Thursday, January 8, 2009

பெயரில் மட்டுமே!

திரும்பிய
திசை யாவும்
தீவிரவாதம்
தலை விரித்தாடும்
நாடு எனக்
குலை நடுங்கி
ஓட வைத்தாலும்
இவரை விட்டால்
எவருண்டு என
ஏனைய நாடுகள்
தொடர்ந்தன
தொழிலை
கணினித் துறையில்
வித்தகர் நாம் என.
வைத்தனர் வேட்டு
அதற்கும் இன்று-
காற்றில் பறந்தது
நம் மீதான
நம்பகத் தன்மை
காந்தி பிறந்த
நாட்டின் நிலைமை
இப்படியாவது
என்னவொரு கொடுமை.
ஹும்..
சத்யம்
பெயரில்
மட்டுமே
!

60 comments:

 1. ”சத்தியம் பெயரில் மட்டுமே”சத்தியமான வார்த்தை.
  இது போல் ,ஒரு அநீதி நடந்து விட்டால்,நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே....இந்த சத்யம் கெட்ட மனிதரை நினைந்து விட்டால்....

  ReplyDelete
 2. அக்கா எப்பவும் பெரிய பெரிய கவிதையா எழுதுவீங்க..இந்த விஷயத்துல உங்க கோபம் ரொம்பப் பெரியதுங்கறதால கவிதையை சின்னதாக்கிட்டீங்களா??

  ReplyDelete
 3. "சத்யத்தை" சோதித்து எழுதி இருக்கிற உங்க "சர்க்காஸமான" ஆதங்கக் கவிதை, இந்நிலையில் தேவையான ஒன்று, ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 4. காற்றில் பறந்தது
  நம் மீதான
  நம்பகத் தன்மை

  உண்மை தான். இந்த ஊருல இந்த மக்கள் நடூல உக்காந்துக்கிட்டு வேலை பாக்றதுக்கு கொஞ்சம் கூச்சமாவும் இருக்கு. :(

  ReplyDelete
 5. //என்னவொரு கொடுமை.
  ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே!//

  தலைப்பில் மட்டுமல்ல

  தம்மிடத்திலும்

  இருக்க வேண்டிய ஒன்றினை

  தொலைத்தவர்கள்

  தம்மையும் தொலைத்தனர்

  தாய்நாட்டின் பெயரையும் கெடுத்தனர்

  :(

  ReplyDelete
 6. சரியான நேரத்தில் எழுதப்பட்டுள்ள சாட்டையடிக்கவிதை!

  ReplyDelete
 7. தொடர்கதை ஆகாமல் சத்யத்தோடு முடிந்தால் சரி....வேற ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை..:(

  ReplyDelete
 8. /*வேட்டு
  அதற்கும் இன்று-
  காற்றில் பறந்தது
  நம் மீதான
  நம்பகத் தன்மை
  */
  ம்.. என்ன கொடுமை இது. நம் நம்பகத்தன்மை இப்படி பெயரில் மட்டும் இருக்கிற நிலைமை...

  ReplyDelete
 9. sathyameva jeyathe

  but we will forget this after 1 days, how we forgot now law college incident, mumbai bombing, parliment money bribery to MP's etc

  kuppan_yahoo

  ReplyDelete
 10. ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே!//

  உண்மைதான்!!!

  தேவா...

  ReplyDelete
 11. வருத்தமாக உள்ளது..

  இதில் பணிபுரியும் ஊழியர்களை நினைத்தால் கவலை அதிகம் ஆகிறது. யாரோ ஒருவர் செய்த தவறால் எத்தனை பேருக்கு சிரமம்.

  ReplyDelete
 12. //ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே!//
  நான் நினைத்தேன்...நீங்கள் எழுதிவிட்டீர்கள்...ராமலக்ஷ்மி!
  நிமிர்ந்திருந்த தலைகளையெல்லாம் வெட்டி நாய்க்குப் போட்டுவிட்டார்கள்.

  ReplyDelete
 13. வாவ். கலக்கல். சற்றும் எதிர்பார்க்கவில்லை சத்யம் சறுக்கும் என !!!

  ReplyDelete
 14. goma said...

  //”சத்தியம் பெயரில் மட்டுமே”சத்தியமான வார்த்தை.
  இது போல் ,ஒரு அநீதி நடந்து விட்டால்,நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே....இந்த சத்யம் கெட்ட மனிதரை நினைந்து விட்டால்....//

  என் வலைப்பூவின் முதல் பதிவின் முதல் வருகைக்குப் பின், முதல் வருகையாய் வந்து விட்டீர்கள்.. ’நெஞ்சு பொறுக்காமல்’ நீதி வழுவிய நிலை கண்டு பாரதி சொன்ன வரிகளைக் கொண்டு.

  ReplyDelete
 15. புதுகை.அப்துல்லா said...

  //அக்கா எப்பவும் பெரிய பெரிய கவிதையா எழுதுவீங்க..இந்த விஷயத்துல உங்க கோபம் ரொம்பப் பெரியதுங்கறதால கவிதையை சின்னதாக்கிட்டீங்களா??//

  இப் பதிவைக் காண நேர்ந்தால் நீங்கள் இப்படி சொல்லக் கூடுமென நானே நினைத்தேன். சில நேரங்களில் 'சுருக்’கென தைக்க வேண்டிய விஷயங்களை சுருக்கமாகச் சொல்வதே சாலச் சிறந்ததோ?!

  ReplyDelete
 16. வருண் said...

  //"சத்யத்தை" சோதித்து எழுதி இருக்கிற உங்க "சர்க்காஸமான" ஆதங்கக் கவிதை, இந்நிலையில் தேவையான ஒன்று//

  சர்காஸமான என்பதை விட “ஆயாசமாக” உணர்ந்த ஆதங்கம் என்றே சொல்ல வேண்டும் வருண். **இந்நிலையில் தேவை’யற்ற’ ஒன்று** என்ற சொல்ல வருகிறீர்களோ என சற்று பயந்து விட்டேன். நன்றி!

  ReplyDelete
 17. Truth said...

  //**காற்றில் பறந்தது
  நம் மீதான
  நம்பகத் தன்மை**

  உண்மை தான். இந்த ஊருல இந்த மக்கள் நடூல உக்காந்துக்கிட்டு வேலை பாக்றதுக்கு கொஞ்சம் கூச்சமாவும் இருக்கு. :(//

  தனி நபரின் தவறு தாய்நாட்டையே அல்லவா தலை குனிய வைக்கிறது உலக அரங்கில்:(! இதை எப்போது உணருவார்கள்?

  ReplyDelete
 18. ஆயில்யன் said...
  // தலைப்பில் மட்டுமல்ல

  தம்மிடத்திலும்

  இருக்க வேண்டிய ஒன்றினை

  தொலைத்தவர்கள்

  தம்மையும் தொலைத்தனர்

  தாய்நாட்டின் பெயரையும் கெடுத்தனர்

  :(//

  எல்லோர் மனதிலும் ஏற்பட்ட வருத்தத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டீர்கள். நன்றி ஆயில்யன்!

  ReplyDelete
 19. ஷைலஜா said...

  //சரியான நேரத்தில் எழுதப்பட்டுள்ள சாட்டையடிக்கவிதை!//

  நன்றி ஷைலஜா. ஆனால் அவர்கள் நாட்டுக்கும், நம்பி வேலையைக் கொடுத்த கஸ்டமர்களுக்கும், அதைக் கருமமே கண்ணாக செய்து வந்த எம்ப்ளாயிஸுக்கும், பங்கிலே முதலீடு செய்திருந்த பொது மக்களுக்கும் இழைத்த துரோகம் எனும் சாட்டையடி முன் இது ஒன்றுமேயில்லை:(!

  ReplyDelete
 20. நிஜமா நல்லவன் said...

  //தொடர்கதை ஆகாமல் சத்யத்தோடு முடிந்தால் சரி....வேற ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை..:(//

  நிஜம்தான்:(! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜமா நல்லவன்.

  ReplyDelete
 21. அமுதா said...

  //ம்.. என்ன கொடுமை இது. நம் நம்பகத்தன்மை இப்படி பெயரில் மட்டும் இருக்கிற நிலைமை..//

  ஒருவர் செய்த தவறால் பாதிப்புக்குள்ளாவது ஒட்டு மொத்த நாடுமல்லவா?

  ReplyDelete
 22. குப்பன்_யாஹூ said...

  //sathyameva jeyathe

  but we will forget this after 1 days, how we forgot now law college incident, mumbai bombing, parliment money bribery to MP's etc//

  ’நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என்பது இது மாதிரியான விஷயங்களுக்குப் பொருந்தாதுதான். ஆரம்பத்தில் ஏற்படும் விழிப்புணர்வு, எடுக்கப் படும் நடவடிக்கைகள் நாளாவட்டத்தில் தேய்ந்து போவது சோகம்தான்:(!

  ReplyDelete
 23. அதே ஆதங்கம் தான் எனக்கும்!

  //காந்தி பிறந்த
  நாட்டின் நிலைமை
  இப்படியாவது
  என்னவொரு கொடுமை.
  ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே//

  ஹ்ம்ம்ம்!

  ReplyDelete
 24. நிச்சயம் தலைகுனிவுதான். ஆதங்கம் உங்கள் கவிதையாக வந்திருக்கு. இதுவும் கடந்து போகும் என்று ஆறுதல் படவேண்டியதுதான் :(

  அனுஜன்யா

  ReplyDelete
 25. சத்யம் பெயரில் மட்டுமே...

  நல்ல வரிகள்...எங்கே செல்கிறது இந்தப்பாதை?

  ReplyDelete
 26. மூர்த்தி சிருசானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்ற மாதிரி நச்சுன்னு கவிதை.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 27. கிரி said...

  //வருத்தமாக உள்ளது..

  இதில் பணிபுரியும் ஊழியர்களை நினைத்தால் கவலை அதிகம் ஆகிறது. யாரோ ஒருவர் செய்த தவறால் எத்தனை பேருக்கு சிரமம்.//

  உண்மைதான் கிரி. பணி புரிந்தவர்கள் மேல் எந்தத் தவறும் இல்லை. ஆனால் வந்தது சிரமம் ஒரு சிலர் தவறால். பணியாளர்கள் அனைவரும் எந்த சங்கடத்துக்கும் ஆளாகாமல், நல்ல மாற்று வழி கிடைக்கப் பெறுவார்கள் என நம்புவோம்.

  ReplyDelete
 28. நானானி said...

  // //ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே!//
  நான் நினைத்தேன்...நீங்கள் எழுதிவிட்டீர்கள்...ராமலக்ஷ்மி!// //

  செய்தியைக் கேட்ட எல்லோருக்கும் தோன்றியிருக்கக் கூடியதுதான் நானானி. எல்லாம் தாண்டி மறுபடி நிமிர்ந்து நிற்போம்.

  ReplyDelete
 29. என்னவொரு கொடுமை.
  ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே//

  சரியா சொன்னீங்க மேடம். (எல்லாத்துக்கும் கவிதை ரெடியா வெச்சிருக்கீங்க)

  ReplyDelete
 30. மாட்டிக்கொண்டது சத்தியம் மட்டும் தான் ஆனால் தவறு செய்தது சத்தியம் மட்டும் தானா. இன்னும் பெரிய நிருவனங்கள் எல்லாம் வெளி வரவில்லை.திரும்பும் இடமெல்லாம் ஊழல் தான். நேர்மை அழிந்துவிட்டது.இதில் வேலை செய்பவர் மட்டுமல்ல அப்பாவியாய் சிறுக சிறுக சேமித்து LIC போன்றவற்றில் கட்டி காத்திருக்கும் எத்தனை சாமானியர்களின் எதிர்காலம் இதில் அழிக்கப்பட்டுவிட்டது தெரியுமா.
  நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பதால் இந் நிருவனத்தை எடுத்து நடத்தி நற்பெயரை காப்பாற்ற நடக்கும் முயற்சி வெற்றிபெரட்டும்.நம்புவோம் 'சத்திய'மும் பலரின் எதிர்காலமும் காப்பாற்றப்படும் என்று.

  ReplyDelete
 31. சதங்கா (Sathanga) said...

  //சற்றும் எதிர்பார்க்கவில்லை சத்யம் சறுக்கும் என !!!//

  தாங்கள் சறுக்கி நாட்டுக்கும் தேடித் தந்து விட்டனர் அவப் பெயர்.

  ReplyDelete
 32. சந்தனமுல்லை said...

  ////அதே ஆதங்கம் தான் எனக்கும்!

  //காந்தி பிறந்த
  நாட்டின் நிலைமை
  இப்படியாவது
  என்னவொரு கொடுமை.
  ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே//

  ஹ்ம்ம்ம்!////

  உண்மைதான் முல்லை. இதைக் கேள்விப் பட்டதும் ’சத்திய சோதனை’ எழுதிய காந்தியடிகளின் நினைவு வராதவரே இல்லை எனலாம்.

  ReplyDelete
 33. அனுஜன்யா said...

  // நிச்சயம் தலைகுனிவுதான். ஆதங்கம் உங்கள் கவிதையாக வந்திருக்கு. இதுவும் கடந்து போகும் என்று ஆறுதல் படவேண்டியதுதான் :( //

  கருத்துக்கு நன்றி அனுஜன்யா. ”இது கடக்கப் பட வேண்டும்” நல்ல படியாக. ஏனெனில் பலரின் வாழ்வும் இதில் அடங்கியிருக்கிறது.

  ReplyDelete
 34. thevanmayam said...

  //உண்மைதான்!!!//

  கருத்துக்கு நன்றி தேவா.

  ReplyDelete
 35. பாச மலர் said...

  //எங்கே செல்கிறது இந்தப்பாதை?//


  விடை சொல்ல எவரும் திணறும் கேள்வியாக இருக்கிறதே பாசமலர்? ஆனாலும் நம்புவோம் பாதையில் கிடக்கும் முட்களை விலக்கி வெற்றியை.. இழந்த நற்பெயரை.. மீட்டிடுவோம் என.

  ReplyDelete
 36. புதுகைத் தென்றல் said...

  //மூர்த்தி சிருசானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்ற மாதிரி நச்சுன்னு கவிதை.

  பாராட்டுக்கள்.//

  நன்றி தென்றல். சமூகத்தின் 'நச்சுகள்’ களையப் பட வேண்டுமல்லவா?

  ReplyDelete
 37. அமிர்தவர்ஷினி அம்மா said...
  //சரியா சொன்னீங்க மேடம். (எல்லாத்துக்கும் கவிதை ரெடியா வெச்சிருக்கீங்க)//

  அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லைங்க. நடப்பில் உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் தோன்றக் கூடிய எண்ணங்கள்தானே இவை?

  ReplyDelete
 38. உமா said...

  //மாட்டிக்கொண்டது சத்தியம் மட்டும் தான் ஆனால் தவறு செய்தது சத்தியம் மட்டும் தானா.இன்னும் பெரிய நிருவனங்கள் எல்லாம் வெளி வரவில்லை.திரும்பும் இடமெல்லாம் ஊழல் தான். நேர்மை அழிந்துவிட்டது.//

  வாங்க உமா, நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். நம் நாட்டில் என்றைக்குமே சத்தியத்துக்கு சோதனை வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்று ‘சத்யம்’ மூலம் வந்துள்ள சோதனை யாரும் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்துள்ளதையும் மறுக்க முடியாதுதானே?

  //நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பதால் இந் நிருவனத்தை எடுத்து நடத்தி நற்பெயரை காப்பாற்ற நடக்கும் முயற்சி வெற்றிபெரட்டும்.நம்புவோம் 'சத்திய'மும் பலரின் எதிர்காலமும் காப்பாற்றப்படும் என்று.//

  இதையேதான் கிரி அவர்களுக்கான பதிலில் நானும் கூறியிருக்கிறேன். நம்புவோம் உமா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 39. உங்கள் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.!

  ReplyDelete
 40. காலத்திற்கு ஏற்ற பதிவு. நச்சுன்னு சின்ன கவிதையாய்...

  ReplyDelete
 41. ///ராமலக்ஷ்மி said...
  **இந்நிலையில் தேவை’யற்ற’ ஒன்று** என்ற சொல்ல வருகிறீர்களோ என சற்று பயந்து விட்டேன். நன்றி///

  ஏழை வயிற்றுப்பசியால் திருடுறான் என்றால் பரவாயில்லைங்க!

  "தவறு" என்பதையும் யாரும் தவிர்க்க முடியாது.

  ஆனால், இதுபோல் "ஜோடிச்சு பொய் சொல்றது" என்பது ரொம்ப மன்னிக்கவே முடியாத குற்றம்.

  அதுவும் நம் இந்தியா போன்ற நாடுகளில், ஒவ்வொரு குடிமகனு/ளும் மிகக்கவனமாக இருக்கவேண்டும்!

  ஆனால், நம் தத்துவம், சத்யம், தர்மம் எல்லாம் ஏட்டுச்சுரைகாயாகத்தான் எங்கோ புதைந்து கிடக்கிறது.

  போலி கவுரவுத்தில், பொய் வாழ்க்கையில்தான் இன்றைய உலகம் சந்தோஷமடைகிறது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு!

  ReplyDelete
 42. // ஹும்..
  சத்யம்
  பெயரில்
  மட்டுமே! //

  இந்த நிறுவனப்பங்கு வாங்குனவங்க நிலைதான் கவலைக்கிடம்.
  இன்னும் அவங்க ஒரே நம்பிக்கை அந்த நிறுவனத்துல 50 ஆயிரம் வேல பாக்குரதுதான்.

  எல்லா சிக்கல்ல இருந்தும் மீண்டு வந்தா சரிதான்.

  ReplyDelete
 43. எத்தனை பேருக்கு எத்தனை நஷ்டமோ.

  ஒரு கௌரவக்கேடு நம்ம தேசத்துக்கு வந்துவிட்டதே.
  மீண்டு வரவும் கடவுள் கருணை இருக்கட்டும்.

  ReplyDelete
 44. தாமிரா said...

  //உங்கள் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.!//

  நம் அனைவரின் ஆதங்கம் வருத்தம் என்றே சொல்வோம் தாமிரா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. கடையம் ஆனந்த் said...

  //காலத்திற்கு ஏற்ற பதிவு. நச்சுன்னு சின்ன கவிதையாய்...//

  காலம் உடனடியாக ஆவன செய்ய வேண்டிய நிகழ்வு.

  நன்றி ஆனந்த்.

  ReplyDelete
 46. வருண் said...
  //ஏழை வயிற்றுப்பசியால் திருடுறான் என்றால் பரவாயில்லைங்க!//

  உண்மைதான் வருண். அதை நாம் நடைமுறை வாழ்வில் பலமுறை காண்கிறோம். மன்னித்தும் விடுகிறோம்.

  //"தவறு" என்பதையும் யாரும் தவிர்க்க முடியாது.

  ஆனால், இதுபோல் "ஜோடிச்சு பொய் சொல்றது" என்பது ரொம்ப மன்னிக்கவே முடியாத குற்றம்.//

  மாபெரும் சமூகக் குற்றம்.

  //ஆனால், நம் தத்துவம், சத்யம், தர்மம் எல்லாம் ஏட்டுச்சுரைகாயாகத்தான் எங்கோ புதைந்து கிடக்கிறது.//

  அதனால் கறிக்கு உதவாது என அறநெறிக்கு புறம்பாக எந்தக் கூச்சமுமின்றி செயல் பட்டிருக்கிறார்கள்.

  //போலி கவுரவுத்தில், பொய் வாழ்க்கையில்தான் இன்றைய உலகம் சந்தோஷமடைகிறது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு!//

  சரியாகச் சொன்னீர்கள்.

  //அதுவும் நம் இந்தியா போன்ற நாடுகளில், ஒவ்வொரு குடிமகனு/ளும் மிகக்கவனமாக இருக்கவேண்டும்!//

  இத்தனைக்கும் பிறகு இனியாவது அப்படி இருப்பார்கள் என நம்புவோம்.

  நல்ல கருத்துக்களுக்கு நன்றி வருண்!

  ReplyDelete
 47. கார்த்திக் said...
  //இந்த நிறுவனப்பங்கு வாங்குனவங்க நிலைதான் கவலைக்கிடம்.//

  உண்மைதான். நிலமை சரியாகும் என நம்புவோம்.

  //இன்னும் அவங்க ஒரே நம்பிக்கை அந்த நிறுவனத்துல 50 ஆயிரம் வேல பாக்குரதுதான்.

  எல்லா சிக்கல்ல இருந்தும் மீண்டு வந்தா சரிதான்.//

  இப்போது அரசு தலையிட்டு ஆவன செய்து வருவது ஆறுதல்.

  ReplyDelete
 48. வல்லிசிம்ஹன் said...

  //மீண்டு வரவும் கடவுள் கருணை இருக்கட்டும்.//

  உங்கள் திருவாக்குப் படியே ஆகட்டும். நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 49. ரொம்ப கொடுமைதான்க்கா.. ஆனால் இந்த ஒரு நிறுவனத்தை வைத்து ஒட்டு மொத்த இந்தியா மீதும் தவறான எண்ணம் வராது. சதய்ம் ஒரு வியாபார நிறுவனம் மட்டுமே. அரசாங்க அமைப்பு இல்லை. இந்த களவாணித் தனத்தில் ப்ரைஸ்வாட்டர்ஹவுச் அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்கு. அவங்க தான் சதய்ம் ஆடிட்டர்ஸ். அது அமெரிக்க நிறுவனம். மேலும் சதயம் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகள் இந்த தொழிலில் இருக்கு. எவ்வளவோ நல்ல திருப்தியான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் முதலீட்டாளர்கள் தான் பாவம். இப்போ சில ஆயிரம் தொழிலாளர்களும் பாவம். :(
  இந்த ஐடி பசங்க என்னதான் ஆட்டம் போட்டாலும் வேலை நீக்கம்னு வரும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டம் ஆய்டுது.

  ReplyDelete
 50. SanJaiGan:-Dhi said...
  // ஆனால் இந்த ஒரு நிறுவனத்தை வைத்து ஒட்டு மொத்த இந்தியா மீதும் தவறான எண்ணம் வராது. சதய்ம் ஒரு வியாபார நிறுவனம் மட்டுமே. அரசாங்க அமைப்பு இல்லை.//

  செய்தி அறிந்த போது எல்லோருக்கும் வரக் கூடிய நியாயமான கவலைதான் எனக்கும் வந்தது. ஒரு நாட்டின் பெரிய நிறுவனம் சறுக்கும் போது இங்கு நம்பி வேலைகளைக் கொடுத்த எல்லா வாடிக்கையாளர்கள் மனதிலும் ஒரு கேள்விக்குறி எழ வாய்ப்பு உள்ளதுதானே. ஆனால் அப்படி ஆகாதது சந்தோஷம்தான். இது PWC துணையுடன் நடந்த தனி நபர் தவறாகவே பார்க்கப் படுகிறது.

  //ப்ரைஸ்வாட்டர்ஹவுச் அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்கு. அவங்க தான் சதய்ம் ஆடிட்டர்ஸ். அது அமெரிக்க நிறுவனம்.//

  முக்கிய பங்கு வகித்த இந்த அமெரிக்க நிறுவனத்தின் இண்டியன் விங்-கில் வேலை பார்த்தவர்கள் நம்மவரே என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது:(!

  //முதலீட்டாளர்கள் தான் பாவம்.//

  கொஞ்சம் அல்ல.

  //சதயம் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகள் இந்த தொழிலில் இருக்கு. எவ்வளவோ நல்ல திருப்தியான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.//

  அதுதான் இப்போது அங்குள்ள தொளிலாளர்களுக்கு தெம்பைத் தருவதாக இருக்கிறது.

  ReplyDelete
 51. அதற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களின் நிலைமையை என்னவென்று சொல்ல !!

  ReplyDelete
 52. சந்தர்ப்பத்துக்கு கவிதை...

  ஏதோ இது தொடர்கதையாகாமல் இருந்தால் சரி...

  ReplyDelete
 53. சத்யம் சிவம் சுந்தரம் என்பார்கள்.
  சத்யமெனும் ஒரு சின்னமே
  சின்னா பின்னமாகி
  அசத்யம் அசிங்கம் அலங்கோலமாகி
  ஆடிப்போய் நிற்கும் காட்சி
  மனிதப் பேதமைக்கு
  மாபெரும் சாட்சி.

  சுப்பு தாத்தா.
  வாருங்கள்.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 54. PoornimaSaran said...

  //அதற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களின் நிலைமையை என்னவென்று சொல்ல !!//

  அரசு தலையிட்டுள்ளது. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

  ReplyDelete
 55. தமிழன்-கறுப்பி... said...
  //ஏதோ இது தொடர்கதையாகாமல் இருந்தால் சரி...//

  ஆகாதென்றே நம்புவோம். ஆகக் கூடாதென்றும் வேண்டுவோம்.

  ReplyDelete
 56. sury said...

  //மனிதப் பேதமைக்கு
  மாபெரும் சாட்சி.//

  உங்கள் ஆதங்கமும் கோபமும் வரிகளிலே வெடித்திருக்கிறது. க்வியாய் வடித்திருக்கும் கருத்துக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 57. செய்தி அறிந்த போது பெயரில் உள்ள irony-ஐப் பற்றி நானும் நினைத்துக் கொண்டேன். அதற்கேற்றாற் போல் நச் கவிதை தந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 58. @ கவிநயா

  ஆமாம், செய்தி அறிந்ததும் நானானி போல எல்லோருக்குமே மனதில் தோன்றியிருக்கக் கூடியதைத்தான் இங்கு பதிந்தேன். நன்றி கவிநயா.

  ReplyDelete
 59. சத்தியமா சொல்றேன் (அந்த சத்யம் இல்லை) சத்யம் முதலாளிகளுக்கு இதுவொரு சவுக்கடிதான்.

  ReplyDelete
 60. @ உழவன்,

  எப்படியோ, இப்போது அந்த நிறுவனம் வேறொரு நிறுவனத்தால் வாங்கப் பட்டது அதில் பணி புரிபவர்களுக்கு நன்மையாக முடிந்தது. மற்ற நிறுவனங்களுக்கும் பாடமாக அமைந்தது. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உழவன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin