ஆங்கிலப் பெயர்கள்:
Flame vine; Orange trumpet creeper; Golden shower; Chinese cracker flower; Belas (Brazil)
#2
#3
மழை இல்லாத குளிர் காலத்தில் கண்ணைக் கவரும் ஆரஞ்சு வண்ணத்தில் இந்தக் குழல் மலர்கள் பூத்துக் குலுங்கும். பூக்கிற பருவம் இல்லாத மாதங்களிலும் அடர்ந்த இதன் இலைகள் வேலியில் திரைச் சீலையைப் போலப் படர்ந்து மறைப்புக்கு உதவுகின்றன. இவை படர்வதற்கு சற்று உறுதியான வேலிகள் அவசியம். பெரும்பாலும் இரும்புக் கம்பி வேலிகளில் இவற்றைப் படர விடுவார்கள். பல இடங்களில் நூறு மீட்டர்களுக்கும் மேலான நீளமுள்ள தடுப்பு வேலிகளில் இவை வளர்க்கப்படுவதைப் பார்க்கலாம். ஆறு மீட்டர் உயரம் வரை மரங்கள், சுவர்கள்.., காடுகளில் பாறைகள் மேலெல்லாம் படர்ந்து செல்லும். அதிகப் பராமரிப்பு அவசியப்படாத தாவரம். வறட்சி, மழையின்மையைத் தாக்குப் பிடிக்கும் வல்லமை பெற்றது. நோயினாலோ பூச்சிகளாலோ தாக்கப்படுவதுமில்லை.
இலைகள் இரண்டாக மடிந்து ஐந்து முதல் ஏழரை செ.மீட்டர் நீளத்தில் இருக்கும். கொடிச்சுருள் முனையில் மூன்றாகப் பிரிந்து நிற்கும். பூங்கொத்துகள் கிளைத் தண்டுகளின் முனையில் அதாவது இலைகளின் கக்கத்தில் உருவாகித் தொங்கும். பூக்கள் நான்கு முதல் எட்டு செ.மீ நீளத்தில், குழாய் வடிவில் ஒடுக்கமாக வளைந்த மடல்களோடு காணப்படும். ஒவ்வொரு பூவும் இரு நீளமான சூல் தண்டுகளையும் இரு குட்டையான மகரந்தக் கேசரங்களையும் கொண்டிருக்கும். விதையுறையில் சிறகு அமைப்பில் தட்டையான அடி இணைப்புடன் மஞ்சள் நிறத்தில் விதைகள் இருக்கும்.
#5
இதழ்கள் காய்ந்து விழுந்த பின் விதைகள் சூல் தண்டுகளில் ஓரிரு நாட்கள் வரை தொங்கிக் கொண்டிருக்கும். தேன் சிட்டுகளின் மூலமாக அயல் மகரந்த சேர்க்கை நிகழும்.
#5
இதழ்கள் காய்ந்து விழுந்த பின் விதைகள் சூல் தண்டுகளில் ஓரிரு நாட்கள் வரை தொங்கிக் கொண்டிருக்கும். தேன் சிட்டுகளின் மூலமாக அயல் மகரந்த சேர்க்கை நிகழும்.
அழகுக்காகவே வளர்க்கப்பட்டாலும் மருத்துவத்திற்கும் இவை பயன்படுகின்றன. பிரேசில் நாட்டில் இக்கொடியின் இலைகளில் இருந்து ஊட்டச் சத்து மருந்து மற்றும் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேன்ட், தென் கிழக்கு அமெரிக்கா, பசுபிக் தீவுகள் போன்ற உலகின் சில பாகங்களில் இவை வேண்டாத களைச்செடிகளாக அகற்றப்பட்டு வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
**
நன்றி தினமலர் பட்டம்!
***
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 10)
பூவின் படமும், செய்தியும் அருமை. தினமலரில் படித்தேன் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அடுத்த கட்டுரை நேற்றைய இதழில் வந்துள்ளது. நன்றி கோமதிம்மா.
நீக்குபெயர்ப்பொருத்தம் மிகச் சரி
பதிலளிநீக்குபடங்களுடன் பகிர்வும் மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
நன்றி sir.
நீக்குஅருமை....
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்களும் செய்திகளும் அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஉங்கள் தோட்டச் செடி பூக்களா
பதிலளிநீக்குஆம், என் தோட்டத்தில் எடுத்த படங்களே.
நீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅழகிய படங்கள். ஒரு (மூன்றாவது பூப்படம்) படத்தில் ஒரு வண்டு பாதி இலையைத் தின்று முடித்திருக்கிறது!
நல்ல அவதானிப்பு:). படம் 3,4_ல் வண்டு தின்றிருப்பது ஜாம்ருல் இலை. அம்மரத்து வழியே படர்ந்து இறங்கும் கொடியில் இந்தப் பூங்கொத்து.. :)!
நீக்கு