Tuesday, January 13, 2015

‘தூயோமாய் வந்தோம்..’ திருப்பாவை - பரதம் (பாகம் 2)

#1 நாராயணனே நமக்கே பறை தருவான்.. [Explored in Flickr]
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்"

#2 எல்லே இளங்கிளியே.. இன்னம் உறங்குதியோ..?
” எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
'வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்!'
'வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!'
'ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை?'
'எல்லாரும் போந்தாரோ?' 'போந்தார் போந்தெண்ணிக் கொள்'
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். “

#3 சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்!

"சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்."

#4 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி..
”ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!”

#5 ஆழி மழைக் கண்ணா..
“ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.”

#6 நாராயண மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
“கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்”

#7 குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ? 

"புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்."
#8 மணிக்கதவம் தாள்திறவாய்! 
நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

#9 அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி..
“அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.”

- திருப்பாவை
***

பாகம் 1 இங்கே.

16 comments:

 1. ஆகா ......அனைத்து படங்களும் மிகவும் அருமை... அழகோ அழகு

  ReplyDelete
 2. அனைத்து படங்களும் மிக அழகு ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 3. திருப்பாவை மீதிப் பாடல்களுக்கும் பரத புகைப் படங்கள் எடுத்திருக்கிறீர்களா எல்லாமே நேர்த்தியாய் இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. எடுத்த படங்களில் சிலவற்றுக்குப் பொருத்தமான பாடல்களைப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாப் பாடல்களுக்கும் பகிர படங்கள் இல்லை.

   நன்றி GMB sir.

   Delete
 4. அனைத்து படங்களுமே அழகு. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அசத்தல்.

  இதன் காஸ்ட்யூமிற்காகவே பரதம் ரொம்பப் பிடிக்கும் :-)

  ReplyDelete
  Replies
  1. ஆம். பார்க்கவே அழகு:). நன்றி சாந்தி.

   Delete
 6. கண்கவர் படங்கள். ஆடற்கலை தெய்வம் தந்தது!

  இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம். தங்களுக்கும் எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள் :) !

   Delete
 7. படங்கள் அருமை அக்கா.
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமார். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin