ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

எல்லைகளுக்குள் சுருங்கிய சக்தி.. - மைசூர் விலங்கியல் பூங்கா

மைசூர் விலங்கியல் பூங்காவில் எடுத்தப் படங்களைத் தொகுப்பாக “வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள்” எனவும், தனித் தனி விலங்குகளின் படங்களைத் தகவல்களுடனுமாகப் பல பதிவுகள் பதிந்திருந்தேன். அந்த வரிசையில் தொடர்ந்து மேலும் ஃப்ளிக்கரில் பதிந்து வந்த படங்களின் தொகுப்பு.  

கழுத்தை உயர்த்தியும் தாழ்த்தியுமாக உலவிக் கொண்டிருந்த பல ஒட்டகச் சிவிங்கிகளை விடாது நானும் கழுத்தை உயர்த்தி, வளைத்து வளைத்து எடுத்த படங்கள் முதலில்:

#1  
உயரம் என்பது கர்வம் அல்ல,
அது உலகை அமைதியாகப் பார்க்கும் ஒரு பார்வை.


#2

இயற்கையின் சித்திரம்


#3

பசுமை வேட்டை



#4
நிமிர்ந்த பணிவு

ஒட்டகச் சிவிங்களைப் பற்றி 2014_ல் தகவல்களுடன் பகிர்ந்த பதிவு ஒன்றும் “இங்கு” உள்ளது.

#5
காட்டின் காவியம்

#6
ஓரப் பார்வை

#7
இயற்கை அமுதம்


#8
நிதான நடை

#9 
"வனவிலங்குகளும் இயற்கையும் நமது சூழலின் ஒரு பகுதி மட்டுமல்ல, 
அவை நமது கோளின் ஆரோக்கியமான வாழ்வின் இதயத் துடிப்பு."


எல்லைகளுக்குள் சுருங்கிய சக்தி..:

#10 
ஒற்றைக் கொம்பன்


#11 
புலி முகம்

#12 
இரட்டைப் புயல் 


#13 
தியானத்தில் வெண்புலி


#14 
உறங்கும் சிங்கம்

"நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. நமக்கே தெரியாத வலிமையும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது என்பதை அது உணர்த்துகிறது."
**

6 கருத்துகள்:

  1. உயரம் - தன்னை மறைத்துக் கொள்ள முடியாத சாபமும் கூட!

    ஒட்டகச்சிவிங்கி எல்லோரையுமே தலைநிமிர வைக்கும் பிறவி!

    புலியின் மிரட்டும் பார்வை..  தூங்கும் சிங்கம்..  எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
  2. ஓ! கடவுளே! ஒட்டகச்சிவிங்கி எப்பவுமே அழகு அது உங்கள் கேமராவில் இன்னும் அழகாய்....

    புலி ஆஹா...தியானத்தில். உண்மையில் இப்படி அவங்க தங்கள் எனர்ஜியை கூட்டிக் கொள்கிறார்களாம்.

    ஒட்டைக்கொம்பனும் பளிச்சுனு என்ன அழகாகத் தெரிகிறார்!!! அவர் உடம்பில் இலைகளின் நிழழ் வித்தியாசமாக....அழகு

    சிங்கம் தூங்கும் போது குழந்தையாகத் தெரிகிறார். உண்மையில் நம் உள்ளில் இருக்கும் குழந்தையும் அப்ப்டித்தானே நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள்...அதன் ஆசைகளை ஆற்றலை நாம் பூர்த்திசெய்யலைனா அக்குழந்தை சுருங்கிப் போய் நம் ஆளுமைத்திறனே அதற்கு ஏற்றாற் போல ஆகிவிடுமே. அதனால்தான் உள்ளிருக்கும் குழந்தையை நாம் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

    விட்டவற்றையும் பார்க்கிறேன், ராமலக்ஷ்மி

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஒட்டகச்சிவிங்கி எப்போதுமே பிரமிக்க வைக்கும் அழகு. அதன் நடையும் நிதானமும் ஒய்யாரமும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். புகைப்படங்கள் அனைத்தும் பிரமாதம். அவற்றுக்கான தலைப்புகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. கருத்துகளுக்கும் தலைப்புகளை ரசித்ததற்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin