சூரியன் சுட்டெரித்தாலும், வியர்வை ஆறாக ஊற்றெடுத்தாலும் கோடையில் சும்மா இருப்பதில்லை புகைப்படக் கலைஞர்கள். சூரிய உதயம், அஸ்தமன வானம், லாண்ட்ஸ்கேப், இளங்காலை அல்லது பின் மாலை வெளிச்சத்தில் எடுக்க முடிகிற போர்ட்ரெயிட் படங்கள் இவற்றை எடுக்க உகந்த காலமென கோடைக்கான காத்திருப்புடனேதான் இருப்பார்கள். விடுமுறைப் பயணங்களும் பெரும்பாலும் கோடையிலேயே அமைந்து போகின்றன. எத்தனையோ விதப் படங்களை எடுக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி விட்டு கவனத்தை ஈர்க்கிறது தாங்க முடியாத வெப்பமும் தண்ணீருக்கான தவிப்பும். மனிதன் மட்டுமா? விலங்குகளும் பறவைகளும் கூட தாகத்துக்கு விதிவிலக்கல்ல.
ஜாம்ஜெட்பூர் ஜூப்ளி பூங்கா மற்றும் மைசூர் ஜூ, பெங்களூர், தமிழகத்தில் திருச்செந்தூர், முக்கூடலில் கண்ட சில கோடைக் காட்சிகளையே நீங்கள் கல்கியில் பார்க்கிறீர்கள்.
நன்றி கல்கி!
கல்கியில் வெளியாகியுள்ள படங்கள் தனித் தனியாகவும், கூடவே சிலவும் இங்கே..! கோடைத் தாக்கம் குறித்தும் பார்ப்போம்.
#1
#3
#4
#5
#6
அக்னி நட்சத்திரம் முடியவிருக்கும் தருணத்தில், நடு நடுவே சில நாட்கள் மழை பெய்து கொண்டிருக்க ஆசுவாசமாகிக் கொண்டிருக்கிறது பெங்களூர். ஆனாலும் வெப்ப அளவு பதிய ஆரம்பித்த கடந்த 148 வருடங்களில், இந்த வருட ஏப்ரல் 17,18 தேதிகளே அதிகபட்ச வெப்பத்தை அடைந்த நாட்கள் எனப் பதிவானது. அதையொட்டிய மூன்று வாரங்களில் வெப்பம் தாளாது பறக்கும் சக்தியை இழந்து, பருந்துகள் உட்பட வானிலிருந்து வீழ்ந்த பறவைகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் என்கிறது பெங்களூர் மாநகராட்சி. தொடர்ச்சியாக இப்படி நிகழவும் தகவல் கிடைத்ததும் சில அமைப்புகளின் உதவியோடு பறவைகள் விழுந்த இடங்களுக்கு விரைந்து சென்று நீர் கொடுத்திருக்கிறார்கள். ஒருநாளுக்கு மூன்று பறவைகளையாவது காப்பாற்ற முடிந்தது என்றார்கள். டாடா நகர், ஜூப்ளி பூங்காவில் செயற்கை மலரின் குப்பியில் வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தண்ணீர் வைத்திருந்தார்கள்.
திருமதி. கோமதி அரசு (கோமதிம்மா) இந்தக் கோடையின் ஆரம்பத்தில் பறவைகளுக்கு நீர் வைப்பதற்காகவே இணையத்தில் தேடி வாங்கிய பிளாஸ்டிக் தொட்டியைப் படமெடுத்துப் பகிர்ந்திருந்தார்கள் ஃபேஸ்புக்கில். சமீபத்தில் அதில் பறவைகள் ஆனந்தமாக நீர் அருந்தும் காட்சியையும் பதிந்திருந்தார்கள். அனைவரும் இதைப் பின்பற்றலாம். தோட்டம், மொட்டை மாடி, பால்கனிகளில் பறவைகளுக்கும் நீர் வைக்கலாம். நெல்லையில் அம்மா, வீட்டு வாசலில் சிமெண்ட் தொட்டி வைத்து அதில் கால்நடைகளுக்கு நீர் வைக்கிறார்கள்.
அந்நாளில் வீட்டு வாசலில் மண்பானையில் நீர் (அ) நீர்மோர் வைப்பார்கள். அதுபோல முடியாவிட்டாலும் தபால், கொரியர் பட்டுவடா செய்ய என வேகாத வெயிலில் ஏதேனும் அலுவலாக நம் வீடு வருபவர்களின் தாகம் தணிக்கலாம். நாமும் இளநீர், பதநீர், நுங்கு, நீர் மோர், பழச்சாறுகளை அருந்தி கவனத்துடன் இருப்போம்.
#9
#10
***
எல்லாமே அருமை. கல்கியை என் பேப்பர்காரர் நிறுத்தி விட்டார்.
பதிலளிநீக்குஐஸ்கிரீம் சாப்பிடுவது இளவரசரா?
எங்கள் வீட்டில் கூட மொட்டை மாடியில் காக்கைக்கு தண்ணீர் வைக்கிறோம்.
ஓ! ஒவ்வொரு முறை கல்கியில் படைப்பு வெளியாகும் போதும் உங்கள் மூலமே எனக்கு முதலில் தெரிய வரும் :)! சென்ற வார கல்கியில் வந்த படைப்பு. சந்தா இதழ் வந்தபிறகு அறிந்து கொண்டேன் இந்தத் தடவை.
நீக்குகாக்கையுடனான நட்பு குறித்த உங்கள் பதிவு நினைவுக்கு வருகிறது.
ஐஸ்க்ரீம் சுவைப்பது நம்ம இளவரசர் இல்லை :)!
நன்றி ஸ்ரீராம்.
கோடையின் தாக்கம் வரவர அதிகமாகிக்கொண்டே போகிறது. வாயில்லா ஜீவன்கள்தான் பாவம் :-(
பதிலளிநீக்குகல்கியில் வெளியானமைக்கு வாழ்த்துகள்.
நன்றி சாந்தி.
நீக்குகோடையின் தாகம் படங்கள் அருமை . எல்லா படங்களும் அழகு.
பதிலளிநீக்குகல்கியில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
நான் மண் தொட்டியை வாங்கி பறவைகளுக்கு தண்ணீர் வைத்ததை குறிபிட்டதற்கு மகிழ்ச்சி, நன்றி.
ஆன்லைனில் தேடி மண் தொட்டியை வாங்கி அனுப்பினாள் மருமகள். பறவைகள் அதில் தண்ணீர் குடித்து, குளிப்பதை பார்பது மகிழ்ச்சி தருகிறது.
அக்கறையுடன் வாங்கி அனுப்பியிருக்கிறார் மருமகள். அவருக்கு என் வாழ்த்துகள்.
நீக்குபறவைகள் நீர் குடிக்கும் பகிர்வைப் பார்த்து நானும் மகிழ்ந்தேன். நன்றி கோமதிம்மா.
கோடை வெப்பத்தைத் தீர்க்கும் பதிவு வந்த நேரம் சென்னையில் மழை.ராமலக்ஷ்மி படங்களும் தகவல்களும் அதி அற்புதம். தண்ணீர் தரும் தயாள குணம் எல்லோருக்கும் வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குவாழ்த்துக்கள் ..... அனைத்தும் கண்ணை கவரும் படங்கள் ...
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்குகோடை - சிறப்பான படங்கள்.... பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅருமையான புகைப்படங்கள்!தகவல்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஎங்களுக்கு இப்பத்தான் கோடை ஆரம்பிக்குது.. .ஆரம்பமே அமர்க்களம்!! :-(
பதிலளிநீக்குஅங்கே அமர்க்களத்துக்கு கேட்கணுமா? சிரமம்தான்!
நீக்குநன்றி ஹுஸைனம்மா.
பார்த்தவுடன் ஒரே தாகம் தாகம் :)
பதிலளிநீக்குநன்றி :)!
நீக்குநன்றி :)!
நீக்கு