ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்..’

#1

"சீக்கிரம் செல்லும் பறவைக்கே 
கிடைக்கின்றது புழு."
[குண்டுக் கரிச்சான்]

#2
"முயன்று பார்க்கவில்லையெனில், 
நீங்கள் தெரிந்து கொள்ளப் போவதில்லை." 
_ John Barrow
[காட்டுச் சிலம்பன்]

#3
“நீங்கள் செல்லும் பாதை மிகக் கடினமாக இருப்பது,
 உங்கள் நோக்கம் உயர்ந்ததாக இருப்பதனால்!”
[மணிப்புறா]
#4
"நாம் தெரிவு செய்தாலன்றி, 
நம்மை யாரும் பொறியில் சிக்க வைக்க இயலாது." 
_ Anais Nin
[தேன் சிட்டு]
#5
“ மற்றவரது கருத்தை மாற்ற முயன்றிடுவதில் 
உங்கள் சக்தியை நீங்கள் வீணாக்காதீர்கள்.” 
_Tina Fey
[இந்திய மைனா]

#6
"உறுதியாக எனக்குத் தெரிந்த விஷயம் என்னவெனில் 
முயற்சியை ஒரு போதும் நான் விட்டு விட மாட்டேன்."
[குண்டுக் கரிச்சான்]

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 177
பறவை பார்ப்போம்.. - பாகம்: 104
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

6 கருத்துகள்:

  1. தோட்டத்து பறவைகள் அழகு.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. பந்திக்கு முந்து என்கிறது பறவை!  வரிகள் மனதில் நிற்கின்றன.  படங்கள் கண்ணிலேயே நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ‘பந்திக்கு முந்தும் குண்டுக் கரிச்சான்’ என்றுதான் முதலில் படத்திற்கு கீழே குறிப்பிட்டிருந்தேன்:))! பின்னர் நீக்கி விட்டேன். உங்களுக்கும் அவ்வண்ணமே தோன்றியதில் மகிழ்ச்சி. நன்றி ஸ்ரீராம்:).

      நீக்கு
  3. வரிகள் சிறப்பு. இந்திய மைனா வித்தியாசமா இருக்கே..

    படங்கள் அத்தனையும் ரசித்தேன். முதல் படம் குண்டுகரிச்சான் புழுவைப் பிடித்திருக்கிறது ...செம ஷாட்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைனாக்கள் குளித்துவிட்டு வந்து சிறகு உலர்த்திய தருணத்தில் எடுத்த படம் :). கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin