செவ்வாய், 3 மார்ச், 2015

நாகர்கோவிலில் புகைப்படப்பிரியனின் "எக்ஸ்போஷர் ‘15 "


ஃபேஸ்புக் ‘புகைப்படப்பிரியன்’ குழுமத்தின் வெற்றிகரமான மூன்றாம் வருட மாநாடு, வருகிற சனி-ஞாயிறு, மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தங்கள் கடந்த இருமாத காலமாகவே நடைபெற்று வருகின்றன.  குறிப்பிட்டத் தலைப்பு எதுவுமின்றி பொதுவான சிறந்த படங்களுக்கான அழைப்புடன் புகைப்படப் போட்டி அறிவிப்பாகியிருந்தது.

அதில் தேர்வாகும் முதல் 3 படங்களுக்கு பரிசுகள் ரூ 5000, ரூ.3000, ரூ.2000 வழங்கப்பட உள்ளன. சிறந்த 10 படங்களுக்கு சிறப்புப் பரிசுகள், சான்றிதழகள் அளிக்கிறார்கள். இது மட்டுமின்றி புகைப்படக் குழுமத்தில் 15 ஜனவரி முதல் 28 பிப்ரவரி வரை பகிரப்பட்டு வந்த படங்களில் சிறந்த ஒரு படம் “PHOTO OF THE DAY" ஆக தேர்வு செய்யப்பட்டு அவை தனியாக கண்காட்சியின் ஒரு பகுதியில் கெளரவிக்கப்பட உள்ளன.


மேலும் கண்காட்சியில் படங்களைப் பார்வைப்படுத்த விரும்புகிறவர்களுக்கு 28 பிப்ரவரி 2015 வரை அழைப்பு விடப்பட்டிருந்தது. உலகெங்கிருந்தும் ஆர்வத்துடன் பலர் அனுப்பிய படங்களில் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேலானவை தேர்வாகிக் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கானுயிர், இயற்கை, ஸ்ட்ரீட், டேபிள் டாப், கருப்பு வெள்ளை, மேக்ரோ, பனோரமா, டெக்னிகல், லான்ட்ஸ்கேப், ஸ்டில் லைஃப் என அத்தனை வகைப் படங்களும் இடம் பெற உள்ளன. இத்துடன் உலகப் புகழ் பெற்ற கலைஞர்களின் விருது பெற்ற படங்களையும் காண ஒரு நல்வாய்ப்பு. கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

ண்காட்சியுடன் மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சம் நடைபெறவிருக்கும் வகுப்புகள்:

08- 03 - 2015 காலை மணி 9 முதல்..

Candid Photography - Lakshman Iyer ,Sentient, Chennai:


Modelling Photography - Camil J Alex , Tamil Film Industry, Chennai:

புகைப்பட வகுப்புகளுக்கான கட்டணம் (உணவு உட்பட) Rs.850.00.
முன் பதிவு செய்யக் கடைசி நாள் (07-03-2015).

பொழுது போக்காக இக்கலையில் ஈடுபட்ட பலரும் இன்று தொழில்ரீதியாக கற்ற கலையைப் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இவ்வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கண்காட்சியைக் கண்டு இரசித்திடலாம். [எனது படங்கள் ஒன்பது கண்காட்சியில் இடம் பெற உள்ளன.]




புதுகை உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்த நிகழ்வை நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்துச் செல்லும் திரு. மெர்வின் ஆன்டோவுக்குப் பாராட்டுகள். கண்காட்சியும் நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
***


13 கருத்துகள்:

 1. நல்ல நிகழ்வுப் பகிர்வு அக்கா...
  தாங்கள் படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி குமார்.
   எனது படங்கள் பார்வைக்கு மட்டுமே கலந்து கொள்கின்றன.

   நீக்கு
 2. உங்கள் படங்கள் இடம்பெறுவது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  கண்காட்சி நிகழவுகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நற்செய்திதான். உங்கள் ஒன்பது படங்கள் கண்காட்சியில் இடம் பெறுவதற்கு வாழ்த்துகள். உங்கள் படைப்புகள் அங்கு இடம் பெறாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

  :)))))

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல் பகிர்வு. நன்றி.

  கண்காட்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. உங்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெறுவதற்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin