போர்ட்ரெயிட் (Portrait) எனப்படும் உருவப்படங்கள் தலைமுறைகள் கடந்து நினைவுகளைப் பத்திரப்படுத்துபவை. கடந்து வந்த காலத்தின் கணங்களை மீண்டும் ஒரு கணம் வாழ்ந்திட வரம் தருபவை. ஒருவரின் தனித்துவம், ஆளுமை, வலிமை ஆகியவற்றோடு அவர்தம் கனவுகளையும் உணர்வுகளையும் கூட காண்போருக்குக் கடத்துபவை. உறவுகளுடனான குழுப் படங்கள் அவர்களுக்கிடையேயான பாசத்தை, பந்தத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்துபவை. இந்த ஞாயிற்றின் தொகுப்பாக, அத்தகு படங்கள்.. பதினைந்து.
#1 வேரும் மலரும்
#2 சின்னஞ்சிறு சூரியச் சுடர்
#3 தடுக்க முடியாத இளமை உத்வேகம்
#4 தொலை நோக்குப் பார்வையுடன் துலங்கும் நட்சத்திரம்
#5 கள்ளமில்லா பிள்ளை உள்ளம் என்றும் அற்புதம்
#6 பேசாத பெருமிதம்: அன்னையின் புன்னகை சொல்லி விடும் அனைத்தையும்
#7 இனிய தப்பித்தல்: எங்களுக்கே எங்களுக்கான நேரம்
#8 முடிவற்ற அடி வான உதயங்கள்
#9 நான் யாரோ, உருவாகிறேன் அவ்வாறாக..
#10 சிரிப்பையும் இதயங்களையும் பகிர்ந்து கொள்ளும் தாயும் மகளும்
#11 கம்பீரமான நம்பிக்கை
#12 எல்லையற்ற ஆற்றல்
#13 தன்னம்பிக்கையின் பொலிவு
#14 நளினமான ஆளுமை
#15 தூய மகிழ்ச்சி சிறிய விஷயங்களில்..
*
“ஃப்ளிக்கர் இன் ஃபோகஸ்” எனும் தலைப்புடன் ஒவ்வொரு மாத இறுதியிலும் அதற்கு முந்தைய மாத புள்ளி விவரங்களை ஃப்ளிக்கர் தளம் அனுப்பி வருகிறது. அதன் ஸ்கிரீன் ஷாட் அனைத்தையும் சேமித்து வருட இறுதி தூறல் பதிவில் பகிர்ந்திருந்தேன். இனி அந்தந்த மாதமே ஒரு ஞாயிறு பதிவில் அதை சேமித்து விட எண்ணியுள்ளேன். இதோ ஜனவரி இறுதியில் டிசம்பர் 2024 மாதத்திற்குக் கிடைத்த புள்ளி விவரம்:
அனைத்துப் படங்களும் அழகு. சில படங்களில் ஓரிடத்திலிருந்து வெட்டி, வேறிடத்தில் ஒட்டியது போல இருக்கிறதே...
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஎங்கிருந்தும் வெட்டி எங்கும் ஒட்டவில்லை:).
அனைத்துப் படங்களும் நிகான் டி 750 கேமரா மற்றும் நிக்கார் 24-120 எம்.எம் லென்ஸ் உபயோகித்து எடுத்தவை. இந்த லென்ஸ் போர்ட்ரெயிட் படங்களுக்கு சிறந்தது. சரியான அப்பெர்ச்சரில் வைத்து எடுத்தால் பின்னணியை மங்கலாகவும் சப்ஜெக்டை ஷார்ப்பாகவும் காட்டுவதில் வல்லது. அதனாலேயே உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. படம் 11_ல் மட்டும் அதன் பின்னணியைக் கருப்பு நிறமாக்கும் சோதனை முயற்சியை மேற்கொண்டேன்.
முதல் படத்தில் சிறுவனின் தலை உச்சிப்பகுதி வளைந்து வராமல் சட்டென வெட்டப்பட்டது போல தோற்றம்.. அதனால்தான் கேட்டேன்! அந்த எண்ணத்தோடு மற்ற படங்களை பார்த்தபோது ஒரு 3D effect தெரிவது போல இருந்ததது!
நீக்குமுதல் படத்தில் (சிறுவன் அல்ல) அந்த சிறுமியின் தலையில் இருப்பது சந்தனம் :)). அதே சந்தனம் நெற்றியிலும். மொட்டை அடித்து, குளிர்ச்சிக்காகப் பூசியிருக்கிறார்கள். மைசூரில் சோமநாதபுர ஆலய வாசலில் எடுத்தது. நம் ஊர் பக்கங்களிலும் முடியிறக்கினால் சந்தனம் பூசும் வழக்கம் உண்டு.
நீக்குஅனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது. முதல் படத்தில் அந்த குழந்தையின் தலை முழுவதும் சந்தனம் தடவாமல் உச்சியில் மட்டும் பூசி உள்ளதால் ஸ்ரீராமுக்கு சந்தேகம் வந்து இருக்கிறது போல.
பதிலளிநீக்குமுதல் படம் தலைப்புக்கு பொருத்தம்.
ஆம், உச்சியில் மட்டும் பூசியிருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது.
நீக்குகருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
படங்கள் அனைத்தும் அருமை. முதல் குழந்தையின் தலையில் உச்சந்தலையில் மட்டும் சந்தனம்! வித்தியாசமாக இருக்கிறது!
பதிலளிநீக்குஆங்கிள் எல்லாமே நல்லாருக்கு.
ஸ்ரீராமிற்கு நீங்க கொடுத்திருக்கும் கேமரா விஷயங்களையும் பார்த்துக் கொண்டேன்.
நான் கேமரா காதலி. ஆனால் எங்கிட்ட இருக்கும் ஒரே கேமரா சோனி கூல் பிக்ஸ் என் விருப்பம் அறிந்து என் உறவினர் அவர் பயன்படுத்தாமல் இருந்ததைக் கொடுத்தார். அது அவ்வப்போது படுத்தும் ஓப்பன் ஆவதற்கே!! இருந்தாலும் அதை வைச்சு ஓட்டிட்டுருக்கேன்!!ஹிஹிஹி
ஃப்ளிக்கர் வியூஸ் சூப்பர்! வாழ்த்துகள்!
கீதா
சோனி கூல்பிக்ஸ் நல்ல கேமரா. Dslr வாங்கும் முன் நானும் பயன்படுத்தியிருக்கிறேன். டைனமிக் ரேஞ்ச் நன்றாக இருக்கும். வண்ணங்களை அழகாகக் காட்டும். குறிப்பாக மலர் படங்கள் நன்றாக வந்தன. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
பதிலளிநீக்குகருத்துகளுக்கு நன்றி கீதா.