Friday, May 15, 2009

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே-[May 09-PiT]

அழகிய அணிலார்
போகிறார் போட்டிக்கு!"நீங்கல்லாம் பிஸ்ஸா பர்கர்னு மாறியாச்சு.
நாங்க மட்டும் எத்தனை காலம்தான் இலந்தைப் பழத்தையும்
கொய்யாப் பழத்தையும் கொறிக்கறதாம்..?"


நீந்தி வரும் ஆமை:

"என்னண்ணே கையில மையக் காணோம். போடலயா ஓட்டு?"

நொந்து நிற்கும் ஆமை:

"அட போப்பா ! நீ வேற, வாக்காளர் பட்டியலில் என் பேரே இல்லை:( !"


உணவு நேரத்தில் உண்ணுகின்ற
உணவின்மேல் கண்ணும் கருத்தும்.
எண்ணுவோம் நம்மில் எத்தனை பேருக்கு
கையில் தட்டும் டிவிமேல் கண்களும்..?கோடை வெயில் கொளுத்த
குளுமைக்கு ஓடையில் தாக சாந்தி!


69 comments:

 1. ஆஹா... அழகு... அழகு....

  ReplyDelete
 2. போட்டோக்களைப் போல உங்கள் கமெண்ட்டும் பிரமாதம்.
  ஆமை டயலாக் ரொம்ப அருமை.
  சகாதேவன்

  ReplyDelete
 3. படங்களும் குறிப்பும் சூப்பர்.. வாழ்த்துக்கள். ஆனால் அணில் ஜூம் பண்ணியது அதன் உண்மை அழகைக் குறைத்து விட்டது.

  ReplyDelete
 4. மனிதர்கள் போலல்லாமல் விலங்குகள் எப்போதுமே அகத்தில் உள்ள உணர்வுகளை முகத்தில் காட்டுபவைகள்! :-)

  அணிலார் மட்டும் தனியா போறாரா? இல்லைனா, மற்றவர்களையும் தன்னோடு அழைத்துச் செல்கிறாரா? :-)

  அணிலார் வெற்றிவாகை சூடி வர வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 5. அத்தனைப் படங்களும் அழகு அள்ளுதுங்க.

  ReplyDelete
 6. /// நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே //


  ம்ம்...ம்ம்... !! உங்குளுக்கு மட்டும் எப்புடித்தான் இப்புடியெல்லாம் தலைப்பு கெடைக்குதின்னு தெரியல....!!! நானும் ஒரு பதிவு போட்டா நல்ல தலைப்புக்கு நாலு நாள் தாளவாடியில ரூம் போட்டு யோசிக்க வேண்டியதா இருக்கு....!!!!!  தலைப்பு ரொம்ப சூப்பருங்கோ ammuni...!!!!!
  // "நீங்கல்லாம் பிஸ்ஸா பர்கர்னு மாறியாச்சு.
  நாங்க மட்டும் எத்தனை காலம்தான் இலந்தைப் பழத்தையும்
  கொய்யாப் பழத்தையும் கொறிக்கறதாம்..?" //  அட நீங்க வேற ...!!!! இப்புடி சத்தான இயற்க்கை உணவுகள சாப்பிடுதான் Mr. அணில் சார் நெம்ப ஹெல்த்தியா இருக்குறாரு .....

  பீட்சா , பர்கர் ன்னு சாப்புட்டு.... சாப்புட்டு நம்ம ஆளுங்க காண்டா மிருகத்தையே பயமுறுத்துறாங்க.......
  //நீந்தி வரும் ஆமை:

  "என்னண்ணே கையில மையக் காணோம். போடலயா ஓட்டு?"

  நொந்து நிற்கும் ஆமை:

  "அட போப்பா ! நீ வேற, வாக்காளர் பட்டியலில் என் பேரே இல்லை:( !" //  அம்முனி....!!!! பாவங்கோ அம்முனி...!!! நம்பதேன் அரசியல் வியாதிங்ககிட்ட சிக்கி சீரழியுறோம் .....!! இவிகலாச்சும் நிம்மதியா இருக்குட்டுமே......!!!!!

  // உணவு நேரத்தில் உண்ணுகின்ற
  உணவின்மேல் கண்ணும் கருத்தும்.
  எண்ணுவோம் நம்மில் எத்தனை பேருக்கு
  கையில் தட்டும் டிவிமேல் கண்களும்..? //  நெம்ப கரக்ட்.....!!!

  // கோடை வெயில் கொளுத்த
  குளுமைக்கு ஓடையில் தாக சாந்தி! //


  ஜாலி ப்ரீ பேர்ட்............
  எல்லா படமும் நெம்ப சூப்பர்.....!!! அதுக்கு டையலாக் நெம்ப நெம்ப சூப்பர்.......!!!!!


  வாழ்த்துக்களுங்கோவ் ....!!!!!  இன்னுமும் ரம்யா அம்முநிங் ரெண்டு பதிவுக்கு பின்னூட்டம் போடவேனுங் ........!!  போயிட்டு வாரனுங் அம்முநிங்கோவ்.....!!!!!

  ReplyDelete
 7. என்னா போட்டோ!!! என்னா போட்டோ!!!

  எல்லாமே நீங்க எடுத்ததா?????????????????

  ReplyDelete
 8. நல்ல வேலை! ஆமையின் ஓட்டை நாங்க தான் போட்டுட்டோம்ன்னு சொல்லாம விட்டீங்களே பிரண்ட்!

  எல்லா படமும் அருமை. கமெண்ட்ஸ்ல குசும்பனையே மிஞ்சிட்டீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. ஆமை போட்டோ & டயலாக் சூப்பரு :))

  ReplyDelete
 10. நல்ல படங்கள் மற்று கமெண்டுகள். அணிலார் வெற்றிவாகை சூடி வர வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 11. ராமலக்ஷ்மி படங்களும் கருத்துக்களும் அருமை

  நீங்கள் படம் எடுப்பதில் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்பது உண்மை..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அருமை அருமை .. படங்களும் அந்த கமெண்ட்களும். ஆமை சும்மா சொல்லக்கூடாது டைமிங்.. இப்ப வல்லி டெல்பின் உள்பட பலரால் ஓட்டுபோடமுடியாத கதை கேட்டொமில்ல..:)

  ReplyDelete
 13. அழகு...அழகு...அழகு...

  ReplyDelete
 14. த.ஜீவராஜ் said...

  //ஆஹா... அழகு... அழகு....//

  முதல் வருகைக்கும் தங்கள் ரசனைக்கும் நன்றி ஜீவராஜ்.

  ReplyDelete
 15. ஒன்னாப்புல சொல்லிக் குடுத்த "அணிலே அணிலே பழம் போடு" பாட்டு ஞாபகம் வந்திருச்சு :)

  ReplyDelete
 16. சகாதேவன் said...

  //போட்டோக்களைப் போல உங்கள் கமெண்ட்டும் பிரமாதம்.//

  மிக்க நன்றி.

  //ஆமை டயலாக் ரொம்ப அருமை.//

  அமைந்து விட்டது பொருத்தமாக! கவர்ந்தும் விட்டது பலர் மனதை:)!

  ReplyDelete
 17. " உழவன் " " Uzhavan " said...

  //very nice pics!!!!!!!!!//

  Thank you Uzhavan.

  ReplyDelete
 18. தமிழ் பிரியன் said...

  //படங்களும் குறிப்பும் சூப்பர்.. வாழ்த்துக்கள்.//

  நன்றி:)!

  //ஆனால் அணில் ஜூம் பண்ணியது அதன் உண்மை அழகைக் குறைத்து விட்டது.//

  அப்படியா தோன்றுகிறது? இருக்கலாம். ’தூரத்தில் இருந்து பார்க்கையில்தான் எதுவும் அழகு’ என ஒரு தத்துவத்தையும் உணர்த்துகிறது உங்கள் கருத்து:)

  ReplyDelete
 19. வருண் said...

  //மனிதர்கள் போலல்லாமல் விலங்குகள் எப்போதுமே அகத்தில் உள்ள உணர்வுகளை முகத்தில் காட்டுபவைகள்! :-)//

  ஆமாம் அவற்றின் கண்களே பேசுமே!

  //அணிலார் மட்டும் தனியா போறாரா? இல்லைனா, மற்றவர்களையும் தன்னோடு அழைத்துச் செல்கிறாரா? :-)//

  தனியாகத்தான் போகணும். கூட்டமாகப் போனால் PiT-ன் gate திறக்காது:))!

  //அணிலார் வெற்றிவாகை சூடி வர வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி!//

  நன்றி வருண்!

  ReplyDelete
 20. ஆ.முத்துராமலிங்கம் said...

  //அத்தனைப் படங்களும் அழகு அள்ளுதுங்க.//

  தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி முத்துராமலிங்கம்.

  ReplyDelete
 21. லவ்டேல் மேடி said...

  //நானும் ஒரு பதிவு போட்டா நல்ல தலைப்புக்கு நாலு நாள் தாளவாடியில ரூம் போட்டு யோசிக்க வேண்டியதா இருக்கு....!!!!!

  தலைப்பு ரொம்ப சூப்பருங்கோ ammuni...!!!!!..//

  நன்றி:)!

  //அட நீங்க வேற ...!!!! இப்புடி சத்தான இயற்க்கை உணவுகள சாப்பிடுதான் Mr. அணில் சார் நெம்ப ஹெல்த்தியா இருக்குறாரு .....//

  உண்மைதான். எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம்.

  //பீட்சா , பர்கர் ன்னு சாப்புட்டு.... சாப்புட்டு நம்ம ஆளுங்க காண்டா மிருகத்தையே பயமுறுத்துறாங்க.......//
  //நம்பதேன் அரசியல் வியாதிங்ககிட்ட சிக்கி சீரழியுறோம் .....!! இவிகலாச்சும் நிம்மதியா இருக்குட்டுமே......!!!!!//

  :)))!

  விரிவான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மேடி.

  ReplyDelete
 22. அற்புதம் ராம்லக்ஷ்மி.
  எப்படித்தான் இப்படி உயிரூட்டமா படம் பிடிக்கிறீங்களோ.
  ஆமை ரொம்ப சூப்பர்.
  அணிலக்கா அழகியா உட்கார்ந்திருக்காங்க. வாழ்த்துகள் பா வெற்றிக்கு

  ReplyDelete
 23. கமெண்ட்ஸ் சூப்பர்

  ReplyDelete
 24. thevanmayam said...

  //என்னா போட்டோ!!! என்னா போட்டோ!!! எல்லாமே நீங்க எடுத்ததா?????????????????//

  என்னா தேவன? இப்படிக் கேட்டு விட்டீர்கள் அதுவும் இத்தனைக் கேள்விக்குறிகளுடன்?

  எல்லாமே நானே எடுத்தவைதான்:)!

  போட்டி விதிப்படி கலந்து கொள்பவை நாமே எடுத்ததாக இருக்க வேண்டும்.

  நான் காட்சிக்கு வைப்பவையும் நானே எடுத்தவற்றைத்தான் எப்போதுமே!

  நேரம் கிடைத்தால் label-ல் வகைப்படுத்தி வைத்திருக்கும் மற்ற எனது ஃபோட்டோ பதிவுகளையும் பாருங்கள்:)!!

  ReplyDelete
 25. அபி அப்பா said...

  //நல்ல வேளை! ஆமையின் ஓட்டை நாங்க தான் போட்டுட்டோம்ன்னு சொல்லாம விட்டீங்களே பிரண்ட்!//

  :))!

  //எல்லா படமும் அருமை. கமெண்ட்ஸ்ல குசும்பனையே மிஞ்சிட்டீங்க! வாழ்த்துக்கள்!//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அபி அப்பா:)!

  ReplyDelete
 26. ஆயில்யன் said...

  //ஆமை போட்டோ & டயலாக் சூப்பரு :))//

  ஆமையாரின் அலுப்பு அத்தனை பேரையும் கவர்ந்தபடி..! நன்றி ஆயில்யன்:)!

  ReplyDelete
 27. சதங்கா (Sathanga) said...

  //நல்ல படங்கள் மற்று கமெண்டுகள். அணிலார் வெற்றிவாகை சூடி வர வாழ்த்துக்கள் !!!//

  நன்றி சதங்கா!

  ReplyDelete
 28. கிரி said...

  //ராமலக்ஷ்மி படங்களும் கருத்துக்களும் அருமை

  நீங்கள் படம் எடுப்பதில் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்பது உண்மை..வாழ்த்துக்கள்//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கிரி.

  ReplyDelete
 29. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //அருமை அருமை .. படங்களும் அந்த கமெண்ட்களும். //

  நன்றி முத்துலெட்சுமி.

  //ஆமை சும்மா சொல்லக்கூடாது டைமிங்.. இப்ப வல்லி டெல்பின் உள்பட பலரால் ஓட்டுபோடமுடியாத கதை கேட்டொமில்ல..:)//

  அதேதான் அதேதான் இந்த கமெண்டுக்கான இன்ஸ்பிரேஷன்:)!

  ReplyDelete
 30. அமுதா said...

  //அழகு...அழகு...அழகு...//

  நன்றி அமுதா:)!

  ReplyDelete
 31. எம்.எம்.அப்துல்லா said...

  //ஒன்னாப்புல சொல்லிக் குடுத்த "அணிலே அணிலே பழம் போடு" பாட்டு ஞாபகம் வந்திருச்சு :)//

  ”கொய்யாமரம் ஏறி வா..குண்டுப் பழம் கொண்டு வா” எனும் பாடல்தானே. இனி காலத்துக்கு ஏற்ப மாற்றித்தான் பாடணும் போலிருக்கிறது:)!

  ReplyDelete
 32. வல்லிசிம்ஹன் said...

  //அற்புதம் ராம்லக்ஷ்மி.
  எப்படித்தான் இப்படி உயிரூட்டமா படம் பிடிக்கிறீங்களோ.
  ஆமை ரொம்ப சூப்பர்.
  அணிலக்கா அழகியா உட்கார்ந்திருக்காங்க. வாழ்த்துகள் பா வெற்றிக்கு//

  பாராட்டுக்கு நன்றி வல்லிம்மா. நீங்க இத்தனை பேர் ரசிப்பதுதான் வெற்றி. [ஹி.. படம் 'பிட்'டில எந்த வரிசையில் வரும் என தெரிந்தாலும், எல்லாம் ஒரு சந்தோஷமான பங்களிப்புதான்:)! ]

  ReplyDelete
 33. விஷ்ணு said...

  //கமெண்ட்ஸ் சூப்பர்//

  அப்போ படங்கள்:)? முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்ணு.

  ReplyDelete
 34. எல்லா படங்களுமே அழகு! தலைப்பும் மிக மிகப் பொருத்தம்! :-)

  ReplyDelete
 35. படங்களும் அதற்கேற்றார் போன்ற கமெண்ட்களும் அருமை

  ReplyDelete
 36. அழகான பதிவுப்பா!!
  அன்புடன் அருணா

  ReplyDelete
 37. சந்தனமுல்லை said...

  //எல்லா படங்களுமே அழகு! தலைப்பும் மிக மிகப் பொருத்தம்! :-)//

  நன்றி முல்லை, படங்களோடு தலைப்பையும் ரசித்ததற்கு:)!

  ReplyDelete
 38. அமிர்தவர்ஷினி அம்மா said...

  //படங்களும் அதற்கேற்றார் போன்ற கமெண்ட்களும் அருமை//

  நன்றி அமித்து அம்மா.

  ReplyDelete
 39. அன்புடன் அருணா said...

  //அழகான பதிவுப்பா!!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 40. நீங்கள் எல்லாருமே வெற்றிப் பெற்று கொண்டு இருந்தால்
  நாங்கள் மட்டும் எத்தனை காலம்தான் சும்மா பார்த்திட்டு இருப்போம்
  .......................

  வெற்றியாளர் பட்டியலில் என் பேரே இல்லை

  ...........................

  வெற்றியின் மேல் என் கண்கள்

  '''''''''''''''''''''''''''''''

  வெற்றி ஒன்றே என் தாக சாந்தி

  --------------------------

  என்று தான் தாங்கள் இட்டுள்ள அத்தனை படங்களும் சொல்லுகின்றன.

  வாழ்த்துகள்

  தவறாக எண்ண வேண்டாம்

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 41. @ திகழ்மிளிர்,

  ஆகா, வல்லிம்மாவுக்கான என் பதிலை ‘கப்’பெனப் பிடித்துக் கொண்டு “வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர் நீச்சல்”ன்னு கமெண்டுகளை படங்களுக்கு ஏற்றவாறு அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள்:)))!

  தவறாக எண்ணவில்லை:))! எல்லா முயற்சிகளுமே வெற்றியை நோக்கித்தானே. ரெண்டே ரெண்டு முறை முதல் பத்துக்குள் வந்திருக்கிறேன்:)!

  ‘பிட்’ போட்டிகளைப் பொறுத்தவரை வல்லுநர்களோடு நம்மால் மோத முடியாதெனினும் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது என்பதை தொடர்ந்து பங்கேற்கும் யாராலும் மறுக்க முடியாது.

  தமிழ் மண விருது 2008-ல் என் புகைப்பட பதிவு முந்தும் என ஆருடம் சொன்னவர் நீங்கள். அதன்படியே நாலாவது இடத்தை நான் பெற்றதை மறந்திடாதீங்க:))!

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திகழ்மிளிர்!

  ReplyDelete
 42. ஆமைதாங்க டாப்! (என்னமா போஸ் குடுக்குது)

  எங்க எடுத்தீங்க...?

  கலக்கலா இருக்கு!

  ReplyDelete
 43. சுரேகா.. said...

  //ஆமைதாங்க டாப்! (என்னமா போஸ் குடுக்குது)//

  :)!

  //எங்க எடுத்தீங்க...?

  கலக்கலா இருக்கு!//

  சென்னை மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள முதலைப் பண்ணையில் எடுத்த படம்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேகா.

  ReplyDelete
 44. எல்லா படங்களும் அருமையா இருக்கு. ஆமை படமும், கமெணட்டும் டச்சி்ங்கா இருந்தது.

  ReplyDelete
 45. @ குடந்தைஅன்புமணி,

  பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி அன்புமணி!

  ReplyDelete
 46. படங்கள் அனைத்தும் சூப்பரு ;)

  உங்கள் வரிகளும் சூப்பராக இருக்கு.

  ReplyDelete
 47. கோபிநாத் said...

  //படங்கள் அனைத்தும் சூப்பரு ;)

  உங்கள் வரிகளும் சூப்பராக இருக்கு.//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபிநாத்:)!

  ReplyDelete
 48. படங்கள் அத்தனையும் அசத்தல் ஷாட்ஸ்
  அணிலை விட இரண்டு மாடுகள் என் அழகான கோணத்தில்,அற்புதமாய் எடுத்திருக்கிறீர்கள்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 49. வாத்துகளில் மூன்றாவது வாத்தும் முழுசாய் உள்ளே இருந்திருந்தால் பரிசு பெற்ற வாழ்த்துக்கள் அத்தனையும் உங்களுக்கே
  [பின்குறிப்பு:கவனிக்க..இருந்திருந்தால் என்றுதான் சொல்கிறேன்...எடுத்திருந்தால் என்று சொல்லவில்லை..பறப்பது நடப்பது நீந்துவதெல்லாம் நம் பெட்டிக்குள் அடைப்பது அத்தனை சுலபமில்லை]

  ReplyDelete
 50. goma said...

  //படங்கள் அத்தனையும் அசத்தல் ஷாட்ஸ்//

  நன்றி:)!

  //அணிலை விட இரண்டு மாடுகள் என் அழகான கோணத்தில்,அற்புதமாய் எடுத்திருக்கிறீர்கள்//

  கருமமே கண்ணாக அவை புல் மேயும் அழகே அழகு. அதை காட்சிக்கு வைக்க சந்தர்ப்பமும் வாய்த்தது. அதைக் கவனித்து நீங்கள் ஸ்பெஷலாக பாராட்டியிருப்பதற்கும் நன்றி.

  //பறப்பது நடப்பது நீந்துவதெல்லாம் நம் பெட்டிக்குள் அடைப்பது அத்தனை சுலபமில்லை//

  ஆமாங்க:)! ‘இப்படித் திரும்பு அப்படி நில்லு’ன்னுல்லாம் சொல்ல முடியாதே:))!

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 51. படங்கள் எல்லாம் அருமையாவந்திருக்குக்கா

  // "அட போப்பா ! நீ வேற, வாக்காளர் பட்டியலில் என் பேரே இல்லை:( !" //

  ரசிக்கும்படியான வரிகள்கா :-))

  ReplyDelete
 52. கார்த்திக் said...

  // படங்கள் எல்லாம் அருமையாவந்திருக்குக்கா //

  உங்கள் கருத்துக்காகத்தான் காத்திருந்தேன்:)!

  \\ // "அட போப்பா ! நீ வேற, வாக்காளர் பட்டியலில் என் பேரே இல்லை:( !" //

  ரசிக்கும்படியான வரிகள்கா :-))\\

  எல்லோருக்கும் பிடித்துப் போன வரிகள்:)! நன்றி கார்த்திக்.

  ReplyDelete
 53. படங்களும் அழகு, அதற்கு உங்கள் வர்ணனையும் அழகோ அழகு!!

  ReplyDelete
 54. RAMYA said...

  //படங்களும் அழகு, அதற்கு உங்கள் வர்ணனையும் அழகோ அழகு!!//

  நன்றி ரம்யா:)!

  ReplyDelete
 55. படங்களும், அதை விட உங்க குறிப்புகளும் வெகு அருமை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 56. @ கவிநயா,
  ரசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கவிநயா!

  ReplyDelete
 57. கமெண்ட் பின்னிட்டீங்க. இண்டெர்னல் கமெண்ட்டை சொன்னேன்.

  எக்ஸ்டர்னல் கமெண்ட் - அந்த ஜீவன்களையும் பிட்சா,பர்கர் சாப்பிடச் சொல்லிட்டீங்களா? சூ ப் ப ர்.

  ReplyDelete
 58. தமிழ்நெஞ்சம் said...

  //கமெண்ட் பின்னிட்டீங்க. இண்டெர்னல் கமெண்ட்டை சொன்னேன்.//

  நன்றி தமிழ்நெஞ்சம்:)!

  //அந்த ஜீவன்களையும் பிட்சா,பர்கர் சாப்பிடச் சொல்லிட்டீங்களா? சூ ப் ப ர்.//

  பின்னே, வாயில்லா ஜீவன் என பேச முடியாததால் சொல்லுகிறோம். ஆனால் ருசியை நாடும் வாயுள்ள ஜீவன்கள்தானே அவையும்:)?

  ReplyDelete
 59. அணில விட ஆமையார் அழகா இருக்காரே...

  ஆமையை அனுப்ப வேண்டாமுன்னு பார்த்தீயளோ?

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 60. மனக்குதிரை said...

  //அணில விட ஆமையார் அழகா இருக்காரே...//

  ஆமாம், ஆமையார் பலரையும் கவர்ந்துவிட்டிருக்கிறார்:)!

  //ஆமையை அனுப்ப வேண்டாமுன்னு பார்த்தீயளோ?//

  அந்த மாதிரியான செண்டிமெண்ட் எல்லாம் கிடையாதுங்க:)!

  //வாழ்த்துக்கள்!//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 61. முயலை முந்தியவர் இங்கேயும் முதலே இருக்கிறhர்.

  ReplyDelete
 62. கடையம் ஆனந்த் said...

  //முயலை முந்தியவர் இங்கேயும் முதலே இருக்கிறார்.//

  என்ன அழகாய் சொல்லி விட்டீர்கள்:), நன்றி ஆனந்த்.

  ReplyDelete
 63. படங்கள் எல்லாமே அருமை..

  என்னாச்சிக்கா.. வாரம் ஒரு பதிவு கொள்கைல இருந்து விலகிட்டிங்க போல. ;(

  ReplyDelete
 64. $anjaiGandh! said...

  //படங்கள் எல்லாமே அருமை..//

  நன்றி சஞ்சய்.

  //என்னாச்சிக்கா.. வாரம் ஒரு பதிவு கொள்கைல இருந்து விலகிட்டிங்க போல. ;(//

  அதுதான் போன பதிவிலே ‘இனி எப்படியோ தெரியவில்லை’ என ஜாக்கிரதையாக முன்னறிவிப்பு விட்டிருந்தேனே கவனிக்கவில்லையா:)?

  சரி உங்களின் இந்தக் கேள்விக்காகவே இதோ இன்றே பதிவிடுகிறேன் உரையாடல் போட்டிக்கான சிறுகதையை:)!

  ReplyDelete
 65. Very nice photos, I like the ducks best shaking their feathers dry.

  ReplyDelete
 66. Glennis said...

  //Very nice photos, I like the ducks best shaking their feathers dry.//

  Thanks a lot Glennis!

  ReplyDelete
 67. ஆமை ப்டம் அருமை. அதனினும் அருமை அதற்கான கமெண்ட்.
  வோட்டு போட்ட ஆமை, இரண்டாம் முறை வோட்டு போட மையை அழித்துக்கொண்டிருக்குதோ ன்னு நான் நினைச்சேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin