வியாழன், 8 ஜூலை, 2010

இனிய அத்தாட்சி - தேவதை கவிதை



அதிகாலை அழைப்பு மணிக்கு
ஆடியசைந்து கதவைத் திறக்க
வாசலடைத்து நின்று
அதிர வைக்கலாம்
முறக்காதுகள் விசிறியபடியொரு
கறுப்பு யானை

வீதியோரமாய்
வேடிக்கை பார்த்து நடக்கையில்
கழுத்தில் வந்து விழுந்து
ஒருநாள் முதல்வர் ஆக்கலாம்
இந்திரலோகத்து வெள்ளை யானை
தூக்கியெறிந்த மாலை

கட்டிய மணி கலகலக்க
முரட்டுப் பசு துரத்தலாம்
'செண்பகமே' பாட்டு நமக்கு
அந்நேரம் பார்த்து
மறந்து தொலைக்கலாம்

பறக்கும் காத்தாடிகளின்
பச்சை நீல வால்கள் பற்றி
ஏழு கடல் மலைகள்
மேகம் கிழித்துத் தாண்டிப்போய்
தீராநோய் தீர்க்கவல்ல
மூலிகையைப் பறித்துவந்து
பலபேரின்
பெரும்பிணிகள் போக்கலாம்
உற்றவரின் முகங்களிலே
ஒளிதிரும்பச் செய்யலாம்

நடைபழகும் சிறுமகளின்
மூணுசக்கர வண்டியேறி
நாலடி மிதிக்கும் முன்னே
கால்மடங்கிச் சரியலாம்
சூழ நின்ற பாலகர்கள்
கைதட்டிக் குதூகலிக்க
கள்ளமில்லா அச்சிரிப்பினிலே
கரைந்தேதான் போகலாம்

நினைவுகளின் நீட்சியாகவோ
காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
எப்படியாக வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!
***

படம்: இணையத்திலிருந்து..




'தேவதை' மாதம் இருமுறை பத்திரிகையின் ஜுலை 1-15, 2010 இதழில் வெளியாகியுள்ள கவிதை:

நன்றி தேவதை!

77 கருத்துகள்:

  1. ஆகா.

    நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!
    ***

    தேவதைக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. //நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்///

    மிக அழகு!

    கனவுகளில் காட்சிகளை சேர்த்தும்,கோர்த்தும் கொண்டிருக்க,மனம் நிம்மதியாக செல்ல கூடிய தருணங்கள் -
    கண் அயர்ந்திருக்கும் வேளை!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அழகான வெளிபாடு.

    //எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!//

    இது கூடுதல் கவன ஈர்ப்பு.

    பதிலளிநீக்கு
  4. கண்ணயர்ந்ததற்கு சாட்சி கனவுகள்....

    அருமை

    பதிலளிநீக்கு
  5. //கட்டிய மணி கலகலக்க
    முரட்டுப் பசு துரத்தலாம்
    'செண்பகமே' பாட்டு நமக்கு
    அந்நேரம் பார்த்து
    மறந்து தொலைக்கலாம்//

    "பக்" என்று சிரித்தாலும் அதனுள் இருந்த அர்த்தம் அபாரம்.அப்படியே ஊர்ந்து சென்ற வரிகள் முழுதுமே.வாத்துகள் லஷ்மி அக்கா.

    எதுவும் எப்போதும் நடக்கலாம் !

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள்.. கவிதை நல்லாயிருக்குங்க...

    பதிலளிநீக்கு
  7. /*நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!*/
    சூப்பர்... அருமை.... என்ன சொல்ல?
    முத்துச்சரத்தில் வழக்கமான கவிதைகளில் இருந்து சற்றே வித்யாசமாக இருக்கிறது என்றும் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  8. அருமை. ரொம்ப நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  9. //நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்//
    அருமை.

    பதிலளிநீக்கு
  10. அட...எனக்கு இந்த புத்தகம் அன்பளிப்பு பிரதியாவே வந்துச்சுங்க. (எல்லாம் வாசகர் கடிதம் எழுதியதுக்காகதான்.) கவிதையை படிச்சேன். நல்லா இருக்கேன்னு ஒரு நொடி நினைச்சுட்டு அடுத்த பக்கம் போயிட்டேன். உங்க பெயரைக் கவனிக்கலை.

    இப்போ பதிவைப் பார்த்துட்டுதான் மறுபடி கவிதையை வாசிச்சேன்.

    இந்தக் கவிதையால நான் சின்ன வயசுல படிச்ச கதைகளும் கனவுகளும் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  11. //நடைபழகும் சிறுமகளின்
    மூணுசக்கர வண்டியேறி
    நாலடி மிதிக்கும் முன்னே
    கால்மடங்கிச் சரியலாம்
    சூழ நின்ற பாலகர்கள்
    கைதட்டிக் குதூகலிக்க
    கள்ளமில்லா அச்சிரிப்பினிலே
    கரைந்தேதான் போகலாம்//

    குழந்தைகளோடு விளையாடிப்பார்க்கத்தான் எல்லா மனிதர்களும் எந்த வயதிலும் ஆசைப்படுகிறார்கள்

    கவிதை ரொம்ப காட்சிகளாக விரிகிறது மேடம்

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  12. அந்தபட்டம் அழகோ அழகு கொள்ளையழகு...

    பதிலளிநீக்கு
  13. //அதிகாலை அழைப்பு மணிக்கு
    ஆடியசைந்து கதவைத் திறக்க
    வாசலடைத்து நின்று
    அதிர வைக்கலாம்
    முறக்காதுகள் விசிறியபடியொரு
    கறுப்பு யானை//

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. தேவதையில் வாசித்ததும்,' ஹை.. நம்ம ராமலஷ்மி'ன்னு குதூகலமாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  14. அந்தக் கடைசி வரிகள்..

    மிக அற்புதமாக


    ||படம்: இணையத்திலிருந்து..||
    இது எதிர்பார்க்கலைங்க

    பதிலளிநீக்கு
  15. நான் தான் முதலில் இந்த பதிவை பார்த்தேன். கிட்ட தட்ட அந்த மதிய தூக்கத்தின் யானை கனவு வந்து போன நேரம். பாலகுமாரனுக்கு குதிரை கனவு மாதிரி எனக்கு யானை கனவு வரும். அதையே தான் என் பசங்களுக்கும் சொல்வேன். அவர்களும் அதையே தான் எனக்கும் சொல்லுவாங்க. என்னவோ யானையே என் வீட்டுக்கு பக்கத்து வீட்டு குழந்தை வந்து போவது போல நினைத்து கொள்வேன். சமீபத்தில் நட்ராஜ் எனக்கு சொன்ன ஒரு கதை கூட பதிவிட்டேன். யானை வீட்டுக்கு வந்தது போல சொல்லியிருப்பான். இந்த கவிதையின் முதல் பத்தி மற்றும் இரண்டாம் பத்தி....யானை மாலை போட்டதினாலே... அதையும் கனவாக காண்பேன் அடிக்கடி.(கல்யாண வீடியோ பார்க்கும் போதா என கேட்க கூடாது:-)

    அதே போல குழந்தையின் சைக்கிள்ல உட்காந்து காபிகுடிச்சு கீழே விழுந்து பசங்க சிரித்த அனுபவமும் உண்டு....

    இதை எல்லாம் கவிதையா எப்படித்தான் சொல்ல முடியுதோ. என்னை விட்டா பக்கம் பக்கமா எழுதி தள்ளதான் முடியும் இப்படி பத்து வரியில் அழகாக ஏர் டைட் பேக்கிங் செய்ய தெரியாது. ஹாட்ஸ் ஆஃப்....நல்லா இருக்கு பிரண்ட்!!!

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை மனதில் பூபூக்கிறது. ஒவ்வொருவரியும் அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்

    பதிலளிநீக்கு
  17. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சகா.

    பதிலளிநீக்கு
  18. உங்க கவிதை மாதிரி அழகான கனவுகள் வந்தா சந்தோஷப்படுவேன் அக்கா.

    பதிலளிநீக்கு
  19. ஆயில்யன் said...

    ***/ //நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்///

    மிக அழகு!

    கனவுகளில் காட்சிகளை சேர்த்தும்,கோர்த்தும் கொண்டிருக்க,மனம் நிம்மதியாக செல்ல கூடிய தருணங்கள் -
    கண் அயர்ந்திருக்கும் வேளை!/***

    ஆக, அவை இனிய அத்தாட்சியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்கிறீர்கள்:)! நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  20. கண்ணகி said...

    // ஆகா.

    நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!
    ***

    தேவதைக்கு வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி கண்ணகி.

    பதிலளிநீக்கு
  21. goma said...

    // கண்ணயர்ந்ததற்கு சாட்சி கனவுகள்....

    அருமை//

    நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  22. சி. கருணாகரசு said...

    ***/ மிகவும் அழகான வெளிபாடு.

    //எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!//

    இது கூடுதல் கவன ஈர்ப்பு./***

    நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  23. அன்புடன் அருணா said...

    // பூங்கொத்துப்பா!//

    நன்றிகள் அருணா.

    பதிலளிநீக்கு
  24. ஹேமா said...

    ***/ //கட்டிய மணி கலகலக்க
    முரட்டுப் பசு துரத்தலாம்
    'செண்பகமே' பாட்டு நமக்கு
    அந்நேரம் பார்த்து
    மறந்து தொலைக்கலாம்//

    "பக்" என்று சிரித்தாலும் அதனுள் இருந்த அர்த்தம் அபாரம்.அப்படியே ஊர்ந்து சென்ற வரிகள் முழுதுமே.வாழ்த்துகள் லஷ்மி அக்கா.

    எதுவும் எப்போதும் நடக்கலாம் !/***

    உண்மைதான்:)! மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  25. க.பாலாசி said...

    // வாழ்த்துக்கள்.. கவிதை நல்லாயிருக்குங்க...//

    நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  26. அமுதா said...

    ***/ /*நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!*/
    சூப்பர்... அருமை.... என்ன சொல்ல?/***

    நன்றி அமுதா.


    ***/முத்துச்சரத்தில் வழக்கமான கவிதைகளில் இருந்து சற்றே வித்யாசமாக இருக்கிறது என்றும் தோன்றியது./***

    நிஜம்தான்:)! எல்லா விதமாகவும் முயன்று பார்க்கும் ஆவல்தான்.

    பதிலளிநீக்கு
  27. இராமசாமி கண்ணண் said...

    //அருமை. ரொம்ப நல்லாருக்கு.//

    நன்றி இராமசாமி கண்ணன்.

    பதிலளிநீக்கு
  28. அம்பிகா said...

    ***/ //நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்//
    அருமை./***

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  29. திருவாரூரிலிருந்து சரவணன் said...

    //அட...எனக்கு இந்த புத்தகம் அன்பளிப்பு பிரதியாவே வந்துச்சுங்க. (எல்லாம் வாசகர் கடிதம் எழுதியதுக்காகதான்.) கவிதையை படிச்சேன். நல்லா இருக்கேன்னு ஒரு நொடி நினைச்சுட்டு அடுத்த பக்கம் போயிட்டேன். உங்க பெயரைக் கவனிக்கலை.

    இப்போ பதிவைப் பார்த்துட்டுதான் மறுபடி கவிதையை வாசிச்சேன்.

    இந்தக் கவிதையால நான் சின்ன வயசுல படிச்ச கதைகளும் கனவுகளும் நினைவுக்கு வந்தது.//

    நன்றி சரவணன். நீங்கள் சொன்னபிறகு நானும் வாசகர் கடிதம் பகுதியில் உங்கள் கருத்தைக் கண்டேன்:)!

    பதிலளிநீக்கு
  30. ப்ரியமுடன் வசந்த் said...

    // குழந்தைகளோடு விளையாடிப்பார்க்கத்தான் எல்லா மனிதர்களும் எந்த வயதிலும் ஆசைப்படுகிறார்கள்

    கவிதை ரொம்ப காட்சிகளாக விரிகிறது மேடம்

    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  31. ப்ரியமுடன் வசந்த் said...

    //அந்தபட்டம் அழகோ அழகு கொள்ளையழகு...//

    படம்: இணையத்திலிருந்து.. எனும் குறிப்பைத் தர மறந்துவிட்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம் கண்டதும் உடன் சேர்த்தேன்! படத் தேர்வுக்கான பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  32. செ.சரவணக்குமார் said...

    // நல்லாயிருக்கு மேடம்.//

    நன்றி சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  33. அமைதிச்சாரல் said...

    ***/ //அதிகாலை அழைப்பு மணிக்கு
    ஆடியசைந்து கதவைத் திறக்க
    வாசலடைத்து நின்று
    அதிர வைக்கலாம்
    முறக்காதுகள் விசிறியபடியொரு
    கறுப்பு யானை//

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. தேவதையில் வாசித்ததும்,' ஹை.. நம்ம ராமலஷ்மி'ன்னு குதூகலமாயிருந்தது./***

    கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  34. ஈரோடு கதிர் said...

    //அந்தக் கடைசி வரிகள்..

    மிக அற்புதமாக//

    நன்றி கதிர்.

    // ||படம்: இணையத்திலிருந்து..||
    இது எதிர்பார்க்கலைங்க//

    நான் எடுத்த படங்கள் மட்டுமே படைப்புகளுக்கும் உபயோகிக்கணும் என்றால் முடியுமா:)? பெங்களூர் பேலஸ் க்ரவுண்டில் ஒவ்வொரு வருடமும் ‘கைட் ஷோ’ நடக்கிறது. ஒருமுறை சென்று இதைவிடப் பிரமாதமாய் எடுத்து வருகிறேன். எதிர்பார்த்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  35. அபி அப்பா said...
    //என்னவோ யானையே என் வீட்டுக்கு பக்கத்து வீட்டு குழந்தை வந்து போவது போல நினைத்து கொள்வேன்.//

    கனவுகள் என்றைக்கும் விநோதமானவை. பலரும் யானைக்கனவுகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    //யானை மாலை போட்டதினாலே... அதையும் கனவாக காண்பேன் அடிக்கடி.//

    பலிக்க வேண்டுமெனில் வாழ்க்கையில் முதல்வராக்கியவரைக் கிண்டல் செய்யாதீர்கள்:)!

    //என்னை விட்டா பக்கம் பக்கமா எழுதி தள்ளதான் முடியும் //

    அது உங்களது பாணி மட்டுமல்ல பலமும் கூட. விரிவான பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  36. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //அருமையான கவிதை மனதில் பூபூக்கிறது. ஒவ்வொருவரியும் அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்//

    நன்றி ஸ்டார்ஜன். தமிழ்மண நட்சத்திர வாரத்துக்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. மதுரை சரவணன் said...

    //வாழ்த்துக்கள். கவிதை அருமை.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  38. பா.ராஜாராம் said...

    //ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சகா.//

    மிக மிக நன்றி பா ரா.

    பதிலளிநீக்கு
  39. கமலேஷ் said...

    // நல்லா இருக்குங்க...//

    மிக்க நன்றி கமலேஷ்.

    பதிலளிநீக்கு
  40. சுசி said...

    //உங்க கவிதை மாதிரி அழகான கனவுகள் வந்தா சந்தோஷப்படுவேன் அக்கா.//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  41. மின்னஞ்சலில்..

    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'இனிய அத்தாட்சி - தேவதை கவிதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th July 2010 11:30:02 AM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/297612

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தமிழிஷில் வாக்களித்த 23 பேருக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  42. அருமை.. அப்புறம் போன பதிவுதான் என் முதல் வருகை அல்ல. முன்னாடியே வந்து இருக்கேன். அனால் பின்னூட்டம் இட்டது இல்லை

    பதிலளிநீக்கு
  43. @ LK,

    மகிழ்ச்சி LK:)! தொடர்ந்து வாருங்கள். கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. Geetha Lakshmi said...
    //மிக அழகான வார்த்தைச் சரம்.//

    நன்றி கீதா லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  45. வழிப்போக்கன் said...
    //அழகான கனவு.. கவிதை ...//

    நன்றி வழிப்போக்கன்.

    பதிலளிநீக்கு
  46. க.நா.சாந்தி லெட்சுமணன். said...
    //அழகான கவிதை மேடம்!//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  47. செல்வ கருப்பையா said...
    //அழகான கவிதை - நன்றிகள்.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. கனவுகளே கற்றாடியாக

    அருமை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  49. விஜய் said...
    //கனவுகளே காற்றாடியாக

    அருமை

    வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி விஜய்.

    பதிலளிநீக்கு
  50. அருமையான கவிதை!!

    “ தேவதை” யில் கவிதை வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  51. //நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!//

    5 வரி ஹைக்கூ - ராமலக்ஷ்மி !
    மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  52. நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!
    ***//

    மிக அழகு ராமலெக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  53. அதிகாலை அழைப்பு மணிக்கு
    ஆடியசைந்து கதவைத் திறக்க
    வாசலடைத்து நின்று
    அதிர வைக்கலாம்
    முறக்காதுகள் விசிறியபடியொரு
    கறுப்பு யானை//

    அடிக்கடி கனவில் வந்து துரத்தும் எனக்குமொரு கறுப்பு யானை. அது நினைவுக்கு வந்தது...!

    நல்லதொரு கவிதை.

    பதிலளிநீக்கு
  54. நல்ல தூக்கம் போல..
    கனவுகளின் கவிதைகள் அற்புதம்.
    ஆனால் ஒவ்வொருவிதமான கனவுக்கும் ஓரோர் அர்த்தம் சொல்வார்கள். எனவே கன்னாபின்னான்னு கனவு கனவு காண வேண்டாம்..மகளே!

    //கட்டிய மணி கலகலக்க
    முரட்டுப் பசு துரத்தலாம்
    'செண்பகமே' பாட்டு நமக்கு
    அந்நேரம் பார்த்து
    மறந்து தொலைக்கலாம்//

    ஹஹ்ஹா...!

    பதிலளிநீக்கு
  55. //யானை மாலை போட்டதினாலே... அதையும் கனவாக காண்பேன் அடிக்கடி.(கல்யாண வீடியோ பார்க்கும் போதா என கேட்க கூடாது:-)//

    அபி அப்பா, வீடியோவில் பார்க்கும் போதுதானா? நிஜமா போடும் போது தெரியலையா?

    ஹஹ்ஹா!!

    பதிலளிநீக்கு
  56. நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    நன்று.......

    பதிலளிநீக்கு
  57. நானானி said...

    நல்ல தூக்கம் போல..//

    அதானே.. :)

    உங்க நல்ல தூக்கத்துக்கு அத்தாட்சியாக எங்களுக்கு ஒரு நல்ல கவிதை கிடைச்சிருச்சி..

    ஆனா பாருங்க ஆபத்துல செண்பகமே பாட்டு மறந்து போறத நினைச்சாத்தான் திகிலா இருக்கு..

    பதிலளிநீக்கு
  58. எப்பவும் போல நல்ல கவிதை அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  59. மனோ சாமிநாதன் said...
    //அருமையான கவிதை!!

    “ தேவதை” யில் கவிதை வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  60. சே.குமார் said...

    //வாழ்த்துக்கள். கவிதை அருமை.//

    என் நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  61. James Vasanth said...

    ***/ //நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!//

    5 வரி ஹைக்கூ - ராமலக்ஷ்மி !
    மிகவும் ரசித்தேன்./***

    நன்றி ஜேம்ஸ். மொத்த கவிதையும் அதனுள்ளே அடக்கம் என்பதை அழகாய் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்:)!

    பதிலளிநீக்கு
  62. thenammailakshmanan said...

    ***/நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!
    ***//

    மிக அழகு ராமலெக்ஷ்மி../***

    மிக்க நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  63. thenammailakshmanan said...

    ***/நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!
    ***//

    மிக அழகு ராமலெக்ஷ்மி../***

    மிக்க நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  64. ஸ்ரீராம். said...

    ***/ அதிகாலை அழைப்பு மணிக்கு
    ஆடியசைந்து கதவைத் திறக்க
    வாசலடைத்து நின்று
    அதிர வைக்கலாம்
    முறக்காதுகள் விசிறியபடியொரு
    கறுப்பு யானை//

    அடிக்கடி கனவில் வந்து துரத்தும் எனக்குமொரு கறுப்பு யானை. அது நினைவுக்கு வந்தது...!

    நல்லதொரு கவிதை./***

    யானைக் கனவு காணாதவர் மிகக் குறைவோ:)? நன்றி ஸ்ரீராம், பிறந்ததினக் கொண்டாட்டத்தின் நடுவே கவிதை வாசிக்க வந்தமைக்கும்:)!

    பதிலளிநீக்கு
  65. நானானி said...

    // நல்ல தூக்கம் போல..
    கனவுகளின் கவிதைகள் அற்புதம்.
    ஆனால் ஒவ்வொருவிதமான கனவுக்கும் ஓரோர் அர்த்தம் சொல்வார்கள். எனவே கன்னாபின்னான்னு கனவு கனவு காண வேண்டாம்..மகளே!//

    அர்த்தமெல்லாம் தெரியாது. அதே நேரம் டிவி சேனல் போல கனவை மாற்றிட முடியாதே? கன்னா பின்னாவென இருந்தாலும் கண்டேதான் ஆக வேண்டியிருக்கிறது:)!

    ***/ //கட்டிய மணி கலகலக்க
    முரட்டுப் பசு துரத்தலாம்
    'செண்பகமே' பாட்டு நமக்கு
    அந்நேரம் பார்த்து
    மறந்து தொலைக்கலாம்//

    ஹஹ்ஹா...!/***

    ஹிஹி...!

    பதிலளிநீக்கு
  66. நானானி said...

    // நல்ல தூக்கம் போல..
    கனவுகளின் கவிதைகள் அற்புதம்.
    ஆனால் ஒவ்வொருவிதமான கனவுக்கும் ஓரோர் அர்த்தம் சொல்வார்கள். எனவே கன்னாபின்னான்னு கனவு கனவு காண வேண்டாம்..மகளே!//

    அர்த்தமெல்லாம் தெரியாது. அதே நேரம் டிவி சேனல் போல கனவை மாற்றிட முடியாதே? கன்னா பின்னாவென இருந்தாலும் கண்டேதான் ஆக வேண்டியிருக்கிறது:)!

    ***/ //கட்டிய மணி கலகலக்க
    முரட்டுப் பசு துரத்தலாம்
    'செண்பகமே' பாட்டு நமக்கு
    அந்நேரம் பார்த்து
    மறந்து தொலைக்கலாம்//

    ஹஹ்ஹா...!/***

    ஹிஹி...!

    பதிலளிநீக்கு
  67. skumar said...

    //நினைவுகளின் நீட்சியாகவோ
    காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
    எப்படியாக வேண்டுமானாலும்
    இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

    நன்று.......//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  68. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //ஆனா பாருங்க ஆபத்துல செண்பகமே பாட்டு மறந்து போறத நினைச்சாத்தான் திகிலா இருக்கு..//

    எப்படியாகப்பட்ட திகில் கனவு பார்த்தீர்களா:)?

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin