கிழக்கே விரையும் மேகங்கள்
மேற்கே வளையும் புற்கள்
காற்றுக்கு இரண்டு கதைகள்.
2.
மூடிய சாளரம்
ஏறுகிறது முதல் வெயில்
திறக்கிறது இருள்.
3.
திரும்பும் ஒற்றை இலை
கசியும் மெளனம்.
4.
வறண்ட கிணற்றில்
சுழல்கிறது சருகு
கார்முகிலுக்கு ஏங்கி.
5.
நடுநிசிக் குளத்தில்
இறங்கும் முழுநிலவு
உடைக்கும் மீன்.
*
ஐந்துமே நன்றாய் இருந்தாலும் ஐந்தாவது ரொம்ப நன்றாய் இருக்கிறது.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடத்துக்கு பொருத்தமாக கடைசி கவிதை இருக்கிறது.
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.
கருத்துக்கு நன்றி கோமதிம்மா. கவிதைக்காக ஏஐ உருவாக்கித் தந்தபடம். பொருத்தமாக அமைந்துவிட்டது.
நீக்குபடம் அற்புதம். சொன்ன கவிதையும் அற்புதம்.. அன்பு ராமலக்ஷ்மி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி வல்லிம்மா.
நீக்கு