ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மின்னல் தென்றல் புதையல்..- காதல் காதல் காதல்..


மின்னல்
இரவு வானும் நட்சத்திரங்களும்
முழு நிலவும் பனிக் காற்றும்
மழை மேகமும் மின்னல் கீற்றும்
ரசனைக்குள் வந்தபோதுதான் புரிந்தது..
வாழ்வை அற்புதமாக்கும்
மந்திரசக்தி காதலென்பது.
***

தென்றல்


தீண்டிய யாவரையும்
தழும்பச் செய்தது
காதலால் தென்றல்..
காற்றுவெளியை நிறைத்தக்
காதல் குறுஞ்செய்திகளில்
குளித்த களிப்பில்.
***

புதையல்
வெண்டைப் பிஞ்சு விரல்கள்
ரோஜாப்பூ இதழ்கள்
மான்போல் மருளும் விழிகள்
தேன்போல் ஒலித்தது சிணுங்கல்
பூக்குவியலாய் கையில் புதையல்
மகவை ஏந்திய அக்கணத்தில்..
பெருகியது ஈன்ற உன்மேல்
பன்மடங்காய் காதல்!
***

காதலர் தின ஸ்பெஷல்:)!

படம்: இணையத்திலிருந்து..

இன்று வல்லமை இணைய இதழில்.., நன்றி வல்லமை!

41 கருத்துகள்:

  1. //இரவு வானும் நட்சத்திரங்களும்
    முழு நிலவும் பனிக் காற்றும்
    மழை மேகமும் மின்னல் கீற்றும்
    ரசனைக்குள் வந்தபோதுதான் புரிந்தது..
    வாழ்வை அற்புதமாக்கும்
    மந்திரசக்தி காதலென்பது.//


    நம்மை சுற்றி இருக்கும் இயற்கையின் அற்புதங்களை ரசிப்பதற்கு கூட பெரும்பாலும் காதல்தான் கற்றுத்தருகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

    //வெண்டைப் பிஞ்சு விரல்கள்
    ரோஜாப்பூ இதழ்கள்
    மான்போல் மருளும் விழிகள்
    தேன்போல் ஒலித்தது சிணுங்கல்
    பூக்குவியலாய் கையில் புதையல்
    மகவை ஏந்திய அக்கணத்தில்..
    பெருகியது ஈன்ற உன்மேல்
    பன்மடங்காய் காதல்!//

    குழந்தையை தூக்கும்போது உண்டாகும் மன உணர்வுகளை இந்த வரிகளே ஏற்படுத்தி விட்டன. வேறொன்றும் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  2. உலக எட்டாவது அதிசயம் காதல் என்றால்

    நீங்க காதல் கவிதையெழுதியிருப்பது ஒன்பதாவது உலக அதிசயம்..

    :)

    பதிலளிநீக்கு
  3. யாவும் காதலாய் எதிலும் காதலாய்..அழகு கவி மணிகள் லஷ்மி..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்,வழக்கம் போல் அருமை.

    பதிலளிநீக்கு
  5. புதையல் ரொம்பவும் பிடிச்சது அக்கா.

    பதிலளிநீக்கு
  6. அன்பு நிறைந்த மனத்துக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
    பிடியுங்கள் பூங்கொத்தை.

    பதிலளிநீக்கு
  7. ச்வீட் கவிதைகள். முதல் கவிதை ரொம்ப உண்மை!

    பதிலளிநீக்கு
  8. Hi Rama-அற்புதமான வரிகள்

    பதிலளிநீக்கு
  9. மின்னல், தென்றல், புதையல் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. அனைத்தும் தென்றலாய்...

    அன்பானவர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. காதல் வேறு... பூங்கொத்து வேறா... அருமையான காதல் கவிதை.

    பதிலளிநீக்கு
  12. காதலர்தின/அன்பர்தின/ கவிதைகள் மூன்றுமே அருமை.குறிப்பாய் மின்னல்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான வரிகளில் அழகான கவிதைகள், ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. //பெருகியது ஈன்ற உன்மேல்
    பன்மடங்காய் காதல்!//

    அழகான அன்பான கவிதை ராமலக்ஷ்மி.

    அன்பு ! அது துன்பம் போக்கும்.
    அறிவின் உயர்வு அன்புதான்.
    அன்புதான் கடவுள்,அன்புதான் அனைத்தும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

    அன்பு செய்து இன்புற்று வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
  15. திருவாரூரிலிருந்து சரவணன் said...
    //நம்மை சுற்றி இருக்கும் இயற்கையின் அற்புதங்களை ரசிப்பதற்கு கூட பெரும்பாலும் காதல்தான் கற்றுத்தருகிறது என்று எனக்கு தோன்றுகிறது...

    ...குழந்தையை தூக்கும்போது உண்டாகும் மன உணர்வுகளை இந்த வரிகளே ஏற்படுத்தி விட்டன. வேறொன்றும் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  16. ப்ரியமுடன் வசந்த் said...
    //உலக எட்டாவது அதிசயம் காதல் என்றால்

    நீங்க காதல் கவிதையெழுதியிருப்பது ஒன்பதாவது உலக அதிசயம்..

    :)//

    நன்றி வசந்த்:))!

    பதிலளிநீக்கு
  17. goma said...
    //அருமையான பூங்கொத்து//

    நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  18. தமிழரசி said...
    //யாவும் காதலாய் எதிலும் காதலாய்..அழகு கவி மணிகள் லஷ்மி..//

    மிக்க நன்றி தமிழரசி.

    பதிலளிநீக்கு
  19. கே. பி. ஜனா... said...
    //மூன்றுமே அருமை!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  20. asiya omar said...
    //வாழ்த்துக்கள்,வழக்கம் போல் அருமை.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  21. சுசி said...
    //புதையல் ரொம்பவும் பிடிச்சது அக்கா.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  22. வல்லிசிம்ஹன் said...
    //அன்பு நிறைந்த மனத்துக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
    பிடியுங்கள் பூங்கொத்தை.//

    மிக்க நன்றி வல்லிம்மா:)!

    பதிலளிநீக்கு
  23. கவிநயா said...
    //ச்வீட் கவிதைகள். முதல் கவிதை ரொம்ப உண்மை!//

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  24. meenu-asha said...
    //Hi Rama-அற்புதமான வரிகள்//

    நன்றி மீனு ஆஷா.

    பதிலளிநீக்கு
  25. Sriakila said...
    //மின்னல், தென்றல், புதையல் அனைத்தும் அருமை.//

    நன்றி ஸ்ரீஅகிலா.

    பதிலளிநீக்கு
  26. மாதேவி said...
    //அனைத்தும் தென்றலாய்...

    அன்பானவர்கள் தின வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி மாதேவி:)!

    பதிலளிநீக்கு
  27. மோகன் குமார் said...
    //மூன்றுமே பிடித்தது//

    நன்றி மோகன் குமார்:)!

    பதிலளிநீக்கு
  28. தமிழ் உதயம் said...
    //காதல் வேறு... பூங்கொத்து வேறா... அருமையான காதல் கவிதை.//

    அதுதானே:)? நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  29. MANO நாஞ்சில் மனோ said...
    //அருமை அருமை.....//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம். said...
    //காதலர்தின/அன்பர்தின/ கவிதைகள் மூன்றுமே அருமை.குறிப்பாய் மின்னல்.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  31. Priya said...
    //அருமையான வரிகளில் அழகான கவிதைகள், ரசித்து படித்தேன்.//

    நன்றி ப்ரியா:)!

    பதிலளிநீக்கு
  32. கோமதி அரசு said...
    ***//பெருகியது ஈன்ற உன்மேல்
    பன்மடங்காய் காதல்!//

    அழகான அன்பான கவிதை ராமலக்ஷ்மி.

    அன்பு ! அது துன்பம் போக்கும்.
    அறிவின் உயர்வு அன்புதான்.
    அன்புதான் கடவுள்,அன்புதான் அனைத்தும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

    அன்பு செய்து இன்புற்று வாழ்வோம்.//***

    வருகைக்கும் அன்பைப் பற்றிய அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  33. சே.குமார் said...
    //அழகான கவிதைகள்.//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  34. Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
    //அருமை!//

    தொடரும் வருகைக்கு நன்றி ரவிக்குமார்.

    பதிலளிநீக்கு
  35. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin