சனி, 21 மார்ச், 2015

உலகக் கவிதைகள் தினம்

ன்று உலகக் கவிதைகள் தினம். இந்தநாளில் இப்பகிர்வு பொருத்தமானதாக இருக்குமென எண்ணுகிறேன்.

#1
கவிஞர் கலாப்ரியா

#2
திருமதி. சரஸ்வதி கலாப்ரியா

#3
எழுத்தாளர் பாவண்ணன்
இரு தினங்களுக்கு முன், 18 மார்ச் அன்று, மாலை ஐந்து மணி. கிளிகள் பாடும், மரங்கள் சூழ்ந்த கப்பன் பூங்காவில்,  நடை பெற்றது ஒரு இலக்கிய சந்திப்பு. கவிஞர் கலாப்ரியா அவர்களின் பெங்களூர் வருகையை முன்னிட்டு. தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான அவரைச் சந்திக்க மிகக் குறுகிய கால அவகாசத்திலும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆவலுடன் குழுமி விட்டிருந்தார்கள்.

இவர்களில் ஏற்கனவே கவிஞரை நன்கு அறிந்த நண்பர்கள், அதுவரையில் சந்தித்திராதவர்கள் இரு வகையினரும் அடக்கம். வா. மணிகண்டனின் இந்த அறிவிப்பை, நான் சென்று வந்த பிறகே காண நேர்ந்தது.

மாலை சுமார் 3.45 மணிக்கு கிருத்திகா தரண் அழைத்து, சந்திப்பு குறித்த தகவலைச் சொன்னார். ‘முக்கால் மணியில் எங்கள் ஓட்டுநரை வரவழைத்து அங்கு வந்து சேர்வதென்பது முடியாதே’ என்றேன். தானே வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லி விட்டார். அவருக்கு நன்றி! கவிஞர், திருமதி. கலாப்பிரியா மற்றும் அவர்களது குடும்ப நண்பர் திரு மஹாலிங்கம் ஆகியோருடன் ஐந்து மணி அளவில் கப்பன் பார்க்கை அடைந்தோம். எங்களுக்கு முன்னதாகவே எழுத்தாளர் பாவண்ணன், வா.மணிகண்டன் மற்றும் K. ஸ்ரீனிவாசன், P. இளம் பரிதி, C.T. சம்பந்தம், ச. பாலாஜி, G. ரவி ஆகியோர் குழுமி விட்டிருந்தார்கள். தாமதமாக வந்து கலந்து கொண்டார் கிருஷ்ணக் குமார். யார் பெயரேனும் விட்டுப் போயிருந்தால் மன்னிக்க. ஒரு க்ரூப் ஃபோட்டோ மொபைலில் எடுக்கப்பட்டது. கிடைத்தால் அதையும் பின்னர் இங்கே சேர்க்கிறேன்.

(Picture Courtesy: கவிஞர் கலாப்ரியா)

எங்கேனும் வட்டமாக உட்காரலாம் என்கிற திட்டம், நான் உட்பட கீழே அமர சிரமப்படுகிறவர்களை மனதில் கொண்டு பாறை மேல் கூட்டத்தை நடத்தலாம் என முடிவானது. உயரம் அதிகமில்லாத வழுக்குப் பாறையில் ஆங்காங்கே அனைவரும் அமர்ந்து கொண்டோம். பாறைமேல் கிடந்த சின்னப் பாறைகளை எங்களில் சிலர் இருக்கைகளாக்கிக் கொள்ள,  மற்றவர்கள் வசதிப்படி காலை மடக்கியும் நீட்டியும் அமர்ந்து கொள்ள, மாலைச் சூரியன் முற்றிலுமாய் இறங்கி விட்டிருக்க, தென்றல் வீசலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்க, பக்கத்து நீண்ட பாறையொன்றில் மழலைகள் ஓடியாடி உற்சாகக் குரல் எழுப்பியபடி இருக்க, கிளைகளில் கிளிகள் பாட, வருவோர் போவோர் சற்றே நின்று பார்த்து விட்டு நகர, இவற்றுக்கு மத்தியில் இவை அனைத்தையும் கவனித்தபடியே நடந்தது கூட்டம்.


பகிர்ந்திருப்பவை இருந்த இடத்திலிருந்து (#11 தவிர்த்து), 35mm lens கொண்டு எடுத்தவை. வா. மணிகண்டன் படமெடுக்குமாறு கிளிகளைக் காட்டியபோது Zoom லென்ஸுகளை எடுத்து வரவில்லை என்றேன். காரணம் உட்கார இடம் தேடி சில சந்திப்புகளில் பூங்காவில் வெகு தூரம் உள்ளே செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அதனாலேயே கைப்பைக்கு அடக்கமாக prime lens ஒன்று மட்டுமே எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் பால்பவனிலிருந்து பார்த்தால் தெரிகிற, நுழைவாயிலுக்கு அருகாமையிலேயே இந்த தடவை இடம் அமைந்து விட்டது. கோடை என்பதாலோ என்னவோ இருட்டும் வரை கொசுத்தொல்லையும் இருக்கவில்லை.

#5


#6


#7#8


#9
Update:
2015 ஆசிரியர் தினத்தின் போது
ஃப்ளிக்கர் தளத்தில் கருப்பு வெள்ளையில் நான் பதிந்த இப்படம்
EXPLORE பக்கத்தில் தேர்வாகி
5600++ பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளது:
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/16744955610/ 
முதலில் அவரவர் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். வா. மணிகண்டனைத் தவிர்த்து மற்ற அனைவரையுமே நான் முதன் முறையாகச் சந்திக்கிறேன், கிருத்திகா உட்பட. எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் எனது  “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்கு ’திண்ணை’ இணைய இதழில் எழுதிய விமர்சனம் இங்கே. மின்னஞ்சல் மூலமாக மட்டுமே பரிச்சயமாகி இருந்த அவரையும் அன்றுதான் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இடைக்கல் அரசு மான்ய மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு  மாணவர்களுக்குக் கணக்கு ஆசிரியராக முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி, அவர்களை வழிநடத்தி ஓய்வு பெற்றவர் திருமதி. சரஸ்வதி கலாப்ரியா.

கிருத்திகா நான் வசிக்கும் இடத்துக்கு வெகு அருகாமையில் 3 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பதே போனவாரம்தான் தெரிய வந்திருந்தது. இவரைப் பற்றிய அறிமுகத்துக்கு இங்கே செல்லலாம், குங்குமம் தோழியின் இந்த இதழின் ஸ்டார் தோழி இவரே. வாழ்த்துகள் கிருத்திகா!

#10

ன்னைப் பாதி திருநெல்வேலிக்காரனாக்கியது கவிஞர் கலாப்பிரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’,‘உருள் பெருந்தேர்’ மற்றும் எழுத்தாளர் சுகாவின் ‘மூங்கில் மூச்சு, தாயார் சன்னதி, சாமானியனின் முகம்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளே என்றார் திரு. இளம் பரிதி. இவர்கள் இருவருமே மண்ணின் மாந்தர்களோடு, ஊரின் ஒவ்வொரு தெருவையும் தனக்குப் பரிச்சயப்படுத்தியவர்கள் என்றார்.

மேலும் தன் தயாரிப்பில் இருக்கும்  நூல் குறித்துப் பகிர்ந்து கொண்டார். முழுக்க முழுக்க இரயில் பயணங்கள் குறித்த படங்கள், கவிதைகளுடனான தொகுப்பு என்றதும் எனக்கு CVR நினைவுக்கு வந்தார். அவரைப் பற்றிச் சொன்னேன். CVR, PiT (தமிழில் புகைப்படக் கலை) தளத்தின் குழும உறுப்பினராக தன் புகைப்பட அனுபவங்களைப் பாடங்களாகப் பகிர்ந்து வந்தவர் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இவரது ஃப்ளிக்கர் தொகுப்பில் அதிகமாக இரயில், மற்றும் இரயில் நிலையக் காட்சிகளைப் பார்க்கலாம். இவரின் இந்த அனுபவங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்பது என் பலநாள் எண்ணம். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும். காட்சிக் கவிதையாகக் கண்ணுக்குள் நிற்கும். Panning படங்கள் அற்புதமாக இருக்கும். தனி ஆல்பமாக அவற்றைத் தொகுத்து வைக்க ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். இப்போது இங்கே தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். மாதிரிக்கு சமீபத்திய படம் ஒன்று இங்கே:
படம்: CVR

#11
சந்திப்பு குறித்து வா. மணிகண்டனின் பகிர்வு இங்கே: ஒரு மாலைப் பொழுது

லக்கியம், கல்வி, ஊர் உலக நடப்புகள் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஏழுமணி தாண்டி, இருள் சூழ்ந்து விட்டதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்த உரையாடலை வலுவில் நிறுத்தி வீட்டுக்குக் கிளம்ப வைத்தன கொசுக்கள்.  ஒருவருக்கொருவர் விடைபெற்றுத் திரும்பினோம்.

#12
உலகக் கவிதைகள் தினம்

குடிசையில் ஆங்காங்கே
ஒளிக் காசு சிதறும்
சூரியன்
தொட்டில் குழந்தையின்
ஏழை மார்பிலும்
சூடுகிறது
ஒரு தங்கப்பதக்கம்.

- கவிஞர் கலாப்ரியா

இரு தலைமுறைக் கவிஞர்கள்.

அனைத்துக் கவிஞர்களுக்கும் கவிதைகள் தின வாழ்த்துகள் !

***

25 கருத்துகள்:

 1. அழகான படங்களுடன் அருமையான சந்திப்பு குறித்த பகிர்வு...
  வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 2. இன்று இப்படி ஒரு தினமா? அட! நல்லதொரு சந்திப்பைப் பற்றி இனிமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. நிழற்படங்களில் உள்ள கவிஞர் பலரின் ஒரு கவிதையாவது
  இட்டு இருந்தால், அல்லது அல்லது அவை இருக்கும் தொடர்பு லிங்க் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே

  என்ற ஆதங்கம் மனதில் இருந்தது என்று

  சொல்லித்தான் ஆகவேண்டும் என்று தோன்றினாலும்

  இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை,
  இது போன்ற கவிஞர் அவை கூட்டுவதே சிறப்பு எனவும்

  சொல்ல ஆவல்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேர்த்திருக்கிறேன், பாருங்கள் :)! நன்றி.

   நீக்கு
  2. பார்த்தேன்.
   ரசித்தேன்.

   அந்த தொட்டிலில் இருக்கும்
   அத்தேனினிய சின்னவனை க்
   கையிலே எடுத்துக்
   கொஞ்சவும்
   கனவு கண்டேன்.

   சுப்பு தாத்தா.

   நீக்கு
 4. மிக அருமை..
  சந்திப்பு பற்றி எனக்கு தெரியாமல் போய்விட்டதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரமா. குறுகிய கால அவகாசத்திலேயே நானும் அறிய வந்தேன். உங்கள் தொடர்பு எண்ணை வாங்கிக் கொள்கிறேன்.

   12 ஏப்ரல் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவிருக்கும் வாசகர் சந்திப்பு பற்றி அறிந்து கொள்ள கீழ்வரும் இரு பதிவுகளும் உங்களுக்கு பயனாகும்:

   http://www.nisaptham.com/2015/03/blog-post_19.html

   http://www.nisaptham.com/2015/03/blog-post_65.html   நீக்கு
 5. அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அனைத்தும் அருமை! கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. ஊருக்குச் சென்று சில நாள் கழித்து இன்று வந்து கவிதை என்று டாஷ்போர்டில் பார்த்ததும் என் ப்லாக் கூட பார்க்காமல் உங்கள் ப்லாக் பார்க்க ஓடி வந்தேன் ராமலெக்ஷ்மி. அருமை. வாழ்த்துகள் அனைவருக்கும் சிறப்பான புகைப்படங்கள் & பகிர்வு :)

  பதிலளிநீக்கு
 8. பகிர்ந்த கவிதை அருமை. கவிஞர்கள் சந்திப்பு படங்களும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 9. மிக அழகான படங்களால்
  நிரப்பப்பட்ட. நல்லதொரு கவிதைப்பதிவு. நன்றி RAmalakshmi

  பதிலளிநீக்கு
 10. பதிவா? இல்லை படமா?

  எதைச் சொல்ல ? எதை விட?

  அத்தனையும் அருமையோ அருமை!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin