Tuesday, April 27, 2010

தொட்டி மீன்-அகநாழிகை கவிதை


படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம்
வெள்ளப் பெருக்கோடு
அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம்
பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம்
ரயில் தடம்புரண்டதில் காலமானவர்
இருபது இருக்கலாம்

தொலைக்காட்சிப் பெட்டியில்
தொடர்ந்து வந்த செய்திகளை
ஆயாசமாய்ப் பார்த்தபடி
சோற்றிலே இன்னொமொரு கரண்டி
குழம்பினை ஊற்றிக் கொண்டவன்
‘எங்கே சின்னு’வென மகளைத் தேடினான்.
‘தொட்டிமீன் செத்து மிதந்த சோகத்துல
அழுதழுது தூங்கிடுச்சு’ மனைவி பதிலளிக்க,
ஒரே ஒருகணநேர உறுத்தலுக்குப் பின்
மெதுவாகச் சொன்னான்:
‘கொழம்பில உப்பு கொஞ்சம் ஜாஸ்தி.’

அத்தனைதான் முடிகிறது
அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே.
*** *** ***

 • நன்றி அகநாழிகை!
81 comments:

 1. //அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே//

  நச் வரி... அருமை

  ReplyDelete
 2. சிறப்பானதொரு உணர்வுப்பகிர்தல்.

  ReplyDelete
 3. உச் கொட்டியபடியே உணவு உண்டு செல்வதும், விபத்துக்களினின்போது சற்றே நின்று அனுதாபம் தெரிவித்து சாலையை கடப்பதும் என இன்னபிற - தூர நின்று மற்றவர் துன்பத்தினை கடந்துசெல்லவும் எந்த பள்ளிக்கும் செல்லாமல் யதார்த்த உலகினை எளிதில் கற்றுக்கொண்டாயிற்று ! :((

  ReplyDelete
 4. யதார்த்த உலகில் எது சாத்தியமாகிறது தெரியுமா ராமலக்ஷ்மி.
  தினசரி பேப்பரும், செய்திச்சானல்கள் பார்க்காமல் இருப்பதும்தான்.
  பூனை, கண் மூடின கதை.
  ஆனாலும் வேறு என்ன செய்ய முடிகிறது.
  அப்படி மரத்துவிட்டது இதயம்.

  ReplyDelete
 5. அகநாழிகையில் வாசித்தேன்.. நன்றாக இருக்கிறது..(என்னுதும் வந்திருக்கு)

  ReplyDelete
 6. நாள் தோறும் நாளிதழ்களில் விபத்து பற்றிய செய்திகள் வெளிவந்து நம்மை மரத்துப்போகச் செய்துவிட்டதாகவே உணர்கிறேன். கலப்படமில்லாத அனுதாபங்கள் கூட குழந்தைகளிடம் மட்டுமே மிச்சம் இருப்பதை சொல்லும் கவிதை.

  ReplyDelete
 7. அன்றாட வாழ்வின் இயல்பு கவிதையாகி உணர்வோடு இருக்கிறது.

  ReplyDelete
 8. எதார்த்தமாய்...  //கொழப்பில//

  ReplyDelete
 9. //தொட்டிமீன் செத்து மிதந்த சோகத்துல
  அழுதழுது தூங்கிடுச்சு’ மனைவி பதிலளிக்க,
  ஒரே ஒருகணநேர உறுத்தலுக்குப் பின்
  மெதுவாகச் சொன்னான்:
  ‘கொழம்பில உப்பு கொஞ்சம் ஜாஸ்தி.’//

  என்ன ஒரு அழகான வார்த்தைகள், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி..இதைப் படித்ததும் நான் முன் எழுதியது நினைவுக்கு வந்தது...


  //கண்ணாடிக் குடுவையில்
  கண்ணாய் வளர்த்த
  குட்டிமீன் மரித்ததென்று
  கண்ணீர் விட்ட பிள்ளையைக்
  குதூகலப்படுத்தத்
  தாய் சமைத்தாள் மீன்குழம்பு.
  //

  ReplyDelete
 11. ஆஹா அகநாழிகையிலா? வாழ்த்துக்கள்!!கவிதை நல்லாருக்கு

  ReplyDelete
 12. "//அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே// மறுக்க முடியாத கசப்பான உண்மை

  ReplyDelete
 13. கவுஜயை படிக்கும்போது அழுக அழுகையா வருது.. ச்ச்.. ஐயோ பாவம் :-)
  இதழில் இடம்பிடித்தமைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!

  ReplyDelete
 14. அகநாழிகையில் இந்த கவிதை வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  //அத்தனை தான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே//

  உண்மையான வரிகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 15. யதார்த்தமான கவிதை தோழி. அருமை. ரசித்தேன்.
  பிரசுரமானதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 16. "//அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே//
  யதார்த்தம்.

  ReplyDelete
 17. அவ்ளோ யதார்த்தமா இருக்கு அக்கா..

  இலகுவான எழுத்தில எவ்ளோ பெரிய விஷயத்தையும் எழுத உங்களாலதான் முடியும்.

  ReplyDelete
 18. என்ன ஒரு எளிமையான நடை!!...ஆஹா! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. ///அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே.///


  ...... உண்மை...... வேதனையான உண்மை.

  ReplyDelete
 20. வேதனையான உண்மை

  ReplyDelete
 21. யதார்த்த வாழ்வில் கணநேர அனுதாபம்தான் மிச்சம்.

  ReplyDelete
 22. அதுக்கு மேலே நம்மால முடியலையே ராமலக்‌ஷ்மி... என்ன செய்வது..ஆனால் எல்லோருக்குள்ளும் இயலாமையினால் வரும் சிறு உறுத்தல் கட்டாயம் இருக்கும்.

  ReplyDelete
 23. யதார்த்தம் இழையோடும் வரிகள்... நல்லா இருக்குங்க...

  ReplyDelete
 24. மகள் வயதில் இருக்கும்போது இவனும் அந்த மீனுக்காக அழுதழுது தூங்காமல்க்கூட இருந்திருப்பான். வாழ்வில் அனுபவம் அதிகமாக ஆக அனுதாபப்படும்தன்மை குறைகிறதோ?

  ReplyDelete
 25. ஆம்
  அவ்வளவுதான் சிந்திக்க பழக்கப்படுத்தப்பட்டுவிட்டோம் .
  மிக நேர்த்தியான பகிர்வு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. எளிமையான வார்த்தைகள்ல 'நச்'ன்னு சொல்லியிருக்கீங்க.

  இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
 27. யதார்த்தம் வலிக்கிறது

  வாழ்த்துக்கள் அக்கா

  விஜய்

  ReplyDelete
 28. வரிகள் அருமை ராமலக்ஷ்மி மேடம்.

  ReplyDelete
 29. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //சிறப்பானதொரு உணர்வுப்பகிர்தல்.//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 30. அஹமது இர்ஷாத் said...

  ***/ //அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே//

  நச் வரி... அருமை/***

  நன்றி முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 31. ஆயில்யன் said...

  //உச் கொட்டியபடியே உணவு உண்டு செல்வதும், விபத்துக்களினின்போது சற்றே நின்று அனுதாபம் தெரிவித்து சாலையை கடப்பதும் என இன்னபிற - தூர நின்று மற்றவர் துன்பத்தினை கடந்துசெல்லவும் எந்த பள்ளிக்கும் செல்லாமல் யதார்த்த உலகினை எளிதில் கற்றுக்கொண்டாயிற்று ! :((//

  உண்மைதான் ஆயில்யன், வாழ்க்கை எப்படியான பாடங்களையும் கற்றுத் தருகிறது பாருங்கள்:(!

  ReplyDelete
 32. வல்லிசிம்ஹன் said...

  //யதார்த்த உலகில் எது சாத்தியமாகிறது தெரியுமா ராமலக்ஷ்மி.
  தினசரி பேப்பரும், செய்திச்சானல்கள் பார்க்காமல் இருப்பதும்தான்.
  பூனை, கண் மூடின கதை.//

  அதேதான்:(!


  //ஆனாலும் வேறு என்ன செய்ய முடிகிறது.
  அப்படி மரத்துவிட்டது இதயம்.//

  ஆமாம் அப்படித்தான் கடந்து சென்றபடி இருக்கிறோம். கருத்துக்கு நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 33. மணிஜீ...... said...

  //அகநாழிகையில் வாசித்தேன்.. நன்றாக இருக்கிறது..(என்னுதும் வந்திருக்கு)//

  நன்றி மணிஜீ.

  ReplyDelete
 34. செல்வராஜ் ஜெகதீசன் said...

  //நல்லா இருக்குங்க.//

  நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 35. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  //நாள் தோறும் நாளிதழ்களில் விபத்து பற்றிய செய்திகள் வெளிவந்து நம்மை மரத்துப்போகச் செய்துவிட்டதாகவே உணர்கிறேன். கலப்படமில்லாத அனுதாபங்கள் கூட குழந்தைகளிடம் மட்டுமே மிச்சம் இருப்பதை சொல்லும் கவிதை.//

  ஆமாம் சரவணன். ஆயில்யன், வருண் சொன்னது போல வளரும் போது அவர்களும் இதைக் கடந்து செல்லக் கற்றிடுவார்களோ:( ?!

  ReplyDelete
 36. ஈரோடு கதிர் said...

  //எதார்த்தமாய்...//

  நன்றி.

  //கொழப்பில//

  தட்டச்சுப் பிழை:)! உங்கள் பின்னூட்டம் வந்ததுமே திருத்தி விட்டேன். நன்றி கதிர்.

  ReplyDelete
 37. ஹேமா said...

  //அன்றாட வாழ்வின் இயல்பு கவிதையாகி உணர்வோடு இருக்கிறது.//

  நன்றிகள் ஹேமா, உங்கள் தொடர் வருகைக்கும்.

  ReplyDelete
 38. சசிகுமார் said...

  ***/ //தொட்டிமீன் செத்து மிதந்த சோகத்துல
  அழுதழுது தூங்கிடுச்சு’ மனைவி பதிலளிக்க,
  ஒரே ஒருகணநேர உறுத்தலுக்குப் பின்
  மெதுவாகச் சொன்னான்:
  ‘கொழம்பில உப்பு கொஞ்சம் ஜாஸ்தி.’//

  என்ன ஒரு அழகான வார்த்தைகள், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்./***

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 39. பாச மலர் / Paasa Malar said...

  ***/ நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி..இதைப் படித்ததும் நான் முன் எழுதியது நினைவுக்கு வந்தது...


  //கண்ணாடிக் குடுவையில்
  கண்ணாய் வளர்த்த
  குட்டிமீன் மரித்ததென்று
  கண்ணீர் விட்ட பிள்ளையைக்
  குதூகலப்படுத்தத்
  தாய் சமைத்தாள் மீன்குழம்பு.// /***

  அருமையான பகிர்வுக்கு நன்றி. ஆமாம் பாசமலர், குழந்தைகளின் மனதுதான் எத்தனை இளகியது? சமீபத்தில் என் தங்கையின் ஆறு வயது மகள், தொட்டியில் வளர்த்த மீன்கள் மொத்தமாக ஒருநாள் மரித்துப் போக வெகுநேரம் அழுதபடி இருந்தாள். இந்தக் கவிதையைத் தந்ததும் அந்த சம்பவம்தான்.

  ReplyDelete
 40. மோகன் குமார் said...

  //ஆஹா அகநாழிகையிலா? வாழ்த்துக்கள்!!கவிதை நல்லாருக்கு//

  நன்றி மோகன்.

  ReplyDelete
 41. தமிழ் வெங்கட் said...

  ***/ "//அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே// மறுக்க முடியாத கசப்பான உண்மை /***

  நன்றி வெங்கட் தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 42. "உழவன்" "Uzhavan" said...

  //கவுஜயை படிக்கும்போது அழுக அழுகையா வருது.. ச்ச்.. ஐயோ பாவம் :-)//

  ஸ்மைலி வேறயா? ம்ம்ம், கிண்டலாப் போச்சு.

  //இதழில் இடம்பிடித்தமைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!//

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 43. கோமதி அரசு said...

  ***/ அகநாழிகையில் இந்த கவிதை வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  //அத்தனை தான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே//

  உண்மையான வரிகள் ராமலக்ஷ்மி./***

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோமதிம்மா.

  ReplyDelete
 44. ஜெஸ்வந்தி said...

  //யதார்த்தமான கவிதை தோழி. அருமை. ரசித்தேன்.
  பிரசுரமானதில் மகிழ்ச்சி.//

  நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 45. நசரேயன் said...

  //யதார்த்தம்//

  நன்றி நசரேயன்.

  ReplyDelete
 46. Sangkavi said...

  //அருமை....//

  நன்றி சங்கவி.

  ReplyDelete
 47. அம்பிகா said...

  ***/ //அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே//
  யதார்த்தம்./***

  நன்றி அம்பிகா.

  ReplyDelete
 48. சுசி said...

  //அவ்ளோ யதார்த்தமா இருக்கு அக்கா..

  இலகுவான எழுத்தில எவ்ளோ பெரிய விஷயத்தையும் எழுத உங்களாலதான் முடியும்.//

  இலகுவான எழுத்துதான் எனக்கு வரும்:)! நன்றிகள் சுசி.

  ReplyDelete
 49. தக்குடுபாண்டி said...

  //என்ன ஒரு எளிமையான நடை!!...ஆஹா! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!//

  நன்றி தக்குடுபாண்டி, உங்கள் முதல் வருகைக்கும்:)!

  ReplyDelete
 50. அன்புடன் அருணா said...

  //பூங்கொத்து!//

  ரொம்ப நன்றி அருணா.

  ReplyDelete
 51. Chitra said...

  ***/ ///அத்தனைதான் முடிகிறது
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே.///


  ...... உண்மை...... வேதனையான உண்மை./***

  ஆம் சித்ரா. நன்றி.

  ReplyDelete
 52. LK said...

  //வேதனையான உண்மை//

  ஆம் LK. நன்றி முதல் வருகைக்கு.

  ReplyDelete
 53. அமைதிச்சாரல் said...

  //யதார்த்த வாழ்வில் கணநேர அனுதாபம்தான் மிச்சம்.//

  அப்படித்தான் ஆகிவிட்டது. நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 54. Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

  //அதுக்கு மேலே நம்மால முடியலையே ராமலக்‌ஷ்மி... என்ன செய்வது..ஆனால் எல்லோருக்குள்ளும் இயலாமையினால் வரும் சிறு உறுத்தல் கட்டாயம் இருக்கும்.//

  சரியாச் சொன்னீங்க. நன்றி மைதிலி.

  ReplyDelete
 55. //‘தொட்டிமீன் செத்து மிதந்த சோகத்துல
  அழுதழுது தூங்கிடுச்சு//

  எப்படி இருந்த நாம், இப்படி ஆயிட்டோம்...!

  நாமும் குழந்தையாயிருந்து, வளர்ந்தவர்கள்தானே?!

  ReplyDelete
 56. அப்பாவி தங்கமணி said...

  //யதார்த்தம் இழையோடும் வரிகள்... நல்லா இருக்குங்க...//

  நன்றி புவனா!

  ReplyDelete
 57. வருண் said...

  // மகள் வயதில் இருக்கும்போது இவனும் அந்த மீனுக்காக அழுதழுது தூங்காமல்க்கூட இருந்திருப்பான்.//

  யோசிக்க வைத்து விட்டீர்கள். நிஜம்தான்.

  // வாழ்வில் அனுபவம் அதிகமாக ஆக அனுதாபப்படும்தன்மை குறைகிறதோ? //

  தன்மை குறைகிறதா அல்லது இயலாமை இயல்பாக எடுத்துக் கொள்ள வைக்கிறதா? வேறென்னதான் செய்ய முடியும் என்கிற கேள்விக்கும் இல்லை விடை.

  கருத்துக்கு நன்றி வருண்.

  ReplyDelete
 58. நண்டு@நொரண்டு -ஈரோடு said...

  //ஆம்
  அவ்வளவுதான் சிந்திக்க பழக்கப்படுத்தப்பட்டுவிட்டோம் .
  மிக நேர்த்தியான பகிர்வு
  வாழ்த்துக்கள்//

  நன்றி நண்டு.

  ReplyDelete
 59. சந்தனமுல்லை said...

  //:-( hmmm..//

  அதுதான் முடிகிறது :(!

  நன்றி முல்லை.

  ReplyDelete
 60. சுந்தரா said...

  //எளிமையான வார்த்தைகள்ல 'நச்'ன்னு சொல்லியிருக்கீங்க.

  இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.//

  நன்றி சுந்தரா.

  ReplyDelete
 61. விஜய் said...

  //யதார்த்தம் வலிக்கிறது

  வாழ்த்துக்கள் அக்கா//

  கருத்துக்கு நன்றி விஜய்.

  ReplyDelete
 62. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //வரிகள் அருமை ராமலக்ஷ்மி மேடம்.//

  நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 63. அமைதி அப்பா said...

  ***/ //‘தொட்டிமீன் செத்து மிதந்த சோகத்துல
  அழுதழுது தூங்கிடுச்சு//

  எப்படி இருந்த நாம், இப்படி ஆயிட்டோம்...!

  நாமும் குழந்தையாயிருந்து, வளர்ந்தவர்கள்தானே?!/***

  நன்றாகக் கேட்டீர்கள் அமைதி அப்பா. வருண் சொல்லியிருப்பது போல அனுபவங்கள் நம்மை 'இப்படி' மாற்றி விட்டனவோ:(?

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 64. தமிழ் மணத்தில் வாக்களித்த 11 பேர்களுக்கும், தமிழிஷில் வாக்களித்த 25 பேர்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 65. இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 66. @ அமைதி அப்பா,

  நன்றி நன்றி. இருநூறாவது நபராக இணைந்து அமைதியாய் திரும்பிச் சென்றவர் யார் என்பதை காலையிலேயே கவனித்து விட்டிருந்தேன்:)! அவருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்!!

  ReplyDelete
 67. ரொம்ப அழகா இருக்கு வரிகள்.
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே.

  சூப்பர்.

  நான் மடல் அனுப்பியிருந்தேன். பார்த்திங்களா, பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 68. உறுத்தல்தான்...ஆனால் இவற்றில் வேறு எதுவும் செய்யவும் முடியாதே..

  ReplyDelete
 69. Vijis Kitchen said...

  //ரொம்ப அழகா இருக்கு வரிகள்.
  அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே.//

  நன்றி விஜி. தங்களுக்கு பதில் அனுப்பியிருக்கிறேன் :)!

  ReplyDelete
 70. ஸ்ரீராம். said...

  //உறுத்தல்தான்...ஆனால் இவற்றில் வேறு எதுவும் செய்யவும் முடியாதே..//

  உண்மை. அந்த இயலாமைதான் இங்கு வரிகளாய். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 71. எனக்கு வரவில்லை. எந்த ஐடிக்கு அனுப்பினிங்க.

  ReplyDelete
 72. யதார்த்தமான ஒன்று உணரும்போது வலிக்கிறது!

  ReplyDelete
 73. Priya said...

  //யதார்த்தமான ஒன்று உணரும்போது வலிக்கிறது!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.

  ReplyDelete
 74. மிக வலிமையான கவிதை...இன்றைய யதார்த்தம்.பாராட்டுக்கள்.

  உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 75. @ சி. கருணாகரசு,

  நன்றிகள்.

  உங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin