வியாழன், 8 ஜனவரி, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 6 & 7)


சொல்கிறார்கள் குழந்தைகள் “ஓ! களைப்பாய் இருக்கிறோம் நாங்கள்.
எங்களால் ஓடிடவோ தாவிடவோ இயலாது __
எப்போதேனும் புல்வெளியை நாங்கள் நாடினால், அது
அதிலே விழுந்து உறங்க மட்டுமே.

விழக் குனிகையில் எங்கள் முட்டிகள் கடுமையாக நடுங்குகின்றன  __
தவிர்க்க முயன்று எங்கள் முகத்தின் மேலேயே விழுகிறோம்;
கனத்து இழுக்கும் எங்கள் கண்ணிமைகளுக்கு
பனியைப் போல வெளிறித் தெரிகின்றன சிகப்பு மலர்கள்.
ஏனெனில், நிலச்சுரங்கத்தில் இருண்மை நிறைந்த கரிகளின் ஊடே
நாள் முழுவதும் சுமையை இழுப்பதில் களைத்துப் போகிறோம்__
அல்லது, நாள் முழுவதும் தொழிற்சாலைகளில்
இரும்புச் சக்கரங்களை இயக்குகிறோம்,  சுற்றிச் சுற்றி வந்து.
 

நாள் முழுவதும் இரைச்சலுடன் சுற்றுகின்றன சக்கரங்கள்,
எழும்பும் காற்று அறைகிறது எங்கள் முகத்தில்,
எங்கள் இதயங்களே திரும்பிடும் வரையில்,
நாடித்துடிப்புச் சூடாக, சுழலுகின்றன எங்கள் தலைகளும்,
சுழலுகின்றன சுவர்கள் இருக்கும் இடத்தினின்றே,
சுழலுகிறது வானம், உயரத்தில் சன்னலுக்கு மேலே,
சுழற்றுகின்றன உத்திரத்தில் தவழும் கருப்பு ஈக்களை

சுழலுகின்றன இரும்புச் சக்கரங்கள் நாள் முழுவதும்;
சுழலுகின்றன அனைத்தும், அவற்றின் கூடவே நாங்களும்!
‘ஓ சக்கரங்களே,’  சில நேரங்களில் பிரார்த்திக்கிறோம்,
பித்துப் பிடித்தாற்போல் உடைந்து அழுகிறோம்
‘நில்லுங்கள்! இன்றொரு நாள் அமைதியாயிருங்கள்!’

*

படங்கள் நன்றி: இணையம்

மூலம்: “The Cry of the Children
by Elizabeth Barrett Browning
*



8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தேவைப்படுகிறவர்கள் கூகுளில் தேடி எடுத்துக் கொள்ள, மூலம் எதுவென எப்போதும் குறிப்பிடுகிறேனே. தமிழாக்கம் என்பது வரிவரிக்கு வரியான மொழிபெயர்ப்பு அல்ல. உணர்வை உள்வாங்கி தமிழில் தருவது. சிலருக்கு இப்புரிதல் இருப்பதில்லை. ஒருவேளை பாடல்கள் தொடர்பற்றுத் தோன்றக் கூடுமாயின் முந்தைய பாகங்களை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி மலரன்பன்.

      நீக்கு
  2. மனத்தைக் கனக்கவைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. மனதைக் கனக்க வைக்கும் வரிகள் அக்கா...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin