1.
ஊதக்காற்றில் சாயும் வாழைமரம்
ஊற்றுகிறது மழை நீரை
வாளிக்குள்.
2.
என் கூரையாய் நிற்கும் மரத்தின் கீழ்
ஏப்ரல் மழையின் சரிவான கோடுகள்
துளிகளாய்ப் பிரிகின்றன.
3.
எனது சிறுகுடிலில்
என்னால் தர முடிந்தது ஒன்றுதான் -
சிறு கொசுக்கள்.
4.
பாதி வானைக் கடந்து,
தலைநகர் நோக்கிய என் வழிப்பயணத்தில்,
மழையை உறுதி தந்தன பெருமேகங்கள்.
5.
எத்தனை பாராட்டுக்குரியவன்,
‘வேகமான வாழ்க்கை’ என
மின்னலைப் பார்க்கையில், எண்ணாதவன்.
6.
குளிர் மழை ஆரம்பமாகிறது
குடையில்லை..
அதனாலென்ன?
**
மூலம்:
ஜப்பானிய மொழியில்: Matsuo Basho
அதீதம் 2013 மே இரண்டாம் இதழுக்காக ஆங்கிலத்தினூடாக தமிழாக்கம் செய்த கவிதை.
**
மட்சுவோ பஷோ (1644 -1694) புகழ் பெற்ற ஜப்பானின் இடோ காலத்துக்கவிஞர். இவரது வாழ்க்கைக் காலத்திலேயே "ஹைக்காய் னொ ரெங்கா" என்னும் கவிதைவடிவத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுருக்கமானவையும் தெளிவானவையுமாகக் கொண்டாடப்படும் ஹைக்கூ கவிதைகளில் வல்லுனராக இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆசிரியராகத் தொழில் புரிந்த இவரது கவிதைகள் ஜப்பானில் நினைவுச் சின்னங்களிலும், மரபு சார்ந்த இடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
இலக்கியத் துறையினரின் சமூக மற்றும் நகர் சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளி, எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெற நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தவர். இவர் பெற்ற நேரடி அனுபவங்களே இவரது கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். காட்சிகளையும் உணர்வுகளையும் எளிமையான கூறுகளில் அடக்கியவர்.
***
எல்லாமே அருமை.
பதிலளிநீக்குகுளிர்மழை பெய்யட்டும் குடை வேண்டாம் மழையில் நனைதல் சுகமே!
பதிலளிநீக்குகவிதை மொழிபெயர்ப்பு அருமை.
மழைத்துளி போல் கவித்துளியும் நன்றாக இருக்கிறது ராமல்க்ஷமி.
வாழ்த்துக்கள்.
ரசித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்குஅழகழகான துளிப்பாக்கள்...
பதிலளிநீக்குமொழிபெயர்ப்பு மிகவும் அருமை...
அருமையான மொழிபெயர்ப்பு மேடம்.. அனைத்தும் அருமை..இறுதிக் கவிதை மிகவும் பிடித்திருந்தது..
பதிலளிநீக்குஅருமையான கவிததூறல்கள்...
பதிலளிநீக்குரசனையான கவிதை.
பதிலளிநீக்குகோடை மழை பற்றிய ஜப்பானிய கவித்துளிகள் மிக அருமை.
பதிலளிநீக்குஎல்லாக் கவிதைகளையும் ரசித்தேன் ராமலக்ஷ்மி மேடம்! அதிலும் ஆறாவது கவிதையை சற்றுக் கூடுதலாகவே...!
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@மகேந்திரன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@தியானா,
பதிலளிநீக்குநன்றி தியானா.
@ezhil,
பதிலளிநீக்குநன்றி எழில்.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@Asiya Omar,
பதிலளிநீக்குநன்றி ஆசியா.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குநன்றி கணேஷ்.
அன்பின் ராமலக்ஷ்மி - ஜப்பானியக் கவிதை ஆங்கிலம் மூலமாக தமிழில் மொழி பெயர்த்தது நன்று. இரசித்தேன் - மழைக் காலத்தில் சிறுகுடிலில் மழைக்குப் பரிசாக கொடுக்க இயன்றது கொசுக்கள் தான் - என்ன கற்பனை .... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குபின் தொடர்வதற்காக
பதிலளிநீக்கு@cheena (சீனா),
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா sir.