ஞாயிறு, 29 மார்ச், 2026

காத்திருக்கும் காற்று

 #1

'இறக்கைகளை விரிக்கும் போதுதான், 
காற்று எப்போதும் நமக்காகக் காத்திருந்தது 
தெரிய வரும்.'


#2
எது நடந்தாலும், 
முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


#3
உங்களுக்கான பாதை பிறரால் எழுதப்படுவதில்லை, 
அதை நீங்களே உருவாக்குகிறீர்கள்.


#4
ஓய்வு என்பது பயணத்தின் முடிவு அல்ல; 
அது அடுத்த புறப்படலுக்கான பலம்.


#5
கோபம் இயல்பானது, 
ஆனால் அது எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும் என்பது 
நமது கையில்தான் உள்ளது.


#6
'காற்று நிலையற்றதாக இருந்தாலும் 
தனது இறக்கைகளை நம்புவதே 
உண்மையான சுதந்திரம்.'


#7
'அமைதியாக இருப்பதே 
சுயத்தின் உயரிய சாதனை.'


#8
'வெற்றி பெற, 
நீங்கள் பிடித்துக் கொள்ள ஒரு பிடிமானமும், 
உங்களை ஊக்குவிக்க ஒரு காரணமும், 
உங்களை உற்சாகப்படுத்த ஒரு தூண்டுதலும் 
அவசியம்.'
_Tony Dorsett


#9
'ஒவ்வொரு அசைவிற்கும் 
சத்தம் தேவையில்லை. 
சில நகர்வுகள் மெளனமாகவே 
ஆழமான செய்திகளைப் பேசும்.'

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 228
*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது.]

8 கருத்துகள்:

  1. அழகான பேசும் படங்கள். வண்ணத்துபூச்சிகள், பூனை, அணில் சொன்ன வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    கடைசி படத்தில் பாம்பு சொன்ன மெளன நகர்வு
    அதுதான் பயம்.

    மகன் நடைபயிற்சி போகும் போது "ராட்டில் ஸ்னேக்" நடைபாதையை கடந்து புதருக்குள் போனதை படம் எடுத்து அனுப்பினான். முன்பு நான் அரிசோனாவில் நர்ஸரிக்கு போன போது என்னை கடந்து போனதை படம் எடுத்து பகிர்ந்து இருக்கிறேன்.
    ஆபத்தை உணர்த்தவும் எதிரிகளை எச்சரிக்கவும் வாலை ஆட்டி சத்தம் செய்யும் ஆபத்தான பாம்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ராட்டில் ஸ்னேக் (கிலுகிலுப்பைப் பாம்பு) பொதுவாக அமெரிக்காவில் மட்டுமே வசிக்கும் இனம். அதிக நச்சுத் தன்மை கொண்டதும். இந்தப் படங்களில் உள்ளவை சாரைப் பாம்பு (Rat snake). நச்சு அற்றவை எனக் கூறப்பட்டாலும் எந்த வகையானாலும் அச்சமே. கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. அழகான படங்கள்.  ஆழமான வரிகளை அருமையாக எடுத்துப்  போட்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது படங்களுக்கு ஏற்ப நானாகவும் வாசகங்களைச் சேர்க்கிறேன். அடைப்புக் குறிகள் இல்லாதவை. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கோமதி அக்கா சொல்லி இருப்பது போல அந்த பாம்பின் படங்களை பார்க்கும்போது ஒரு லேசான திடுக்கிடல் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்தில் ஏறுவதை அலைபேசியில் காணொளியாக எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். இங்கே சிலமுறைகள் அப்லோட் செய்த காணொளிகள் வேலை செய்யவில்லை ஆகையால் இப்போதெல்லாம் முயன்றிடுவதேயில்லை :).

      நீக்கு
  4. படங்கள் அழகு..... பாம்பு படம் எடுக்கும் :) நீங்கள் அதையும் படம் எடுத்து இருக்கிறீர்களே..... :)

    வாசகங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin