திங்கள், 13 ஜூலை, 2009

பால் நிலா



மொட்டுஅதுத் தானாகக்
கட்டவிழும் முன்னே
பட்டுடுத்தி அலங்கரித்துப்
பாதந்தனைப் பற்றியெடுத்து
அம்மிமேல் வைத்தழுத்தி
அருந்ததியைப் பார்க்கவைத்து
கட்டிவைக்கிறார் அவசரமாய்
கடமையை முடித்திட..!

ஈரைந்து திங்களிலே
ஆடுகிறது தொட்டில்.
தொலைத்திட்ட அவள்
பருவம்போலத் துலங்குகின்ற
பால் நிலவை-
அழைக்கின்றாள் தேன்குரலில்
அழகாகத் தன்தாலாட்டில்
குழந்தைக்கு அமுதூட்டத்
துள்ளியோடி வருமாறு..!

***

  • படம்: இணையத்திலிருந்து

  • யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக 12 ஜூலை 2009 வெளிவந்துள்ள கவிதை:











95 கருத்துகள்:

  1. /மொட்டுஅதுத் தானாகக்
    கட்டவிழும் முன்னே
    பட்டுடுத்தி அலங்கரித்துப்
    பாதத்தினைப் பற்றியெடுத்து
    அம்மிமேல் வைத்தழுத்தி
    அருந்ததியைப் பார்க்கவைத்து
    கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!

    ஈரைந்து திங்களேலே
    ஆடுகிறது தொட்டில்.
    தொலைத்திட்ட அவள்
    பருவம்போலத் துலங்குகின்ற
    பால் நிலவை-/

    அருமை

    பதிலளிநீக்கு
  2. பால்யவிவாக நிலாக்கள் இன்னமும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கத்தான் செய்கின்றன.
    நல்ல கவிதை ராமலஷ்மி

    பதிலளிநீக்கு
  3. அம்மிமேல் வைத்தழுத்தி
    அருந்ததியைப் பார்க்கவைத்து
    கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!

    உண்மைதான் பல திருமணங்கள் பெற்றோர் தத்தம் கடமை என்றே கருதி ..சிறுமி ,ஆளாகும் முன்னே அவசரம் அவசரம் என்று சொல்லியே..பெண்களை
    சுமதாங்கிகளாக்கி விடுகின்றனர்.

    அருமையான ,அழுத்தமான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. சரத்தில் முத்துக்கள் மெதுவாக அழகாகாக் கோர்த்து வருகிறீர்கள்.பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. இரவு தூக்கம் இல்லை! இப்போது மணி விடிகாலை 5. கவிதை படித்தேன். கொஞ்சம் வயித்த பிசயுது!!!

    பதிலளிநீக்கு
  6. ///கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!///

    வலிக்கும் நிஜங்கள்...


    // யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக 12 ஜூலை 2009 வெளிவந்துள்ள கவிதை//

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. இங்கிருந்து பார்க்க தெரியும் குட்டி நிலவை உவமைப் படுத்தி, கவிதை சின்னதா எழுதினாலும், உண்மையிலேயே நிலவின் அளவிற்கு அழுத்தமான வரிகள் கொண்ட கவிதை. வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  8. ஈரைந்து திங்களேலே
    ஆடுகிறது தொட்டில்.
    தொலைத்திட்ட அவள்
    பருவம்போலத் துலங்குகின்ற
    பால் நிலவை-
    அழைக்கின்றாள் தேன்குரலில்
    அழகாகத் தன்தாலாட்டில்
    குழந்தைக்கு அமுதூட்டத்
    துள்ளியோடி வருமாறு..!


    அருமை

    பதிலளிநீக்கு
  9. பெண்ணின் வாழ்வின் மிக முக்கிய இரு நிகழ்வுகளை வெகு அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.

    முத்துசரம் மிக மிக நன்றாக கோர்க்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் கோர்க்க வாழ்த்துக்கள்..........

    //// யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக 12 ஜூலை 2009 வெளிவந்துள்ள கவிதை//

    பிடியுங்கள் பூங்கொத்தை....... தாங்கள் மேலும் பல இனிய கவிதை படைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ///ஷைலஜா said...

    பால்யவிவாக நிலாக்கள் இன்னமும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கத்தான் செய்கின்றன.
    நல்ல கவிதை அக்கா///
    வழி மொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  11. //கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!//

    இங்க பல பேர் கடமையா மட்டுமே நினைக்குறாங்க பொண்ணுகள கட்டிக்குடுக்க

    மேடம் நல்லா இருந்துச்சு மேடம் கவிதை

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதை ராமலஷ்மி, வழக்கம் போலவே! //கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..// :(

    பதிலளிநீக்கு
  13. உங்கள் பால்நிலா கவிதை
    சுடும் நிஜம்...

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  15. கவிதை வலியுடன் அழகு.

    பெற்றோருக்காய் தொலைத்திட்ட அவள் கனவுகள்....

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை. பலரின் வாழ்க்கையில் நிகழும் நிஜங்கள்...

    விகடனில் 25 படைப்புகள் வெளிவந்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள். தொடருட்டும்... வெற்றிப் பயணம்.

    பதிலளிநீக்கு
  17. இரண்டாவது பத்தியில் நிலவை உவமையாக்கிய விதமும்..அவளின் தேன்குரல் அழகாய் அழைத்த விதமும் நல்லா எழுதி இருக்கீங்க ராமலக்‌ஷ்மி..

    பெண் ஒருத்தி எப்படி தனக்கான மோசமான சூழ்நிலையையும் அழகாக்கிக்கிட்டு தன்னைச் சுற்றி இருக்கவங்களுக்கும் அழகான உலகை அமைச்சுத்தரான்னு நினைச்சா பெண் என்பதில் பெருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள்

    யுத் புல் விகடனில் 25 படப்புகளுக்கு வாழ்த்துகள். ரொம்ப அருமையாக முத்தை கோர்த்து கொண்டு இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. திகழ்மிளிர் said...

    //அருமை//

    வழக்கம் போலவே முதல் பாராட்டு. நன்றி திகழ்மிளிர்!

    பதிலளிநீக்கு
  20. ஷைலஜா said...
    //நல்ல கவிதை ராமலஷ்மி//

    பாராட்டுக்கு நன்றி ஷைலஜா.

    //பால்யவிவாக நிலாக்கள் இன்னமும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கத்தான் செய்கின்றன.//

    அப்படித்தான் ஷைலஜா நானும் நினைத்திருந்தேன், பின் வரும் செய்தியை டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் சமீபத்தில் [24 மே 09] வாசிக்க நேரும் வரை. இந்தியாவின் வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாகக் கொண்டாடப் படும் நாம் வசிக்கும் பெங்களூரிலேயே 'நாகாவராபாளையா' என்கிற இடத்தில் சுமார் 300 வீடுகளில் இது போன்ற சிறுமிகள்தான் குடும்பத்தலைவிகளாம். குல்பர்கா மாவட்டத்திலிருந்து பெண் எடுத்து இங்கே குடிவந்து விடுவதால் இந்த இடத்துக்குப் பெயரே ‘குல்பர்கா காலனி’ என்கிறார்கள். 9 அல்லது 10 வயதில் தம்மை விட சுமார் 10 அல்லது 20 வயது மூத்தவர்களுக்கு திருமணம் செய்விக்கப் பட்டு, இருபத்தைந்து வயதிற்குள் 4,5 குழந்தைகளுக்குத் தாயாகிவிடும் பெண்கள் அநேகம் பேராம் :( !

    பதிலளிநீக்கு
  21. // பால் நிலவை-
    அழைக்கின்றாள் தேன்குரலில்
    அழகாகத் தன்தாலாட்டில்
    குழந்தைக்கு அமுதூட்டத்
    துள்ளியோடி வருமாறு..! //




    அழகு வரிகள் சகோதரி......!!






    // கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..! //




    அதற்கு அவர் படும் பாடு இருக்கிறதே.....!!! நம் வீட்டில் சீரும் சிறப்புமாக , செல்ல மகளாக இருந்து ... பிறர் வீடிற்கு அனுப்பிய பின் ... தன் மகள் அதே சுகங்களுடன் வாழ்கிறாளா என்று அதற்குப் பிறகுதான் தன மகளைப் பற்றி மிகவும் அக்கறை கொள்வார் தந்தை.





    // தொலைத்திட்ட அவள்
    பருவம்போலத் //




    அப்போ நாங்கெல்லாம் எப்பவுமே யூத்து தான்னு சொல்றீங்களா.....??

    பதிலளிநீக்கு
  22. அருமை அக்கா. சொல்ல வார்த்தைகள் இல்லை. மனதில் வலிதான் நிறைய வருகிறது. இந்த வரி நல்ல என்று பிரிக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. அழகான கவிதை, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. goma said...
    அம்மிமேல் வைத்தழுத்தி
    அருந்ததியைப் பார்க்கவைத்து
    கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!

    //உண்மைதான் பல திருமணங்கள் பெற்றோர் தத்தம் கடமை என்றே கருதி ..சிறுமி ,ஆளாகும் முன்னே அவசரம் அவசரம் என்று சொல்லியே..பெண்களை சுமதாங்கிகளாக்கி விடுகின்றனர்.//

    தாங்கும் சுமையை உணராமல் தொலைத்த பருவத்தின் அருமையையும் அறியாமல் அந்த அழகுத் தேவதைகள்..!

    //அருமையான ,அழுத்தமான வரிகள்//
    //சரத்தில் முத்துக்கள் மெதுவாக அழகாகாக் கோர்த்து வருகிறீர்கள்.பாராட்டுகள்//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  25. அபி அப்பா said...
    //இரவு தூக்கம் இல்லை! இப்போது மணி விடிகாலை 5. கவிதை படித்தேன். கொஞ்சம் வயித்த பிசயுது!!!//

    பெண்ணைப் பெற்றவர் நீங்கள். இருக்கத்தான் செய்யும். கடமையை முடிக்க என்று நினைக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். நல்ல கல்வி, அது தரும் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் தன் காலில் நிற்கும் தைரியத்தை முதலில் பெண்ணுக்குத் தர பொறுப்புடன் செயல்பட வாழ்த்துக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. த.ஜீவராஜ் said...
    ****///கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!///

    வலிக்கும் நிஜங்கள்...****

    ஆமாம், வலித்ததால் பிறந்த வரிகளே அவை.

    ****// யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக 12 ஜூலை 2009 வெளிவந்துள்ள கவிதை//

    வாழ்த்துக்கள்..****

    தங்கள் போன்றோரின் ஊக்கமும் வாழ்த்துக்களுமே காரணம். நன்றி ஜீவராஜ்.

    பதிலளிநீக்கு
  27. சதங்கா (Sathanga) said...

    //இங்கிருந்து பார்க்க தெரியும் குட்டி நிலவை உவமைப் படுத்தி, கவிதை சின்னதா எழுதினாலும், உண்மையிலேயே நிலவின் அளவிற்கு அழுத்தமான வரிகள் கொண்ட கவிதை. வாழ்த்துக்கள் !//

    குட்டி நிலாவும் குட்டிப் பெண்ணும். அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி சதங்கா! துள்ளித் திரிய வேண்டிய தன் பருவம் காணாதாக்கப் பட்டது புரியாமலே நிலாவைத் துள்ளியோடி வருமாறு பாடிக் கொண்டிருக்கின்றன இந்தக் குட்டி நிலாக்கள்!

    பதிலளிநீக்கு
  28. sakthi said...

    //அருமை//

    ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு நன்றி சக்தி!

    பதிலளிநீக்கு
  29. R.Gopi said...

    //பெண்ணின் வாழ்வின் மிக முக்கிய இரு நிகழ்வுகளை வெகு அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.//

    நன்றி கோபி.

    //முத்துசரம் மிக மிக நன்றாக கோர்க்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.//

    மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

    //பிடியுங்கள் பூங்கொத்தை....... தாங்கள் மேலும் பல இனிய கவிதை படைக்க வாழ்த்துக்கள்.//

    தங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்:)!

    பதிலளிநீக்கு
  30. தமிழ் பிரியன் said...

    //நல்ல கவிதை அக்கா
    வழி மொழிகின்றேன்.//

    பாராட்டுக்கும் வழி மொழிந்திருக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் பிரியன். ஷைலஜாவுக்கு தந்த பதிலையே உங்களுக்கும் நான் வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. பிரியமுடன்.........வசந்த் said...

    *** //கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!//

    இங்க பல பேர் கடமையா மட்டுமே நினைக்குறாங்க பொண்ணுகள கட்டிக்குடுக்க//***

    இயலாமையில் வசதியற்றவர்கள் மட்டும்தான் என்றில்லாமல் வசதி படைத்தவர்களும் கூட இப்படி நடந்து கொள்வது வருந்தத்தக்கது.

    // மேடம் நல்லா இருந்துச்சு மேடம் கவிதை//

    கருத்துக்கும் ரசிப்புக்கும் நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  32. சந்தனமுல்லை said...

    //அருமையான கவிதை ராமலஷ்மி, வழக்கம் போலவே!//

    நன்றி முல்லை.

    ***//கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..// :( ***

    எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என ஒரு சந்தேகம் வருகிறதல்லவா:(?

    பதிலளிநீக்கு
  33. கதிர் said...

    //உங்கள் பால்நிலா கவிதை
    சுடும் நிஜம்...//

    நிலவு சுடக் கூடாதுதான், அதுவும் பால் நிலா. ஆனால் இங்கு...:(! அழகாக உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் கதிர். நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  34. புதுகைத் தென்றல் said...

    // வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி //

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தென்றல்!

    பதிலளிநீக்கு
  35. மாதேவி said...

    // கவிதை வலியுடன் அழகு.

    பெற்றோருக்காய் தொலைத்திட்ட அவள் கனவுகள்.... //

    அதை மறந்தும் மன்னித்தும் சூழலோடு ஐக்கியமாகித்தான் விடுகிறாள் முத்துலெட்சுமி தனது பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல.

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  36. குடந்தை அன்புமணி said...

    //அருமையான கவிதை. பலரின் வாழ்க்கையில் நிகழும் நிஜங்கள்...//

    நன்றி அன்புமணி. இன்றைய தேதி வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன பால்ய விவாகங்கள்.

    //விகடனில் 25 படைப்புகள் வெளிவந்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள். தொடருட்டும்... வெற்றிப் பயணம்.//

    நல்வாழ்த்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  37. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    // இரண்டாவது பத்தியில் நிலவை உவமையாக்கிய விதமும்..அவளின் தேன்குரல் அழகாய் அழைத்த விதமும் நல்லா எழுதி இருக்கீங்க ராமலக்‌ஷ்மி..//

    தங்கள் ரசிப்புக்கு மிகவும் நன்றி முத்துலெட்சுமி. எனக்கும் பிடித்த வரிகள் அவை.

    //பெண் ஒருத்தி எப்படி தனக்கான மோசமான சூழ்நிலையையும் அழகாக்கிக்கிட்டு தன்னைச் சுற்றி இருக்கவங்களுக்கும் அழகான உலகை அமைச்சுத்தரான்னு நினைச்சா பெண் என்பதில் பெருமையா இருக்கு.//

    பெண்ணின் எதையும் தாங்கிக் கொண்டு பரிமளிப்பாள் என்பதை எவ்வளவு அழகாய் சொல்லி விட்டீர்கள் முத்துலெட்சுமி! நிச்சயமா பெருமைதான்.

    "மங்கையராய்ப் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா..." மகாக் கவியே நம்ம பக்கம்தான்!

    பதிலளிநீக்கு
  38. sindhusubash said...

    //பாராட்டுக்கள்!!!!//

    வாங்க சிந்து, என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  39. Jaleela said...

    //வாழ்த்துக்கள்

    யுத் புல் விகடனில் 25 படப்புகளுக்கு வாழ்த்துகள். ரொம்ப அருமையாக முத்தை கோர்த்து கொண்டு இருக்கிறீர்கள்.//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜலீலா!

    பதிலளிநீக்கு
  40. லவ்டேல் மேடி said...
    *** // பால் நிலவை-
    அழைக்கின்றாள் தேன்குரலில்
    அழகாகத் தன்தாலாட்டில்
    குழந்தைக்கு அமுதூட்டத்
    துள்ளியோடி வருமாறு..! //

    அழகு வரிகள் சகோதரி......!!***

    ரசிப்புக்கு நன்றி மேடி!

    ***// கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..! //

    அதற்கு அவர் படும் பாடு இருக்கிறதே.....!!! நம் வீட்டில் சீரும் சிறப்புமாக , செல்ல மகளாக இருந்து ... பிறர் வீடிற்கு அனுப்பிய பின் ... தன் மகள் அதே சுகங்களுடன் வாழ்கிறாளா என்று அதற்குப் பிறகுதான் தன மகளைப் பற்றி மிகவும் அக்கறை கொள்வார் தந்தை.***

    நீங்கள் சொல்வது உண்மைதான், விதி விலக்காய் இருக்கக் கூடிய சிலரைத் தவிர்த்து. இங்கு அக்கறையின்மை என்பதைப் பற்றி சொல்ல வரவில்லை. அவர்கள் அறியாமையை சொல்ல வருகிறேன். திருமணம் செய்து வைப்பது ஒன்றேதான் பெண்ணுக்கு செய்ய வேண்டிய கடமை என நினைக்காமல் அவளுக்கு கல்வி அறிவைத் தந்து தக்க வயதில் அதைச் செய்ய வேண்டுமல்லவா?

    *** // தொலைத்திட்ட அவள்
    பருவம்போலத் //

    அப்போ நாங்கெல்லாம் எப்பவுமே யூத்து தான்னு சொல்றீங்களா.....??***

    ஆஹா, நீங்க அப்படி வருகிறீர்களா:))? பருவம் எனச் சொல்லுவது அவள் தொலைத்த பதின்ம வயதை. ஆணோ பெண்ணோ பத்து முதல் பதினெட்டு வயது வரையான அந்தப் பருவம்தான் கல்வியின் பிரதான காலம். கல்வி கற்கும் வசதியற்றவர்களானாலும் கூட அனுபவத்தால் வாழ்க்கையை உலகைப் புரிந்திடுவார்கள். அந்தப் பருவம் அவர்கள் கை விட்டுப் போயே விடுவது சோகம்தானே மேடி?

    பதிலளிநீக்கு
  41. சுசி said...

    //அருமை அக்கா. சொல்ல வார்த்தைகள் இல்லை. மனதில் வலிதான் நிறைய வருகிறது. இந்த வரி நல்ல என்று பிரிக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்.//

    கவிதையை அப்படியே உள்வாங்கிக் கொண்டிருப்பது புரிகிறது. நன்றி சுசி!

    பதிலளிநீக்கு
  42. உமா said...

    //அழகான கவிதை, வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி உமா!

    பதிலளிநீக்கு
  43. கபிலன் said...

    //சூப்பருங்க!//

    நன்றி கபிலன்!

    பதிலளிநீக்கு
  44. இதை போல உள்ள பெண்களின்!!! நிலைமை ரொம்ப பரிதாபம் தான்...

    //யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக 12 ஜூலை 2009 வெளிவந்துள்ள கவிதை//

    அடிச்சு தாக்குங்க! :-)

    பதிலளிநீக்கு
  45. பால் நிலா இதயத்தில் பாசத்தை வார்க்குது....

    அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  46. // திருமணம் செய்து வைப்பது ஒன்றேதான் பெண்ணுக்கு செய்ய வேண்டிய கடமை என நினைக்காமல் அவளுக்கு கல்வி அறிவைத் தந்து தக்க வயதில் அதைச் செய்ய வேண்டுமல்லவா? //


    // . அந்தப் பருவம் அவர்கள் கை விட்டுப் போயே விடுவது சோகம்தானே மேடி? //




    திங்க் பண்ண வெச்சுட்டிங்களே சகோதரி.....!!!!

    பதிலளிநீக்கு
  47. வலி தரும் வரிகளுடன் அழகான கவிதை.

    /*தொலைத்திட்ட அவள்
    பருவம்போலத் துலங்குகின்ற
    பால் நிலவை-
    அழைக்கின்றாள் தேன்குரலில்
    */
    :-(
    இது போன்ற கொடுமைகள் என்று ஒழியுமோ என்ற ஏக்கம் மனதுள் எழுகிறது.

    பதிலளிநீக்கு
  48. நம்ம ஊரில் ரெண்டு எக்ஸ்ட்ரீம்ல இதுபோல் நடக்குதுங்க. ஏழைகள் படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள் இதுபோல் இளவய்தில் திருமணம், உடனே தாய் ஆகிவிடுகிறார்கள்.

    இன்னொரு முனையில் வியாபாரம் செய்யும், ரொம்ப கண்செர்வேடிவ் குடும்பங்கள், பண்க்காரர்கள், இதுபோல் வாழ்கிறார்கள். நல்லாப் படிக்கும் பெண்களைக்கூட படிக்க வைக்க மாட்டார்கள்.

    இந்த ரெண்டு வகையிலும் இன்றும் இது நடக்குது.

    BTW, நம்ம ரெண்டு ஜெனெரேசன் முன்னால போனோம்னா, நம்ம பாட்டிகளெல்லாம் இப்படித்தான் கல்யாணம் செய்து இருப்பார்கள், குழந்தையும் பெற்று இருப்பார்கள்.

    Anyway, இந்தக்காலத்தில் ஒரு பொண்ணு 11-12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறாள். இருந்தாலும் அவள் குழந்தைதான். ஆனா இவர்கள் அகராதியில், பருவமைந்துவிட்டாளே அவள் "பெண்ணாகி" விட்டாள் என்பது. அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க தயாராகிவிட்டதாக் நினைக்கிறார்கள். அவளுக்கு அந்தப்பக்குவம் வரவில்லை என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.

    நான் ஒரு சிலரிடம், பணக்கார கன்செர்வேடிவ் களிடம் பர்சனலாவே போய் பேசி அட்வைஸ் பண்ணி இருக்கேன். ஆனா அவங்களுக்கு இதெல்லாம் புரிவதில்லை. ஒரு மாதிரி சிர்ப்பார்கள் என்னைப் பார்த்து.

    அவங்களுக்கு, காதல், விகாரத்து, மேல்ப்படிப்பு, பெண்ணுரிமைனு பேசுறவங்க எல்லாம் பிடிக்காது.

    படிச்சவன் பாட்டக்கெடுத்தான் எழுதினவன் ஏட்டக்கெடுத்தான் என்பார்கள். ஒரு சில போஸ்ட் மாடர்ன் எழுத்தாளரையும் மேற்கோள் காட்டுவாங்க. அவர்களக்காட்டி, அவர்கள் விசிறிகள் போடும் ஆட்டங்களையும் காட்டி, அவர்கள் என்னத்தைப்புரிந்து கொண்டார்கள் என்னத்தை சாதித்துவிட்டார்கள்?
    எங்கே போகிறார்கள்? அவங்க, நிதானமாக கல்யாணம் பண்ணி படிச்சு நாசமா போனதுதான் மிச்சம் என்று பெரிய அறிவுரையுடன் முடிப்பார்கள்.

    உண்மையில் அவங்களுக்கு பயம். தன் பெண் கல்யாணம் ஆகுமுன்பே கருவுற்று வந்துவிடுவாளோ? யாரும் அவளை ஏமாற்றி விடுவாங்களோ? அப்படி ஆனால் அசிங்கமே! மானம் போயிடுமே என்கிற பயம்தான் இதற்கு காரணம். அந்த பயத்தால்தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள். அவங்களை பார்த்து பரிதாபமும் படலாம்.

    மேலும் இவங்களை திருத்துவது ரொம்ப கஷ்டம்ங்க.

    அதேபோல் சுதந்திரம் என்கிற பேரில் படித்து, கெட்டவழியில் போய், குழம்பி, எல்லாவற்றையும் துஷ்பிரயோகம் செய்து மட்டமான வழியில் போகும் பலரையும் (வலையுலகில்கூட பார்க்கலாம்) கூட நம்ம பார்க்கிறோம் இல்லையா. அப்படி நாசமா போன ஒரு சிலரை இவர்கள் மறக்காமல் மேற்கோள் காட்டுவாங்க!

    They will quote some of our celebrities as well!

    உங்க மனவருத்தத்தை இப்படி கவிதையா சொல்லி இருக்கீங்க. பாவம் அந்தப்பெண்கள். அவர்கள் பலியாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரியாமலே வாழ்ந்துமுடித்துவிடுவார்கள்.

    உங்க கவிதையைப்படித்து ஒரு ரெண்டுபேரு திருந்தினால்கூட நல்லதுதான்.

    மேலும் சட்டம் இருக்குங்க. இளம் வய்தில் திருமணம் செய்யக்கூடாது என்று. ஆனால் இவங்க எல்லாம் கல்யாணத்தை "ரிஜிஸ்டர்" பண்ணுவதே இல்லையே! :(

    ரொம்ப நீளமாயிடுத்து என் பின்னூட்டம். மன்னிச்சுக்கோங்க ராமலக்ஷ்மி :)

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  49. "பால் நிலா"
    அந்த இளைய நிலாவுக்கு தன்னைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லை.

    நிலவும் தேய்ந்தது
    பாலும் திரிந்தது
    மனமும் கனத்தது.

    பதிலளிநீக்கு
  50. "உன்னை ஒருத்தன் கையில பிடிச்சுக் குடுத்திட்டா என் கடமை முடிஞ்சிடும்" என்ற இந்தக் கூற்று இந்தக் கவிதைக்குப் பின்னர் இருக்காது.
    அருமை. உங்களின் இருபத்தைந்துக்கு இனிய வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  51. வழக்கம்போல சற்றே லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லுறேன்...

    அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  52. அப்துல் லேட்னா, நா என்ன சொல்லுறது. வண்டில லாஸ்ட் வான் நாமதான்.

    உங்கள் கவிதை/கதைகளுக்குப் பின்னால் நிச்சயம் ஒரு அனுபவம் இருக்கும்னு தெரியும். கேட்க கஷ்டமா இருக்கு. நல்ல கவிதை சகோ.

    விகடன்ல குத்தகைனு அன்னிக்கே சொன்னேன். வெள்ளி விழாவுக்கு வாழ்த்துகள். கொஞ்சம் நம்ம பேரையும் ரெக்கமண்டு பண்ணுங்க சகோ :)

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  53. எம்.எம்.அப்துல்லா said...
    வழக்கம்போல சற்றே லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லுறேன்...//

    அப்ப நானு.?

    அருமை அக்கா.!

    பதிலளிநீக்கு
  54. அழகான யதார்த்தமான கவிதை. சில வரிகளைத் தெரிந்து பாராட்டுவோம் என்று நினைத்தேன். ம்ம் ..... முடியவில்லை. எதை விலக்குவது என்ற தவிப்பு.
    அபாரம் தோழி. 25 ஆவது பதிவுக்கு நல்ல தெரிவு. என் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  55. கிரி said...

    ***இதை போல உள்ள பெண்களின்!!! நிலைமை ரொம்ப பரிதாபம் தான்...
    //யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக//
    அடிச்சு தாக்குங்க! :-)***

    கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  56. சப்ராஸ் அபூ பக்கர் said...

    //பால் நிலா இதயத்தில் பாசத்தை வார்க்குது....//

    ஆம் கள்ளமில்லா வெள்ளை உள்ளமல்லவா?

    //அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அபூ பக்கர்.

    பதிலளிநீக்கு
  57. நசரேயன் said...

    //அழகான வரிகள்..//

    நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  58. லவ்டேல் மேடி said...

    //திங்க் பண்ண வெச்சுட்டிங்களே சகோதரி.....!!!!//

    சமுதாயமும் திங்க் பண்ணும் நாள் விரைவில் வரவேண்டும் மேடி!

    பதிலளிநீக்கு
  59. அமுதா said...

    //வலி தரும் வரிகளுடன் அழகான கவிதை.//

    //இது போன்ற கொடுமைகள் என்று ஒழியுமோ என்ற ஏக்கம் மனதுள் எழுகிறது.//

    என்னதான் அரசு திருமணவயது 18 என்று சட்டம் வைத்திருந்தாலும் இது நடந்து கொண்டேதான் இருக்கிறது:(!

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  60. வருண் said...

    //நம்ம ஊரில் ரெண்டு எக்ஸ்ட்ரீம்ல இதுபோல் நடக்குதுங்க. ஏழைகள் படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள் இதுபோல் இளவய்தில் திருமணம், உடனே தாய் ஆகிவிடுகிறார்கள்.

    இன்னொரு முனையில் வியாபாரம் செய்யும், ரொம்ப கண்செர்வேடிவ் குடும்பங்கள், பண்க்காரர்கள், இதுபோல் வாழ்கிறார்கள். நல்லாப் படிக்கும் பெண்களைக்கூட படிக்க வைக்க மாட்டார்கள்.

    இந்த ரெண்டு வகையிலும் இன்றும் இது நடக்குது.//

    உண்மைதான். ஆனால் படித்தவர்கள் மிகச் சிறிய வயதில் செய்து வைப்பதாகத் தெரியவில்லை. 16 அல்லது 18 வயதில் மேல்படிப்பு படிக்க வைக்காமல் செய்து வைத்து விடுவார்கள்.

    பொதுவாகவே பார்க்கலாமே, தனிப்பட்ட முறையில் யாரையும் சுட்டிக் காட்டாமல். மேல்தட்டு மக்கள் போலவேதான் வசதியற்றவர்களும் பயப்படுகிறார்கள் ‘காலம் இருக்கிற இருப்பில் குழந்தையை யாராவது ஏமாற்றிவிடக் கூடாதே’ என. 11 வயதான் தன் பெண்ணுக்கு இன்னும் 2 வருடத்தில் திருமணம் செய்விக்க நினைக்கும் ஒருதாய் என்னிடம் பகிர்ந்து கொண்ட கவலை இது.

    3 தினங்கள் முன்னர் Business Line-ல் வெளிவந்த கட்டுரையொன்றை இன்றுதான் படித்தேன்[ஹிஹி, நேரமில்லாவிட்டால் இப்படித்தான் 4,5 நாள் செய்தித்தாள்களையும் சேர்த்து வைத்துப் படிப்பேன்]. இணையத்தில் அதன் பக்கத்தைத் தேடி சுட்டி தந்துள்ளேன் இதோ:http://www.thehindubusinessline.com/life/2009/07/10/stories/2009071050120400.htm

    துணிச்சலாய் தங்களுக்கு நிச்சயக்கப் பட்ட திருமணத்தை, தாங்கள் படித்து வந்த NCLP[National Child Labour Project] நடத்தும் பள்ளியின் ஆசிரியர்கள் உதவியோடு நிறுத்தி, மேலே படிப்பைத் தொடர்ந்த சிறுமியரைப் பற்றியது. அவர்கள் ஜனாதிபதியால் கெளரவிக்கப் பட்டும் உள்ளார்கள்.

    அச்செய்தி உலகின் 40 சதவிகித பால்ய விவாகங்கள் இந்தியாவில்தான் நடப்பதாக உறுதி படுத்தியுள்ளது.

    //இவங்க எல்லாம் கல்யாணத்தை "ரிஜிஸ்டர்" பண்ணுவதே இல்லையே! :(//

    அதே செய்தி சொல்கிறது, திருமணத்தை மட்டுமில்லை, இச்சிறுமிகள் பிறந்ததற்கும் சான்று இல்லையென. அதாவது பெரும்பாலான பிறப்புகளும் ரிஜிஸ்டர் செய்யப் படுவதில்லை. இரண்டுமே கட்டாயமாக்கப் படவேண்டும்.

    தங்கள் விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  61. நானானி said...
    //"பால் நிலா"
    அந்த இளைய நிலாவுக்கு தன்னைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லை.//

    வருவதை யாவும் அதன் போக்கில் ஏற்று வாழும் பெண் உள்ளம்.

    //நிலவும் தேய்ந்தது
    பாலும் திரிந்தது
    மனமும் கனத்தது.//

    ஆம், தான் தேய்ந்தாலும் தேயாத அன்புள்ளம் காட்டுகிறது. கருத்துக்கு நன்றி நானானி!

    பதிலளிநீக்கு
  62. //
    ஈரைந்து திங்களேலே
    ஆடுகிறது தொட்டில்.
    தொலைத்திட்ட அவள்
    பருவம்போலத் துலங்குகின்ற
    பால் நிலவை-
    அழைக்கின்றாள் தேன்குரலில்
    அழகாகத் தன்தாலாட்டில்
    குழந்தைக்கு அமுதூட்டத்
    துள்ளியோடி வருமாறு..!
    //

    இந்த வரிகள் மிக அழகாகவும் உணர்வு பூர்வமாகும் இருக்கின்றது
    அருமை!

    பதிலளிநீக்கு
  63. //
    மொட்டுஅதுத் தானாகக்
    கட்டவிழும் முன்னே
    பட்டுடுத்தி அலங்கரித்துப்
    பாதத்தினைப் பற்றியெடுத்து
    அம்மிமேல் வைத்தழுத்தி
    அருந்ததியைப் பார்க்கவைத்து
    கட்டிவைக்கிறார் அவசரமாய்
    கடமையை முடித்திட..!
    //

    உண்மை முற்றிலும் உண்மைதான்.

    அவர்களின் கடமைகள் முடித்தால் போதும்.அதுதான் சில இடத்தில் வெற்றிகரமாக அரங்கேறுகிறது.

    மனது கனக்கிறது :((

    பதிலளிநீக்கு
  64. கவிதை மிக அருமை.
    100-வது யூத்ஃபுல் விகடன் படைப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  65. நீங்க சொல்வது உண்மைதாங்க, ராமலக்‌ஷ்மி!

    நீங்க சொன்னதுபோல பணக்கார கண்சர்வேடிவ் 16-18 வயதில் கல்லூரிக்கு அனுப்பாமல் திருமணம் செய்து வைப்பார்கள்.

    ஹிந்துல வந்திருக்க செய்தி ரொம்ப கொடுமைங்க. வெஸ்ட்பெங்கால் ஓரளவுக்கு நல்ல ஸ்டேங்க. அன்கேயே இப்படினா, பீகார் எல்லாம் கேட்கவே வேணாம்!

    என்னைக்கேட்டால் டீனேஜில் (19 வயது வரை) உள்ள எந்தப்பெண்ணுமே குழந்தைதான். 11-13 வயதுப்பெண்கள் எல்லாம் பச்சைக்குழந்தைங்க.

    11-13 வயதுப்பெண்களுக்கு திருமணம் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கொடுமைங்க! :((((

    பதிலளிநீக்கு
  66. " உழவன் " " Uzhavan " said...

    //"உன்னை ஒருத்தன் கையில பிடிச்சுக் குடுத்திட்டா என் கடமை முடிஞ்சிடும்" என்ற இந்தக் கூற்று இந்தக் கவிதைக்குப் பின்னர் இருக்காது.
    அருமை. உங்களின் இருபத்தைந்துக்கு இனிய வாழ்த்துக்கள் :-)//

    புரிதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  67. எம்.எம்.அப்துல்லா said...

    //வழக்கம்போல சற்றே லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லுறேன்...

    அருமை அக்கா.//

    வாங்க அப்துல்லா. நன்றி. எப்போதெல்லாம் கவிதை சின்னதாக அமைந்து போகிறதோ அப்போதெல்லாம் உங்க நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை:)!

    பதிலளிநீக்கு
  68. அனுஜன்யா said...
    //வண்டில லாஸ்ட் வான் நாமதான்.//

    லாஸ்டா வந்தாலும் முடிந்தவரை எந்தப் பதிவையும் மிஸ் பண்ணாமல் வருகிற வேன் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:)!

    //உங்கள் கவிதை/கதைகளுக்குப் பின்னால் நிச்சயம் ஒரு அனுபவம் இருக்கும்னு தெரியும். கேட்க கஷ்டமா இருக்கு. நல்ல கவிதை சகோ.//

    புரிதலுக்கும் பாராட்டுக்கும், பின் வரும் வாழ்த்துக்கும் நன்றி.

    //விகடன்ல குத்தகைனு அன்னிக்கே சொன்னேன். வெள்ளி விழாவுக்கு வாழ்த்துகள். கொஞ்சம் நம்ம பேரையும் ரெக்கமண்டு பண்ணுங்க சகோ :)//

    உங்களுக்கு எனது ரெக்கமண்டேஷனா:(? என்னை வைத்துக் காமெடி கீமெடி பண்ணலைதானே:))?

    பதிலளிநீக்கு
  69. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //அப்ப நானு.?

    அருமை அக்கா.!//

    நீங்க எத்தனை பிஸி எனத் தெரியும். முடிகிற போது வருகிறீர்களே, நன்றி தாமிரா, பாராட்டுக்கும்.

    பதிலளிநீக்கு
  70. ஜெஸ்வந்தி said...

    //அழகான யதார்த்தமான கவிதை. சில வரிகளைத் தெரிந்து பாராட்டுவோம் என்று நினைத்தேன். ம்ம் ..... முடியவில்லை. எதை விலக்குவது என்ற தவிப்பு.//

    உங்கள் ரசிப்புக்கு நன்றி.

    //அபாரம் தோழி. 25 ஆவது பதிவுக்கு நல்ல தெரிவு. என் பாராட்டுக்கள்.//

    எனது வலைப்பூ 50 பதிவுகள் கடந்தாயிற்று ஜெஸ்வந்தி. இது விகடனில் 25ஆவது படைப்பு. தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  71. RAMYA said...
    //இந்த வரிகள் மிக அழகாகவும் உணர்வு பூர்வமாகும் இருக்கின்றது
    அருமை!//

    ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ரம்யா.

    //உண்மை முற்றிலும் உண்மைதான்.

    அவர்களின் கடமைகள் முடித்தால் போதும்.அதுதான் சில இடத்தில் வெற்றிகரமாக அரங்கேறுகிறது.

    மனது கனக்கிறது :((//

    இது குறித்த விழிப்புணர்வு பரவ சமூகநல நிறுவனங்களும் அரசும் ஆவன செய்ய வேண்டும். கருத்துக்கும் நன்றி ரம்யா.

    பதிலளிநீக்கு
  72. Positive Anthony Muthu said...

    //கவிதை மிக அருமை.
    100-வது யூத்ஃபுல் விகடன் படைப்புக்கு வாழ்த்துக்கள்.//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைப்பூ பக்கம் வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அந்தோணி முத்து!

    பதிலளிநீக்கு
  73. வருண் said...

    //ஹிந்துல வந்திருக்க செய்தி ரொம்ப கொடுமைங்க.//

    நேரம் ஒதுக்கி அதை வாசித்தமைக்கு நன்றி வருண்.

    //வெஸ்ட்பெங்கால் ஓரளவுக்கு நல்ல ஸ்டேங்க. அன்கேயே இப்படினா, பீகார் எல்லாம் கேட்கவே வேணாம்!//

    உண்மைதான். கர்நாடகாவிலும் இருக்கிறது. முடிந்தால் ஷைலஜாவுக்கு நான் தந்திருக்கும் பதிலில் பாருங்கள்.

    //என்னைக்கேட்டால் டீனேஜில் (19 வயது வரை) உள்ள எந்தப்பெண்ணுமே குழந்தைதான்.//

    ரொம்ப ரொம்பச் சரி. லவ்டேல் மேடிக்கும் அதையேதான் சொன்னேன். சரிதான் என ஒத்துக் கொண்டு மேலே திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டார் அவர்!

    பதிலளிநீக்கு
  74. இய‌ற்கை said...

    //அருமை//

    நன்றி இயற்கை!

    பதிலளிநீக்கு
  75. நேசமித்ரன் said...

    //வாழ்த்துக்கள்//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நேசமித்ரன்.

    பதிலளிநீக்கு
  76. என்று திருந்துமிந்த சமூகம்னு கேக்கறீங்களா ? நிறைய மாற்றங்கள் வந்துட்டு இருக்கு.. முழுசா மாற இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். இருந்தாலும் அதை அரசியல் வியாதிகள் அனுமதிப்பாங்களான்னு தெஇர்யலையே

    பதிலளிநீக்கு
  77. Jeeves said...

    //என்று திருந்துமிந்த சமூகம்னு கேக்கறீங்களா ?//

    அதே!

    //நிறைய மாற்றங்கள் வந்துட்டு இருக்கு.. முழுசா மாற இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.//

    ஏற்கனவே நிறைய காலம் ஆயிருச்சே ஜீவ்ஸ்:(!?

    //இருந்தாலும் அதை அரசியல் வியாதிகள் அனுமதிப்பாங்களான்னு தெரியலையே//

    அதென்னவோ சரிதான். ஆனால் அரசு சட்டத்தைத் தீவிரப் படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் அல்லவா நாம்...?

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  78. முத்துலெட்சுமி அவார்டு சேர வேண்டிய இடத்துக்குத்தான் போய் சேர்ந்திருக்கிறது.
    ஒரே அச்த்தல் கவிதை,கட்டுரை,சிறுகதைகள்..மொத்தத்தில் ஒரு வாரைதழின் அம்சம் அத்தனையையும் அடக்கியிருக்கிறது உங்கள் பதிவு

    பதிலளிநீக்கு
  79. @ காற்று,

    தங்கள் முதல் வருகைக்கும், முத்துலெட்சுமி வழங்கிய சுவாரஸ்ய வலைப்பூ விருதுக்கு ‘முத்துச்சரம்’ பொருத்தமானதெனத் தந்திருக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி காற்று.

    பதிலளிநீக்கு
  80. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் தங்கள் லேண்ட்மார்க் ஆல்பத்துக்கு.
    ஜூன் போனா ஜூலைக் காற்றே...

    பதிலளிநீக்கு
  81. ரொம்ப ரொம்ப லேட்டுன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  82. //யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக 12 ஜூலை 2009 வெளிவந்துள்ள கவிதை//

    தாமதமான, ஆனால் மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    கவிதை வலிக்கிறது; நீங்கள் சொன்ன செய்தி அதிர்ச்சி அளிக்கிறது :(

    பதிலளிநீக்கு
  83. http://pudugaithendral.blogspot.com/2009/07/blog-post_3116.html

    virudhu kathirukunga

    பதிலளிநீக்கு
  84. இனிய சிநேககிதமே...

    என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

    http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

    ஏற்றுக்கொள் தோழமையே...

    நன்றிகளுடன்
    கதிர்

    பதிலளிநீக்கு
  85. goma said...

    //ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் தங்கள் லேண்ட்மார்க் ஆல்பத்துக்கு.
    ஜூன் போனா ஜூலைக் காற்றே...//

    ’ஆகாகா இருக்கவே இருக்கிறது ஆகஸ்ட் காற்றே..’ என இம்மாதம் பதிவிடாமல் நேரடியாகப் படத்தை பிட்டில் சமர்ப்பித்து விடலாமென்றிருந்தேன்:)! தங்கள் பின்னூட்டம் கண்டே பின்னரே இருதினம் முன்னர் ரெடியானது லேண்ட்மார்க் ஆல்பம்! விரைவில் பதிவிடுகிறேன். மிக்க நன்றி கோமா!

    பதிலளிநீக்கு
  86. கடையம் ஆனந்த் said...

    //ரொம்ப ரொம்ப லேட்டுன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் அக்கா.//

    லேட் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை ஆனந்த்:)! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  87. கவிநயா said...
    //தாமதமான, ஆனால் மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி கவிநயா!

    //கவிதை வலிக்கிறது; நீங்கள் சொன்ன செய்தி அதிர்ச்சி அளிக்கிறது :(//

    எனக்கும் அதிர்ச்சிதான். சிலகாலம் முன்வரை இவ்வழக்கம் ஓரிரு இடங்களில் அபூர்வமாக நடக்கிறது என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அப்படியில்லை:(!

    பதிலளிநீக்கு
  88. @ கதிர்,

    தாங்கள் அன்போடு அளித்திருக்கும் 'சுவாரஸ்ய வலைப்பதிவு’ விருதுக்கு மிகவும் நன்றி கதிர்!

    பதிலளிநீக்கு
  89. @ புதுகைத் தென்றல்,

    காத்திருந்த நட்பு விருதைப் பெற்றுக் கொண்டேன் தென்றல். மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  90. வணக்கம் தோழி..!
    convent பெண்கள் தமிழ் பேசுவதே ஆச்சர்யம்..!
    கவிதை படிப்பது இதுவரை நான் கேள்விபட்டதே இல்லை..!
    கவிதை எழுதுவது அதுவும் இதனை அழகாக, பிரபலமாக..!
    தமிழை இன்னும் conventஇல் வாழ வைதமிக்கு மிக்க நன்றி..!
    இத்தனை நாள் வீணை போயிற்று, உங்கள் கவிதையினை பாராமல்..!

    பதிலளிநீக்கு
  91. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச்க்தி த வேல். தொடர்ந்து வாருங்கள்:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin