நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிலவைப் படமாக்கினேன், புதிய நிகான் Z5 II-வை பரிசோதிக்கும் ஆர்வத்தினாலும். நேற்றைய தினம் வானில் தோன்றிய முதல் முழு நிலவானது பெரு நிலவும் (supermoon) ஆகும்.
சென்ற சில தடவைகளைப் போலவே நேற்றும் ட்ரைபாட் இல்லாமல் கையில் பிடித்தே படமாக்கினேன்.
ஆண்டின் முதல் முழுநிலவு ‘ஓநாய் நிலவு’ (wolf moon) என்றும் அறியப்படுகிறது. ஃபார்மர்ஸ் அல்மனாக் (The Old Farmers Almanac) குறிப்பேட்டில் அந்தந்த மாதத்தின் நிலவுக்கென ஒரு பெயரும் அதற்கென ஒரு காரணக் கதையும் இருக்கும். உலகளாவிய அளவில் அந்தப் பெயராலேயே ஒவ்வொரு மாத நிலவும் அழைக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாக முன்னரும் சில பதிவுகளில் விளக்கியுள்ளேன். ஜனவரி மாத நிலவு ஓநாய் நிலவென அழைக்கப்படுவதற்கான காரணம், குளிர் காலத்தின் உச்சத்தில் சரியாக உணவு கிடைக்காமல் ஓநாய்கள் பசியில் ஊளையிட்டபடி இருக்குமாம். அதனாலேயே ஆண்டின் முதல் முழு நிலவுக்கு ‘ஓநாய் நிலவு’ எனப் பெயர் வந்திருக்கிறது.
பூமியை நிலவு வட்டப் பாதையில் அன்றி, நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் அவ்வப்போது மாறுபடுகிறது. பெரிஜி (Perigee) என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளி, அப்போஜி (Apogee) என்பது நிலவு பூமியை விட்டு மிகத் தொலைவில் இருக்கும் புள்ளி. நிலவு பூமிக்கு மிக அருகில் வருகையில் வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தரும். அவ்வாறாக நேற்றைய நிலவு பூமிக்கு அருகாமையில் (Perigee) சுமார் 3,62,312 கிலோமீட்டர் தொலைவில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் முழு நிலவாகவும் இருந்ததால் பெருநிலவும் (supermoon) ஆனது.
இந்த வருடத்தில் அடுத்து வரவிருக்கும் இரு பெருநிலவுகள்:
நேரமும் வாய்ப்பும் கூடி வருமாயின் அவற்றைப் படமாக்குவேன் :).
**
- என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON 2011 (20 March 2011)
- அபெச்சர் மோட்.. ஓர் அதிசயம் - அவ்வ்வ்... டு வாவ் ரசசியம் (3 July 2011) PiT தளத்தில்..
- சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்.. (10 April 2011)
- சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. (10 Dec 2011)
- சித்திரை நிலவு.. இன்றைய வானிலே.. (6 May 2012)
- கண்டேன் நிலவை.. - SUPER MOON 2013 (23 June 2013)
- ஸூப்பர் நிலா - SUPER MOON 2016 (14 Nov 2016)
- அபூர்வ சந்திரக் கிரகணம் - SUPER BLUE BLOOD MOON 2018 (31 jan 2018)
- சித்ரா பெளர்ணமி - Pink Full Moon 2019
- இப்போது வானில்.. ஸ்ட்ராபெர்ரி நிலவு.. (மற்றும் நிலவைப் படமாக்கும் போது கவனிக்க வேண்டியவை) - (5 ஜூன் 2020)

.jpg)





.jpg)

%20-%20A.jpg)


.jpg)
















