ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22_ஆம் தேதி உலகப் புவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைச் சீரழித்து வரும் மனிதர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். ‘மீட்டெடுப்போம் நம் பூமியை..’ என்பதே இந்த ஆண்டின் உலகப் புவி நாளுக்கான கருவாகும்.
#2
“மனிதனின் பேராசையைத் திருப்தி செய்ய முடியாத பூமி,
ஒவ்வொரு மனிதனின் தேவையையும்
போதுமான அளவுக்குத் திருப்தி செய்து கொண்டுதான் இருக்கிறது.”
#3
"நம்பிக்கையை விதைக்கும் தொழிலே விவசாயம்."
#4
“நமது சுற்றுச் சூழலே நமது வாழ்வு.”
#5
பசுமையை அழிக்காதீர்கள்!
இயற்கை காட்சிகளைப் பாழாக்காதீர்கள்!
அன்னை பூமியைப் பாதுகாத்திடுங்கள்!
#6
“ஒரு மரத்திலிருந்து பல இலட்சம் தீக்குச்சிகள் செய்ய முடியும்,
ஆனால் ஒரு தீக்குச்சி அழித்து விடுகிறது பல ஆயிரம் மரங்களை.. :( ”
#7
“நமக்குச் சொந்தமானது அல்ல பூமி.
நாமே பூமிக்குச் சொந்தமானவர்கள்.”
***
நாமே பூமிக்கு சொந்தமானவர்கள் அருமை.
பதிலளிநீக்குபடங்களும் அது சொல்லும் கருத்தும் மிக அருமை.
உலகப் புவி தினம் வாழ்க!
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நன்றி கோமதிம்மா.
நீக்குவெட்டபட்டிருக்கும் அந்த மொட்டை மரம் மனதை என்னவொ செய்கிறது.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குவருகைக்கு நன்றி.
உலக புவிதினம். புவி குறித்த வாசகங்கள் மிகவும் சிறப்பு. தேர்ந்தெடுத்து சேர்த்த படங்களும் தான். தொடரட்டும் சேமிப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குசிறப்பான வரிகள். இன்றைய ஆக்சிஜன் தட்டுப்படும் நினைவுக்கு வருகிறது. இயற்கையைதான் எவ்வளவு சீரழிக்கிறோம் நாம்?
பதிலளிநீக்குஆம். இனியேனும் உணர வேண்டும் :(!
நீக்குநன்றி ஸ்ரீராம்.