வியாழன், 1 ஜனவரி, 2009

முதல் நாளில் என் முதல் கவிதை

பரிசல்காரர் சில மாதங்களுக்கு முன்னர் எல்லோரையும் அவரவர் 'முதல்’களை வலையில் போடச் சொல்லி அழைப்பு விட்டிருந்தார். தொடர்ந்தன பல முதல்கள்.. முதல் கதை, முதல் கவிதை, முதல் காதல், கிடைத்த முதல் வேலை, வாங்கிய முதல் சேலை, முதன் முதலில் சைக்கிள் ஓட்டியது கார் ஓட்டியது விமானம் ஏறியது என. போட்ட முதலுக்கு நல்ல கருத்து வட்டியும் பெற்றனர். அதோ அந்த வரிசையில் சற்றுத் தாமதமாக என்றாலும், புது வருடத்தின் முதல் மாதம் முதல் நாளில் முதல் நாழிகையில் இதோ என் முதல் கவிதை:

எத்தனை படைப்புகள் இறைவனாலே


[தலைக்காவேரி உச்சியிலிருந்து என் காமிராவுக்கு கிட்டிய தரிசனம்]


எத்தனை படைப்புகள் இறைவனாலே
அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;
முத்தென அவற்றை நாமுமே நம்
சொத்தென போற்றிக் காத்திடுவோம்!

வானின் கருமையும் வயலின் செழுமையும்
தந்திடும் செல்வம் நமக்காக;
காடும் மலையும் கடலும் ஆறும்
விலங்கும் பறவையும் வாழ்வின் சுழற்சிக்காக!

மாந்தர் அனைவரும் நம் நண்பரென
சாந்தமாக நடந்தே நாம்-நற்பெயரும்
அன்பும் பெருக்கிடுவோம்-மென்மேலும்
பண்புடன் வாழப் பழகிடுவோம்!

இறைவனின் வரமாம் இயற்கையின் அருளால்
எல்லா வளமும் பெற்றிடுவோம்;
அறத்தின் வழியினைக் கடைப்பிடித்து
அல்லல் இன்றி வாழ்ந்திடுவோம்!
*** *** ***

1979-ல் பத்தாவது வகுப்பில் இருக்கையில், நான் பயின்ற பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் தனது ஐம்பது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்ட சிறப்பு மலரில் வெளியான கவிதை.

எனது பதினைந்தாவது வயதில் எழுதியது. ஆகையால்,
சொற்பிழை பொருட்பிழை இருந்தால் பொறுத்தருள்வீர்!
சொல்ல வந்த கருத்தை மட்டும் கணக்கில் கொள்வீர்!
பொற்காசை வழக்கம்போல வழங்கிச் செல்வீர்!
[பொற்காசு? வேறென்ன உங்கள் பொன்னான பின்னூட்டமும் கண்ணான கருத்தும்தான்!!]




கடந்த வருட PiT மெகாப் போட்டியில் முதல் பதினொன்றில் ஒன்றாக முன்னேறி நடுவர் சர்வேசனால் "ஒரு வாழ்த்து அட்டைக்கு உரிய சர்வ லட்சணங்களும்" உள்ளதாகப் பாராட்டப் பட்ட எனது படத்தையே இங்கு பதிந்து, வரவிருக்கும் வருடம் சிறக்க வாழ்த்துகிறேன்.

இயற்கை அன்னை பொழியட்டும் கருணை





உதிக்கின்ற இளங்காலைச் சூரியனுடனே
பிறக்கின்ற புது வருடத்தில்
இதுவரை இருந்த எந்தவொரு
இன்னலெனும் இருளும் விலகி-
ஒவ்வொருவர் குடும்பத்திலும்
எல்லா வளமும் பெருகி-
நம் நாட்டில் மட்டுமின்றி
உலகம் முழுவதும்
மனிதம் உயிர்திருக்கவும்
ஒற்றுமை ஓங்கி அமைதி தவழவும்-
ஈழ மக்களின் பிரச்சனை யாவும்
இனிய முடிவுக்கு வரவும்-
தனிமனிதனுக்கு உணவு கிடைக்க
வழியற்ற வறுமை நீங்கவும்-
தடுமாறும் பொருளாதாரம்
தலைதூக்கி சுபிட்சம் நிலவவும்-
எல்லாம் வல்ல இறைவனை
இணைந்து நாம் பிரார்த்திப்போம்.
அகிலமெங்கும் இப்படியான
அறம் தழைத்திட்டால்-
நீர் நிலம் நெருப்பு
ஆகாயம் காற்று இவை
எவற்றிற்கும் ஏற்படாது
எள்ளளவும் சீற்றம்.
இயற்கை அன்னையின் கருணையும்
உவகையுடன் பொங்கி வழியும்!
வாழ்வீர் வளமுடன் யாவரும்!

[பாருங்கள்,இயற்கை அன்னையை வியந்து எழுதிய என் முதல் கவிதையின் கருத்து இப்போது படைத்த வாழ்த்திலும் தானாகவே வந்து விட்டதை..]

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!




இங்கு வலையேற்றிய பின்னர் 'இயற்கை அன்னை பொழியட்டும் கருணை' 13 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் சித்திரைத் திருநாள் வாழ்த்தாக:

விகடன்.காம் முகப்பில்:

89 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    மென்மேலும் பல நல்ல கவிதைகளை இந்த ஆண்டும் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //மாந்தர் அனைவரும் நம் நண்பரென
    சாந்தமாக நடந்தே நாம்-நற்பெயரும்
    அன்பும் பெருக்கிடுவோம்-மென்மேலும்
    பண்புடன் வாழப் பழகிடுவோம்//

    அற்புதம்!

    புது வருடத்தில் பொருத்தமான பதிவு

    நன்றி ராமாக்கா!

    (போட்டோ கலக்கல்! சர்வே சொன்னது 200% கரீக்ட்டு!)

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் பிரண்டு ராமலெஷ்மி! (நைசா நானானியக்கா பதிவிலே வயசை கொஞ்சம் குறைச்சா ஓடி வந்து கும்மிட்டீங்களே அக்கா:-))

    பதிலளிநீக்கு
  5. //பத்தாவது வகுப்பில் //
    மொத்தமாய் கவனித்து
    மெய்யனப் பட்டதை
    பொய்யின்றி உரைத்தீர்கள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. very best புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. பத்தாவதில் எழுதிய உங்கள் முதல் கவிதையிலேயே இன்று உங்களிடமுள்ள அதே தன்னலமற்ற நல் எண்ணங்களை வெளியிட்டு இருக்கீங்க. :-)

    Happy New Year, Ramalakshmi and folks who visit here!

    பதிலளிநீக்கு
  9. //எத்தனை படைப்புகள் இறைவனாலே
    அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;//

    முத்தான வார்த்தைகள் = அச்
    சித்தனை பித்தனை வித்தனை
    நித்தமும் தொழுதிடத் தூண்டுமோர்
    வித்தான வார்த்தைகள்.

    நமக்கென படைத்தான் இறைவன் எனினும்
    நம்மைப் படைத்ததும் அவனே அன்றோ !
    அவனை அன்றி அவனியினிலே
    ஆரும் உண்டோ ?

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  10. முத்தாய்பான முதல் கவிதையும் தற்போதைய கவிதையும் நன்று நன்று!

    நான் நேற்று காலை வரை சென்ற வருடம் எழுதிய புத்தாண்டு கவிதையை பதிவாக போடலாம் என்று நினைத்திருந்தேன்..ஆனால் வேண்டாம் புதியதாய் ஓர் கவிதை எழுது என்றது உள்மனம்..அதில் உதித்தது தான் எனது புத்தாண்டு பதிவு..இயற்கையை பற்றியும் மனித நேயம் பற்றியும் நீண்ட அக்கறை எப்போதுமே என்னுள் இருந்த காரணத்தால் வந்தது எனது கவிதை!!

    எனது புத்தாண்டு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  11. முதல் கவிதையுடன் புத்தாண்டு சிறக்க வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  12. இரண்டு கவிதைகளுமே சிறப்பு. PIT டுக்கு காமெரா சுமந்தீர்களா! பிரமாதமான புகைப்படம்.

    எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  13. பிடிங்க ஒரு பொற் காசை! :-))

    //அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;//

    ம்ஹூம்! கருத்து எனக்கு ஒத்துப்போகலை.

    போகட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. புத்தாண்டு வாழ்த்துகள்

    பொற்காசு குடுத்தாச்சுக்கா :)))

    பதிலளிநீக்கு
  15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. கிரி said...

    //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

    உங்களுக்கும்:)!

    //மென்மேலும் பல நல்ல கவிதைகளை இந்த ஆண்டும் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    கண்டிப்பாக முயற்சிப்பேன். வாழ்த்துக்களுக்கு நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  17. தங்கராசா ஜீவராஜ் said...

    //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    நன்றி ஜீவராஜ். உங்கள் நாட்டில் அமைதி திரும்ப எங்கள் பிரார்த்தனை தொடரும். நல்லது விரைவில் நடக்கும். நம்புவோம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஆயில்யன் said...

    *** //மாந்தர் அனைவரும் நம் நண்பரென
    சாந்தமாக நடந்தே நாம்-நற்பெயரும்
    அன்பும் பெருக்கிடுவோம்-மென்மேலும்
    பண்புடன் வாழப் பழகிடுவோம்//

    அற்புதம்!

    புது வருடத்தில் பொருத்தமான பதிவு //***

    வாருங்கள் ஆயில்யன். முதல் கவிதையுடன் நிறுத்திடத்தான் நினைத்திருந்தேன்.

    //(போட்டோ கலக்கல்! சர்வே சொன்னது 200% கரீக்ட்டு!)//

    நன்றி, இந்தப் படத்தைப் போட்டதும் இரண்டாவது கவிதை தானே பொங்கி வந்து விட்டது அந்தப் பாற்கடலிலிருந்து:)))!

    பதிலளிநீக்கு
  19. அபி அப்பா said...

    //வாழ்த்துக்கள் பிரண்டு ராமலெஷ்மி!//

    நன்றி நண்பரே!

    //(நைசா நானானியக்கா பதிவிலே வயசை கொஞ்சம் குறைச்சா ஓடி வந்து கும்மிட்டீங்களே அக்கா:-))//

    பின்னே, ஒரே செட் என்றான பிறகு கலாய்க்காவிட்டால் எப்படி:)? [அக்காவா..? அது சரி:)!]

    பதிலளிநீக்கு
  20. சதங்கா (Sathanga) said...

    *** //பத்தாவது வகுப்பில் //
    மொத்தமாய் கவனித்து
    மெய்யனப் பட்டதை
    பொய்யின்றி உரைத்தீர்கள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!//***

    சத்தமாக சொல்லிக் கொள்வோம் புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருக்கும்:)! நன்றி சதங்கா!

    பதிலளிநீக்கு
  21. திகழ்மிளிர் said...

    // இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//

    நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  22. SurveySan said...

    // very best புத்தாண்டு வாழ்த்துகள்!//

    Thank you சர்வேசன்:)!

    பதிலளிநீக்கு
  23. வருண் said...

    //பத்தாவதில் எழுதிய உங்கள் முதல் கவிதையிலேயே இன்று உங்களிடமுள்ள அதே தன்னலமற்ற நல் எண்ணங்களை வெளியிட்டு இருக்கீங்க. :-)

    Happy New Year, Ramalakshmi and folks who visit here!//

    நன்றி வருண். உங்களுக்கும் கயல்விழிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. sury said...

    *** //எத்தனை படைப்புகள் இறைவனாலே
    அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;//

    முத்தான வார்த்தைகள் = அச்
    சித்தனை பித்தனை வித்தனை
    நித்தமும் தொழுதிடத் தூண்டுமோர்
    வித்தான வார்த்தைகள்.//***

    நன்றி.

    //நமக்கென படைத்தான் இறைவன் எனினும்
    நம்மைப் படைத்ததும் அவனே அன்றோ !
    அவனை அன்றி அவனியினிலே
    ஆரும் உண்டோ ?//

    உண்மைதான். ஆகையாலேயே நம் புத்தாண்டு பிரார்த்தனைகளை அவன் திருவடியில் வைத்தாயிற்று.

    பதிலளிநீக்கு
  25. இசக்கிமுத்து said...

    //முத்தாய்பான முதல் கவிதையும் தற்போதைய கவிதையும் நன்று நன்று!//

    நன்றி இசக்கிமுத்து.

    //நான் நேற்று காலை வரை சென்ற வருடம் எழுதிய புத்தாண்டு கவிதையை பதிவாக போடலாம் என்று நினைத்திருந்தேன்..ஆனால் வேண்டாம் புதியதாய் ஓர் கவிதை எழுது என்றது உள்மனம்..அதில் உதித்தது தான் எனது புத்தாண்டு பதிவு..//

    நல்ல வேலை செய்தீர்கள். அருமையான கவிதை.

    //இயற்கையை பற்றியும் மனித நேயம் பற்றியும் நீண்ட அக்கறை எப்போதுமே என்னுள் இருந்த காரணத்தால் வந்தது எனது கவிதை!!//

    உண்மைதான், இரண்டுக்கும் ஒரு வகையில் தொடர்பு உண்டென்கின்றன என் கவிதைகளும்!

    //எனது புத்தாண்டு வாழ்த்துகள்!!//

    நன்றி, வாழ்த்துக்கள் உங்களுக்கும்:)!

    பதிலளிநீக்கு
  26. thevanmayam said...

    //முதல் கவிதையுடன் புத்தாண்டு சிறக்க வாழ்த்துக்கள்!!!//

    நன்றி Thevanmayam. அனைவருக்கும் இவ்வாண்டு சிறப்பாக அமையப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  27. அனுஜன்யா said...

    //இரண்டு கவிதைகளுமே சிறப்பு. PIT டுக்கு காமெரா சுமந்தீர்களா! பிரமாதமான புகைப்படம்.//

    இரட்டைப் பாராட்டா? இரட்டை மகிழ்ச்சி:))!!

    //எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவோம்.

    பதிலளிநீக்கு
  28. திவா said...

    *** பிடிங்க ஒரு பொற் காசை! :-))

    //அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;//

    ம்ஹூம்! கருத்து எனக்கு ஒத்துப்போகலை.

    போகட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.***

    திவா, அத்தனையும் ‘நமக்கு’ என்றால்தானே நம் மக்கள் அக்கறையுடன் பாதுகாப்பார்கள்? இல்லாவிடில் மரங்களை வெட்டிச் சாய்த்து விடுவார்கள். ஆற்று மணலை அள்ளிச் சென்று கொள்ளை லாபம் பார்ப்பார்கள், செய்யும் காரியங்கள் சந்ததிக்கு கொண்டு வரப் போகும் பின் விளைவை அறியாமல்.

    சரி போகட்டும். மேலும், நான்தான் சொல்லி விட்டேனே. பொருட் பிழை இருந்தால் பொறுத்தருளச் சொல்லி. நல்லவேளை தருமி போல் என்னைப் பேரம் பேச விடாமல் நக்கீரர் தாங்கள் முதலிலேயே தந்து விட்டீர்கள் பொற்காசை:))! வாழ்த்துகளுக்கும் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  29. புதுகை.அப்துல்லா said...

    //புத்தாண்டு வாழ்த்துகள்

    பொற்காசு குடுத்தாச்சுக்கா :)))//

    நன்றி. அன்பாகக் கொடுத்ததை அருமை தெரிந்து வாங்கிக் கொண்டாயிற்று அப்துல்லா:)!

    பதிலளிநீக்கு
  30. இனியவள் புனிதா said...

    // இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

    நன்றி புனிதா. நீங்களும் எல்லா நலமும் பெற்றிட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. அக்கா! எல்லாம் நம்மதுதானே எடுத்துக்க அனுபவின்னு எதை வேணா யார் வேணா எடுத்துக்கலாம்ன்னு ஆயிடுத்தே! பொறுப்பு இல்லையே!//மரங்களை வெட்டிச் சாய்த்து விடுவார்கள். ஆற்று மணலை அள்ளிச் சென்று கொள்ளை லாபம் பார்ப்பார்கள், //
    இதை அதனாலேதானே செய்கிறாங்க!

    //மேலும், நான்தான் சொல்லி விட்டேனே. பொருட் பிழை இருந்தால் பொறுத்தருளச் சொல்லி.//
    அதான் மேலே பேசாம் பொற்காசை வெச்சிட்டேன்!
    :-))

    பதிலளிநீக்கு
  32. திவா said...

    //அக்கா! எல்லாம் நம்மதுதானே எடுத்துக்க அனுபவின்னு எதை வேணா யார் வேணா எடுத்துக்கலாம்ன்னு ஆயிடுத்தே! பொறுப்பு இல்லையே!//

    அதென்னவோ சரிதான்! அதனால் பாதிக்கப் படுவதும் நாம்தான் என்கிற புரிதலும் இல்லாத இந்த அறிவிலிகளால்தான் பூமி வானம் பார்த்து கண்கள் பூத்துப் போகிறது.

    பதிலளிநீக்கு
  33. திவா said.

    //அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;//

    ம்ஹூம்! கருத்து எனக்கு ஒத்துப்போகலை.//

    நூத்துக்கு நூத்திப் பத்து மெய்.

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன்
    யாருக்காக கொடுத்தான் ?
    ஒருத்தருக்கா கொடுத்தான் ‍ அவன்
    ஊருக்காக கொடுத்தான் .

    என அன்று கேட்ட எம்.ஜி. ஆர். பாடல் நினைவுக்கு வருகிறது.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  34. sury said...

    *** திவா said.
    //நூத்துக்கு நூத்திப் பத்து மெய்.

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன்
    யாருக்காக கொடுத்தான் ?
    ஒருத்தருக்கா கொடுத்தான் ‍ அவன்
    ஊருக்காக கொடுத்தான் .

    என அன்று கேட்ட எம்.ஜி. ஆர். பாடல் நினைவுக்கு வருகிறது.//***

    நல்ல பாட்டைத்தான் ஞாபகப் படுத்தியிருக்கிறீகள்:)! நமக்காகக் கொடுத்ததை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இவர்களுக்கு விளங்கவில்லை:(!

    //காடும் மலையும் கடலும் ஆறும்
    விலங்கும் பறவையும் வாழ்வின் சுழற்சிக்காக!//
    உலகம் உயிர்த்திருப்பதற்காக..

    இது புரியாத பதர்கள் தங்கள் சந்ததிக்கு சொத்து சேர்க்க இறைவன் கொடுத்ததாக எண்ணி
    //இறைவனின் வரமாம் இயற்கையின்// அருளைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சந்ததியருக்கே அது ஆபத்தாக முடியப் போகிறது என்பதை யார் இவர்களுக்கு உணர்த்துவது? இது ஒரு விடையற்ற கேள்வியாகத்தான் நிற்கிறது, இல்லையா சார்?

    பதிலளிநீக்கு
  35. ¨திருடனாய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!¨
    அக்கா அடிப்படையிலே என் ஆட்சேபமே இதை படிக்கிறவங்க நம்மோடதுன்னு பொறுப்போட நினைக்காம என்னோடதுன்னு சுயநலத்தோட நினைப்பாங்க என்பதுதான். ஒரே மாதிரிதான் நினைக்கிறோம்- சொல்கிற விதத்துல வேறுபடுகிறோம்!

    பதிலளிநீக்கு
  36. ///வானின் கருமையும் வயலின் செழுமையும்
    தந்திடும் செல்வம் நமக்காக;
    காடும் மலையும் கடலும் ஆறும்
    விலங்கும் பறவையும் வாழ்வின் சுழற்சிக்காக!///

    கவிஞர்கள் உருவாக்க படுவதில்லை!

    அவர்கள் கவிஞர்களாகவே பிறக்கின்றார்கள் !

    புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  37. அன்பு ராமலக்ஷ்மி, பதினைந்தில் விளைந்த கவிதையா. அந்தப் பருவத்தின் கல்மிஷமில்லாத கற்பனாசக்தி கவிதை உருவகி இப்போது வந்து மனக்கதவைத் தட்டுகிறது.
    இறைவன் கொடுத்த இடத்தையெல்லாம் மனிதன் ஆளுகிறான்.
    நல்லபடி யாக ஆளட்டும்.

    உண்மை எப்போதும் மறையாது.அடுத்த தலைமுறை இதைக் காக்கும் உள்ளங்களாக வர இறைவனையே வேண்டுவோம்.
    நல் புத்தாண்டு வாழ்த்துகள்மா.

    பதிலளிநீக்கு
  38. திவா said...

    //¨திருடனாய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!¨//

    உண்மைதான் திவா. [இதை எழுதியவர் பட்டுக் கோட்டையார் எனத் தெரியும். எம்ஜிஆர் திரைப்பாடல்தானா இதுவும்?]

    //அக்கா அடிப்படையிலே என் ஆட்சேபமே இதை படிக்கிறவங்க நம்மோடதுன்னு பொறுப்போட நினைக்காம என்னோடதுன்னு சுயநலத்தோட நினைப்பாங்க என்பதுதான்.//

    அந்த வயதில் அதை எப்படி நினைத்து எழுதினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வயதில் அதற்கு விளக்கம் கொடுக்கத் தெரிகிறது, அவ்வளவே.

    //ஒரே மாதிரிதான் நினைக்கிறோம்- சொல்கிற விதத்துல வேறுபடுகிறோம்!//

    முற்றிலும் சரியே. நீங்களும் சூரி சாரும் சொல்லியிருப்பதை நான் நல்ல விதமாகவேதான் எடுத்துக் கொண்டுள்ளேன் திவா. எல்லா விஷயங்களையுமே வெவ்வேறு கோணங்களில் அலசிப் பார்ப்பதில் தவறொன்றுமில்லை. நீங்கள் சொன்ன மாதிரி ஒரே விஷயத்தைதான் நாம் நினைக்கிறோம். வலியுறுத்த நினைக்கிறோம். நன்றி திவா.

    பதிலளிநீக்கு
  39. ஜீவன் said...
    //காடும் மலையும் கடலும் ஆறும்
    விலங்கும் பறவையும் வாழ்வின் சுழற்சிக்காக!//

    ஜீவன் அந்த வயதில் புவியியல் வகுப்பில் கற்றுக் கொண்ட விஷயங்கள்தாம் இவை, அல்லவா:)?

    //கவிஞர்கள் உருவாக்க படுவதில்லை!

    அவர்கள் கவிஞர்களாகவே பிறக்கின்றார்கள் !//

    உங்கள் அன்பால் விளைந்திருக்கும் அதிகப்படியான பாராட்டுக்கள். ஆயினும் நன்றி:)!

    //புத்தாண்டு வாழ்த்துக்கள் !//

    இனிய வாழ்த்துக்கள் ஜீவன்!

    பதிலளிநீக்கு
  40. வல்லிசிம்ஹன் said...

    //அன்பு ராமலக்ஷ்மி, பதினைந்தில் விளைந்த கவிதையா. அந்தப் பருவத்தின் கல்மிஷமில்லாத கற்பனாசக்தி கவிதை உருவகி இப்போது வந்து மனக்கதவைத் தட்டுகிறது.//

    ஆமாம் வல்லிம்மா. மனக் கதவை தட்டி இப்போதைய வாழ்த்துக் கவிதையிலும் தன்னைப் புகுத்திக் கொண்டது நானே எதிர்பாராதது:)!


    //இறைவன் கொடுத்த இடத்தையெல்லாம் மனிதன் ஆளுகிறான்.
    நல்லபடி யாக ஆளட்டும்.//

    புது வருடத்தில் நல்ல வார்த்தைகள் சொல்லியிருக்கிறீர்கள்.

    //உண்மை எப்போதும் மறையாது.அடுத்த தலைமுறை இதைக் காக்கும் உள்ளங்களாக வர இறைவனையே வேண்டுவோம்.//

    கண்டிப்பாக. இயற்கையைப் போற்றிக் காக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு இனி வரும் காலத்தில் சரியாகப் பரவிடட்டும். பலனை வரும் தலைமுறைகள் அனுபவிக்கட்டும்.

    // நல் புத்தாண்டு வாழ்த்துகள்மா.//

    நன்றி வல்லிம்மா!

    பதிலளிநீக்கு
  41. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் ஒவ்வொரு வரியும் நல்முத்து. முத்துச்சரம் வெகு அழகு. இப்புத்தாண்டில் எங்களுக்கு இது போன்ற முத்துச்சரங்கள் பல கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்...

    பதிலளிநீக்கு
  42. திவா
    அத்தனையும் நமக்கு என்றுதானே ராமல‌ஷ்மி சொல்லியிருக்கிறார் .அத்தனையும் எனக்கு என்றா சொன்னார்?
    அதற்கே நீங்கள் அவருக்கு இன்னொரு தங்கக் காசு தரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  43. முதல் கவிதையா? நம்பவே முடியல. ரொம்ப அழகான கவிதையக்கா.
    இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமும், அமைதியும் உண்டாக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பல தரமான பதிவுகளை நீங்கள் தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  44. எப்பப்பாத்தாலும் கவிதையா எழுதுதறீங்க.
    இந்தாண்டு கொஞ்சம் மாறுதலுக்கு வேற ஏதாவது எழுதுங்க.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. புத்தாண்டு, புகைப்படம் மற்றும் கவிதைக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  46. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

    பதிலளிநீக்கு
  47. அருமையான கவிதைகளையும், வாழ்த்து அட்டையையும், அதை விட அருமையாக தலைக்காவிரியின் புகைப்படத்தையும் வெளியிட்டதுக்கு நன்றி. வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. அமுதா said...

    // இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் ஒவ்வொரு வரியும் நல்முத்து. முத்துச்சரம் வெகு அழகு. இப்புத்தாண்டில் எங்களுக்கு இது போன்ற முத்துச்சரங்கள் பல கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்...//

    நன்றி. அந்த நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன் அமுதா. ஒவ்வொரு வரியையும் முத்தாகவும் கவிதையை முத்துச் சரமாகவும் நீங்கள் விளித்த விதத்தில் மனம் மகிழ்வடைந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும் போது எனது நோக்கமும் ஒவ்வொரு பதிவும் ஒரு முத்தாக, வலைப்பூ அதைக் கோர்த்தளிக்கும் சரமாக விளங்க வேண்டும் என்பதே. அதைக் காப்பாற்றிய மாதிரியே ஓர் உணர்வு உங்கள் வரிகளைக் காண்கையிலே.

    பதிலளிநீக்கு
  49. goma said...

    //திவா
    அத்தனையும் நமக்கு என்றுதானே ராமல‌ஷ்மி சொல்லியிருக்கிறார் .அத்தனையும் எனக்கு என்றா சொன்னார்?
    அதற்கே நீங்கள் அவருக்கு இன்னொரு தங்கக் காசு தரவேண்டும்.//

    அவர்தான் பெருந்தன்மையுடன் கேள்வி கேட்கும் முன்னரே பொற்காசை எடுத்து வைத்து விட்டாரே:)! ஆகையால் மேலே தொந்திரவு செய்யாமல் விட்டு விடலாம்! அவரிடம் பரிந்துரைக்க வந்த உங்கள் பாசத்துக்கு மிக்க நன்றி கோமா:)!

    பதிலளிநீக்கு
  50. கடையம் ஆனந்த் said...

    // முதல் கவிதையா? நம்பவே முடியல. ரொம்ப அழகான கவிதையக்கா.//

    நன்றி. நம்பித்தான் ஆகணும் ஆனந்த்.
    என் டைரியின் பழுப்பு நிறமாகிப் போன காகிதமே சாட்சி. அதே ஆண்டு மலரில்தான் “நெல்லிக் கனி” என்ற என் முதல் கதையும் வெளியானது. அந்த மலர் என் ஊரில் அம்மா வீட்டுப் பரணில் எங்கோ மாட்டிக் கொண்டிருக்கிறது. கண்டெடுக்க முடிந்தால் அதுவும் சீக்கிரம் வலையேறும். [ஆக, நான் உங்களையெல்லாம் அத்தனை சீக்கிரத்தில் தப்பிக்க விடுவதாக இல்லை:))!]

    //கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பல தரமான பதிவுகளை நீங்கள் தர வேண்டும்.//

    கண்டிப்பாகப் பொறுப்புணர்வுடன் செயல் படுவேன். வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. கார்த்திக் said...

    //எப்பப்பாத்தாலும் கவிதையா எழுதுதறீங்க.
    இந்தாண்டு கொஞ்சம் மாறுதலுக்கு வேற ஏதாவது எழுதுங்க.//

    சிறுகதைகள் சில தந்திருக்கிறேனே கார்த்திக். அவை போக என் வலைப்பூ முகப்பில் வகையின் பதிவில் நினைவுகள்-திண்ணை, நிகழ்வுகள்-நகைச்சுவை, விழுப்புணர்வு போன்ற லேபிள்களின் கீழ் சில கட்டுரைகளும் காணக் கிடைக்கும். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் சொல்லுங்கள்:)!

    // புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    உங்களுக்கும்:)!

    பதிலளிநீக்கு
  52. புத்தாண்டு வாழ்த்துக்கள்! கவி பேரரசி ராமலக்ஷி்மினு பட்டம் கொடுக்கணும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  53. அச்சச்சோ, கோமா அக்கா இங்கே வந்துட்டாங்களா!

    அதுக்கென்ன? இதோ பிடிங்க இன்னொரு ஒரு பொற் காசை! பரிந்துரைச்ச உங்களுக்கும் ஒரு பொற் காசு!

    வரட்டாஆஆ!
    (எஸ்கேப்பு)

    பதிலளிநீக்கு
  54. முத்துலெட்சுமி-கயல்விழி said...

    //புத்தாண்டு வாழ்த்துக்கள் :)//

    வரும் ஆண்டில் தாங்கள் எல்லா வளமும் பெற்றிட நானும் வாழ்த்துகிறேன் முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  55. ராமலக்ஷ்மி said...

    பாச மலர் said...

    //புத்தாண்டு, புகைப்படம் மற்றும் கவிதைக்கான வாழ்த்துகள்.//

    மூன்று வாழ்த்துக்களா பாசமலர்?
    நன்றி நன்றி நன்றி:)!

    பதிலளிநீக்கு
  56. சுபாஷினி said...

    // இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபாஷினி.

    பதிலளிநீக்கு
  57. கீதா சாம்பசிவம் said...

    //அருமையான கவிதைகளையும், வாழ்த்து அட்டையையும், அதை விட அருமையாக தலைக்காவிரியின் புகைப்படத்தையும் வெளியிட்டதுக்கு நன்றி.//

    இயற்கையைப் போற்றும் உங்களுக்கு இவை பிடித்துப் போனதில் வியப்பே இல்லை. தலைக் காவேரி உச்சியில் நின்று கண்ணுக்குள் நிரப்பிக் கொண்ட இயற்கையின் எழில் மறக்க முடியாதது. முதல் வருகைக்கு நன்றி மேடம்:)!

    பதிலளிநீக்கு
  58. sindhusubash said...
    // புத்தாண்டு வாழ்த்துக்கள்! கவி பேரரசி ராமலக்ஷி்மினு பட்டம் கொடுக்கணும் உங்களுக்கு.//

    இன்றுதான் ரிஷான் வலைச் சரத்தில் வலையரசிகளில் ஒருவராகக் கவுரவித்திருந்தார். நீங்கள் ஒரு படி மேலே போய் கவி பேரரசி ஆக்கி விட்டீர்கள்:). எல்லாம் அன்பாலும் பேரன்பாலும் விளையும் பாராட்டுக்கள்! அந்த அளவுக்கான தகுதி எல்லாம் இல்லைங்க. ஆயினும் நன்றி.

    பதிலளிநீக்கு
  59. திவா said...

    //அச்சச்சோ, கோமா அக்கா இங்கே வந்துட்டாங்களா!//

    ஆமா, எனக்கொண்ணுன்னா சும்மா விட்டிருவாங்களா:))?

    //அதுக்கென்ன? இதோ பிடிங்க இன்னொரு ஒரு பொற் காசை! பரிந்துரைச்ச உங்களுக்கும் ஒரு பொற் காசு!//

    ஆகா, ஆளுக்கொன்றா? அட்ரா சக்கை! தங்கம் விற்கிற விலையில் அள்ளிக் கொடுக்கும் உங்களுக்குதான் எவ்வளவு தாராள மனசு:))!

    //வரட்டாஆஆ!
    (எஸ்கேப்பு)//

    மெதுவா மெதுவா பார்த்துப் போங்க திவா. மேற்கொண்டு யாரும் கேட்க மாட்டோம்:)))!

    பதிலளிநீக்கு
  60. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  61. மதுரையம்பதி said...

    //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.//

    நல்வரவு மதுரையம்பதி. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  62. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    கவிதையே அட்டகாசமாகத்தான் தொடங்கியிருக்கிறீர்கள் மேடம்

    1979-ல் பத்தாவது வகுப்பில் இருக்கையில் //
    என்ன ஒற்றுமை, உங்களின் 10 எனது 1ன் ஆரம்பம்.....

    பதிலளிநீக்கு
  63. அமிர்தவர்ஷினி அம்மா said...

    //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    கவிதையே அட்டகாசமாகத்தான் தொடங்கியிருக்கிறீர்கள் மேடம்//

    நன்றி அமித்து அம்மா!

    ////1979-ல் பத்தாவது வகுப்பில் இருக்கையில் //
    என்ன ஒற்றுமை, உங்களின் 10 எனது 1ன் ஆரம்பம்.....//

    10,1 இரண்டிலும் இருக்கிறது ஒன்று:)! நீங்கள், ”அம்மா இங்கே வா வா” எனப் பாட்டு படிக்க ஆரம்பிக்கையில் நான் பாட்டு எழுத ஆரம்பித்து விட்டேனா:))?

    பதிலளிநீக்கு
  64. நம்ப பக்கம் எட்டி பாருங்க., உங்களுக்கு விருது இருக்கு,

    பதிலளிநீக்கு
  65. // ஆமா, எனக்கொண்ணுன்னா சும்மா விட்டிருவாங்களா:))?

    ஹிஹி நீங்க ரெண்டு பேரும் அவ்வளோ தடிமனான நண்பர்கள் - அதாங்க thick friends- ந்னு தெரியாது!
    :-))


    // ஆகா, ஆளுக்கொன்றா? அட்ரா சக்கை! தங்கம் விற்கிற விலையில் அள்ளிக் கொடுக்கும் உங்களுக்குதான் எவ்வளவு தாராள மனசு:))!//

    கொடுத்தா போச்சு! காசா பணமா? அடடா காசுதான் இல்லே!

    //மெதுவா மெதுவா பார்த்துப் போங்க திவா. மேற்கொண்டு யாரும் கேட்க மாட்டோம்:)))!//

    பொழச்சேன்!

    பதிலளிநீக்கு
  66. கடையம் ஆனந்த் said...

    // நம்ப பக்கம் எட்டி பாருங்க., உங்களுக்கு விருது இருக்கு,//

    தாங்கள் வழங்கியிருக்கும் விருதை மகிழ்ச்சியுடன் பெற்றேன் நன்றி ஆனந்த். நீங்கள் கேட்டுக் கொண்டபடி மூன்று பேருக்கென அன்றி மூன்று வகையினருக்கு பங்கிட்டும் கொடுத்து விட்டேன்:)!

    பதிலளிநீக்கு
  67. திவா said...
    //ஹிஹி நீங்க ரெண்டு பேரும் அவ்வளோ தடிமனான நண்பர்கள் - அதாங்க thick friends- ந்னு தெரியாது!
    :-))//

    இவ்விடத்தே ‘திக்’ என்பதற்கு ‘நெருங்கிய’ என்கிற வார்த்தையே சாலப் பொருத்தம் என்பதை அறிந்தும் அறியாத தெரிந்தும் தெரியாத அப்பாவி போல் சொல் விளையாடல் புரியும் இவரை என்ன செய்யலாம் கோமா?

    //பொழச்சேன்!//

    கோமா: "பொழச்சுப்போட்டும்னு விட்டிடலாம்”

    பொழச்சீங்க திவா:)))!

    பதிலளிநீக்கு
  68. யானையை லோகோவாக வைத்திருக்கும் திவா, திக் என்றால் தடிமன் என்றுதான் பொருள் கொள்வார்.பாவம் poweder boy விட்டு விடுவோம்.[பொடிப்பையன்]

    தங்கக்காசை லாக்கரில் வைக்க வேண்டும் வரட்டுமா திவா

    பதிலளிநீக்கு
  69. யானைப் பாகனே!கோமா அக்காவுக்கு அத்தனை பயமா.அது......உயரே வை
    keep it up

    பதிலளிநீக்கு
  70. //கோமா: "பொழச்சுப்போட்டும்னு விட்டிடலாம்”

    பொழச்சீங்க திவா:))) //

    ஹிஹிஹி டாங்கீஸ்!

    பதிலளிநீக்கு
  71. //பாவம் poweder boy விட்டு விடுவோம்.[பொடிப்பையன்]//
    ஷ்பெல்லிங் பாருங்க! ஹிஹிஹி

    // தங்கக்காசை லாக்கரில் வைக்க வேண்டும் வரட்டுமா திவா//
    இதுவரை எவ்ளோ சேத்தீங்க?

    // யானைப் பாகனே!கோமா அக்காவுக்கு அத்தனை பயமா//
    எங்கேயாவது கடிச்சுடப்போறீங்கன்னுதான்!

    //.அது......உயரே வை
    keep it up//

    :-))))))))))))))

    என்ன புதுசா வெளிநாட்டுலேந்து வந்தா மாதிரி ரெண்டு மொழிலேயும் சொல்றீங்க? அப்படி இல்லாமலே புரிஞ்சுப்போம். :-))

    பதிலளிநீக்கு
  72. @ கோமா & தி்வா,
    புலவர்களே, சொல் விளையாடலில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்து விட்டீர்கள்:)!

    திவா,
    //ஹிஹிஹி டாங்கீஸ்!//

    உங்கள் நன்றியை கோமாவை மதிப்பில் "உயரே உயரே" வைப்பதில் காட்டிடுங்கள்:)! மீதிப் பொற்காசுகளை அவரது அக்கறையான அறிவுரையை ஏற்று லாக்கி்ரில் பூட்டிடுங்கள். [என் மற்றைய பதிவுகளுக்குத் தர தேவைப் படுமல்லவா:))?]

    பதிலளிநீக்கு
  73. //உங்கள் நன்றியை கோமாவை மதிப்பில் "உயரே உயரே" வைப்பதில் காட்டிடுங்கள்:)!//

    அக்கா நகைச்சுவை உணர்வு இருக்கிற எல்லாருமே என் மதிப்பில் உயரேதான் இருக்காங்க! அது இல்லாதவங்க? -they have been sufficiently punished!

    // மீதிப் பொற்காசுகளை அவரது அக்கறையான அறிவுரையை ஏற்று லாக்கி்ரில் பூட்டிடுங்கள். [என் மற்றைய பதிவுகளுக்குத் தர தேவைப் படுமல்லவா:))?] //
    கஜானா காலி. ஆனைக்கு தீனிக்கு கொடுக்க ஆரம்பிச்சது. இப்ப து.கா து.கா ந்னு ஓட வேண்டி இருக்கு!
    ரொம்பவே கத்தி போடுட்டேன். இந்த பதிவுக்கு இனி அவ்ளோதான்! ரிலாக்ஸ்! பிட்டிலே பாக்கலாம்!

    பதிலளிநீக்கு
  74. திவா said...

    //ரொம்பவே கத்தி போடுட்டேன். இந்த பதிவுக்கு இனி அவ்ளோதான்!//

    ஹா ஹா. பயந்து விட்டீர்களா? இந்தப் பதிவுக்கு நான் கேட்டதென்னவோ ஒரு பொற்காசுதான். கொடை வள்ளலாய் கொடுத்து வீட்டீர்கள், போதும் போதும்.

    //அக்கா நகைச்சுவை உணர்வு இருக்கிற எல்லாருமே என் மதிப்பில் உயரேதான் இருக்காங்க! அது இல்லாதவங்க?//

    அது இல்லாட்டி சிரமம்தான் திவா. நகைச்சுவை உணர்வு என்கிற ஒன்று இருப்பதால்தான் இந்த உலகத்தில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நம் மக்கள் இன்முகமாய் எதிர்கொண்டு புன்சிரிப்புடன் சமாளித்து.. போய்க் கொண்டே இருக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்தச் சுவை வலையில் வஞ்சனையின்றி கிடைத்து வருவது நாம் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

    // ரிலாக்ஸ்! பிட்டிலே பாக்கலாம்!//

    கண்டிப்பாக:)! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  75. திவா
    எல்லா யானைக்கும் ஒரு நாள் அடி சருக்கும் ஹிஹிஹிஹி
    [சமாதானக் கொடி பறக்கட்டும்]

    பதிலளிநீக்கு
  76. goma said...

    // திவா
    எல்லா யானைக்கும் ஒரு நாள் அடி சருக்கும் ஹிஹிஹிஹி//

    உண்மைதாங்க கோமா. அடி ச"று"க்கும், ஹிஹி.

    //[சமாதானக் கொடி பறக்கட்டும்]//

    நன்று புலவர்களே, இத்துடன் இப் பட்டி மன்றம் நிறைவுறுகிறது:))!

    வாழ்க வளமுடன்.

    நன்றி திவா! நன்றி கோமா!

    பதிலளிநீக்கு
  77. இப்பத்தான் படிச்சேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//


    மென்மேலும் பல நல்ல கவிதைகளை இந்த ஆண்டும் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நானும் மறுக்கா கூவிக்கறேன்.

    பதிலளிநீக்கு
  78. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !


    //மென்மேலும் பல நல்ல கவிதைகளை இந்த ஆண்டும் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    அதுவே என் அவாவும்!! கண்டிப்பா இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கும்னு எங்களுக்குத் தெரியும்!! :-)

    பதிலளிநீக்கு
  79. புதுகைத் தென்றல் said..
    ////மென்மேலும் பல நல்ல கவிதைகளை இந்த ஆண்டும் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நானும் மறுக்கா கூவிக்கறேன்.////

    வாழ்த்துக்களுக்கு நன்றி தென்றல். கண்டிப்பாக முயற்சிப்பேன்.

    பதிலளிநீக்கு
  80. சந்தனமுல்லை said...

    //அதுவே என் அவாவும்!! கண்டிப்பா இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கும்னு எங்களுக்குத் தெரியும்!! :-)//

    நிறைய அல்ல, இன்னும் கொஞ்சம்:)!
    என் முதல் கவிதையை வலையேற்றியிருப்பதற்கு நீங்களும் ஒரு காரணமே. முதலில் பதினைந்து வயதின் எழுத்து நடையைப் பார்த்து சற்று தயங்கி நின்றிருந்தேன். நீங்கள் உங்களது பள்ளி நோட்டுப் புத்தகத்தை திறந்தீர்களா:)? நானும் திறந்து விட்டேன்:)!

    பதிலளிநீக்கு
  81. உங்கள் நற்சிந்தனை என்றும் தொடர, எங்கும் படர, இறைவன் அருளட்டும். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  82. @ கவிநயா

    உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  83. //இயற்கை அன்னையின் கருணையும்
    உவகையுடன் பொங்கி வழியும்!
    வாழ்வீர் வளமுடன் யாவரும்!//

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! (கொஞ்சம் லேட் ஆகிடுச்சி :-)

    பதிலளிநீக்கு
  84. " உழவன் " " Uzhavan " said...

    //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! (கொஞ்சம் லேட் ஆகிடுச்சி :-)//

    நீங்கள் லேட் இல்லை.மிகச் சரியாக இன்று எனது வலைப்பூவுக்கு இரண்டாவது ஆண்டு தொடங்குகிறது. உங்கள் வாழ்த்தை அதற்கானதாய் ஏற்றுக் கொண்டு விட்டேன்:)! நன்றி உழவன்!

    பதிலளிநீக்கு
  85. //மிகச் சரியாக இன்று எனது வலைப்பூவுக்கு இரண்டாவது ஆண்டு தொடங்குகிறது. உங்கள் வாழ்த்தை அதற்கானதாய் ஏற்றுக் கொண்டு விட்டேன்:)! //

    ஓ.. அப்படியா.. மிக்க மகிழ்ச்சி மேடம்.. வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  86. ”உழவன் " " Uzhavan " said...

    //ஓ.. அப்படியா.. மிக்க மகிழ்ச்சி மேடம்.. வாழ்த்துக்கள் :-)//

    நன்றி:)!

    பதிலளிநீக்கு
  87. "கண்டதைப்படிக்க துடிக்காமல்
    கற்றவர் போல் தினம் நடிக்காமல்"
    "கண்டதைப்படிக்க துடிக்காமல்
    கற்றவர் போல் தினம் நடிக்காமல்"
    பசங்க படத்தில் வரும் பாடலின் டியூனில் பாடினால் உங்கள் கவிதை சூப்பராக இருக்கிறது.
    சுஜாதா இருந்தாரென்றால் பதம்பிரித்து எதுகை மோனை பார்த்து இலக்கண சுத்தமாய் பிரித்துக்காண்பிப்பார்....

    பதிலளிநீக்கு
  88. @ எஸ்.கா,

    அட, ஆமாம்:))! அந்த ராகம் அசத்தலாய் பொருந்துகிறது.

    சுஜாதா? என் கவிதையை? என்ன எஸ்.கா:)?

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin