ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

முகமூடிகள் - உயிரோசை கவிதை

ன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு முகமூடிகள்

அணிந்தது அறியாதபடி
தோலோடு சங்கமமாகி
சதையோடும் எலும்போடும் ஊடுருவி

பளபளத்த முகமூடிகளுக்கே
எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள்
அத்தனையும் ரசித்தபடி
இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி
உயிரோடு ஒன்றிப்போய்
உலகுக்கான அடையாளமாகி.

ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில்
விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம்
கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத்
தன்னிச்சையாக

ஒவ்வொன்றாக அன்றி
ஒட்டு மொத்தமாக

சுற்றம் மறந்து நிதானம் இழந்து
மதி மழுங்கி மற்றவர் வருத்தி
மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில்
எதிரே இருந்த கண்ணாடியை
எதேச்சையாய் ஏறிட

பேதலித்து அலறுகிறது சுயமுகம்
தன்கோரம் தானே காணச் சகியாமல்.

***
டைந்து போன பொம்மையைக்
கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த
குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும்
விளையாட்டுச் சாமான்களைப் போலக்
கலைந்து கிடந்தது வீடு
கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்

கலங்கி நின்ற மனதை
ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின-
ஆத்திரமாய் தத்தமது முகமூடிகளை

குவிந்த முகமூடிகளுக்குள்
அமுங்கி மூச்சுத் திணறி
மீட்கக் கோரி வெளி நீண்ட கையை
ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட
மகானுபாவர்,

”வருத்தம் விடு!
மனிதருக்காகவே
படைக்கப்பட்டவைதாம் இவை.
சேர்ந்து கிடப்பதில்
இன்னும் சிறப்பானதாய்த்
தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள
கிடைத்த வாய்ப்பாகப் பார்”
உபதேசித்தார்

நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
கெட்டியாகப் பிடித்தபடி.
*****

படம் 1: TOI Crest-ல் பொருத்தமாகக் கிடைத்தது.

படம் 2: உயிரோசையில் கவிதையுடன் வெளியானது.

நன்றி உயிரோசை!

57 கருத்துகள்:

  1. கவிதை ஆழமான அர்த்தம் பொதிந்தது . நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு

    பதிலளிநீக்கு
  3. //நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
    கெட்டியாகப் பிடித்தபடி.//

    ஹ ஹ ஹா

    அய்ய் நானும் கூட எழுத்து எனும் முக மூடியணிந்து சிரிக்கிறேனே

    பதிலளிநீக்கு
  4. //குவிந்த முகமூடிகளுக்குள்
    அமுங்கி மூச்சுத் திணறி
    மீட்கக் கோரி வெளி நீண்ட கையை
    ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட
    மகானுபாவர்,
    //

    arumai. vaalththukkal

    பதிலளிநீக்கு
  5. \\அணிந்தது அறியாதபடி
    தோலோடு சங்கமமாகி
    சதையோடும் எலும்போடும் ஊடுருவி//

    அருமை ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  6. //கலங்கி நின்ற மனதை
    ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
    தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின-
    ஆத்திரமாய் தத்தமது முகமூடிகளை//

    உலகம் இதுதான் = நான் இதுவரை
    உளறியதெல்லாம் இதற்குத்தான் என‌
    சொல்லாமல் சொல்லி நின்றன.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. யாரிடம் உண்மை முகம்.
    எல்லோரிடமுமே முகமூடிதான்.அதுவும் ஆளுக்கேற்ற விதத்தில் மாற்றும் வித்தையோடு !

    பதிலளிநீக்கு
  8. அர்த்தம் உள்ள கவிதை, அக்கா... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. மனித வாழ்க்கையை மொத்தமா சொல்லிட்டீங்க எல்லா வரிகளும் பொருள் பதிந்தவையாய் உயர்ந்து நிற்கிறது கவிதை.

    பதிலளிநீக்கு
  10. ஆழமான கருத்துக்கள். படங்கள் கூட மிகப் பொருத்தமாக... வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  11. //பேதலித்து அலறுகிறது சுயமுகம்
    தன்கோரம் தானே காணச் சகியாமல்.//

    அருமை! தேர்ந்தெடுத்து செதுக்கிய வார்த்தைகளுடன் பொலிகிறது கவிதை.

    ஆளுக்கொரு வேஷம்,
    இல்லையென்றால்
    எப்படிச் செய்வது
    உலகத்தில் வாசம்?

    பதிலளிநீக்கு
  12. //பேதலித்து அலறுகிறது சுயமுகம்
    தன்கோரம் தானே காணச் சகியாமல்.//

    'மாற்றி யோசி' கவிதை மாதிரி பட்டது எனக்கு. வெறுத்துப் போய் கவிதை வெளிப்பட்டு விட்டது போலும்!

    ஆக, ஒரு பாஸிடிவ் பிரிஸ்கிரிப்ஷன்:
    முகமூடியை மாட்டி மாட்டி முகமே முகமூடியாகப் போய் இதய வாசல் அடைந்து விடும், இல்லையா?..
    சுயமுகம் கோரமாக இருந்தாலும்,
    அன்பான இதயம் கொண்டிருந்தால் போதும்!

    பதிலளிநீக்கு
  13. //நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
    கெட்டியாகப் பிடித்தபடி.//

    :)அருமை அக்கா.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. அழகிய நடையில் அர்த்தமுள்ளக்கவிதை.

    பதிலளிநீக்கு
  15. இரண்டுமே அவ்வளவு யதார்த்தம் அக்கா.

    வாழ்த்துகளும் கூடவே.

    பதிலளிநீக்கு
  16. /பேதலித்து அலறுகிறது சுயமுகம்
    தன்கோரம் தானே காணச் சகியாமல்.

    /

    உண்மை

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. சந்தித்த முகமூடிகளும் நினைவுக்கு வருகின்றன. அணிந்து கொள்ளும் முகமூடிகளும்! முகமூடி இல்லாமல் இருக்க முடியாது...அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  18. எல் கே said...
    //கவிதை ஆழமான அர்த்தம் பொதிந்தது . நன்றி//

    நன்றி எல் கே.

    பதிலளிநீக்கு
  19. goma said...
    //ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு//

    நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  20. ப்ரியமுடன் வசந்த் said...
    ***//நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
    கெட்டியாகப் பிடித்தபடி.//

    ஹ ஹ ஹா

    அய்ய் நானும் கூட எழுத்து எனும் முக மூடியணிந்து சிரிக்கிறேனே//***

    யார்தான் விதிவிலக்கு:)? நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  21. மதுரை சரவணன் said...
    ***//குவிந்த முகமூடிகளுக்குள்
    அமுங்கி மூச்சுத் திணறி
    மீட்கக் கோரி வெளி நீண்ட கையை
    ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட
    மகானுபாவர்,
    //

    arumai. vaalththukkal//***

    நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  22. அஹமது இர்ஷாத் said...
    //வாழ்த்துக்க‌ள்.//

    நன்றி அஹமது இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  23. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    ***\\அணிந்தது அறியாதபடி
    தோலோடு சங்கமமாகி
    சதையோடும் எலும்போடும் ஊடுருவி//

    அருமை ராமலக்‌ஷ்மி//***

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  24. sury said...
    ***//கலங்கி நின்ற மனதை
    ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
    தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின-
    ஆத்திரமாய் தத்தமது முகமூடிகளை//

    உலகம் இதுதான் = நான் இதுவரை
    உளறியதெல்லாம் இதற்குத்தான் என‌
    சொல்லாமல் சொல்லி நின்றன.//***

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  25. ஹேமா said...
    //யாரிடம் உண்மை முகம்.
    எல்லோரிடமுமே முகமூடிதான்.அதுவும் ஆளுக்கேற்ற விதத்தில் மாற்றும் வித்தையோடு !//

    மிகச் சரி. நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  26. Chitra said...
    //அர்த்தம் உள்ள கவிதை, அக்கா... பாராட்டுக்கள்!//

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  27. தமிழரசி said...
    //மனித வாழ்க்கையை மொத்தமா சொல்லிட்டீங்க எல்லா வரிகளும் பொருள் பதிந்தவையாய் உயர்ந்து நிற்கிறது கவிதை.//

    மிக்க நன்றி தமிழரசி.

    பதிலளிநீக்கு
  28. அமுதா said...
    //ஆழமான கருத்துக்கள். படங்கள் கூட மிகப் பொருத்தமாக... வாழ்த்துக்கள் மேடம்.//

    நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  29. கவிநயா said...
    ***/பேதலித்து அலறுகிறது சுயமுகம்
    தன்கோரம் தானே காணச் சகியாமல்.//

    அருமை! தேர்ந்தெடுத்து செதுக்கிய வார்த்தைகளுடன் பொலிகிறது கவிதை.

    ஆளுக்கொரு வேஷம்,
    இல்லையென்றால்
    எப்படிச் செய்வது
    உலகத்தில் வாசம்?/***

    அதுதானே, சரியாகச் சொன்னீர்கள்! நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  30. மோகன் குமார் said...
    //உண்மை..எல்லோருக்கும் !//

    ஆம், நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  31. asiya omar said...
    //அருமை.வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  32. ஜீவி said...
    ***//பேதலித்து அலறுகிறது சுயமுகம்
    தன்கோரம் தானே காணச் சகியாமல்.//

    'மாற்றி யோசி' கவிதை மாதிரி பட்டது எனக்கு. வெறுத்துப் போய் கவிதை வெளிப்பட்டு விட்டது போலும்!

    ஆக, ஒரு பாஸிடிவ் பிரிஸ்கிரிப்ஷன்:
    முகமூடியை மாட்டி மாட்டி முகமே முகமூடியாகப் போய் இதய வாசல் அடைந்து விடும், இல்லையா?..
    சுயமுகம் கோரமாக இருந்தாலும்,
    அன்பான இதயம் கொண்டிருந்தால் போதும்!//

    அப்போது இயல்பாக அந்த அகத்தின் அழகு முகத்தில் வந்து விடும், இல்லையா:)! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  33. அமைதிச்சாரல் said...
    //அருமை ராமலஷ்மி..//

    நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  34. சுந்தரா said...
    ***//நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
    கெட்டியாகப் பிடித்தபடி.//

    :)அருமை அக்கா.

    வாழ்த்துக்கள்!//***

    நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  35. கோநா said...
    //arumai ramalakshmi. vaalththukkal.//

    நன்றி கோநா.

    பதிலளிநீக்கு
  36. ஸாதிகா said...
    //அழகிய நடையில் அர்த்தமுள்ளக்கவிதை.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  37. சுசி said...
    //இரண்டுமே அவ்வளவு யதார்த்தம் அக்கா.

    வாழ்த்துகளும் கூடவே.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  38. திகழ் said...
    ***/பேதலித்து அலறுகிறது சுயமுகம்
    தன்கோரம் தானே காணச் சகியாமல்./

    உண்மை

    வாழ்த்துகள்/***

    மிக்க நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  39. ஈரோடு கதிர் said...
    //ம்ம்ம்ம்//

    நன்றி கதிர்:)!

    பதிலளிநீக்கு
  40. ஸ்ரீராம். said...
    //சந்தித்த முகமூடிகளும் நினைவுக்கு வருகின்றன. அணிந்து கொள்ளும் முகமூடிகளும்! முகமூடி இல்லாமல் இருக்க முடியாது...அருமையான கவிதை.//

    ஆம் ஸ்ரீராம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. சிலசமயம் மிக அழகான தேவையான முகமூடிகளும் உண்டு ராம்லெக்ஷ்மி..:))

    பதிலளிநீக்கு
  42. @ தேனம்மை லெக்ஷ்மணன்,

    வாங்க தேனம்மை, நன்றி:)! முகமூடிகளே தேவைக்குதானே? அதுவும் அழகான, சமயத்தில் நீங்க சொல்றா மாதிரி ‘மிக’ அழகான முகமூடிகள்தான் எல்லோரது விருப்பமாகவும்..:)!

    பதிலளிநீக்கு
  43. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 25 பேருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. Good lines... I can feel a sense of flow all through.. Although I learned to read tamil a year ago, enjoyed a lot.! My wishes...

    பதிலளிநீக்கு
  45. உண்மைதான்... நல்லாயிருக்குங்க

    பதிலளிநீக்கு
  46. //”வருத்தம் விடு!
    மனிதருக்காகவே
    படைக்கப்பட்டவைதாம் இவை.
    சேர்ந்து கிடப்பதில்
    இன்னும் சிறப்பானதாய்த்
    தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள
    கிடைத்த வாய்ப்பாகப் பார்”
    உபதேசித்தார்//

    நல்ல உபதேசம்.

    நல்ல கவிதை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  47. Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
    //Good lines... I can feel a sense of flow all through.. Although I learned to read tamil a year ago, enjoyed a lot.! My wishes...//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவிக்குமார். தங்கள் தாய்மொழி மலையாளம் என அறிய வந்தேன். ஒருவருடத்தில் தமிழ் கற்று தமிழ் வலைப்பூக்களும் வாசித்து வருவது பாராட்டக்குரிய ஒன்று. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  48. D.R.Ashok said...
    //உண்மைதான்... நல்லாயிருக்குங்க//

    மிக்க நன்றி டி ஆர் அஷோக்.

    பதிலளிநீக்கு
  49. கோமதி அரசு said...
    //நல்ல கவிதை ராமலக்ஷ்மி.//

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  50. manivalli said...
    //kavithai arumai
    muhamoodi - unmai
    asalana muhathai yellorum
    theduhirom//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin