சனி, 12 ஜனவரி, 2019

முடிவற்ற நேரம் - இரவீந்திரநாத் தாகூர் கவிதை (2)

டவுளே, நேரம் உன் கரங்களில் முடிவற்றதாக இருக்கிறது.
உன்னுடைய நிமிடங்களை எண்ணிட எவரும் இல்லை.

பகல்களும் இரவுகளும் கடக்கின்றன, பூக்களைப் போல் யுகங்கள் மலர்ந்து வதங்குகின்றன.
உனக்குத் தெரியும் காத்திருப்பது எப்படியென.

சிறு காட்டுப் பூவைப் போலப் பரிசுத்தமாய் உனது நூற்றாண்டுகள் ஒன்றையொன்று தொடர்ந்தபடி இருக்கின்றன .

எங்களுக்கோ இழப்பதற்கு நேரமே இல்லை
நேரமின்மையால் நாங்கள் வாய்ப்புகளுக்காகப் போராட வேண்டியதாக இருக்கிறது
தாமதிக்க இயலாத ஏழைகளாக இருக்கிறோம்.

கேட்கும் ஒவ்வொரு அற்ப மனிதனுக்கும் நான் கொடுக்க
நேரமானது போய்க் கொண்டிருக்கிறது இப்படியாக,
உனது பீடம் காணிக்கையின்றிக் கடைசிவரை வெறுமையாக உள்ளது.

நாளின் முடிவில் உன் வாசல் மூடிவிடுமோ எனப் பயந்து போய் விரைந்து வருகிறேன் 
ஆனால் இன்னும் நேரம் இருப்பதை நான் காண்கிறேன்.

*

மூலம்: Endless Time (Verse 82 from Gitanjali) 
               By Rabindranath Tagore


**
தொடர்புடைய முந்தைய பதிவு:
கூண்டுப் பறவை

***

10 கருத்துகள்:

  1. அற்புதமான மொழிபெயர்ப்பு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... கவிபெயர்ப்பு மீண்டும் தொடங்கி விட்டீர்கள்.

    அருமையான கவிதை. அழகான படம்.

    பதிலளிநீக்கு
  3. அழகான படம்.
    கவிதை மொழிபெயர்ப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  4. முடிவற்ற காலத்தின் சொந்தக்காரர் பொறுமையுடன் காத்திருப்பதும், சொற்ப நேரம் வாழும் நாம் அற்ப விஷயங்களை முன்னிறுத்தி அலட்சியமாக வாழ்வதும் எவ்வளவு நுட்பமாக எழுதியுள்ளார்.

    வாசிக்கக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையின் சாராம்சத்தை இருவரிகளில் அழகுறச் சொல்லி விட்டீர்கள்.

      மிக்க நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin