தங்கள் சக்தி, அறிவு, திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்த பெண்களில் சிலருக்கு அங்கீகாரங்களும் மரியாதைகளும் தேடி வர, சிலருக்கு அவை மறுக்கப்படுகின்றன. இன்னும் பலருக்கோ அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்காமலே போகின்றன. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன் வழியில் பல போராட்டங்களைச் சமாளித்து, தோல்விகளில் கற்று, வெற்றிகளில் களித்து நின்றிடாமல் இயல்பாகக் கடந்து, மேலும் வேகத்தோடு முயன்று, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.
மகளிர் தினம் அனுசரிக்கப்படும் மார்ச் மாதத்தில் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அப்படியான பல அசாதாரணப் பெண்மணிகளின் படங்களை ஃப்ளிக்கரில் பகிர்ந்து பின்னர் இங்கே தொகுப்பாக்கி வருகிறேன், கடந்த சில வருடங்களாக. இந்த வருடத் தொகுப்பாக.. கருப்பு வெள்ளைப் படங்கள் பத்து.. பொன்மொழிகளுடன்..
#1
‘நம்மால் இதற்கு மேல் முடியாது என நினைத்து, ஆனாலும் தொடர்ந்து பயணிக்கையில் அதிகரிக்கிறது பலம்’
__Karen Salmansohn
#2
‘வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் நம்பிக்கை இருப்பதை
புன்னகை மூலமாகப் புரிய வையுங்கள் உலகுக்கு’
#3
‘தன்னம்பிக்கை என்பது மற்ற எவரும் உங்களை நம்பாத போது, உங்களை நீங்களே நம்புவது’
#4
‘நம்பிக்கையைச் சுவாசித்து, இயலுமா எனும் சந்தேகங்களை வெளிவிடுங்கள்..’
#5
‘கூட்டத்தில் தொலைந்து போகாதீர்கள். உறுதியானவராய் உங்களைச் சுற்றி வர நோக்குங்கள்’
_Ashley Ballard
#6
‘வாழ்க்கைக் கடினமானதுதான். ஆனால் இயலாத ஒன்றல்ல.’
#7
‘நீங்கள் நினைப்பதை விடவும் நீங்கள் பலசாலி என்பதை உணர்ந்திடுங்கள்’
#8
‘செய்வதை விரும்பிச் செய்கையில் எதுவும் கடினமாகத் தெரிவதில்லை.’
#9
‘உங்கள் மேல் சற்றே கூடுதலாக நம்பிக்கை வையுங்கள்’
#10
‘நம்பிக்கையைத் தேர்வு செய்து விட்டீர்களானால், எதுவும் சாத்தியமே..’

***
அழகான படங்கள். அற்புதமான பொன்மொழிகள்..... தொடரட்டும்....
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு
பதிலளிநீக்குமிக மிக அற்புதமான புகைப்படங்கள்
அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும்
அற்புதமான விளக்க மொழிகள்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்க
மிக்க நன்றி.
நீக்குஎல்லாமே அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஉண்மையான வரிகளும்...அழகோவிய படங்களும்..
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் ஒரு ஓவியம்
மிக்க நன்றி.
நீக்கு