புதன், 17 டிசம்பர், 2008

விடையற்ற வியப்புக் குறிகள்!!!






'ன் வயிற்றில்
உதித்த நான்-
உத்தமனாய் வாழ்ந்து காட்டி-
உன் பெயரை
ஊர் உலகம்-
உயர்வாகப் போற்றிடச்
செய்வேனம்மா !'
**

மரித்திட்ட
தன் தாய்க்கு-
தந்திட்ட வாக்குதனை-
வேதமெனக் கொண்டு
வேலை தேடி-
வீதி வழி நடந்தானே!
**

நெஞ்செல்லாம்
இலட்சியக் கனவோடு-
அஞ்சாது செய்திட்ட
சத்தியத்தின் நினைவோடு-
சென்றவனின்
கண்ணிலே பட்டவன்தான்-
பிக்பாக்கெட் தொழிலினிலே
பிரபலக்கேடி!**

விழிமுன்னே மற்றவரின்
பர்சு ஒன்று-
பரிதாபமாய்
பறி போவதைப்
பார்த்திட்ட அவனுமே
'எவன் சொத்தோ போகுதடா
எனக்கென்ன கவலையடா?'
என்று-
இன்று இப்
புனிதப்
பூமியிலே-
போற்றிக் காக்கப்படும்
பொன்னான கொள்கை
புரியாதவனாய்-
பாய்ந்தோடிக்
கேடியினைப் பிடித்தானே!
**

கேடியெனும்
பட்டமெல்லாம் சும்மாவா ?
கில்லாடியான அவன்-
கிட்டத்தில் ஓடிவந்த
காவலரின்
கரத்தினையே-
தேடிப் பற்றி
சம்திங் தந்தானே!
**

நீதி
காக்க வேண்டிய
காவலரோ-
கரன்சி செய்த வேலையினால்-
கமுக்கமாகச் சிரித்தபடி-
கயவனவன் முதுகினிலே-
'செல்'லுமாறு
செல்லமாகத்
தட்டி விட்டு-
அப்பாவியான இவன்
கழுத்தினிலே கை போட்டு-
'அட
நடடா, இது புது கேசு '
என்றாரே!
**** **** ****

லர வேண்டிய பருவத்திலே
மடிய நேரும்
மொட்டுக்கள்!!!**

கலர் கலராய்
கண்ட கனவுகள்
கருகிப் போகும்
சோகங்கள்!!!
**

பழி ஓரிடம்
பாவம் ஓரிடம்-
பரிதாபப் பட
யாருமின்றி
பரிதவிக்கும்
பலியாடுகள்!!!
**

'அவரவர் விதி'யென்றும்
'அவன் தலைச் சுழி'யென்றும்-
ஆராய அவகாசமின்றி
அவசர கதியில்
அள்ளித் தெளிக்கப் படும்
ஆழமற்ற
அனுதாபங்கள்!!!
**

ஆங்கோர் பக்கம்-
சி.பி.ஐ
ஆதாரங்களுடன்
கைதாகும்
கனவான்கள்-
சில மணியில்-
சிரித்தபடி
சிறை விட்டு
விடுதலையாகி
வெளியேறும்
விநோதங்கள்!!!
**

அவருக்காக
குரல் கொடுத்துக்
கவலைப் படக்
கணக்கற்றக்
கூட்டங்கள்!!!
**

இப்படி
ஏராளமாய்
இருக்கின்றன-
விடையற்ற
வியப்புக் குறிகள்!!!
**** **** ****



[படம்: இணையத்திலிருந்து]




'இறைவனிடம் ஒரு கேள்வி' என்ற தலைப்பில் 1984-ல் திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரிலும்; கடைசி சில பத்திகளின் சேர்க்கையுடன் June 23, 2005 திண்ணை இணைய இதழிலும்; 4/11/2008 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும் 6 மே 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளியாகிய கவிதை.



75 கருத்துகள்:

  1. //விடையற்ற
    வியப்புக் குறிகள்!!!//

    தலைப்பை ரசித்தேன். வாழ்வில் காணும் வியப்புக்குறிகளுக்கும் கேள்விக்குறிகளுக்கும் முற்றுப்புள்ளியே இல்லை போலும்.

    பதிலளிநீக்கு
  2. கவிநயா said...
    //தலைப்பை ரசித்தேன்.//

    நான் தங்களது பின்னூட்டத்தை வெகுவாகு ரசித்தேன்.

    //வாழ்வில் காணும் வியப்புக்குறிகளுக்கும் கேள்விக்குறிகளுக்கும் முற்றுப்புள்ளியே இல்லை போலும்.//

    அருமையாக சொல்லி விட்டீர்கள். உண்மைதான்.

    முதல் வருகைக்கும் ரசித்து இட்ட கருத்துக்கும் நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  3. விடையற்ற அல்லது விடை சொல்ல இயலா
    வியப்புக் குறிகள் விடுகதையாய்
    வில்லத்தனத்தோடு அனைவரின் வாழ்விலும்
    நிறைந்து காணப்படுகின்றது நீக்கமுற.. :)

    அழகான குமுறல்... வாழ்த்துக்கள் அக்கா!

    (ஹிஹிஹி எல்லாம் பூவோடு சேர்ந்து மணக்கும் நார் தான்)

    பதிலளிநீக்கு
  4. தமிழ் பிரியன் said...

    //விடையற்ற அல்லது விடை சொல்ல இயலா
    வியப்புக் குறிகள் விடுகதையாய்
    வில்லத்தனத்தோடு அனைவரின் வாழ்விலும்
    நிறைந்து காணப்படுகின்றது நீக்கமுற.. :)//

    கவித்துவமான கருத்து.

    //அழகான குமுறல்...//

    நடைமுறையில் நாளும் பார்ப்பது.

    //வாழ்த்துக்கள் அக்கா!

    (ஹிஹிஹி எல்லாம் பூவோடு சேர்ந்து மணக்கும் நார் தான்)//

    நன்றி தமிழ் பிரியன்:))! (இப்படி கவிக்கருத்து சொல்வதை நிறுத்தி விடலாமா என நினைத்துக் கொண்டிருந்த போது நீங்களும் என் வழிக்கு வந்து வேண்டாம் என்கிறீர்கள்:)! அதற்கும் நன்றி.)

    பதிலளிநீக்கு
  5. //கலர் கலராய்
    கண்ட கனவுகள்
    கருகிப் போகும்
    சோகங்கள்!!!
    **//

    கண் கலங்க வைக்கும் பதிவு!!!

    பதிலளிநீக்கு
  6. எப்படி அப்பாவிகள் மாட்டிக் கொள்ள அதிகாரிகள் மார் தட்டுகிறார்கள் என்பதை, நாமே தெருவில் நடந்து சென்று பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வ[ரி/லி]கள்.

    நல்லவனா இருப்பவனையும், நயவஞ்சகமா மாற்றும் ஒரு காலகட்டத்தில் தான் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது, கூடவே வருத்தமும் தொற்றி கொள்கிறது.

    நாமே கண்கூடா பார்க்கிறோமே இது போல நடப்புக்களை. போதாதற்கு அஞ்சும், பத்தும் திருடினவன், அஞ்சா பத்தா என்று கம்பி எண்ண, கோடிகளில் திருடுவோர், கோமான்களாக வலம் வரும் அவலத்தையும்.

    எல்லோர் மன ஓட்டங்களையும் பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை. அற்புதம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அழகிய கவிதை வழி புலம்பல்.

    புதியதோர் முயற்சி(எனக்கு தெரிந்து)

    பதிலளிநீக்கு
  8. நாட்டின் தற்போதைய நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறது உங்கள் கவிதை.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. "விடையற்ற வியப்புக்குறிகள்!!!" - தலைப்பே அருமை.

    /*இப்படி
    ஏராளமாய்
    இருக்கின்றன-
    விடையற்ற
    வியப்புக் குறிகள் */
    உண்மை... எண்ணிலடங்கா விடையற்ற
    வியப்புக் குறிகள்

    பதிலளிநீக்கு
  10. தத்தத்தட தத்தத்தட என்றே
    சந்தம் மிக தோன்ற
    எழுதிட்ட கவி கண்டு
    காண மயிலாட வான்கோழியொன்று
    பின்னூட்டமிட்டேனே!

    பதிலளிநீக்கு
  11. நாட்டின் தற்போதைய நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறது உங்கள் கவிதை அக்கா.

    பதிலளிநீக்கு
  12. தத்தத்தட தத்தத்தட என்றே
    சந்தம் மிக தோன்ற
    எழுதிட்ட கவி கண்டு
    காண மயிலாட வான்கோழியொன்று
    பின்னூட்டமிட்டேனே!
    அதை
    நானும்
    பின் தொடர்ந்து சென்றேனே!

    :))))

    பதிலளிநீக்கு
  13. விடையற்ற அல்லது விடை சொல்ல இயலா
    வியப்புக் குறிகள் விடுகதையாய்
    வில்லத்தனத்தோடு அனைவரின் வாழ்விலும்
    விடை தேடச்சொல்லும்
    நேரமும்
    வியப்படையச்செய்யும்
    நேரமும்
    நிகழும்
    காலம்
    நிதர்சனமாய்
    உண்மை சொல்லி செல்கிறது
    உலகம் புரிதல்
    உன்னதமானது
    உலகை புரிதல் கூட
    மிக உன்னதமானது

    (ஹய்ய்ய்ய்யா நானும் கண்டினியூவா வந்திட்டேனேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!)

    பதிலளிநீக்கு
  14. thevanmayam said...

    \\//கலர் கலராய்
    கண்ட கனவுகள்
    கருகிப் போகும்
    சோகங்கள்!!!
    **//

    கண் கலங்க வைக்கும் பதிவு!!!//

    இந்த வகை சோகங்கள் ஆங்காங்கே அன்றி எங்கெங்கும் பரவிக் கிடப்பதுதான் பெரிய சோகம்.

    கருத்துக்கு நன்றி தேவன்.

    பதிலளிநீக்கு
  15. மறுபடி ஒரு அழகான வரிகளுடன் ஆதங்கத்தை பதிவு செய்யும் கவிதை..


    //மலர வேண்டிய பருவத்திலே
    மடிய நேரும்
    மொட்டுக்கள்//

    ம்ம்..:((

    //கலர் கலராய்
    கண்ட கனவுகள்
    கருகிப் போகும்
    சோகங்கள்//

    கொடுமைதான், ராமலஷ்மி..வார்த்தைகள் இயல்பாய் வந்துக் கொட்டுகின்றன..உங்களுக்கு!


    //பழி ஓரிடம்
    பாவம் ஓரிடம்-
    பரிதாபப் பட
    யாருமின்றி
    பரிதவிக்கும்
    பலியாடுகள்//

    :((

    பதிலளிநீக்கு
  16. தலைப்பிலிருந்து, முடிவு வரை ஒரு சந்தக்கவிதையின் நடையில் மிக அருமையாய் இருக்கிறது, கவிதையின் கரு யாரும் சொல்லாதது.

    ஆங்கோர் பக்கம்-
    சி.பி.ஐ
    ஆதாரங்களுடன்
    கைதாகும்
    கனவான்கள்-
    சில மணியில்-
    சிரித்தபடி
    சிறை விட்டு
    விடுதலையாகி
    வெளியேறும்
    விநோதங்கள்!!!

    எதுகை,
    மோனை
    எதார்த்தம்
    பின்றீங்க ராம் மேடம்.

    பதிலளிநீக்கு
  17. வைரமுத்து ஸ்டைலில் படிக்க மிக அருமையாய் இருக்க்றது.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப நாட்களுக்கு முன் எழுதினாலும் 'புதுக் கவிதை'யாகத் தான் இருக்கிறது. வழமை போல் ஆழமான வரிகள். சமூக அக்கறை. 'வார்ப்பு' க்கு வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  19. சதங்கா (Sathanga) said...

    //எப்படி அப்பாவிகள் மாட்டிக் கொள்ள அதிகாரிகள் மார் தட்டுகிறார்கள் என்பதை, நாமே தெருவில் நடந்து சென்று பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வ[ரி/லி]கள்.//

    ஆம் வலிகளே!

    //நாமே கண்கூடா பார்க்கிறோமே இது போல நடப்புக்களை. போதாதற்கு அஞ்சும், பத்தும் திருடினவன், அஞ்சா பத்தா என்று கம்பி எண்ண, கோடிகளில் திருடுவோர், கோமான்களாக வலம் வரும் அவலத்தையும்.//

    அழகாச் சொல்லிட்டீங்க சதங்கா நாட்டின் அவலத்தை.

    //எல்லோர் மன ஓட்டங்களையும் பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை. அற்புதம். வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சதங்கா.

    பதிலளிநீக்கு
  20. அதிரை ஜமால் said...

    //அழகிய கவிதை வழி புலம்பல்.

    புதியதோர் முயற்சி(எனக்கு தெரிந்து)//

    கருத்துக்கு நன்றி ஜமால். புலம்பல்களாகவே முடிந்து விடாமல் அவலங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்பதே என் ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  21. கவிதையை படிக்கும்போது,
    ஒரு சமூக சிந்தனைதான்
    மேலோங்குகிறது!
    அபாண்டமாக குற்றம்
    சாட்டப்பட்டு,இதுபோன்ற
    நிலை ஒருவனுக்கு ஏற்ப்பட்டால்?
    அதனை துணிவுடன் எதிர் கொண்டு
    வெல்லக்கூடிய,
    வல்லமையுடனும்,வலிமையுடனும்
    இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  22. புதுகைத் தென்றல் said...
    //நாட்டின் தற்போதைய நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறது உங்கள் கவிதை.//

    நாட்டின் எப்போதைய நிலைமையும் இப்படியே இருப்பதால்தான் இக்கவிதையின் தலைப்பு 'விடையற்ற வியப்புக்குறிகள்’ என்றாயிற்று.

    நான் பள்ளி இறுதியில் இருக்கும் போது ‘மலர்கின்ற பருவத்திலே’ என்ற தலைப்பைக் கொடுத்து கவிதை எழுதச் சொன்னார்கள். அப்போது தோன்றிய கவிதையே இது.

    **“மலர்கின்ற பருவத்திலே
    வாடிவிடும் இப்பயிரையெல்லாம்
    வளப்படுத்தி நீர்வார்க்க
    யார் உள்ளார்
    சொல் இறைவா?”**
    என முடித்திருப்பேன்.

    பின் அதுவே கல்லூரி ஆண்டு மலரில்
    ‘இறைவனிடம் ஒரு கேள்வி’யானது.
    ஆண்டு பல தாண்டியும் நாட்டு நிலைமைகள் இப்படியே இருக்க..இதற்கு விடையே இல்லையா என ’வியப்புக்குறி’யாகி விட்டது கவிதை.

    //பாராட்டுக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  23. அமுதா said...

    // "விடையற்ற வியப்புக்குறிகள்!!!" - தலைப்பே அருமை.//

    கவிநயாவுக்கு அடுத்து தலைப்பை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி. ஒவ்வொரு பத்தியும் வியப்புக் குறிகளுடனேயே முடிகின்றன.

    // /*இப்படி
    ஏராளமாய்
    இருக்கின்றன-
    விடையற்ற
    வியப்புக் குறிகள் */

    உண்மை... எண்ணிலடங்கா விடையற்ற
    வியப்புக் குறிகள்//

    மிகச் சரி. எண்ணிடலங்காதவைதான். கருத்துக்கும் ரசனைக்கும் நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  24. SurveySan said...

    //simply superb.

    kalakkitteenga.

    elimayaana varigal,attagaasam.//

    எளியவர்களின் வாழ்க்கையை எளிய வரிகளிலேயே சொல்ல முயன்றிருக்கிறேன்.

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சர்வேசன்.

    பதிலளிநீக்கு
  25. முத்துலெட்சுமி-கயல்விழி said...

    //தத்தத்தட தத்தத்தட என்றே
    சந்தம் மிக தோன்ற
    எழுதிட்ட கவி கண்டு
    காண மயிலாட
    வான்கோழியொன்று//

    வான்கோழி வடிக்கும் வரிகளா இவை?

    நானல்ல கான மயில்
    நீங்கள்தான் கவிக் குயில்
    சொல்கிறது உங்கள் முதல்
    இரண்டு வரிகள்:)!

    [நினைவிருக்கட்டுமப்பா, உங்கள் திண்ணை பதிவின் நடையிலும் தமிழிலும் மயங்கித்தான் உங்களுக்கு வரைந்த மடலாகவே என் ‘திண்ணை நினைவு’களைப் பதிந்தேன்.]

    பதிலளிநீக்கு
  26. கடையம் ஆனந்த் said...
    //நாட்டின் தற்போதைய நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறது உங்கள் கவிதை அக்கா.//

    கருத்துக்கு நன்றி ஆனந்த். புதுகைத் தென்றலுக்கு அளித்த பதிலே தங்களுக்கும். சற்றே நீண்ட பதில். பொறுமை இருந்தால் படியுங்கள்:))!

    பதிலளிநீக்கு
  27. ஆயில்யன் said...

    //அதை
    நானும்
    பின் தொடர்ந்து சென்றேனே!

    :))))//

    அதை
    நானும்
    வெகுவாகு ரசித்தேனே!

    :))!

    பதிலளிநீக்கு
  28. ஆயில்யன் said...

    //நிகழும்
    காலம்
    நிதர்சனமாய்
    உண்மை சொல்லி செல்கிறது
    உலகம் புரிதல்
    உன்னதமானது//

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.


    //(ஹய்ய்ய்ய்யா நானும் கண்டினியூவா வந்திட்டேனேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!)//

    முத்துலெட்சுமியையும் தமிழ் பிரியனையும் தொடர்ந்து வந்து.. சொல்லியிருக்கும் கருத்துக்கும் கவிதைக்கும் நன்றிகள் பல ஆயில்யன்:)!

    பதிலளிநீக்கு
  29. சந்தனமுல்லை said...

    //மறுபடி ஒரு அழகான வரிகளுடன் ஆதங்கத்தை பதிவு செய்யும் கவிதை..//

    கவிதையின் கருத்தினை உள்வாங்கி இட்டிருக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி சந்தனமுல்லை.

    பதிலளிநீக்கு
  30. அமிர்தவர்ஷினி அம்மா said...

    //தலைப்பிலிருந்து, முடிவு வரை ஒரு சந்தக்கவிதையின் நடையில் மிக அருமையாய் இருக்கிறது//

    அப்படியா சொல்கிறீர்கள் ! பாருங்க இங்கும் ஒரு வியப்புக்குறி!

    //கவிதையின் கரு யாரும் சொல்லாதது.//

    பதினேழு வயதில் எழுதியது. ஒரு தலைப்புக்காக யோசித்ததில் பிறந்த கரு. புதுகைத் தென்றலுக்கான பதிலில் இருக்கிறது பாருங்களேன் நேரம் இருந்தால்.

    //எதுகை,
    மோனை
    எதார்த்தம்//

    எதார்த்தம் எப்போதும் எவர் மனதையும் தொட்டு விடுகிறது, இல்லையா அமித்து அம்மா. கருத்துக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. SUREஷ் said...

    //வைரமுத்து ஸ்டைலில் படிக்க மிக அருமையாய் இருக்க்றது.//

    உயரிய பாராட்டு. ஸ்டைல்தானே, அப்போ சரி:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி SUREஷ்.

    பதிலளிநீக்கு
  32. அனுஜன்யா said...

    //ரொம்ப நாட்களுக்கு முன் எழுதினாலும் 'புதுக் கவிதை'யாகத் தான் இருக்கிறது.//

    **'புதுக் கவிதை’யாகத்தான்**! ரசித்தேன்.ம்ம். இன்றைய காலக் கட்டத்துக்கும் பொருந்திப் போவதால்!

    //வழமை போல் ஆழமான வரிகள். சமூக அக்கறை.//

    நன்றி அனுஜன்யா.

    //'வார்ப்பு' க்கு வாழ்த்துக்கள்.//

    வழி காட்டிய ரிஷானுக்கும் இங்கு என் நன்றி. வார்ப்புக்கு என் இக்கால கவிதைகளை விட அக்காலக் கவிதைகளிலேதான் ஈர்ப்பு:). இதுவரை வெளியான இரண்டும் கல்லூரி வயதில் படைத்தவையே.

    பதிலளிநீக்கு
  33. ஜீவன் said...

    //கவிதையை படிக்கும்போது,
    ஒரு சமூக சிந்தனைதான்
    மேலோங்குகிறது!//

    ஆம்,சமூகத்தை நோக்கிய கேள்விகள்தான் விடையற்று நிற்கின்றன இங்கே!

    //அபாண்டமாக குற்றம்
    சாட்டப்பட்டு,இதுபோன்ற
    நிலை ஒருவனுக்கு ஏற்ப்பட்டால்?
    அதனை துணிவுடன் எதிர் கொண்டு
    வெல்லக்கூடிய,
    வல்லமையுடனும்,வலிமையுடனும்
    இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்!//

    உண்மைதான் ஜீவன். ஆனால் அதை உருவாக்க வேண்டியவர்களே இத்தகு நிலைமைகளுக்குக் காரணகர்த்தாவாகவும் இருப்பதுதான் சோகம். நீங்கள் சொல்லும் அந்த வல்லமை வலிமையுடனான இளைய சமுதாயத்துக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    நன்றி ஜீவன்.

    பதிலளிநீக்கு
  34. பெருசு பெரிசா எழுதுறதால உங்களைப் பெரும் கவிஞர்னு சொல்லலாமாக்கா :)))

    பதிலளிநீக்கு
  35. இன்னும் 10 வருடங்கள் கழித்து மறுபதிப்பு செய்தாலும்,(எதையும் மாற்றி அமைக்க முடியாத இயலாமையுடன்)பலராலும்
    இந்தப் பதிவு இரசிக்கப்படும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  36. ரொம்ப அருமை. நான் சொல்ல நினைத்ததையெல்லாம் முன்னமே பின்னூட்டி விட்டார்கள் மக்கள்.

    பதிலளிநீக்கு
  37. அர்த்தமுள்ள கவிதை ராமலஷ்மி! விடையற்ற கேள்விகள் பற்றிக்கூட நீங்க கவிதை எழுதலாம்

    பதிலளிநீக்கு
  38. அருமையான படைப்பு
    நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன் என் சுரேஷ்

    பதிலளிநீக்கு
  39. //மலர வேண்டிய பருவத்திலே
    மடிய நேரும்
    மொட்டுக்கள்!!!
    //

    வலியுள்ள வரிகள்!!

    //விடையற்ற வியப்புக் குறிகள்!!!//

    தலைப்பே வித்தியாசமாய், புருவம் தூக்கி விழிக்கிறேன் வியப்புடன்!!

    பதிலளிநீக்கு
  40. //கலர் கலராய்
    கண்ட கனவுகள்
    கருகிப் போகும்
    சோகங்கள்!!!//

    நெஞ்சம் கனத்து ஏதோ சொல்ல நினைக்கும் உதடுகள் வார்த்தைகளின்றி தேடுகிறது காற்றலையில்..

    பதிலளிநீக்கு
  41. "விடையற்ற வியப்புக்குறிகள்!!!"

    ம்ம்ம்...எனக்கு ஏன் இப்பிடில்லாம் எழுதத் தோன்ற மாட்டேங்குது???
    அன்புடன் அருணா

    பதிலளிநீக்கு
  42. வியப்புக் குறிகளே விடைகளை அடைத்து நிற்கின்றன. அவற்றை வில்லக்கிக் கேள்விகளை வெறும் குறிகளாக மாற்றுவது எப்போதோ.
    முடிந்த வரை சமன் செய்யப் பார்ப்போம்.
    அருமையான அன்பு உள்ளம் உங்களுக்கு.
    அழகான கவியாக வெளி வந்திருக்கிறது.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  43. புதுகை.அப்துல்லா said...

    //பெருசு பெரிசா எழுதுறதால உங்களைப் பெரும் கவிஞர்னு சொல்லலாமாக்கா :)))//

    பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள். எதார்தத்தை எழுதும் எளிய கவிஞர்னு வைத்துக் கொள்வோமா:)?

    பதிலளிநீக்கு
  44. புதுகை.அப்துல்லா said...

    //உண்மையிலேயே நல்லா இருக்குக்கா :)//

    பாராட்டுக்கு நன்றி அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  45. r.selvakkumar said...

    //இன்னும் 10 வருடங்கள் கழித்து மறுபதிப்பு செய்தாலும்,(எதையும் மாற்றி அமைக்க முடியாத இயலாமையுடன்)பலராலும்
    இந்தப் பதிவு இரசிக்கப்படும் என்றே எனக்குத் தோன்றுகிறது.//

    அப்படி ஒரு இயலாமையிலேயேதான் காலம் ஓடும் என்பதுதான் நிதர்சனமாய் இருந்தாலும், நம்புவோம்.. எப்படியோ ஒரு நல்ல மாற்றம் நிகழும் என:)!

    வருகைக்கும் கருத்துக்கு நன்றி செல்வக்குமார்.

    பதிலளிநீக்கு
  46. சின்ன அம்மிணி said...

    //ரொம்ப அருமை. நான் சொல்ல நினைத்ததையெல்லாம் முன்னமே பின்னூட்டி விட்டார்கள் மக்கள்.//

    நன்றி அம்மிணி. அத்தனை பேரின் கருத்தையும் உங்கள் கருத்தாக எடுத்துக் கொள்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  47. ஷைலஜா said...

    //அர்த்தமுள்ள கவிதை ராமலஷ்மி!//

    நன்றி ஷைலஜா.

    //விடையற்ற கேள்விகள் பற்றிக்கூட நீங்க கவிதை எழுதலாம்//

    அவையும் இவை போல ஏராளமாகவேதான் இருக்கின்றன, இல்லையா?

    பதிலளிநீக்கு
  48. N Suresh said...

    //அருமையான படைப்பு
    நல்வாழ்த்துக்கள்.//

    நன்றி சுரேஷ். ‘வார்ப்பு’ இணைய இதழில் இக்கவிதைக்கு நீங்கள் தந்திருந்த விரிவான கருத்துக்கும் இங்கே மறுபடி நன்றி.

    பதிலளிநீக்கு
  49. // PoornimaSaran said...

    //விடையற்ற வியப்புக் குறிகள்!!!//

    தலைப்பே வித்தியாசமாய், புருவம் தூக்கி விழிக்கிறேன் வியப்புடன்!!

    தலைப்பை புருவம் தூக்கி வியப்புடன் ரசித்த உங்களுடன் சில மேலதிகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவா:)? முதல் பாகத்தில் ஒவ்வொரு பத்தியும் ஒரு வியப்புக் குறியுடனும் இரண்டாம் பாகத்தில் கேள்விகளின் வீரியத்தில் ஒவ்வொரு பத்தியும் 3 வியப்புக் குறிகளுடன் முடிகின்றன. விடையற்று நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
  50. PoornimaSaran said...

    \\//கலர் கலராய்
    கண்ட கனவுகள்
    கருகிப் போகும்
    சோகங்கள்!!!//

    நெஞ்சம் கனத்து ஏதோ சொல்ல நினைக்கும் உதடுகள் வார்த்தைகளின்றி தேடுகிறது காற்றலையில்..\\

    இது போன்றவர்களின் வாழ்க்கை திசை மாறிப் போய் விடுமோ என்கிற பயமும் மனதைக் கவ்வுகிறதே:(.

    பதிலளிநீக்கு
  51. அன்புடன் அருணா said...

    //"விடையற்ற வியப்புக்குறிகள்!!!"

    ம்ம்ம்...எனக்கு ஏன் இப்பிடில்லாம் எழுதத் தோன்ற மாட்டேங்குது???//

    மூன்று வியப்புக்குறிகளுடன் முடிந்த தலைப்புக்கு மூன்று கேள்விக்குறிகளுடன் முடியுமாறு கருத்து கூறும் உங்களுக்கா எழுதத் தெரியாது:)? ரசித்தேன் அருணா! நன்றி!

    பதிலளிநீக்கு
  52. வல்லிசிம்ஹன் said...

    //வியப்புக் குறிகளே விடைகளை அடைத்து நிற்கின்றன.//

    உண்மை உண்மை.

    // அவற்றை விலக்கிக் கேள்விகளை வெறும் குறிகளாக மாற்றுவது எப்போதோ.//

    கவிநயா சொன்ன மாதிரி //வாழ்வில் காணும் வியப்புக்குறிகளுக்கும் கேள்விக்குறிகளுக்கும் முற்றுப்புள்ளியே இல்லை போலும்.//

    //முடிந்த வரை சமன் செய்யப் பார்ப்போம்.//

    நம்பிக்கை தரும் நல்வார்த்தைகள்.

    //அருமையான அன்பு உள்ளம் உங்களுக்கு.
    அழகான கவியாக வெளி வந்திருக்கிறது.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    அன்பான வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  53. அழகான தலைப்பில் அழகான கவிதை..1984 ல் எழுதியிருந்தாலும் இன்றூம் பொருந்தி வருகிறது..

    பதிலளிநீக்கு
  54. // ராமலக்ஷ்மி said...
    // PoornimaSaran said...

    //விடையற்ற வியப்புக் குறிகள்!!!//

    தலைப்பே வித்தியாசமாய், புருவம் தூக்கி விழிக்கிறேன் வியப்புடன்!!

    தலைப்பை புருவம் தூக்கி வியப்புடன் ரசித்த உங்களுடன் சில மேலதிகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவா:)? முதல் பாகத்தில் ஒவ்வொரு பத்தியும் ஒரு வியப்புக் குறியுடனும் இரண்டாம் பாகத்தில் கேள்விகளின் வீரியத்தில் ஒவ்வொரு பத்தியும் 3 வியப்புக் குறிகளுடன் முடிகின்றன. விடையற்று நிற்கின்றன.

    //

    அனைத்தையும் ரசித்தும் படிக்கும் நான் இதை விழித்துப் படித்தேன் விம்மல்களுடன்.. எனக்கு உங்க அளவுக்கு எழுத வராது ஆனால் உங்கள் எழுத்தில் என் உணர்வுகளை கண்டேன்.. பாருங்க துன்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை ஆனால் துன்பமே வாழ்கை ஆயிருது பலருக்கு!!!

    பதிலளிநீக்கு
  55. பாச மலர் said...

    //அழகான தலைப்பில் அழகான கவிதை..1984 ல் எழுதியிருந்தாலும் இன்றூம் பொருந்தி வருகிறது..//

    இன்றும் பொருந்தி வருவது வருத்தம்தான் தருகிறது:(!
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாசமலர்.

    பதிலளிநீக்கு
  56. PoornimaSaran said...

    //அனைத்தையும் ரசித்தும் படிக்கும் நான் இதை விழித்துப் படித்தேன் விம்மல்களுடன்.. எனக்கு உங்க அளவுக்கு எழுத வராது ஆனால் உங்கள் எழுத்தில் என் உணர்வுகளை கண்டேன்..//

    உங்கள் உணர்வுகளை நீங்கள் எழுத்திலே வடித்த விதம் அற்புதம்.

    //பாருங்க துன்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை ஆனால் துன்பமே வாழ்கை ஆயிருது பலருக்கு!!!//

    உண்மைதான், பாருங்க விடையற்ற வியப்புகுறிகள் இங்கும் வந்து விட்டன. என்ன செய்வது பூர்ணிமா? வல்லிம்மா சொன்னது போல ”முடிந்த வரை சமன் செய்யப் பார்ப்போம்” வரும் நாளில்.

    பதிலளிநீக்கு
  57. அருமையான வரிகள்


    பின்னூட்டத்தில் நிறைய கவிஞர்கள்
    நான் சொல்ல வந்ததை சொல்லி வீட்டார்கள்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  58. ராமலக்ஷ்மி said...

    திகழ்மிளிர் said...

    //அருமையான வரிகள்
    பின்னூட்டத்தில் நிறைய கவிஞர்கள்
    நான் சொல்ல வந்ததை சொல்லி வீட்டார்கள்
    வாழ்த்துகள்//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  59. Karthik Krishna said...

    //its nice....

    வாழ்த்துகள்//

    தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கார்த்திக் கிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  60. விடையற்ற வியப்புக் குறிகள் விடாமல் நீண்டு கொண்டே தான் போகிறது இந்த சமூகத்தை பார்க்கும் போது...

    பதிலளிநீக்கு
  61. கவிதை அழகு..

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்‌ஷ்மிஅக்கா :)

    மகா ஜனங்களே.. இங்க வந்தும் வாழ்த்து சொல்லுங்க.. :)
    http://podian.blogspot.com/2008/12/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  62. Belated Birthday wishes ராம் மேடம்//

    வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று இன்று போல என்றும் அல்ல, இன்றை விட நாளை நன்றாய் வாழ வாழ்த்துக்கள்

    உடன் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு
  63. இசக்கிமுத்து said...

    //விடையற்ற வியப்புக் குறிகள் விடாமல் நீண்டு கொண்டே தான் போகிறது இந்த சமூகத்தை பார்க்கும் போது...//

    இதற்கெல்லாம் விடையாக அமைந்த தங்களது சமீபத்திய பதிவு மனதிற்கு இதம்.

    பதிலளிநீக்கு
  64. SanJaiGan:-Dhi said...

    //கவிதை அழகு..//

    நன்றி சஞ்சய்.

    //இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்‌ஷ்மிஅக்கா :)
    மகா ஜனங்களே.. இங்க வந்தும் வாழ்த்து சொல்லுங்க.. :)//

    நானானியின் வாழ்த்துப்பதிவு கண்டு
    என் பிறந்ததினத்தை அறிந்து கொண்டு
    அருமையான வாழ்த்தைப் பதிந்து
    பல நல்ல உள்ளங்களின்
    நல் வாழ்த்துக்களைப்
    பெற்றுத் தந்து
    அந்நாளை இனிய
    நன்னாள் ஆக்கியமைக்கு
    நன்றிகள் பல:)!

    பதிலளிநீக்கு
  65. @ Sharepoint the Great(விஜய் பாலாஜி), அமிர்தவர்ஷினி அம்மா & ராம்சுரேஷ்,

    தங்கள் மூவரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  66. அப்படியா உங்களுக்கு பிறந்தநாளா? தம்பிக்கு சொல்லாம விட்டுட்டீங்களே அக்கா.
    உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    காலம் கடந்து வந்து வாழ்த்து சொன்னதுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  67. எனக்கு உங்கள் பிறந்தநாள் முதலிலே தெரிந்து இருந்தால் நான் தான் பதிவு போட்டு இருப்பேன். இப்படி சொல்லாம விட்டுட்டீங்களே அக்கா.

    உங்கள் அடுத்த பதிவு எப்போது என்று கேட்க தான் வந்தேன். வந்த இடத்தில் இப்படியொரு மகிழ்ச்சியான செய்தி. எப்படியும் பார்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  68. அழகிய தலைப்பு.
    இளகிய மனசு.
    உருண்டோடிய நிதியில்
    உறங்கிடும் நீதி
    ஏக்கத்துடன் உதயமாகும்
    இன்னுமோர் புத்தாண்டு .
    வாழ்க பாரதம் !!


    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  69. @ ஆனந்த்

    உங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி. பதிலுக்கு என் புத்தாண்டு வாழ்த்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

    //உங்கள் அடுத்த பதிவு எப்போது என்று கேட்க தான் வந்தேன். //

    அடுத்த பதிவுதானே? இதோ இன்னும் ஒரு சில நிமிடங்களில்..புத்தாண்டு பிறந்ததும்:)!

    பதிலளிநீக்கு
  70. @ Sury sir,
    //அழகிய தலைப்பு.
    இளகிய மனசு.//

    நன்றி.

    // உருண்டோடிய நிதியில்
    உறங்கிடும் நீதி//

    கவிதையின் கருவினை இரு வரிகளுக்குள் கொண்டு வந்த விதம் அருமை.

    //ஏக்கத்துடன் உதயமாகும்
    இன்னுமோர் புத்தாண்டு .
    வாழ்க பாரதம் !!//

    ஏக்கங்கள் நீங்கிட பாரதம் தன்னிறைவு கண்டிட வாழ்த்திடுவோம். உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin