வியாழன், 31 டிசம்பர், 2020

அள்ளித் தந்த பூமியும் சொல்லித் தந்த வானமும்.. 2020 - தூறல்: 39

உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து எல்லோருக்கும் நிறைய பாடங்களைச் சொல்லித் தந்து செல்கிறது 2020. நம் வாழ்நாளிலே இப்படியொரு ஆண்டை நாம் சந்தித்ததேயில்லை. அறிந்தவர், அறியாதவர், உறவுகள், நட்புகள் எனப் பலரும் பொருளாதாரம், உடல் நலம், நெருங்கியவர்களின் உயிரிழப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் துயரங்களிலும் மாட்டிக் கொண்ட காலக் கட்டம். இனி வரும் நாட்களிலேனும் இக்கட்டான இச்சூழல் மாறுமெனும் நம்பிக்கையோடு 2021_ல் அடி எடுத்து வைப்போமாக.

கவலைப் படவும் கவனமாக இருக்கவும் அன்றாட வாழ்வில் நம் நேரத்தையும் முக்கியத்துவத்தையும் பிற விஷயங்கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்ட சூழலில் அதிகமாக வலைப்பதிவுகளில் (blog posts), ஈடுபாடு காட்ட முடியா விட்டாலும்  பத்திரிகை - மின்னிதழ்களில் சில கவிதைகள், நூல் மதிப்புரைகள், ஃப்ளிக்கரில் தொடர்ச்சியாக ஒளிப்படப் பதிவுகள் என எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்த வரையில் திருப்தியே.

வேகமாகப் பின்னோக்கி ஒரு பார்வை:

புதன், 30 டிசம்பர், 2020

கவிதையான காட்சிகள் - வல்லமை 2020

வல்லமை மின்னிதழில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் படக் கவிதைப் போட்டிகளில் சென்ற ஆண்டு இறுதி வரையிலும் 10 முறைகள் எனது படங்கள் தேர்வாகியிருந்தன. இந்த ஆண்டில் மேலும் 16 படங்கள். 9 வயதான வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தில் https://www.flickr.com/groups/1922937@N20/ அதிக படங்களை நான் பகிர்ந்து வந்திருப்பதும் இந்த எண்ணிக்கைக்கு ஒரு விதத்தில் காரணம்:




காட்சிக் கவிதைகளாக ஆசிரியர் குழுவினரின் கருத்தைக் கவர்ந்த எனது படங்களின் தொகுப்பு இது, போட்டி அறிவிப்பு மற்றும் போட்டி முடிவுக்கான பதிவுகளின் இணைப்புகளுடன்..!

#1



#2

#3

வியாழன், 24 டிசம்பர், 2020

முற்றுப் பெறா புதினம் - சொல்வனம் இதழ்: 236



மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
அலைகள்
அளப்பற்ற ஆற்றலுடன்.
ஒவ்வொரு மணற்துகள்களின்
ஊடாகவும்
தம் மூச்சினைச் செலுத்தி

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

பகல் கனவு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (87)

#1
“செயல்படுத்தாத தொலைநோக்குப் பார்வை 
பகல் கனவு. 
குறிக்கோள் அற்ற செயல்பாடு 
கொடுங்கனவு.”
[ஜப்பானியப் பழமொழி]

#2
 “இன்னும் சற்று நேரம் பற்றிக் கொள்ளுங்கள். 
அது உங்களை மேலும் உறுதியுடையவராக்கிடும்.”


#3
“எதற்காகவும் 
உங்கள் இலக்கை சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
அதற்கான

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கனவுகளே சிறகுகள்!

   என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (86) 

பறவை பார்ப்போம் - பாகம்: (56)


#1
“மரத்தின் உச்சிக்குக் குறி வையுங்கள். 
ஒரு கிளையையேனும் கைப்பற்றிடலாம்!”

#2
“உங்கள் கனவுகள் 
உங்கள் சிறகுகளாய் இருக்கட்டும்!”


#3 
“ஒவ்வொரு நாளும் நடப்பதிலுள்ள நல்லதைப் பாருங்கள், 
ஒரு சில நாட்களில் சற்றுக் கடினமாகத் தேட வேண்டியிருந்தாலும் கூட.”

ஞாயிறு, 29 நவம்பர், 2020

செவ்வாய், 24 நவம்பர், 2020

தையல்சிட்டு ( Tailorbird ) - பறவை பார்ப்போம் - பாகம்: (55)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (85) 

#1

ஆங்கிலப் பெயர்: Tailorbird

ஆங்கிலப் பெயர்: Tailorbird

நான்கே அங்குல உயரத்தில், நமது கைக்குள் அடங்கி விடக் கூடிய அளவில், பார்க்க அழகான தோற்றத்தைக் கொண்ட சின்னஞ்சிறு குருவி தையல்சிட்டு. தனியாகவோ ஜோடியாகவோ வயல்வெளிகளிலும் தோட்டங்களில் சுற்றித் திரியும். காடுகள், சிறு வனங்களிலும் பார்க்கலாம். 

குறிப்பிட்ட மாதங்களில் அவ்வப்போது நகர்புறத் தோட்டங்களுக்கு வருகை தரும் இவை, க்வீக் க்வீக் எனப் பாட ஆரம்பித்து வெவ்வேறு விதமாக ஒலியெழுப்பிப் பெரிய கச்சேரியே நடத்தி விடும்.  வெட்கப்பட்டு இலைகளுக்குள் மறைந்திருந்தாலும் இவற்றின் கச்சேரி இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்து விடும். [ஆள் நடமாட்டம் தெரியாத சமயத்தில் சுதந்திரமாகக் கிளைகளில் சூரியக் குளியல் எடுத்த பறவைகளை ஜன்னலுக்குப் பின்னால் மறைந்திருந்து எடுத்த படங்களே இவை!]

#2

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin