் DSLR-ல் இருப்பது உண்மைதான் என்றாலும் பாயிண்ட் அண்ட் ஷூட்டிலும் நல்ல படங்களை நாம் தர முடியும் என்பதற்கு உதாரணம். Sony W80 P&S-ல் எடுத்த நெல்லையப்பர், காந்திமதி
அம்மன் திருக்கோபுரங்கள் உட்பட, ஆரம்ப காலத்தில் அவர்கள் தேர்வு செய்த எனது
சில படங்கள் கீழே.
இவற்றில் நாம் விரும்புவதை அவர்களுக்கு விலைக்குக் கொடுக்கலாம். அதற்காக அவர்கள் முன் வைப்பது இரண்டு விதமான உரிமைகள். ஒன்று Common lisence. இன்னொன்று restricted lisence with royalty.
முதலாவது பொதுவான உரிமைப்படி படங்களை நாமும் பயன்படுத்தலாம். அவர்களும் பயன்படுத்தலாம். அதே நேரம் வேறுயாரும் கூட பயன்படுத்தலாம். நம்முடனான அவர்களது ஒப்பந்தத்தை ஒவ்வொரு வருட முடிவிலுமாக 3 வருடங்கள் நீட்டித்துக் கொள்கிறார்கள். தேவையானவர்களுக்கு படங்களை விற்று அதில் சுமார் 70% அவர்களுக்கு 30% படம் எடுத்தவர்களுக்கு என நிர்ணயிக்கிறார்கள்.
இரண்டாவது முழு உரிமையும் அவர்களுக்கே கொடுத்து விடுவது. இதில் படங்கள் விற்பனையாகும் ஒவ்வொரு முறையும் எடுத்தவர்களுக்கு 40% வரை கொடுக்கிறார்கள். நான் எடுக்கும் படங்களின் உரிமம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என்பது எனும் தனிப்பட்ட விருப்பத்தால் (காமன் லைசன்ஸில் அனுமதியின்றி யாரும் பயன்படுத்துவதாக இருப்பது சம்மதமாக இல்லை) நான் enroll செய்து கொள்ளவில்லை. எனவே அவர்களும் முதன்முறைக்குப் பிறகு அணுகவில்லை.
பத்திரிகைகளுக்கானாலும் சரி, வேறு யார் படங்களுக்காக நம்மை அணுகினாலும் சரி, வாட்டர் மார்க் இல்லாத படங்களையே தர வேண்டியிருக்கும். எனவே படங்களின் ஒரிஜனல் கோப்பையும், process செய்த படங்களை வாட்டர் மார்க் இல்லாமலும் தனியாக ஒரு கோப்பில் எப்போதும் சேமித்து வைப்பது அவசியம்.
தொடர்ந்து பயன்படுத்துகையில் ஒவ்வொரு பயன்பாட்டையும் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
ஏன் இந்த சின்னச் சின்ன விஷயங்களையும் தருகிறேன் என்றால் இவை ஒவ்வொன்றையும் நான் அனுபவத்தில் அறிந்திட பல நாட்கள், மாதங்கள், ஏன் வருடங்களே பிடித்தன. எனவே புதிதாக இணைகிறவர்களுக்கு இவை பயனாகக் கூடும் என நம்புகிறேன்.
#3
பூங்கா மத்தியில், சாலைகள்
சந்திக்குமிடத்தில், ரவுண்டானாவை ரவுண்ட் கட்டியிருந்த புறாக்களை நாங்களும்
ரவுண்ட் கட்டி படமெடுத்தோம். பாயிண்ட் அண்ட் ஷூட்டிலிருந்து DSLR-க்கு மாறியிருந்த வனிதா தன் புது கேமராவுடன் வந்திருந்தார். புறாக்களை எடுத்து முடித்ததும், நடந்தபடியே
பலாக்களை. முள்வேலியையும் விட்டு வைக்கவில்லை. ஓடும் அணில்களை இலாவகமாகப்
படமாக்கினார் ஜோ. அங்கேதான் சிறகு விரித்த சின்னப் பெண் சிக்கினாள் எனக்கு. சோம்பிக் கிடந்தவர்களையும் விடவில்லை. ஒண்ணு ஒண்ணாப் பார்க்கலாம் வாங்க.
#4 கம்பீரப் புறா
#5 ஆராய்ச்சியில்..
#6 ஆடுகளம்?
#7 பிஞ்சுப் பலா
#8 கொஞ்சம் பழுத்து..
#9 கனி இருப்ப..
பூங்காவின் ஒரு ஓரத்தில் இவர்கள் சோம்பிக் கிடக்க, இன்னொரு ஓரத்தில் தன் தாயைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் இந்தக் குழந்தை.
#11 கண்ணே பாப்பா
#12 முன்னர் வண்ணத்தில் பகிர்ந்த படம்
அரைமணிக்கும் மேலாக அடிக்கடி கவனித்தபடி இருந்தபோது சிக்கிய காட்சி. ஆனால் ஏனோ குழந்தையின் உற்சாகம் தாயை சிறிது கூடத் தொற்றிக் கொள்ளவில்லை. ஹுஸைனம்மா இதைக் கவனித்துக் கேட்டிருந்தார். எனக்கும் விந்தையாகவே இருந்தது . என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தனவோ அந்தத் தாயின் மனதில்!?
பூங்கா வரை போய்விட்டு பூக்களைப் படமாக்காமல் திரும்புவேனா? அரும்பிலிருந்து அழகாய் மலர்ந்தவரை சம்பங்கியின் பல்வேறு பருவங்களையும், வண்ண வண்ண பெட்டூனியாக்களையும் இன்னொரு சமயம் பகிருகிறேன். இப்போ இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க..
# இப்படை தோற்கின்..
# எப்படை வெல்லும்..?
#13 கூடு திரும்பும் பறவைகள்
இந்தப் பறவைகளைப் போலவே, இனியதாய்க் கழிந்த மாலைப் பொழுதை அசைபோட்டபடி வீடு திரும்பினோம் நாங்களும்.
விலகியது.. |
ஆனாலும் ஆயிரத்துக்கும் மேலான படங்களை வகைப்படுத்தி வைத்ததெல்லாம் ஆர்வம் குறைகையில், தளத்தைக் கவனிக்காமல் விடுகையில் மறைந்து போகுமே எனும் உறுத்தல் இருந்தபடியே இருந்தது.
(இந்தக் காரணத்தாலேயே வலைப்பூவை .காம் ஆக்கிட ஆர்வம் காட்டவில்லை). அதாவது சந்தா கட்டத் தவறுகையில் 1GB வரையிலாக நாம் ஏற்றிய படங்களை மட்டுமே நம் கணக்கில் காட்டிக் கொண்டிருக்கும் Flickr. தான் Pro கணக்குக்கு மாறிட பலமுறை பணம் கட்ட முயன்றும் ஏதோ கோளாறாகி ஏற்கவில்லை flickr என அமைதிச்சாரலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். கணக்கைப் புதுப்பிக்க முயன்றிடுகையில் இப்படி ஆனாலும் படங்கள் மறைந்து விட வாய்ப்பு உள்ளது. எல்லாப் படங்களும் என் கணினியில் இருக்கிறதுதான். ஆனால் ஆங்காங்கே மாதவாரியாகப் பல ஃபோல்டர்களில் சிதறியிருப்பவற்றைத் தொகுப்பது இருக்கிற கை, கழுத்து வலியோடு இலேசுப்பட்ட வேலையில்லையே.
என் போல பலருக்கும் இருந்து வந்த குழப்பம், திருப்தியின்மையைத் தீர்க்கும் விதமாகவும்.., ‘Pro உறுப்பினர்கள் மட்டுமே உபயோகிக்க இலாயக்கு’ என்றொரு பொதுக் கருத்து உருவாகி மற்றவர்கள் விலக ஆரம்பித்தது கண்டும் சந்தா கட்டாமலே சகலரும் அனைத்துப் பயன்களையும் பெற்றிடும் விதமாக.. பொதுப் பொலிவோடு மலர்ந்திருக்கிறது ஃப்ளிக்கர் சென்ற வாரத்தில்.
* அதன் படி சந்தா கட்டியவர் கட்டாதவர் பாகுபாடின்றி அனைவரும் 1 டெராபைட் (1024 GB) கொள்ளளவு வரை (ஏறத்தாழ, 20000 படங்களை) ஸ்டோர் செய்திடும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. படங்களை நாம் பெரிய அளவு கொண்டதாகவே சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
* ‘இதுவரை கட்டிய சந்தா திருப்பித் தரப்படுமா’ எனும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. சந்தா திருப்பித் தரப்படாது. அவரவர் சந்தாக்காலம் முடிகிற வரையில் (பெரும்பாலும் 2 வருடத்துக்கு செய்து கொள்வது வழக்கம்) 2 டெராபைட் (2048 GB) கொள்ளளவு வழங்கப்படுகிறது. ஆனால் அதனால் பெரிய பயனேதுமில்லை. ஏனெனில் சந்தாக்காலம் முடிந்ததும் மீண்டும் 1 டெராபைட் அளவு படங்களே கணக்கில் இருக்கும் என்பதோடு இனி விரும்பினாலும் ‘சந்தா’ வசதியை ஃப்ளிக்கர் வழங்குவதாய் இல்லை.
* சந்தாக் காலம் முடிகிறவரை விளம்பரங்கள் நம் பக்கங்களில் தோன்றி எரிச்சலூட்டாது.
தோற்றத்திலும் சில மாற்றங்கள்:
* ஒவ்வொருவர் ஃபோட்டோஸ்ட்ரீம் முகப்பிலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே படங்களை முன்னர் காட்டி வந்தது. சிறந்த படங்களைத் தேடவோ, அல்லது அனைத்துப் படங்களையும் பார்வையிடவோ ஒவ்வொரு பக்கமாகத் திறந்தபடி செல்ல வேண்டியிருந்தது. இப்போது பிகாஸா ஆல்பங்களைப் போல, scroll செய்து பார்வையிட வசதி.
* கருப்புப் பின்னணியில் படங்களைக் காண அதன் மேல் மீண்டும் க்ளிக் செய்து லைட் பாக்ஸில் திறக்க வேண்டியிருந்தது. இப்போது பக்கத்தின் மேல்பாகம் கருப்புப் பின்னணியில் படங்களைக் காட்ட, கீழ்பாகம் வெண்ணிறத்தில் உறுத்தாமல் கமெண்ட்ஸை வாசிக்கும் வசதியுடன் உள்ளது. லைட் பாக்ஸ் வசதியும் தொடருகிறது.
* பழைய தோற்றமே நேர்த்தியாய் இருந்தது என்றும், படங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கசமுசவென இருக்கிறது இப்போது என்றும் வருந்துகிறார்கள் சிலர். மற்றவர் பக்கங்களை அல்லாவிட்டாலும் நம் பக்கத்தை sets-favorites-யை அடுத்து இருக்கும் edit-யை உபயோகித்து பழைய தோற்றத்துக்கு வரவைத்து பார்வையிட, உபயோகிக்க இயலும்.
* முகப்பிலேயே தெரிந்துவந்த exif data மற்றும் sets இப்போது க்ளிக் செய்தால்தான் பார்க்கும்படி ஆகிவிட்டுள்ளது குறை.
இனி பலரும் இதில் இணைந்து பயன்பெறுவார்கள் என நம்பலாம். முன்னர் 200-வுடன் விட்டுச் சென்றவர்கள் மீண்டும் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.
புதிதாக கணக்கு தொடங்க இருப்பவருக்காக, முன்னர் சில பதிவுகளில் சொல்லியிருந்தாலும் மீண்டும் சில குறிப்புகள்.
* வலைப்பதிவுகளை நாம் திரட்டியில் இணைப்பது போல நமக்கேற்ற குழுக்களைக் கண்டுபிடித்து (உதாரணமாக, நீங்கள் எந்தவகைப் படங்களை அதிகம் எடுக்கிறீர்களோ அதற்கேற்ற க்ருப்களை கீழ்வருமாறு: nature, sun, sea, flowers, nikon, canon மற்றும் வாழும் ஊர், சென்ற இடம் இப்படி..) தேடிக் கண்டு பிடித்து இணைந்து படங்களைப் பகிரலாம். பொதுவாகப் பகிர இருக்கவே இருக்கிரது நமது PiT Pool . இங்கு இணைக்கப்பட்ட படங்களைக் கொண்டே ‘இந்த வார சிறந்தபடம்’ முன்னர் PiT தளத்தில் தேர்வாகி வெளிவந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
* நாம் தொடருபவர்கள் வலையேற்றும் படங்களை உடனுக்குடன் காண இங்கே (Contacts - Recent Posts) செல்லலாம்.
* நமது அனைத்துப் படங்களுக்குமாக வரும் கருத்துகள், நாம் இட்ட கருத்தைத் தொடர, வருகிற தகவல்களைப் பார்க்க ஆகியவற்றுக்கு Recent Activity பக்கம் உதவும்.
* ஒவ்வொரு நாளும் ஃப்ளிக்கர் தேர்வு செய்யும் ஆகச் சிறந்த ஐநூறை இங்கே Explore செய்யலாம்.
* நமது மற்றும் மற்றவர் படங்களில் விருப்பமான பகுதியைக் கட்டம் கட்டி (பாராட்டவோ, அல்லது suggestion சொல்லவோ) note சேர்க்கும் வசதி ஃப்ளிக்கரின் தனிச் சிறப்பான ஒன்று.
* உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள mail வசதி உள்ளது. அதன் வழியே தொடர்பு கொண்டு நம் படங்களை வாங்குவோரும் உண்டு. make my trip.com-யை அடுத்து map my india நிறுவனமும் மெயில் மூலமாக தொடர்பு கொண்டு வாங்கிய என் மலர்கண்காட்சிப் படம் குறித்து குமுதத்திற்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறேன்.
*GETTY IMAGES:
எடுக்கும் படங்களை எப்படி கமர்ஷியலாகப் பயன்படுத்துவது என பலருக்கும் ஒரு கேள்வி இருந்து வருகிறது. அதற்கு Getty Images கை கொடுக்கிறது Flickr- வுடன் கைகோர்த்து. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு வகையான படங்களுக்கான தேவை இருக்கிறது இவர்களுக்கு. நமது ஃபோட்டோஸ்ட்ரீமில் அவற்றைத் தேடி எடுத்து நமக்கு அவற்றைத் தர விருப்பமா எனக் கேட்கிறது. அப்படிக் குறிப்பிட்டதைத் தேடும் சமயத்தில் கண்ணில் படுகிற பிற நல்ல படங்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறது.
#2 ஷ்ராவணபெலகுலா ‘கோமதீஷ்வரா’
|
இவற்றில் நாம் விரும்புவதை அவர்களுக்கு விலைக்குக் கொடுக்கலாம். அதற்காக அவர்கள் முன் வைப்பது இரண்டு விதமான உரிமைகள். ஒன்று Common lisence. இன்னொன்று restricted lisence with royalty.
முதலாவது பொதுவான உரிமைப்படி படங்களை நாமும் பயன்படுத்தலாம். அவர்களும் பயன்படுத்தலாம். அதே நேரம் வேறுயாரும் கூட பயன்படுத்தலாம். நம்முடனான அவர்களது ஒப்பந்தத்தை ஒவ்வொரு வருட முடிவிலுமாக 3 வருடங்கள் நீட்டித்துக் கொள்கிறார்கள். தேவையானவர்களுக்கு படங்களை விற்று அதில் சுமார் 70% அவர்களுக்கு 30% படம் எடுத்தவர்களுக்கு என நிர்ணயிக்கிறார்கள்.
இரண்டாவது முழு உரிமையும் அவர்களுக்கே கொடுத்து விடுவது. இதில் படங்கள் விற்பனையாகும் ஒவ்வொரு முறையும் எடுத்தவர்களுக்கு 40% வரை கொடுக்கிறார்கள். நான் எடுக்கும் படங்களின் உரிமம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என்பது எனும் தனிப்பட்ட விருப்பத்தால் (காமன் லைசன்ஸில் அனுமதியின்றி யாரும் பயன்படுத்துவதாக இருப்பது சம்மதமாக இல்லை) நான் enroll செய்து கொள்ளவில்லை. எனவே அவர்களும் முதன்முறைக்குப் பிறகு அணுகவில்லை.
பத்திரிகைகளுக்கானாலும் சரி, வேறு யார் படங்களுக்காக நம்மை அணுகினாலும் சரி, வாட்டர் மார்க் இல்லாத படங்களையே தர வேண்டியிருக்கும். எனவே படங்களின் ஒரிஜனல் கோப்பையும், process செய்த படங்களை வாட்டர் மார்க் இல்லாமலும் தனியாக ஒரு கோப்பில் எப்போதும் சேமித்து வைப்பது அவசியம்.
தொடர்ந்து பயன்படுத்துகையில் ஒவ்வொரு பயன்பாட்டையும் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
ஏன் இந்த சின்னச் சின்ன விஷயங்களையும் தருகிறேன் என்றால் இவை ஒவ்வொன்றையும் நான் அனுபவத்தில் அறிந்திட பல நாட்கள், மாதங்கள், ஏன் வருடங்களே பிடித்தன. எனவே புதிதாக இணைகிறவர்களுக்கு இவை பயனாகக் கூடும் என நம்புகிறேன்.
***
இத்தோடு நின்று விடுவதில்லை ஃப்ளிக்கரின் பயன்கள். பன்னாடுகளில்,
மாநிலங்களில் அல்லது ஒரே ஊரில் வாழும் கலைஞர்களுக்கு இடையே நல்ல நட்பையும்
உருவாக்கித் தருகிறது. வெளியூர் அல்லது நாடுகளிலிருந்து ஃப்ளிக்கர்
நண்பர்கள் பெங்களூர் வருகையில் நடக்கிற சந்திப்புகள் பற்றி படங்கள் ஆயிரம் - ஃப்ளிக்கர் பயணம் பதிவில்பகிர்ந்திருந்தேன். அப்போது லால்பாகில். சமீபத்தில் கப்பன் பூங்காவில்.
பல நேரங்களில் புகைப்படக் கலைஞர்களுடனான இத்தகு சந்திப்பு அருமையான PHOTO
WALK ஆகவும் அமைந்து போகிறது. சென்னையிலிருந்து தற்போது
சுவிட்சர்லாந்துக்கு மாற்றலாகி விட்டுள்ள ஜோ, அங்கு செல்லும் முன் எங்களைச் சந்திக்க வந்திருந்தார்.#3
ஜோ |
#4 கம்பீரப் புறா
#5 ஆராய்ச்சியில்..
#6 ஆடுகளம்?
#7 பிஞ்சுப் பலா
#8 கொஞ்சம் பழுத்து..
#9 கனி இருப்ப..
காய் கவர்ந்தற்று..
#10 இராமன் ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்..பூங்காவின் ஒரு ஓரத்தில் இவர்கள் சோம்பிக் கிடக்க, இன்னொரு ஓரத்தில் தன் தாயைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் இந்தக் குழந்தை.
#11 கண்ணே பாப்பா
#12 முன்னர் வண்ணத்தில் பகிர்ந்த படம்
அரைமணிக்கும் மேலாக அடிக்கடி கவனித்தபடி இருந்தபோது சிக்கிய காட்சி. ஆனால் ஏனோ குழந்தையின் உற்சாகம் தாயை சிறிது கூடத் தொற்றிக் கொள்ளவில்லை. ஹுஸைனம்மா இதைக் கவனித்துக் கேட்டிருந்தார். எனக்கும் விந்தையாகவே இருந்தது . என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தனவோ அந்தத் தாயின் மனதில்!?
பூங்கா வரை போய்விட்டு பூக்களைப் படமாக்காமல் திரும்புவேனா? அரும்பிலிருந்து அழகாய் மலர்ந்தவரை சம்பங்கியின் பல்வேறு பருவங்களையும், வண்ண வண்ண பெட்டூனியாக்களையும் இன்னொரு சமயம் பகிருகிறேன். இப்போ இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க..
# இப்படை தோற்கின்..
வனிலா, வனிதாவுடன்.. |
Cheese..
இரு படங்களுக்கும்: நன்றி ஜோ!
|
இந்தப் பறவைகளைப் போலவே, இனியதாய்க் கழிந்த மாலைப் பொழுதை அசைபோட்டபடி வீடு திரும்பினோம் நாங்களும்.
***
ஃப்ளிக்கரின் விரிவான பயன்களின் விளக்கத்திற்கு நன்றி... படங்கள் அனைத்தும் அசத்தல்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஆமாம் மேடம்.. நானும் சில வருடங்கள் கழித்து FlickR உபயோகப்படுத்தத் தொடங்கி உள்ளேன். பல உபயோகமான தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். நன்றி
பதிலளிநீக்குநிறைய விவரங்கள் சொல்லியிருக்கிறீர்கள். புகைப்பட ஆர்வலர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான். படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு
பதிலளிநீக்குவிரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 4
பதிலளிநீக்குதெரியாதுங்க... ப்ளிக்கர்ல இவ்வளவு வசதிகள் இருக்கறது இதப் படிக்கற வரைக்கும் எனக்குத் தெரியாதுங்க. உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி! புறாவின் படமும், படையின் படமும் வெகு சிறப்பு!
பதிலளிநீக்குநன்றி அக்கா
பதிலளிநீக்குIllustrative information is useful.Good
பதிலளிநீக்குஎன் சிரமம் புரிஞ்சு எனக்காக தன்னோட கொளுகையை மாத்திக்கிட்ட ஃப்ளிக்கருக்கு எனது நன்றிகள் (லொள்ளு.. கி..கி..கி)
பதிலளிநீக்குதெரியப்படுத்திய உங்களுக்கும் நன்றிகள்.
யாஹூ இந்த அறிவிப்பை வெளியிட்டதும் உங்கள் நினைவு தான் வந்தது...
பதிலளிநீக்குதொழில்நுட்ப பதிவு எழுதிட்டீங்க :-)
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@தியானா,
பதிலளிநீக்குமகிழ்ச்சி தியானா. நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@Ramani S,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குநன்றி கணேஷ்.
@துரை. ந. உ,
பதிலளிநீக்குநன்றி:).
@Nellai.S.S.Mani,
பதிலளிநீக்குநன்றி:).
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குமீண்டும் உங்களை ஃப்ளிக்கரில் பார்ப்பதில் மகிழ்ச்சி:)!
@கிரி,
பதிலளிநீக்குநன்றி கிரி:)!
Super ... Return of the Dragon :)
பதிலளிநீக்கு@NKR R,
பதிலளிநீக்குஆம்:)! நன்றி நந்தா.
ஃப்ளிக்கர் பயன்படுத்தி சில நாட்கள் கழித்து தொடராதவர்களில் நானும் ஒருவன். நீங்கள் தந்திருக்கும் தகவல்கள் எனக்கும் பயன்படும். மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி.
தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அற்புதமான பதிவுகளைத் தருகிறீர்கள். தங்களது பன்முகத் திறமை என்னை எப்போதும் வியக்க வைக்கும். இறையருளால், தாங்கள் மேன்மேலும் பல சிறப்புகள் பெற வேண்டுகிறேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்குஃப்ளிக்கர் பற்றிய விரிவான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு, அற்புதம்.
ராமல்க்ஷமி படை நிச்சயம் வெற்றிபடைதான்.
வாழ்த்துக்கள்.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@Kanchana Radhakrishnan,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி தனபாலன்.
பயன்படுத்துவோருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளார்கள்.
பதிலளிநீக்கு@பார்வதி இராமச்சந்திரன்.,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா. நம் படை என்று சொல்லுவோம்:)! மகளிர் அணி!
@மாதேவி,
பதிலளிநீக்குஆம் மாதேவி:)! நன்றி.
அருமையான படங்கள்....பகிர்ந்தமைக்கு நன்றி....வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவிழுந்து விழுந்து படம் எடுப்பதால் வரும் வலி நீங்கட்டும்.
பதிலளிநீக்குஉங்கள் வேலி முள் மாதிரி 30 ஆண்டுகளுக்கு முன் எடுத்த படத்தை இன்று தான் ஸ்கேன் செய்து வைத்தேன். (என்ன சொல்ல வர்ரேன்னா ... உங்கள மாதிரி ஐடியால்லாம் வருது. படம் மட்டும் தான் வராது ... :-( ) அந்தப் படத்தைப் பதிவில் போடணும் .. கான மயிலாட பதிவு மாதிரி. அப்போ உங்கள் படத்தை எடுத்து போட்டுக்குறேன்.
@Nithi Clicks,
பதிலளிநீக்குநன்றி நித்தி.
@தருமி,
பதிலளிநீக்குமுப்பது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டப் படத்தைக் காணக் காத்திருக்கிறேன்.
வலி இப்போது பரவாயில்லை:)!
நன்றி தருமி sir.