Tuesday, April 14, 2009

நீயெனது இன்னுயிர்க் கண்ணம்மா! [ஏப்ரல் PiT-n உணர்வுகள்]

Photography in Tamil நடத்தும் இம்மாத போட்டிக்கான தலைப்பு: உணர்வுகள்.

கைவசம் இருந்தது படம் ஒன்று. அதிலே காணக்கிடைத்ததோ நவரசம் இரண்டு.

முகமெல்லாம் சிரிப்பாகத் தந்தை. செல்ல மகளோ சிணுங்குகிறாள்:“ஏம்ப்பா, எங்கேயாச்சும் இடிச்சுக்கப் போறேனோன்னு, முடி வளரும் வரை இப்படித் தூக்கியேதான் வச்சிருப்பேன்னா எப்படி? புலவெளிதானே இது? இறக்கி விடுப்பா. ம்..ம்ம்!

"உறவுகள் தொடர்கதை...உணர்வுகள் சிறுகதை..." என்பார். எனக்கோ அது கவிதை. இதோ...

நீயெனது இன்னுயிர்க் கண்ணம்மா!

டுக்களையில் குவளைதேடி
விளிம்புவரை நீரூற்றி-ஒரு
துளியும் தளும்பாமல்
விழிப்பார்வை சிதறாமல்-
அன்னநடை பயின்றந்த
அம்பாளே வந்தாற்போல்-உன்
சின்னஞ்சிறு கால்கள்
பின்னப் பின்ன
அப்பன் எனக்கன்புடனே
தாகத்துக்குத் தண்ணீர்
கொண்டு தரும் அக்கறையில்-
கொண்டவன் வந்ததும்
குடும்பம் பெருகியதும்
கொஞ்சம் கொஞ்சமாய்க்
கூடப் பிறந்தவனை
நினைக்கின்ற நேரங்களைக்
குற்ற உணர்வுடனே
குறைத்து வரும் என்
குட்டித் தங்கையைப்
பார்க்கின்றேன் கண்ணம்மா!


ஏக்கத்தைப் போக்கிக்
கொள்கின்றேன் செல்லம்மா!

***
லுவல் முடிந்து
அலுப்புடன் நுழைந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அவிழ்த்தெறியும் காலுறைகள்
உன்கண்ணில் பட்டாலே
மிடுக்குடன் இடுப்பினிலே
இருகைகளும் வைத்துநின்று-
மிரட்டுகின்ற தொனியினிலே
‘இப்படியா போடுவது
களைந்ததை அப்படியே’
விரட்டுகின்ற உன் தோரணையில்-
நான் பிறந்ததும்
தானேயொரு தாயானாற்போல்
பூரித்துப் புளங்காகித்துத்
தொட்டில் ஆட்டி
இடுப்பில் சுமந்து
இட்டுக்கட்டி எத்தனையோ
கதைகள் சொல்லிக்
கனிவுடனே கவனித்தாலும்
பிழைசெய்து வரும்வேளை
பின்முதுகில் பூசைவைத்து
எதுசரியெனப் புரியவைத்து
அன்றுமுதல் இன்றுவரை
மழையென ஆலோசனை பொழியும்
மகராசி பெரியக்கா பேச்சினையே
கேட்கின்றேன் கண்ணம்மா!


உன்வாய்வழி உதிரும்
வார்த்தையாவும் பொன்அம்மா!

***
லைவலியால் கண்மூடித்
தவித்தபடி நானிருக்க
தாவியெந்தன் மடியேறித்
தாடையைப் பிடித்துக் கெஞ்சி
விளையாடக் கூப்பிடும் நீ
தைல வாசம் உணர்ந்ததும்
துடிதுடித்து உள்ளோடி
உன்னைவிட ஓரிரு பங்கு
உயரமான தலையணையைத்
தள்ளாடி இழுத்து வந்து
தலையிடுக்கில் செருகிவிட்டு
‘தூங்கப்பா கண்மூடி’யென
நெற்றி வருடிச் சொல்லுகையில்-
ஆயிரம் மைலுக்கப்பாலும்
அன்றாடம் என் நலனுக்காக
ஆண்டவனை மன்றாடி வருமென்
அன்னையின் அன்பினை
உணர்கின்றேன் கண்ணம்மா!


அவள்மடியாய் நினைத்து-உன்
மடியில் சாய்கின்றேன் சின்னம்மா!

***
கனென்றால் வரவு
மகளென்றால் செலவு என
இன்றைக்கும் எண்ணுகின்ற
மடையருக்கு இது புரியுமா?
என்றைக்கும் என் தோள்களுக்கு
நீ பாரமில்லை கண்ணம்மா!


உன்நெஞ்சினிலே எனைத்தாங்கும்நீ
நம்குடும்பத்துக் குல தெய்வமம்மா!
*** *** ***

* இக்கவிதை “சின்னஞ்சிறு கிளியே!” என்ற தலைப்பில் 1 ஆகஸ்டு 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும்:

86 comments:

 1. படம் பார்க்க வந்தால் இடம் காலியா இருக்குது.முதல்ல துண்டு போட்டுக்கிறேன்!

  ReplyDelete
 2. ஓ!அப்ரூவலுக்கு போயிடுச்சா?

  ReplyDelete
 3. ராஜ நடராஜன் said...

  // படம் பார்க்க வந்தால் இடம் காலியா இருக்குது.முதல்ல துண்டு போட்டுக்கிறேன்!//

  இப்பதானங்க தியேட்டர் கதவைத் திறந்திருக்கிறேன்:)!

  ReplyDelete
 4. ராஜ நடராஜன் said...

  //ஓ!அப்ரூவலுக்கு போயிடுச்சா?//

  அந்தக் கவலை உங்களுக்கேன்:)? எல்லாம் ஆச்சு. படத்தைப் பாருங்க. கமெண்டைப் படிங்க. ஹிஹி பொறுமை இருந்தா கவிதையையும்.
  அப்புறமா கருத்தை சொல்லுங்க.

  ReplyDelete
 5. செல்ல மகள் சிணுங்குகிறாளா ? இல்லை ஒரு தர்ம சங்கடத்தில்
  நெளிகிறாளா !
  அவள் மனதில் என்ன என்ன எண்ணங்கள் ஓடுகின்றன ?
  பயமா ? திகிலா ?
  ஒன்றுமே இல்லை.
  அவளுக்கு பாத் ரூம் வந்து விட்டது.
  அவ்வளவே !

  அந்த எண்ணங்களுக்குக் கவிதை வடிவு கொடுத்தால்,

  " அப்பா ! நீ என் செல்ல அப்பா !
  அர்ஜன்டா போணுமப்பா !!
  இறக்கி விடப்பா ! இல்லேன்னா
  இங்கேயே போயுடும்பா !! "


  சுப்பு தாத்தா.

  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 6. அருமையான கவிதை...படத்துக்கு ரொம்பவே பொருத்தம் வரிகள் ,நான் புரிந்தும் புரியாமலும் சின்னதா ஒரு கவிதை இப்போ எழுதினேன் ,வந்து பார்த்துட்டு சொல்லுங்க மேடம்.

  ReplyDelete
 7. Blogger sury said...

  //செல்ல மகள் சிணுங்குகிறாளா ? இல்லை ஒரு தர்ம சங்கடத்தில் நெளிகிறாளா !//

  என்னங்க அப்பாவுக்கு இப்படிப் பயம் காட்டுறீங்களே? சரி நீங்க தாத்தா. ஆகையால் அப்பா என்னை மன்னிப்பார்:)!

  ReplyDelete
 8. மிஸஸ்.தேவ் said...

  //அருமையான கவிதை...படத்துக்கு ரொம்பவே பொருத்தம் வரிகள்//

  நன்றி மிஸஸ். வாசுதேவன். இப்படத்தையே ஒரு அருமையான கவிதைக் கணமாகப் பார்க்கிறேன் நான்.

  ReplyDelete
 9. //அலுவல் முடிந்து
  அலுப்புடன் நுழைந்து
  அங்கொன்றும் இங்கொன்றுமாய்
  அவிழ்த்தெரியும் காலுறைகள்//

  ஹா ஹா ஹா

  ராமலக்ஷ்மி அலுவலகத்தில் இருந்து வந்து இதை செய்து விட்டு சிறிது நேரம் முன்பு தான் உட்கார்ந்தேன் படிக்க :-)))

  //தலைவலியால் கண்மூடித்
  தவித்தபடி நானிருக்க
  தாவியெந்தன் மடியேறித்
  தாடையைப் பிடித்துக் கெஞ்சி
  விளையாடக் கூப்பிடும் நீ//

  என் பையனுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என்று நினைக்கிறேன் :-)

  ReplyDelete
 10. படம் மிக மிக இயல்பு + அருமை :)

  \\கூடப் பிறந்தவனை
  நினைக்கின்ற நேரங்களைக்
  குற்ற உணர்வுடனே
  குறைத்து வரும் என்
  குட்டித் தங்கையைப்
  பார்க்கின்றேன் கண்ணம்மா!\\

  \\கனிவுடனே கவனித்தாலும்
  பிழைசெய்து வரும்வேளை
  பின்முதுகில் பூசைவைத்து
  எதுசரியெனப் புரியவைத்து
  அன்றுமுதல் இன்றுவரை
  மழையென ஆலோசனை பொழியும்
  மகராசி பெரியக்கா பேச்சினையே
  கேட்கின்றேன் கண்ணம்மா!\\

  \\தைல வாசம் உணர்ந்ததும்
  துடிதுடித்து உள்ளோடி
  உன்னைவிட ஓரிரு பங்கு
  உயரமான தலையணையைத்
  தள்ளாடி இழுத்து வந்து
  தலையிடுக்கில் செருகிவிட்டு
  ‘தூங்கப்பா கண்மூடி’யென
  நெற்றி வருடிச் சொல்லுகையில்-
  ஆயிரம் மைலுக்கப்பாலும்
  அன்றாடம் என் நலனுக்காக
  ஆண்டவனை மன்றாடி வருமென்
  அன்னையின் அன்பினை
  உணர்கின்றேன் கண்ணம்மா!\\

  ஒவ்வொரு வார்த்தையும் படமா விருயுது கண்களில் மிக மிக அருமை :))

  ReplyDelete
 11. பெண் குழந்தைகளின் அன்பே நிரந்தரம் என்று அழகாக உணர்த்தியது கவிதை!!

  ReplyDelete
 12. ஹை...ஜெயஸ்ரீ....செல்லம்....கலக்கலா இருக்காங்க!

  ReplyDelete
 13. ஒரு குட்டிப் பொண்ணுக்கு இத்தனை அவதாரமா. ராமலக்ஷ்மி மனதெங்கும் நிறைத்து விட்டீர்கள் உங்கள் கவிதை வரிகளை.
  அருமை அருமை.

  ReplyDelete
 14. ஆகா படமே கவிதை! உங்க கவிதையே ஒரு நல்ல விஷூவல்!

  ReplyDelete
 15. ஹைய்ய்ய்ய் ஜெய்ஸ்ரீம்மா சூப்பரேய்ய்ய் :))

  ReplyDelete
 16. தாடி வைச்ச டாடியும் சூப்பராத்தான் இருக்காரு :)
  .
  (ஹப்பாட்டா இப்பத்தான் மனசு குளிரும்!)

  ReplyDelete
 17. //தலைவலியால் கண்மூடித்
  தவித்தபடி நானிருக்க
  தாவியெந்தன் மடியேறித்
  தாடையைப் பிடித்துக் கெஞ்சி
  விளையாடக் கூப்பிடும் நீ
  தைல வாசம் உணர்ந்ததும்
  துடிதுடித்து உள்ளோடி
  உன்னைவிட ஓரிரு பங்கு
  உயரமான தலையணையைத்
  தள்ளாடி இழுத்து வந்து
  தலையிடுக்கில் செருகிவிட்டு
  ‘தூங்கப்பா கண்மூடி’யென
  நெற்றி வருடிச் சொல்லுகையில்-
  ஆயிரம் மைலுக்கப்பாலும்
  அன்றாடம் என் நலனுக்காக
  ஆண்டவனை மன்றாடி வருமென்
  அன்னையின் அன்பினை
  உணர்கின்றேன் கண்ணம்மா!
  ///

  கவி வரிகளில் அன்பு வழிய படித்து மகிழ்கிறேன்.

  அவள்தம் அன்னையும் தந்தையும் பார்த்து மகிழ்கிறார்கள் !

  நிகழ்வினை கண்ட அக்(கா) கண்கள் நிம்மதியாய் ஒரு கவி பாடி மகிழ்கிறது!

  ReplyDelete
 18. தங்கை, அக்கா, அம்மா. நல்லா இருக்கு. நானே சொல்ல நினைத்தது போல. புகைப்படம் அழகு.

  அனுஜன்யா

  ReplyDelete
 19. படம் நல்லா வந்திருக்கு! குட்டிப்பாப்பா செம க்யூட்! உங்க கவிதை பத்தி தனியா சொல்லனுமா என்ன..

  //மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு என
  இன்றைக்கும் எண்ணுகின்ற
  மடையருக்கு இது புரியுமா?
  என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா!
  //

  கலக்கல்! :-)

  ReplyDelete
 20. அழகான கண்ணம்மாக் கவிதை..

  ReplyDelete
 21. நல்ல உணர்வுமிக்கக் கவிதை...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 22. கண்ணம்மா எனக்கு மிக பிரியமானவரே! கவிதையும், கேமரா கவிஞரும் சூப்பர்.. ;-)

  ReplyDelete
 23. அழகான வரிகள்.. அழகான புகைப்படம்.. வழக்கம்போல கலக்கிட்டீங்க..

  ReplyDelete
 24. ஆயில்யன் said...
  \
  ஹைய்ய்ய்ய் ஜெய்ஸ்ரீம்மா சூப்பரேய்ய்ய் :))
  \

  ரிப்பீட்டு..:)

  ReplyDelete
 25. படமும் கவிதையும் மிக அழகு சகோதரி !

  ReplyDelete
 26. // என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா!//

  சுகமானா சுமைனுகூட இப்போவெல்லாம் சொல்லமுடியாது :-))
  ஆனா அக்கா இவர் நவரசங்களையும் வெளிப்படுத்திருக்குரத பாத்தத்தான் மைல்டா ஒரு டவுட்டு வருது.
  ஜெய் குட்டி இருப்பதாலையே இது ரொம்ப அழகானா படம்.

  புத்தாண்டு நல்வாழ்துக்கள்.

  ReplyDelete
 27. ***"உறவுகள் தொடர்கதை...உணர்வுகள் சிறுகதை..." என்பார். எனக்கோ அது கவிதை. இதோ...***

  உண்மைதான், உங்க உணர்வுகள் கவிதையாகத்தான் வெளி வருகிறது:-)

  ***மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு என
  இன்றைக்கும் எண்ணுகின்ற
  மடையருக்கு இது புரியுமா?***

  புரியாதுதான்! ஆனால் இதை வாசித்தால் உங்கள் மேல் கோபம் மட்டும் வரும் :-)))

  ReplyDelete
 28. கிரி said...

  \\//அலுவல் முடிந்து
  அலுப்புடன் நுழைந்து
  அங்கொன்றும் இங்கொன்றுமாய்
  அவிழ்த்தெரியும் காலுறைகள்//

  //ஹா ஹா ஹா

  ராமலக்ஷ்மி அலுவலகத்தில் இருந்து வந்து இதை செய்து விட்டு சிறிது நேரம் முன்பு தான் உட்கார்ந்தேன் படிக்க :-))) \\//


  ஹிஹி..இதைச் செய்யாதவர்களே இருக்க முடியாதுதானே:))!


  \\//தலைவலியால் கண்மூடித்
  தவித்தபடி நானிருக்க
  தாவியெந்தன் மடியேறித்
  தாடையைப் பிடித்துக் கெஞ்சி
  விளையாடக் கூப்பிடும் நீ//

  என் பையனுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என்று நினைக்கிறேன் :-) \\//

  ஆமாம் கொஞ்சம் நாள்தான் ஆகும், ஆனால் இந்த இன்பத் தொல்லையில் இருந்து நீங்கள் தப்பிக்க மட்டும் முடியாது:)!

  ReplyDelete
 29. Ramya Ramani said...

  // படம் மிக மிக இயல்பு + அருமை :)//

  //ஒவ்வொரு வார்த்தையும் படமா விருயுது கண்களில் மிக மிக அருமை :))//

  இயல்பான அந்தப் படம் என் கற்பனையில் விரித்த இயல்பான காட்சிகள்தாம் வரிகளாய்..:)! உங்கள் பாராட்டுக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ரம்யா.

  ReplyDelete
 30. நானானி said...

  //பெண் குழந்தைகளின் அன்பே நிரந்தரம் என்று அழகாக உணர்த்தியது கவிதை!!//

  உண்மைதான் நானானி. நன்றி. பெண்ணைப் பெறுவது பாக்கியம் என்கிற எண்ணம் எப்பவும் இருக்க வேணும் எல்லோருக்கும்:)!

  ReplyDelete
 31. நிஜமா நல்லவன் said...

  //ஹை...ஜெயஸ்ரீ....செல்லம்....கலக்கலா இருக்காங்க!//

  இப்போ முடியெல்லாம் வளர்ந்து இன்னும் கலக்கலாய்..:)! நன்றி நிஜமா நல்லவன்.

  ReplyDelete
 32. போட்டோ பிடிக்கறவரையே பிடிச்சு போட்டோ போட்டதுக்கு உங்களுக்கு பாராட்டு ராமலக்‌ஷ்மி.

  தகப்பனின் பாசம் சொல்ல வார்த்தைகளே இல்லைன்னாலும் அழகா சொல்லியிருக்கீங்க.
  பாராட்டுக்கள்.

  ஜீவ்ஸுக்கு சுத்திபோடச்சொல்லி அருணாகிட்டச் சொல்லணும்.

  ReplyDelete
 33. அருமையான வரிகள். ஒவ்வொன்றும் இனிமை.. உண்மை.

  /*என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா */
  என்றிருந்தது பாசத்தின் எல்லை.

  ReplyDelete
 34. /மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு என
  இன்றைக்கும் எண்ணுகின்ற
  மடையருக்கு இது புரியுமா?
  என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா!

  உன்நெஞ்சினிலே எனைத்தாங்கும்நீ
  நம்குடும்பத்துக் குல தெய்வமம்மா!
  *** *** ***
  /

  எதை விட அத்தனையும் அருமை
  இருந்த பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவைகள்

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 35. நேற்று பின்னூட்டம் அப்ரூவலுக்கு போனதால படத்தோட இயல்பான அப்பன்,புள்ள பாசத்தைப் பத்தி சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்.

  கவிதையும் உங்களுக்கு நல்லாவே சொல்லத் தெரியுது.ஆனா எனக்குத்தான் நடை நடை நடையோ உரைநடைப் பேர்வழிங்கிறதால. உட்கார்ந்து யோசனை பண்ண தெரிவதில்லை:)

  ReplyDelete
 36. வல்லிசிம்ஹன் said...

  //ஒரு குட்டிப் பொண்ணுக்கு இத்தனை அவதாரமா. ராமலக்ஷ்மி மனதெங்கும் நிறைத்து விட்டீர்கள் உங்கள் கவிதை வரிகளை.
  அருமை அருமை.//

  நன்றி வல்லிம்மா. இன்னும் இருக்கிறது எத்தனையோ அவதாரங்கள் சொல்ல முடிந்தது சிலதான் இங்கே:)!

  ReplyDelete
 37. அபி அப்பா said...

  //ஆகா படமே கவிதை! உங்க கவிதையே ஒரு நல்ல விஷூவல்!//

  உஙக் கமெண்டே ஒரு அழகான அர்த்தமுள்ள கவிதை. நன்றி அபி அப்பா. எல்லா அப்பாக்களுக்குமான புத்தாண்டு ட்ரீட்தான் இது:)!

  ReplyDelete
 38. ஆயில்யன் said...

  //ஹைய்ய்ய்ய் ஜெய்ஸ்ரீம்மா சூப்பரேய்ய்ய் :))//

  எப்பவும் போலவே...

  //தாடி வைச்ச டாடியும் சூப்பராத்தான் இருக்காரு :)
  .
  (ஹப்பாட்டா இப்பத்தான் மனசு குளிரும்!)//

  குளிர்ந்திடுமே! பாயிண்டை இப்படி எடுத்துக் கொடுக்குறீங்களே:(? படம் எடுத்த அன்று தாடிக்காகவே காமிரா முன்னே வர மறுத்தார் டாடி. அதை அவர் மறந்திருந்த வேளையில், கேட்டு [படத்தைப் போட] அனுமதி வாங்கி விட்ட என் மகிழ்ச்சியைக் கெடுத்து விடாதீர்கள் ஆயில்யன்:))!

  ReplyDelete
 39. ஆயில்யன் said...

  //கவி வரிகளில் அன்பு வழிய படித்து மகிழ்கிறேன்.

  அவள்தம் அன்னையும் தந்தையும் பார்த்து மகிழ்கிறார்கள் !

  நிகழ்வினை கண்ட அக்(கா) கண்கள் நிம்மதியாய் ஒரு கவி பாடி மகிழ்கிறது!//

  உண்மைதான் ஆயில்யன். ரசனைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 40. மிடுக்குடன் இடுப்பினிலே
  இருகைகளும் வைத்துநின்று-
  மிரட்டுகின்ற தொனியினிலே
  ‘இப்படியா போடுவது
  களைந்ததை அப்படியே’
  விரட்டுகின்ற உன் தோரணையில்-
  //

  காட்சி விரிகிறது வரிகளால்...

  என் கற்பனையிலேயே இரசித்துச் சிரித்துக் கொள்கிறேன்..

  ReplyDelete
 41. அனுஜன்யா said...

  //தங்கை, அக்கா, அம்மா. நல்லா இருக்கு. நானே சொல்ல நினைத்தது போல.//

  அப்படியானால் 'எல்லோர் மனதையும் நான் நாடி பிடித்தது போல' என்றே எடுத்துக் கொள்ளலாம்தானே:)?

  // புகைப்படம் அழகு. //

  நன்றி அனுஜன்யா.

  ReplyDelete
 42. சந்தனமுல்லை said...

  //படம் நல்லா வந்திருக்கு! குட்டிப்பாப்பா செம க்யூட்!//

  பப்புவிடம் காட்டுங்கள்:)!

  //உங்க கவிதை பத்தி தனியா சொல்லனுமா என்ன..

  //மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு என
  இன்றைக்கும் எண்ணுகின்ற
  மடையருக்கு இது புரியுமா?
  என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா!
  //

  கலக்கல்! :-)\\

  உங்களைப் போலவே பலருக்கும் அவ்வரிகள் பிடித்துப் போயிருக்கிறது:)! நன்றி முல்லை.

  ReplyDelete
 43. பாச மலர் said...

  //அழகான கண்ணம்மாக் கவிதை..//

  நன்றி பாசமலர்.

  ReplyDelete
 44. அன்புடன் அருணா said...

  // நல்ல உணர்வுமிக்கக் கவிதை...//

  'உணர்வுகள்' தலைப்புக்குப் பொருத்தம்தானே:)? நன்றி அருணா.

  ReplyDelete
 45. தமிழ் பிரியன் said...

  //கண்ணம்மா எனக்கு மிக பிரியமானவரே! கவிதையும், கேமரா கவிஞரும் சூப்பர்.. ;-)//

  நன்றி நன்றி தமிழ் பிரியன்:)!

  ReplyDelete
 46. முத்துலெட்சுமி-கயல்விழி said...

  //அழகான வரிகள்.. அழகான புகைப்படம்.. வழக்கம்போல கலக்கிட்டீங்க..//

  அடுக்கடுக்காய் பாராட்டு. நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 47. தமிழன்-கறுப்பி... said...

  // ஆயில்யன் said...
  \
  ஹைய்ய்ய்ய் ஜெய்ஸ்ரீம்மா சூப்பரேய்ய்ய் :))
  \

  ரிப்பீட்டு..:)//

  ரீப்பிட்டிலேயே உங்கள் பாராட்டு புரிந்து விட்டது. நன்றி தமிழன்:)!

  ReplyDelete
 48. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //படமும் கவிதையும் மிக அழகு சகோதரி !//

  பாராட்டுக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ரிஷான்:)!

  ReplyDelete
 49. கார்த்திக் said...
  \\சுகமானா சுமைனுகூட இப்போவெல்லாம் சொல்லமுடியாது :-))\\

  சுமையே இல்லைன்னு நான் சொல்லிட்டிருக்கேன்:).

  //ஆனா அக்கா இவர் நவரசங்களையும் வெளிப்படுத்திருக்குரத பாத்தத்தான் மைல்டா ஒரு டவுட்டு வருது.//

  அப்படியா இருங்க, உங்க மானசீக குருவிடம் போட்டுக் கொடுக்கிறேன்:)!

  //ஜெய் குட்டி இருப்பதாலையே இது ரொம்ப அழகானா படம்.//

  அழகான படம் என ஒத்துக் கொண்டீர்களே, நன்றி:)!

  //புத்தாண்டு நல்வாழ்துக்கள்.//

  உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திக்:)!

  ReplyDelete
 50. வருண் said...

  //***"உறவுகள் தொடர்கதை...உணர்வுகள் சிறுகதை..." என்பார். எனக்கோ அது கவிதை. இதோ...***

  உண்மைதான், உங்க உணர்வுகள் கவிதையாகத்தான் வெளி வருகிறது:-)//

  அந்தப் படமே ஒரு கவிதை, அதுதான் வார்த்தைகளாக...:)!

  //***மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு என
  இன்றைக்கும் எண்ணுகின்ற
  மடையருக்கு இது புரியுமா?***

  புரியாதுதான்! ஆனால் இதை வாசித்தால் உங்கள் மேல் கோபம் மட்டும் வரும் :-)))//

  புரியாதவர்கள் மடையர்கள் எனச் சொல்லி விட்டேன் [சற்று வன்மையான வார்த்தைப் பிரயோகமாய் இருந்தாலும்:(]. ஆக மடையர்களின் கோபத்தைக் கணக்கில் கொள்ள வேண்டுமா நாம் எனச் சிந்திக்கிறேன்:)!

  ReplyDelete
 51. புதுகைத் தென்றல் said...

  //போட்டோ பிடிக்கறவரையே பிடிச்சு போட்டோ போட்டதுக்கு உங்களுக்கு பாராட்டு ராமலக்‌ஷ்மி.//

  இதை விட வேறென்ன பாராட்டு வேண்டும்:)? பரிசு கிடைத்த மாதிரி இதுவே சந்தோஷம்.

  //தகப்பனின் பாசம் சொல்ல வார்த்தைகளே இல்லைன்னாலும் அழகா சொல்லியிருக்கீங்க.
  பாராட்டுக்கள்.//

  உண்மைதான் தென்றல், வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது..அடங்கவும் செய்யாது.. பாசத்தின் அளவும் எல்லையும்.

  //ஜீவ்ஸுக்கு சுத்திபோடச்சொல்லி அருணாகிட்டச் சொல்லணும்.//

  சொல்லிடுவோம்:)!

  ReplyDelete
 52. அமுதா said...

  //அருமையான வரிகள். ஒவ்வொன்றும் இனிமை.. உண்மை.//

  நீங்கள் காணக் காத்திருந்த கண்ணம்மா மனதில் இடம் பிடித்து விட்டாளா:)? மகிழ்ச்சி அமுதா.

  \\ /*என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா */

  என்றிருந்தது பாசத்தின் எல்லை.\\

  ஆமாம் அமுதா, அதைப் படமும் எவ்வளவு அழகாய் உணர்த்துகிறது பாருங்கள்:)!

  ReplyDelete
 53. திகழ்மிளிர் said...

  \\ /மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு என
  இன்றைக்கும் எண்ணுகின்ற
  மடையருக்கு இது புரியுமா?
  என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா!

  உன்நெஞ்சினிலே எனைத்தாங்கும்நீ
  நம்குடும்பத்துக் குல தெய்வமம்மா!
  *** *** ***/

  எதை விட அத்தனையும் அருமை
  இருந்த பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவைகள்\\

  கவிதையின் முத்தாய்ப்பே அந்த முத்தான வரிகள்தாமே. அவை உங்களைக் கவர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 54. ராஜ நடராஜன் said...

  //நேற்று பின்னூட்டம் அப்ரூவலுக்கு போனதால படத்தோட இயல்பான அப்பன்,புள்ள பாசத்தைப் பத்தி சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்.//

  நல்லது ராஜநடராஜன்:)!

  //கவிதையும் உங்களுக்கு நல்லாவே சொல்லத் தெரியுது.ஆனா எனக்குத்தான் நடை நடை நடையோ உரைநடைப் பேர்வழிங்கிறதால. உட்கார்ந்து யோசனை பண்ண தெரிவதில்லை:)//

  உங்களுக்கா யோசனை பண்ணத் தெரியாது? அந்த நடை நடையோ உரைநடையில் எழுதிய உங்கள் பதிவுக்குத்தான் நான் தமிழ்மண விருது 2008-ல் ஓட்டுப் போட்டேன் என்கிற ரகசியத்தை ஊரறியச் சொல்லிக் கொள்கிறேன்:)!

  ReplyDelete
 55. Poornima Saravana kumar said...

  \\ // மிடுக்குடன் இடுப்பினிலே
  இருகைகளும் வைத்துநின்று-
  மிரட்டுகின்ற தொனியினிலே
  ‘இப்படியா போடுவது
  களைந்ததை அப்படியே’
  விரட்டுகின்ற உன் தோரணையில்-
  //

  காட்சி விரிகிறது வரிகளால்...

  என் கற்பனையிலேயே இரசித்துச் சிரித்துக் கொள்கிறேன்..\\

  'படமே கவிதை. கவிதையோ விஷுவல்'..அபி அப்பா சொன்னதை நிஜமென நீங்களும் சொல்கிறீர்கள் நன்றி:)!

  தங்கள் அடுத்த பின்னூட்டம்:
  //செல்லத்தின் அழகை ரசிக்கையிலே இன்னொரு செல்லமென தங்கள் கவிதை..

  எந்த செல்லம் அழகென பிரிக்க முடியாமல்...... 2 கையிலும் ஒவ்வொன்றை தாங்கிய படி நான்..//

  நன்றி நன்றி பூர்ணிமா:)!

  ReplyDelete
 56. என் மகளிடம் அடிக்கடி பாடும் பாடல் :) ( அவளும் கூடவே பாட முயற்சிப்பாள் )


  சின்னஞ்சிறு கிளியே
  கண்ணம்மா
  செல்வக் களஞ்சியமே
  என்னைக் களி தீர்த்தே உலகில்
  ஏற்றம் புரிய வந்தாய்....
  பிள்ளை கனியமுதே கண்ணம்மா
  பேசும் பொற் சித்திரமே
  அள்ளி அணைத்திடவே என் முன்னே
  ஆடிவரும் தேரே

  ஓடி வருகையிலே
  என் உள்ளம் குளிருதடி
  ஆடி திரிதல் கண்டால்
  உன்னைப் போய் ஆவி தழுவுதடி
  உச்சி தனை முகர்ந்தால் கருவம்
  ஓங்கி வளருதடி
  மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
  கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
  கள்வெறிக் கொள்ளுதடி
  உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
  உன்மத்தம் ஆகுதடி
  உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்
  உதிரம் கொட்டுதடி
  என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
  "என்னுயிர் நின்னதன்றோ"

  ReplyDelete
 57. Jeeves said...

  // என் மகளிடம் அடிக்கடி பாடும் பாடல் :) ( அவளும் கூடவே பாட முயற்சிப்பாள் )


  சின்னஞ்சிறு கிளியே
  கண்ணம்மா....

  என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
  "என்னுயிர் நின்னதன்றோ"//

  அப்படியே இந்தக் காட்சியும் கண்களில் விரிகிறது. பாடல் காதுகளில் ஒலிக்கிறது. [நீங்கள் நன்றாகப் பாடுவீர்கள் என்பதும் தெரியும்:)].

  உங்கள் பின்னூட்டம் படமான கவிதை கணத்துக்கு மட்டுமல்ல.. இப்பதிவுக்கும் தலைப்புக்கும் அதன் உணர்வுகளுக்கும் உயிரூட்டம்.

  நன்றி ஜீவ்ஸ்.

  ReplyDelete
 58. படம் சட்டுனு ஈர்க்குது. வரிகள் பற்றி சொல்லவே வேண்டாம்.

  இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன்.

  ReplyDelete
 59. //மிடுக்குடன் இடுப்பினிலே
  இருகைகளும் வைத்துநின்று-
  மிரட்டுகின்ற தொனியினிலே//

  சின்ன மஹாராணியின்
  சித்திரத்தை, எம் கண் முன்னே
  சத்தமின்றி வரிகளில்
  சரியாய் சொன்னீர்கள்.

  //உன்னைவிட ஓரிரு பங்கு
  உயரமான தலையணையைத்
  தள்ளாடி இழுத்து வந்து
  தலையிடுக்கில் செருகிவிட்டு
  ‘தூங்கப்பா கண்மூடி’யென
  நெற்றி வருடிச் சொல்லுகையில்-//

  அட அடா, என்ன ஒரு ஈர்ப்பு
  எந்தன் பிள்ளை படும் தவிப்பு ...

  உங்கள் கவிதை மொத்தமும் அருமை என்றாலும், எனக்கு ரொம்பப் பிடித்த வரிகள் மேலே :)))

  ReplyDelete
 60. அடேங்கப்பா.......!! நெம்ப சூப்பரான கவிதைங்கோ அம்முனி......!!! கலக்கீட்டீங்கோ போங்க........!!

  அட..... இந்த மாடல்ஸ் ரெண்டு பேரையும் எங்கயோ பத்திருக்கனே........!!


  ம்ம்ம்ம்ம் ..!!

  .


  .


  .

  அட நம்ம ஜீவ்ஸ் தலைவரும் .... , ஜெயா ஸ்ரீ .... குட்டிமாவும்........ !!! அடா.....அடா... நெம்ப சூப்பர்......!!

  ஆனா..... குட்டிபாப்பாவ தூக்குனதுக்கே ....... ஏதோ சஞ்சீவி மலைய தூக்குறமாதிரி மூஞ்சியில எக்ஸ்ப்ரசன் குடுக்குறாரு......!!!

  இதெல்லாம் நரம்ப ஓவரா தெரியில.......!!!!!!

  ReplyDelete
 61. சதங்கா (Sathanga) said...

  // படம் சட்டுனு ஈர்க்குது. வரிகள் பற்றி சொல்லவே வேண்டாம்.//

  நன்றி சதங்கா:)!

  //சின்ன மஹாராணியின்
  சித்திரத்தை, எம் கண் முன்னே
  சத்தமின்றி வரிகளில்
  சரியாய் சொன்னீர்கள்.//

  சரியாகச் சொன்னேனா:)?
  இத்தனை பேருக்கு இச்சித்திரம் உயிர்ப்பாக தோன்றுகிறதே! இதைவிட என்ன பாராட்டு வேண்டும்?

  ReplyDelete
 62. சதங்கா (Sathanga) said...
  \\ //உன்னைவிட ஓரிரு பங்கு
  உயரமான தலையணையைத்
  தள்ளாடி இழுத்து வந்து
  தலையிடுக்கில் செருகிவிட்டு
  ‘தூங்கப்பா கண்மூடி’யென
  நெற்றி வருடிச் சொல்லுகையில்-//

  உங்கள் கவிதை மொத்தமும் அருமை என்றாலும், எனக்கு ரொம்பப் பிடித்த வரிகள் மேலே\\

  அப்போ அப்பா உங்களுக்கு மகளுடன் அது மாதிரியான அருமையான தருணம் கண்டிப்பா இருந்தே இருந்திருக்கணும்:)! என் ஊகம் சரிதானே சதங்கா:)?

  ReplyDelete
 63. லவ்டேல் மேடி said...

  //அடேங்கப்பா.......!! நெம்ப சூப்பரான கவிதைங்கோ அம்முனி......!!! கலக்கீட்டீங்கோ போங்க........!!//

  நன்றி:)!

  //அட..... இந்த மாடல்ஸ் ரெண்டு பேரையும் எங்கயோ பத்திருக்கனே........!!

  ம்ம்ம்ம்ம் ..!!//

  நினைவுக்கு கொண்டு வர இத்தனை சிரமமா:)? இருக்கட்டும் இருக்கட்டும்.

  //ஆனா..... குட்டிபாப்பாவ தூக்குனதுக்கே ....... ஏதோ சஞ்சீவி மலைய தூக்குறமாதிரி மூஞ்சியில எக்ஸ்ப்ரசன் குடுக்குறாரு......!!!//

  குட்டிப் பாப்பாக்கு விளையாடப் போகணும். பொறுமை இல்லை. ஆகையால் குழந்தைய கஷ்டப் படுத்தக் கூடாதுன்னு ஒரு அரை நிமிடத்தில் அவசரமாய் எடுத்ததாக்கும்:)!. அந்த ‘உணர்வுகளை’ மதிக்கணுமில்லையா நீங்கள்:))? சரி எனக்கென்னாயிற்று? நீங்களாயிற்று உங்கள் நண்பராயிற்று. வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள்:)))!

  ReplyDelete
 64. \\கூடப் பிறந்தவனை
  நினைக்கின்ற நேரங்களைக்
  குற்ற உணர்வுடனே
  குறைத்து வரும் என்
  குட்டித் தங்கையைப்
  பார்க்கின்றேன் கண்ணம்மா!\\

  நிதர்சனம்!!

  ReplyDelete
 65. //மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு என
  இன்றைக்கும் எண்ணுகின்ற
  மடையருக்கு இது புரியுமா?
  என்றைக்கும் என் தோள்களுக்கு
  நீ பாரமில்லை கண்ணம்மா!
  //

  சரியா சொன்னீங்க, யாரை நம்புகின்றார்களோ,அவர்கள் சரியாக இருந்தால் என் மனம் அழுகாதே கண்ணம்மா.

  வரிகளும் கலக்கிவிட்டது!!
  மனதும் கலங்கிவிட்டது!!

  ReplyDelete
 66. குட்டி பாப்பா மிகவும் அருமை!!
  தூக்கியவர் முகபாவமும் அருமை!!

  ReplyDelete
 67. படமும் கவிதையும் ரொம்பவே யாதர்த்தம். ரொம்ப அழகாக இருக்கிறது.

  63 பேரை கடந்து வந்திருக்கிறேன். காலதாமதமாகி விட்டது. 63 பேர் முந்தி விட்டார்கள். அடுத்த முறை முதலிடம் நமக்கு தான்.

  ReplyDelete
 68. அட! அன்னிக்கு நானும் இருந்தேனே நீங்க இந்த போட்டோ எடுக்கறப்போ! இப்படி அழகா வந்து கவிதைக்கணங்களைக்கொடுக்கும்னு அப்போ நினைக்கல ஆனா இப்போ பிரமிக்கறேன் உங்க திறமைகண்டு!

  ReplyDelete
 69. குழந்தை அழகு!!
  சுத்தி போடுங்கள்!!

  ReplyDelete
 70. படத்துக்கு பொருத்தமா நல்லகவிதை எழுதியிருக்கீங்க!!

  ReplyDelete
 71. RAMYA said...
  //நிதர்சனம்!!//

  பார்க்கிறோம்தானே:)?

  //வரிகளும் கலக்கிவிட்டது!!
  மனதும் கலங்கிவிட்டது!!//

  நன்றி ரம்யா. பெண்ணைப் பெறுவது பாக்கியம் என எல்லோரும் உணர வேண்டும்.

  ReplyDelete
 72. RAMYA said...

  //குட்டி பாப்பா மிகவும் அருமை!!//

  அழகுக் கண்ணம்மா!

  //தூக்கியவர் முகபாவமும் அருமை!!//

  லவ்டேல் மேடி நல்லாக் கேட்டுக் கொள்ளுங்க:).

  ReplyDelete
 73. கடையம் ஆனந்த் said...

  //படமும் கவிதையும் ரொம்பவே யாதர்த்தம். ரொம்ப அழகாக இருக்கிறது.//

  நன்றி ஆனந்த்.

  //அடுத்த முறை முதலிடம் நமக்கு தான்.//

  இந்தப் பதிவுக்கான அஸ்திவாரத்தைத்தான் நீங்கள் போன பதிவின் கடைசியிலே வந்து போட்டு விட்டீர்களே? அந்த வகையில் இம்முறையும் நீங்கதான் முதல்:)!

  ReplyDelete
 74. thevanmayam said...

  //குழந்தை அழகு!!
  சுத்தி போடுங்கள்!!//

  அவங்கம்மாவிடம் கண்டிப்பா சொல்லிடறேன்:)!

  //படத்துக்கு பொருத்தமா நல்லகவிதை எழுதியிருக்கீங்க!!//

  நன்றி தேவன்:)!

  ReplyDelete
 75. sakthi said...

  //wow really superb kavithai//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சக்தி.

  ReplyDelete
 76. வழக்கம் போல படமும் கவிதைகளும் போட்டி போட்டு அசத்துது... கலக்கல்க்கா.. :)

  ReplyDelete
 77. // குட்டிப் பாப்பாக்கு விளையாடப் போகணும். பொறுமை இல்லை. ஆகையால் குழந்தைய கஷ்டப் படுத்தக் கூடாதுன்னு ஒரு அரை நிமிடத்தில் அவசரமாய் எடுத்ததாக்கும்:)!. அந்த ‘உணர்வுகளை’ மதிக்கணுமில்லையா நீங்கள்:))? சரி எனக்கென்னாயிற்று? நீங்களாயிற்று உங்கள் நண்பராயிற்று. வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள்:)))! //
  அட ஏனுங்கோ அம்முனி...!! இப்பத்தேன் ஒரு சர்ச்சையில சிக்கீட்டு கஷ்ட்டப்பட்டு வெளிய வந்திருக்குறேன்..........!! இப்போ மருவுடியும் ஒரு சர்ச்சையா.......!!!! நாநென்னோ நயன்தாராவா........ அடிக்கடி இப்புடி சர்ச்சையில மாட்டுறதுக்கு......!!! என்னைய பாத்தா....... உங்குளுக்கு பாவமா தெரியில.........!!!! ஆஆவ்வ்வ்வ்வ்.......!!!!

  ReplyDelete
 78. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

  //வழக்கம் போல படமும் கவிதைகளும் போட்டி போட்டு அசத்துது... கலக்கல்க்கா.. :)//

  நன்றி சஞ்சய்:)!

  ReplyDelete
 79. லவ்டேல் மேடி said...

  //இப்பத்தேன் ஒரு சர்ச்சையில சிக்கீட்டு கஷ்ட்டப்பட்டு வெளிய வந்திருக்குறேன்..........!!//

  தெரியுங்க, அதான் நல்ல பிள்ளையா வெளிய வந்திட்டீங்களே!!

  //இப்போ மருவுடியும் ஒரு சர்ச்சையா.......!!!! நாநென்னோ நயன்தாராவா........ அடிக்கடி இப்புடி சர்ச்சையில மாட்டுறதுக்கு......!!!//

  :)))!

  //என்னைய பாத்தா....... உங்குளுக்கு பாவமா தெரியில.........!!!! //

  அடடா, நீங்க வேடிக்கைக்கு சொன்ன மாதிரி நானும் வேடிக்கைக்குதான் சொன்னேன். அப்படியெல்லாம் உங்களை மாட்டி விடணும்னு நினைப்பேனா:)?

  //ஆஆவ்வ்வ்வ்வ்.......!!!!//

  நீங்கள் சமத்து. போய் தூங்குங்கள்:)!

  ReplyDelete
 80. இப்போதுதான் இந்த இடுகையை படித்தேன்...

  உங்கள் வரிகளாய் வந்த கண்ணம்மா
  எந்தன் நெஞ்சினுள் குடிகொண்டுவிட்டாளம்மா...

  தங்களின் வரிகள் அருமை. அதோடு அடிக்களை புகைப்படம் மிக அழகு.

  ReplyDelete
 81. மணிநரேன் said...
  //உங்கள் வரிகளாய் வந்த கண்ணம்மா
  எந்தன் நெஞ்சினுள் குடிகொண்டுவிட்டாளம்மா...//

  சின்னக் கண்ணம்மாவைப்
  போற்றாதவர் இருக்க முடியுமோ:)?

  //தங்களின் வரிகள் அருமை. அதோடு அடிக்களை புகைப்படம் மிக அழகு.//

  நீங்கள் ஒருவர்தான் அந்த 'அடுக்களைச் சுட்டி'யைச் சரியாகக் க்ளிக்கிட்டு ரசித்திருக்கிறீர்கள்:)! அதற்கும் சேர்த்து என் ஸ்பெஷல் நன்றிகள்:)!

  ReplyDelete
 82. பெண்களை தெய்வமாய் கொண்டாடும் இந்நாட்டில் :

  மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு

  என்பவரை என்னென்று சொல்வது, அறிவிலிகள் என்பதை விட..........

  வார்த்தைகளில் வண்ண வண்ணமாய் படம் விரிகிறது என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை........

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி..............

  ReplyDelete
 83. R.Gopi said...

  //பெண்களை தெய்வமாய் கொண்டாடும் இந்நாட்டில் :

  மகனென்றால் வரவு
  மகளென்றால் செலவு

  என்பவரை என்னென்று சொல்வது, அறிவிலிகள் என்பதை விட..........//

  நான் சொன்னதை வழிமொழிந்தமைக்கு நன்றி கோபி:)!

  //வார்த்தைகளில் வண்ண வண்ணமாய் படம் விரிகிறது என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை........

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி..............//

  தங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்கும் மறுபடி என் நன்றிகள்!

  ReplyDelete
 84. //ஆகா படமே கவிதை! உங்க கவிதையே ஒரு நல்ல விஷூவல்!//

  ரிப்பீட்டேய்...!

  உங்க கவிதைகளிலேயே எனக்க மிகப் பிடித்தது இதுதான்!

  ReplyDelete
 85. கவிநயா said...

  //உங்க கவிதைகளிலேயே எனக்க மிகப் பிடித்தது இதுதான்!//

  நன்றி நன்றி! உங்களுக்கு நிச்சயம் பிடிக்குமென்று நானும் நினைத்திருந்தேன்:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin