Wednesday, June 10, 2009

முதுமை [June 09-PiT]

'முதுமை'யைப் பிரதிபலிக்கும் எந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம் படங்கள் என்கிறது இம்மாதப் PiT போட்டி அறிவிப்பு. அவரவருக்குப் பிடித்ததை சொல்லிச் சொல்லுங்கள், கடைசியில் எதை நான் போட்டிக்குக் கொடுத்தாலும்...:)!
வடித்தவர் மறைந்தாலும்
மறையாத வடிவழகு!முதுமையால் பழமையானாலும்
பழமைக்கு சேருகிறது பெருமை!

சிற்பக்கலைக்கு சிகரமாய்த் திகழும்
மாமல்லபுரக் கோபுரம்
பலநூற்றாண்டைக் கடந்து கம்பீரமாய் நிற்கின்றப்
புராதனச் சின்னம்சிற்பங்கள் பேசுதடி...
சிதிலமடைந்தாலும்
தாய்மையின் சிறப்பினைச்
சிந்திக்க வைக்குதடி!
எல்லோருக்கும் ஒளிதர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல
எல்லோரும் ஏறிச் சென்றிட தன்னைத் தேய்த்துக் கொண்ட படிக்கட்டு!


தடுப்புக்கு அந்தப்பக்கம்
தள்ளாத முதியவர் தனக்கென கேட்டிட எதுவுமின்றி-
எல்லோரையும் வாழவைத்த பின்னும் எவர்நலனோ வேண்டி-
ஏறிப்போய்க் கொண்டிருக்கிறார் கோமதீஸ்வரரருள் நாடி!

***

88 comments:

 1. சிகரமாய்
  சின்னமாய் நிற்கும்
  கோபுரம்
  கோட்டையைப் பிடிக்க வாழ்த்துகள்

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 2. மனிதன் என்பவன் உருகியோடும் மெழுகு போன்று ஒளியை வீசலாம் னு கண்ணதாசன் எழுதிய ஒரு பழைய திரைப்படப்பாடல் உண்டுங்க.

  படிக்கட்டை நான் அதுபோல் யோசித்தது இல்லை. எனக்குப் படிக்கட்டுவின் அழிக்கப்பட்ட முதுமைதான் மிக்க அர்த்தமுள்ளதாக இருக்கு-கருத்தாழம் மிக்க இருப்பதால்.
  ஆனால் பி ஐ டி ல எதிர்பார்ப்பது நிச்சயம் பேறயா இருக்கலாம்.

  மற்ற "பெரியவர்கள்" என்ன சொல்றாங்கனு பார்த்து முடிவு செய்யுங்கள்.

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 3. முதுமையை ஒரு புதுமையான கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பது அருமை
  சகாதேவன்

  ReplyDelete
 4. எனக்கு ரொம்ப படம் -யானை

  யானை மீது ஒரு அலாதி பிரியம் இது போன்ற சிலைகளிலும் மரச்சிலைகளிலும் பார்க்கும்போது! - வீட்ல நிறைய குட்டி குட்டி யானைகள் இருக்கு மரச்சிலைகளாய் வரவேற்பறையில் .... :))

  வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 5. வித்தியாசமான சிந்தனை நல்லாருக்கு. கோபுரமும், ஆனையும் பிடிச்சிருக்கு :) வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. கோபுரமும், யானையும் நல்லா இருக்கு..
  ஆனால் வெளிச்சம் எல்லாம் சரியாக அழகாக இருக்கிறது கோபுரம்.

  ReplyDelete
 7. முதல் படம் அருமை. நல்ல லைட்டிங்க்.

  படிக்கட்டின் முதுமை விவரித்தது அருமை !!!

  ReplyDelete
 8. ஆகா வித்யாசமான சிந்தனை! நந்தீஷ்வரர் சூப்பர்! கோபுரமும் அருமை!

  ReplyDelete
 9. எனக்கு எதிலும் முதுமை தெரியவில்லை! எல்லா படங்களிலும்
  இளமையான உங்கள் படம்பிடிக்கும் திறமைதான் தெரிகிறது!

  ;;))

  ReplyDelete
 10. //எல்லோருக்கும் ஒளிதர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல
  எல்லோரும் ஏறிச் சென்றிட தன்னைத் தேய்த்துக் கொண்ட படிக்கட்டு!//

  :-)

  ராமலக்ஷ்மி நல்லா எழுதி இருக்கீங்க அனைத்து கமெண்ட் ம் .படங்களும் நேர்த்தியாக உள்ளது.

  ReplyDelete
 11. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  நந்தி படங்கள் அருமை.

  படிக்கட்டுக்களுக்கான விளக்கம் அருமை.

  ReplyDelete
 12. ராமலக்ஷ்மி,எல்லாப் படங்களும் நல்லா இருக்கு. ஆனாப் படிப்படம் தான் மனசுக்குப் பிடித்தது. என்னிக்கும் எல்லோரையும் ஏத்திவீட்டுக் கிட்டே இருக்கிறது இல்லையா. வாழ்த்துகள் மா.

  ReplyDelete
 13. // ஜீவன் said...
  எனக்கு எதிலும் முதுமை தெரியவில்லை! எல்லா படங்களிலும்
  இளமையான உங்கள் படம்பிடிக்கும் திறமைதான் தெரிகிறது!//

  உண்மை.எல்லோரும் மிகைப்
  -படுத்துகிறார்கள்.அடுத்து நீங்கள் “முதுமை” என்று சொன்னதால் அதை மனதிற்க்குள் ஏற்றிக்கொண்டுப் படங்களைப் பார்க்கிறார்கள்.

  எனக்குப் பிடித்தது:
  படிகள்.அதில் ஒரு உயிர் துடிப்பு இருக்கிறது.நீண்ட ரயில் பிரயாணம் முடிந்து எல்லோர் உடம்பு முகத்தில் ஒரு வித அழுக்கு தெரியும்.அது மாதிரி...

  உற்றுப் பார்த்தால் ரயில் தண்டவாள ஸ்லீப்பர் கட்டைத் தோற்றம் தரும்.


  அதே மாதிரி கோபுரமும் அழுக்கு வடிதலில் ஒரு புராதானம் தெரிகிறது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. முதுமைக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த பிம்பங்களுக்காகவே உங்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டு..

  ReplyDelete
 15. வாழ்த்துகள் ராமல்ஷ்மி!அருமையா இருக்குங்க..சிற்பங்களை தேர்ந்தெடுத்தது கலக்கல் ஐடியா! :-)

  ReplyDelete
 16. முதுமைக்கான படங்கள் இளமை மிடுக்கோடு இருக்கின்றனவே.. :)
  கோபுரம் படம் நல்லா எடுத்து இருக்கீங்க,...
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. தங்களின் மாறுபட்ட சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 18. முதுமையிலும் மிளிர்கிறது....சிற்பங்கள்....

  ReplyDelete
 19. போட்டி தலைப்புக்கும் 3வது படத்துக்கும் தொடர்பு இருக்கான்னு சரியா தெரியலை.. ஆனா இதான் செம கலக்கல்.. :)

  ReplyDelete
 20. கவிநயமிக்க படங்கள். வாழ்த்துக்கள் :-))

  ReplyDelete
 21. பிகாசாவுல பாக்கரப்ப நெனச்சேன் இந்த எழுத்து நம்மக்கு பழக்கமான எழுத்தா தெரியுதே ஒருவேல உங்களுதா இருக்குமோன்னு நெனச்சேன். சரிதான்.
  எல்லாப்படங்களும் அருமைகா.அதுலையும் கோயி கோபுரம் ரொம்ப அழகா வந்திருக்குங்க.
  வெற்றிபெற வாழ்துக்கள்.

  ReplyDelete
 22. படிக்கட்டின் தேய்மானம் நன்கு விளக்குகிறது முதுமையை. அற்புதம்!
  இதே படிக்கட்டில் ஏறி வெற்றியை அடைய வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 23. 3 வது படம் என் சாய்ஸ்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. எல்லா படங்களும் மனதைக் கவர்கின்றன. முதுமையை ஆங்கிலத்தில் கேலி செய்ய 'ancient fellow' என்று கூறக் கேட்டிருக்கிறேன். மற்றபடி புராதானமும் முதுமையும் ஒன்றா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பார்வை நிச்சயம் வித்தியாசமானதுதான்.

  போட்டிக்கு என்னைக் கேட்டால் 'படிகள்' புகைப்படம் மிகச் சிறந்தது என்பேன். மற்றபடி ......மீதி புகைப்படங்கள் அனைத்தும் நர்சிம் சொல்வது போல் 'வழக் கலக்'.
  அதிலும் ஒரு படத்தில் கோபுரம், உச்சியில் ஒரு புறா? மேலே வட்டமிடும் பறவை. நீல வானம். ஒரு கவிதை இருக்கு அதில்.

  All the best.

  அனுஜன்யா

  ReplyDelete
 25. திகழ்மிளிர் said...

  //சிகரமாய்
  சின்னமாய் நிற்கும்
  கோபுரம்
  கோட்டையைப் பிடிக்க வாழ்த்துகள்

  அன்புடன்
  திகழ்//

  அன்பான முதல் வாழ்த்துக்கு நன்றி திகழ்மிளிர்.

  கோட்டை மேலெல்லாம் ஆசை இல்லைன்னு சொன்னாலும் நம்பவா போகிறீர்கள்:)? [யப்பா, போன பிட் பதிவில் நீங்கள் பிடித்த பிடி இன்னும் மறக்கவில்லை:)), அதற்காகவாவது எப்போதேனும் ஒருமுறையாவது கோட்டை மேலே கொடி பறக்க வேணும்!!]

  ReplyDelete
 26. சகாதேவன் said...

  //முதுமையை ஒரு புதுமையான கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பது அருமை//

  உங்களிடமிருந்து இப்படி ஒரு பாராட்டைப் பெறுவது எனக்குப் பெருமை.

  ReplyDelete
 27. ஆயில்யன் said...

  // யானை மீது ஒரு அலாதி பிரியம் இது போன்ற சிலைகளிலும் மரச்சிலைகளிலும் பார்க்கும்போது! - வீட்ல நிறைய குட்டி குட்டி யானைகள் இருக்கு மரச்சிலைகளாய் வரவேற்பறையில் .... :))//

  ஆனையை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்பது சந்தேகமே:)! உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆயில்யன்!

  ReplyDelete
 28. கவிநயா said...

  //வித்தியாசமான சிந்தனை நல்லாருக்கு. கோபுரமும், ஆனையும் பிடிச்சிருக்கு :) வெற்றி பெற வாழ்த்துகள்.//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி கவிநயா. உங்கள் கருத்தும் கவனத்தில்:)!

  ReplyDelete
 29. Poornima Saravana kumar said...

  //கோபுரமும், யானையும் நல்லா இருக்கு..//

  கவிநயாவுக்கு பிடித்த அதே படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கிறது.

  //ஆனால் வெளிச்சம் எல்லாம் சரியாக அழகாக இருக்கிறது கோபுரம்.//

  ஆமாம் பூர்ணிமா, அதற்காகவே அந்தப் படத்தைப் பதிவில் சேர்த்தேன், இப்போ வரை பளிச் என இருக்கும் அது, முதுமைக்கு பொருந்துமா எனும் கேள்வி எழுகிறது என் மனதிலும்!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 30. சதங்கா (Sathanga) said...

  //முதல் படம் அருமை. நல்ல லைட்டிங்க்.//

  ஆகா உள்மனதில் என் சாய்ஸ் முதல் படமே. அதை நீங்கள் ஒருவராவது வழிமொழிந்ததில் மகிழ்ச்சி:)!

  //படிக்கட்டின் முதுமை விவரித்தது அருமை !!!//

  படமாகவும் படிக்கட்டு பலர் கருத்தில் முந்திக் கொண்டிருக்கிறது.

  நன்றி சதங்கா!

  ReplyDelete
 31. அபி அப்பா said...

  //ஆகா வித்யாசமான சிந்தனை! நந்தீஷ்வரர் சூப்பர்! கோபுரமும் அருமை!//

  பிரமாண்டமான நந்தீஷ்வரர், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகு. கால் நகங்கள் வரை அத்தனை நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு.

  பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி அபி அப்பா!

  ReplyDelete
 32. படிக்கட்டை விவரித்த அழகும்...படிக்கட்டின் தற்போதைய நிலையையும் அழகாக படம் பிடித்து இருக்கும் விதம் கவிதை.


  யாதார்த்தமான படங்களுக்கு மெருகு ஊட்டுகிறது உங்கள் விளக்கம்.


  வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
 33. வருண் said...

  //மனிதன் என்பவன் உருகியோடும் மெழுகு போன்று ஒளியை வீசலாம் னு கண்ணதாசன் எழுதிய ஒரு பழைய திரைப்படப்பாடல் உண்டுங்க.//

  ஆமாங்க கேட்டிருக்கிறேன். படத்தில் தெரியும் அந்த தள்ளாத முதியவர் கூட அப்படித்தான் என எனக்குத் தோன்றியது.

  //படிக்கட்டை நான் அதுபோல் யோசித்தது இல்லை. எனக்குப் படிக்கட்டுவின் அழிக்கப்பட்ட முதுமைதான் மிக்க அர்த்தமுள்ளதாக இருக்கு-கருத்தாழம் மிக்க இருப்பதால்.//

  உங்கள் கருத்தைக் கவனத்தில் கொண்டேன்:)!

  //ஆனால் பி ஐ டி ல எதிர்பார்ப்பது நிச்சயம் வேறயா இருக்கலாம்.//

  இல்லீங்க, படிக்கட்டெல்லாம் கொடுக்கலாம் என்கிற உதாரணமும் சொல்லியிருக்காங்க.

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வருண்!

  ReplyDelete
 34. ஜீவன் said...

  //எனக்கு எதிலும் முதுமை தெரியவில்லை! எல்லா படங்களிலும்
  இளமையான உங்கள் படம்பிடிக்கும் திறமைதான் தெரிகிறது!

  ;;))//

  உங்க ஸ்மைலியைப் பார்த்தால் சீரியஸாச் சொல்றீங்களான்னு ஒரு சந்தேகம் வருகிறதே:))! சரி எப்படி சொன்னால் என்ன அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் பாராட்டை:)! நன்றி!

  ReplyDelete
 35. கிரி said...

  //ராமலக்ஷ்மி நல்லா எழுதி இருக்கீங்க அனைத்து கமெண்ட் ம் .படங்களும் நேர்த்தியாக உள்ளது.//

  பாராட்டுக்கு நன்றி கிரி:)!

  ReplyDelete
 36. இராகவன் நைஜிரியா said...

  //நந்தி படங்கள் அருமை.//

  முதல் படத்தை மட்டும்தான் கொடுப்பதாய் இருந்தேன். சரி இருக்கட்டுமென இரண்டாவதையும் வைத்தேன் பார்வைக்கு. பாராட்டுக்கு நன்றி இராகவன்.

  // படிக்கட்டுக்களுக்கான விளக்கம் அருமை.//

  பலருக்கும் பிடித்து விட்டது விளக்கம். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 37. வல்லிசிம்ஹன் said...

  // ராமலக்ஷ்மி,எல்லாப் படங்களும் நல்லா இருக்கு. ஆனாப் படிப்படம் தான் மனசுக்குப் பிடித்தது. என்னிக்கும் எல்லோரையும் ஏத்திவீட்டுக் கிட்டே இருக்கிறது இல்லையா.//

  சரியாகச் சொன்னீர்கள் வல்லிம்மா. வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 38. கே.ரவிஷங்கர் said...

  //நீங்கள் “முதுமை” என்று சொன்னதால் அதை மனதிற்க்குள் ஏற்றிக்கொண்டுப் படங்களைப் பார்க்கிறார்கள்.//

  இருக்கலாம்:)! ஆனால் காலப் போக்கில் முதுமை எதற்கும் வரலாம்தானே? உயிரற்ற பொருட்களையும் அந்தக் கோணத்தில் பார்க்கச் சொல்கிறது போட்டி அறிவிப்பு.

  //எனக்குப் பிடித்தது:
  படிகள்.அதில் ஒரு உயிர் துடிப்பு இருக்கிறது.நீண்ட ரயில் பிரயாணம் முடிந்து எல்லோர் உடம்பு முகத்தில் ஒரு வித அழுக்கு தெரியும்.அது மாதிரி...//

  அருமையான உதாரணம்.

  //உற்றுப் பார்த்தால் ரயில் தண்டவாள ஸ்லீப்பர் கட்டைத் தோற்றம் தரும்.//

  சொன்ன பிறகு தெரிகிறது.

  //அதே மாதிரி கோபுரமும் அழுக்கு வடிதலில் ஒரு புராதானம் தெரிகிறது.

  வாழ்த்துக்கள்.//

  தங்கள் அக்கறையான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரவிஷங்கர்.

  ReplyDelete
 39. கையேடு said...

  //முதுமைக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த பிம்பங்களுக்காகவே உங்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டு..//

  இதுதான் எனக்கான சிறப்புப் பரிசு. [திகழ்மிளிர், கேட்டுக் கொள்ளுங்கள்!]

  வருகைக்கு நன்றி கையேடு!

  ReplyDelete
 40. சந்தனமுல்லை said...

  //வாழ்த்துகள் ராமல்ஷ்மி!அருமையா இருக்குங்க..சிற்பங்களை தேர்ந்தெடுத்தது கலக்கல் ஐடியா! :-)//

  ரொம்ப நன்றி முல்லை:)!

  ReplyDelete
 41. யக்கோவ்வ்வ்... அசத்திப்புட்டீக...

  ReplyDelete
 42. தமிழ் பிரியன் said...

  //முதுமைக்கான படங்கள் இளமை மிடுக்கோடு இருக்கின்றனவே.. :)//

  கிண்டல்...:)?

  // கோபுரம் படம் நல்லா எடுத்து இருக்கீங்க,...
  வாழ்த்துக்கள்!//

  உங்க சாய்ஸ் கோபுரமா? நன்றி தமிழ் பிரியன், வாழ்த்துக்களுக்கும்.

  ReplyDelete
 43. மணிநரேன் said...

  //தங்களின் மாறுபட்ட சிந்தனைக்கு பாராட்டுக்கள்.//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மணிநரேன்.

  ReplyDelete
 44. அன்புடன் அருணா said...

  //முதுமையிலும் மிளிர்கிறது....சிற்பங்கள்...//

  அழகான கருத்துக்கு நன்றி அருணா.

  ReplyDelete
 45. $anjaiGandh! said...

  //போட்டி தலைப்புக்கும் 3வது படத்துக்கும் தொடர்பு இருக்கான்னு சரியா தெரியலை..//

  ***"படத்த பாத்ததும் முதுமை தெரியணும். அலசி ஆராஞ்சு பிரிச்சு மேஞ்சாதான் முதுமை தெரியுங்கர மாதிரி நுண்ணரசியல் எல்லாம் வச்சு, வயசான காலத்துல சுத்த விட்றாதீங்கப்பு :)"***

  இப்படி ஏற்கனவே அறிவித்திருக்கிறார் இம்மாதப் போட்டியின் நாட்டாமை. பாவமில்லையா, அவரது முதுமையை கருத்தில் கொண்டு இந்தப் படத்தை அனுப்பி அவரை ’கிர்’னு சுற்ற விடணுமா என்றுதான் நானும் யோசிக்கிறேன்:)!

  //ஆனா இதான் செம கலக்கல்.. :)//

  ஹி, இந்தப் பாராட்டைப் பெறத்தான் பார்வைக்கு வைத்தேன்:)! நன்றி சஞ்சய்!

  ReplyDelete
 46. " உழவன் " " Uzhavan " said...

  //கவிநயமிக்க படங்கள். வாழ்த்துக்கள் :-))//

  கவித்துவமான வாழ்த்துக்களுக்கு நன்றி உழவன்!

  ReplyDelete
 47. கார்த்திக் said...

  //பிகாசாவுல பாக்கரப்ப நெனச்சேன் இந்த எழுத்து நம்மக்கு பழக்கமான எழுத்தா தெரியுதே ஒருவேல உங்களுதா இருக்குமோன்னு நெனச்சேன். சரிதான்.//

  “அவனா.. நீயீ..” வடிவேலு பார்த்திபனைக் கேட்பது நினைவுக்கு வருகிறது:))!

  //எல்லாப்படங்களும் அருமைகா.அதுலையும் கோயி கோபுரம் ரொம்ப அழகா வந்திருக்குங்க.
  வெற்றிபெற வாழ்துக்கள்.//

  கோபுரம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும் நன்றி கார்த்திக்:)!

  ReplyDelete
 48. நானானி said...

  //படிக்கட்டின் தேய்மானம் நன்கு விளக்குகிறது முதுமையை. அற்புதம்!//

  நன்றி நானானி!

  //இதே படிக்கட்டில் ஏறி வெற்றியை அடைய வாழ்த்துக்கள்!!!//

  இதோ ஏற ஆரம்பிக்கிறேன் இப்போதே:)!

  ReplyDelete
 49. நாகை சிவா said...

  //3 வது படம் என் சாய்ஸ்

  வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சிவா!

  ReplyDelete
 50. //எல்லா படங்களும் மனதைக் கவர்கின்றன.//

  நன்றி:)!

  //மற்றபடி புராதானமும் முதுமையும் ஒன்றா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பார்வை நிச்சயம் வித்தியாசமானதுதான்.//

  அந்த வித்தியாசமான பார்வைக்கு வித்திட்ட்டது போட்டி அறிவிப்பில் காணப்பட்ட பின்வரும் விளக்கம்தான்:
  ***"உயிருள்ளது எல்லாத்துக்கும் முதுமை வரும்.
  உயிரில்லாத கட்டடங்கள், கார், பஸ்ஸுக்கும் முதுமை வரும்."***

  //போட்டிக்கு என்னைக் கேட்டால் 'படிகள்' புகைப்படம் மிகச் சிறந்தது என்பேன்.//

  பலரின் வோட்டு அதற்குத்தான்:)!

  //அதிலும் ஒரு படத்தில் கோபுரம், உச்சியில் ஒரு புறா? மேலே வட்டமிடும் பறவை. நீல வானம். ஒரு கவிதை இருக்கு அதில்.//

  உச்சியில் இருப்பது, அந்த உச்சிக்காக சுற்றி வருவது இரண்டுமே காகம்தான். மாற்றி மாற்றி அதில் அமர போராடிக் கொண்டிருந்தன [நமது ஊர் அரசியல்வாதிகள் போல]. அதைப் படம் பிடிக்க இயலாதபடி அத்தனை கூட்டம் அன்று.

  விரிவான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனுஜன்யா.

  ReplyDelete
 51. கடையம் ஆனந்த் said...

  //படிக்கட்டை விவரித்த அழகும்...படிக்கட்டின் தற்போதைய நிலையையும் அழகாக படம் பிடித்து இருக்கும் விதம் கவிதை.//

  நன்றி ஆனந்த்.

  //யாதார்த்தமான படங்களுக்கு மெருகு ஊட்டுகிறது உங்கள் விளக்கம்.//

  நீங்கள் ரசிப்பீர்கள் எனத் தெரியும். வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 52. தமயந்தி said...

  //யக்கோவ்வ்வ்... அசத்திப்புட்டீக...//

  இதாரு..? அட வாங்க, தமயந்தி:)! முதல் வருகைக்கும் உற்சாகமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 53. அடடா அத்தனையும் கண்ணுக்குள் நிறம்பி நிற்கின்றன.
  ஆனால்
  போட்டித் தலைப்பு ‘பழமை ‘என்றிருந்தால் பொறுத்தமானதாக இருந்திருக்கும் .இருந்தாலும் வித்தியாசமான கண்ணோட்டத்துக்கு வாழ்த்துக்கள்.
  என் சாய்ஸ்-முதல்படம்

  ReplyDelete
 54. கடற்கரைக்கோயில் மிக அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.!

  ReplyDelete
 55. மூணாவது படம் எனக்கு பிடிச்சி இருக்கு

  ReplyDelete
 56. எனக்கு எதிலும் முதுமை தெரியவில்லை! எல்லா படங்களிலும்
  இளமையான உங்கள் படம்பிடிக்கும் திறமைதான் தெரிகிறது!//

  சரியாகச் சொன்னீர்கள் கே.ரவிஷங்கர்

  ReplyDelete
 57. பிட் போட்டி என்று அறிவித்த உடன் அனைவரையும்,முத்துச்சரம் ஆல்பம் வெளியாவதை ஆவலுடன் எதிர் பார்க்க வைக்கிறது

  ReplyDelete
 58. goma said...

  //அடடா அத்தனையும் கண்ணுக்குள் நிறம்பி நிற்கின்றன. ஆனால் போட்டித் தலைப்பு ‘பழமை ‘என்றிருந்தால் பொறுத்தமானதாக இருந்திருக்கும் //

  போட்டி அறிவிப்பை வாசித்துப் பாருங்களேன். பழைமையும் இங்கே பொருந்தும் என ஒத்துக் கொள்வீர்கள்!

  //இருந்தாலும் வித்தியாசமான கண்ணோட்டத்துக்கு வாழ்த்துக்கள். என் சாய்ஸ்-முதல்படம்//

  நன்றி கோமா. சதங்காவும் அதையே குறிப்பிட்டிருக்கிறார்.

  //பிட் போட்டி என்று அறிவித்த உடன் அனைவரையும்,முத்துச்சரம் ஆல்பம் வெளியாவதை ஆவலுடன் எதிர் பார்க்க வைக்கிறது//

  கேட்க நன்றாக இருந்தாலும் எல்லா ஆல்பமும் அப்படி அமையுமா என்கிற கவலையுமல்லவா தொற்றிக் கொள்கிறது? ஹிஹி பொறுப்பு வேறு கூடிக் கொண்டே போகிறதே:)!

  ReplyDelete
 59. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //கடற்கரைக்கோயில் மிக அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.!//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தாமிரா!

  ReplyDelete
 60. நசரேயன் said...

  //மூணாவது படம் எனக்கு பிடிச்சி இருக்கு//

  பலருக்கும். நன்றி நசரேயன்!

  ReplyDelete
 61. வாசித்தேன் ராமலஷ்மி.

  ”....மரங்களுக்கும் வயதாகும்.
  உயிருள்ளது எல்லாத்துக்கும் முதுமை வரும்.
  உயிரில்லாத கட்டடங்கள், கார், பஸ்ஸுக்கும் முதுமை வரும்.”

  வாழ்த்துக்கள்.
  அந்த கோணத்தில் பார்த்தால் படிகள் பொறுத்தமானதாக இருக்கிறது.

  தேய்மானம் முதுமைக்கு இலக்கணம் .

  மற்ற படங்களில் அவை தெளிவாக இல்லை .என்ன நான் சொல்றது.

  ReplyDelete
 62. @ கோமா,

  வாசித்து வந்து வாழ்த்துக்களுடன் கூறிய கருத்துக்கு நன்றி.

  //என்ன நான் சொல்றது.//

  பதிலுக்கு சொல்ல என்ன இருக்கிறது? செய்யத்தான் ஒரு வேலை கொடுத்து விட்டீர்கள்! வேறென்ன, விறுவிறுவென அந்தப் படியிலேயே ஏறிச் சென்று போட்டிக்கு அதை சமர்ப்பிப்பதுதான்:)!

  ReplyDelete
 63. படங்களும் உங்கள் குறிப்புகளும் அபாரம். யானையும் கோபுரமும் எனக்கு நன்றாகப் பிடித்தன.

  ReplyDelete
 64. @ மாதேவி,

  உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 65. அன்பின் ராமலக்ஷ்மி,

  படங்கள் அழகு. அதிலும் இரண்டாவது படம் எனக்கு மிக அழகாகத் தோன்றுகிறது.

  இறுதிப்படம் படிகளும் முதுமையாய், நகரும் மாந்தரும் முதுமையாய்...அட்டகாசம் !

  //சிற்பக்கலைக்கு சிகரமாய்த் திகழும்
  மாமல்லபுரக் கோபுரம்
  பலநூற்றாண்டைக் கடந்து கம்பீரமாய் நிற்கின்றப்
  புராதானச் சின்னம்//

  சிறியதொரு எழுத்துப்பிழை. புராதனம் என மாற்றிவிடுங்கள்.

  வாழ்த்துக்கள் சகோதரி !

  ReplyDelete
 66. @ ரிஷான்,
  //அதிலும் இரண்டாவது படம் எனக்கு மிக அழகாகத் தோன்றுகிறது.//

  பிக்காஸாவில் இந்தப் படத்தைப் பார்த்து கார்த்திக், ‘மனிதர்களுக்கு மட்டும்தான் வரும் போலிருக்கிறது முதுமை, இது என்றும் பதினாறு மார்க்கண்டேயன் மாதிரியல்லவா மிரட்டுகிறது’ எனக் கருத்திட்டிருந்தார்:)!

  //இறுதிப்படம் படிகளும் முதுமையாய், நகரும் மாந்தரும் முதுமையாய்...அட்டகாசம் !//

  இப்படம்தான் இப்போது போட்டிக்குச் சென்றிருக்கிறது.

  பாராட்டுக்கும், வாழ்த்துக்கும், திருத்தத்துக்கும் [சரி செய்து விட்டேன் பாருங்கள்:)] நன்றி ரிஷான்.

  ReplyDelete
 67. படங்களை விவரித்த விதம் அற்புதம்

  ReplyDelete
 68. கோடானு கோடி பக்தர்கள் நந்தியின் மூக்கினைத் தொட்டு வணங்கியதில் மூக்கு மட்டும் முதுமை வாராமல் இளமையாகவே இருக்கிறது அந்த,அழகே ராமலஷ்மியின் ஆல்பம் பார்த்து எல்லோரும் மூகின் மேல் விரல் வைப்பது போல் அமைந்திருக்கிறது .வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 69. பிரியமுடன்.........வசந்த் said...

  //படங்களை விவரித்த விதம் அற்புதம்//

  பாராட்டுக்கும் உங்கள் முதல் வருகைக்கும் நன்றி வசந்த்!

  ReplyDelete
 70. goma said...

  //கோடானு கோடி பக்தர்கள் நந்தியின் மூக்கினைத் தொட்டு வணங்கியதில் மூக்கு மட்டும் முதுமை வாராமல் இளமையாகவே இருக்கிறது //

  அந்த மூக்கு மட்டும் எப்படி இத்தனை வழவழப்பாய் என்பது ஆச்சரியம்தான். நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். அத்தனை படங்களையும் தனித்தனியே பாராட்டியிருப்பதிலேயே தெரிகிறது இந்த ஆல்பம் உங்களை மிகவும் கவர்ந்து விட்டிருப்பது. மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 71. நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். ...
  இருக்கலாம் இல்லை, அதுதான் உண்மை.உங்கள் உயரம் கொஞ்சம் கம்மியோ அதான் நீங்கள் தொட்டதில்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 72. /
  எல்லோருக்கும் ஒளிதர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல
  எல்லோரும் ஏறிச் சென்றிட தன்னைத் தேய்த்துக் கொண்ட படிக்கட்டு!/


  அழகா சொல்லி இருக்கீங்க!

  ReplyDelete
 73. படங்கள் எல்லாம் அருமை. என்னதான் படங்களை எடுத்தாலும் இந்த மாதிரி புராதான கட்டிடங்களை படம் எடுக்கும்போது ஒரு விதமான சிலிர்ப்பு வரும். இந்த படத்தை பார்த்தபொழுதும் வந்தது. மிக நீ...ண்ட வருடங்கள் கழித்து அவ்வளவாக நினைவிலும் இல்லாத ஒரு காட்சி மனத்திரையில் ஓடியது.(உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும்). மறுபடியும் படிக்கு வருவோம், பக்தர்களின் பாதம் பட்டு தேய்ந்த படிகள் வரி அருமை. போட்டிக்கு படத்தின் தொழில்நுட்பம் மற்றும் படத்தின் கவரும் தன்மை இவையெல்லம் தேவைப்படும் ஆனால் படம் எடுக்கும் பொழுது நமக்கு என்ன பிடிக்கிறதோ அதைத்தான் எடுப்போம். நான் இப்படங்களை அப்படித்தான் பார்க்கிறேன்( இப்பதிவில் மட்டும்)ஆகையால் இப்படங்கள் எல்லாம் ஒரு வித செய்தியை சொல்கிறது. நம் முன்னோர்கள் விட்டுச்சென்றதை காக்க வேண்டியது நம் கடமை (கட்டத்தான் முடியல ஒழுங்காவாவது வச்சுக்கலாம், ஆனா நிறைய கோயில்கள் மடிந்துகொண்டிருப்பது தான் உண்மை. ஆத்திகம் என்ற பெயரில் நமக்கு நாமே வச்சுக்கிற ஆப்பு. புரியாமல் போனாலே வேதாந்தம்... பாட்டு நினைவிற்கு வருகிறது)

  வாசி

  ReplyDelete
 74. கலக்கிட்டிங்க ;)

  ReplyDelete
 75. @ கோமா,

  தொட இயலாத உயரத்தில் இல்லைங்க நந்தியின் மூக்கு:)! ஆனால் நான் முயற்சிக்கவில்லைதான்.

  இந்த நந்தீஸ்வரர் கர்நாடகாவிலுள்ள பிரசித்தி பெற்ற பெல்லூர் கோவிலில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

  ReplyDelete
 76. நிஜமா நல்லவன் said...

  ***/எல்லோருக்கும் ஒளிதர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல
  எல்லோரும் ஏறிச் சென்றிட தன்னைத் தேய்த்துக் கொண்ட படிக்கட்டு!/

  அழகா சொல்லி இருக்கீங்க!***

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜமா நல்லவன்.

  ReplyDelete
 77. வாசி said...
  //படங்கள் எல்லாம் அருமை.//

  நன்றி வாசி. வலைப்பூவுக்கு தந்த முதல் வருகைக்கும்.

  //என்னதான் படங்களை எடுத்தாலும் இந்த மாதிரி புராதான கட்டிடங்களை படம் எடுக்கும்போது ஒரு விதமான சிலிர்ப்பு வரும்.//

  உண்மை. கூடவே சில இடங்களில் அவை சிதிலமடைந்து இருப்பதைக் காண நேருகையில் வருகிறது வருத்தமும்.

  //இப்படங்கள் எல்லாம் ஒரு வித செய்தியை சொல்கிறது. நம் முன்னோர்கள் விட்டுச்சென்றதை காக்க வேண்டியது நம் கடமை (கட்டத்தான் முடியல ஒழுங்காவாவது வச்சுக்கலாம், //

  சரியாகச் சொன்னீர்கள் வாசி. தங்கள் நீண்ட கருத்துக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 78. எம்.எம்.அப்துல்லா said...

  // அழகு :)//

  நன்றி அப்துல்லா:)!

  ReplyDelete
 79. கோபிநாத் said...

  //கலக்கிட்டிங்க ;)//

  நன்றி கோபிநாத்.

  ReplyDelete
 80. ekambavanan said...

  // ubayogamana blog //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Vaanan!

  ReplyDelete
 81. பாறையில் செதுக்கப்பட்ட யானை, மயில் , குரங்கு சூப்பர்.....

  ReplyDelete
 82. @ லவ்டேல் மேடி,

  ரசிப்புக்கு நன்றி மேடி!

  ReplyDelete
 83. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  படங்களும், எழுதியதும் அருமை.....

  கோட்டை மீது உங்கள் கொடி பறக்க வாழ்த்துக்கள். நிச்சயம் பறக்கும்......

  ReplyDelete
 84. @ R.Gopi,

  கொடி பறக்கிறதோ இல்லையோ கவலைப்படாமல் முடிந்தவரை தொடர்ந்து வரும் போட்டிகளிலும் என் பங்களிப்பு இருக்கும்:)! தங்கள் பாராட்டுக்கும் நம்பிக்கையூட்டும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோபி!

  ReplyDelete
 85. அழகுக் கவி வரிகள்...

  ReplyDelete
 86. @ பாசமலர்,

  பாராட்டுக்கு நன்றி பாசமலர்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin